புதுச்சேரி

எய்ட்ஸ் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம். அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்ளார்.

நோய்களை தடுக்க அரசு துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்

Published On 2023-12-02 04:33 GMT   |   Update On 2023-12-02 04:33 GMT
  • முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தல்
  • எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

புதுச்சேரி, டிச.2-

புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.

100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியை முதல்- அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்து பல்வேறு விழிப்புணர்வு போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

புதுவை அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. உலகளவில் சிறந்த இடத்தை புதுவை சுகாதாரதுறை பெற வேண்டும்.எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

புதுவையில் டெங்கு போன்ற காய்ச்சல் பரவுவதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அதற்கு தேவையான விழிப்புணர்வு, மருந்துகளை அரசு அளித்து வருகிறது. நோய் வரும் முன் காப்பதே சிறந்தது. எனவே நோய்கள் வருவதை தடுக்க சுகாதாரம், உள்ளாட்சி உட்பட அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களில் சிறந்த 5 நட்சத்திர தரச்சான்று பெற்ற மண்ணாடிப்பட்டு, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், காரைக்காலில் உள்ள 3 பரிசோதனை மையங்களை சார்ந்த ஊழியர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை முதல் - அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சம்பத் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் சித்ராதேவி மற்றும் அதிகாரிகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News