புதுச்சேரி

கோப்பு படம்.

இதர பிற்படுத்தப்பட்டோர் கணக்கெடுப்பு சாதியை சொல்ல பொதுமக்கள் மறுப்பு

Published On 2023-10-13 08:32 GMT   |   Update On 2023-10-13 08:32 GMT
  • ஊழியர்கள் புகார்
  • மீதமுள்ள 30 சதவீதத்தில் வீட்டில் யாரும் இருப்பதில்லை, சிலர் சாதி பெயரை கூறுவ தில்லை என தெரிவித்தனர்.

புதுச்சேரி:

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வந்தது.

 இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இதர பிற்படுத்தப்பட்டோர் குறித்த கணக்கெடுப்பு நடத்தி, தேர்தலை நடத்த உத்தரவிட்டது. கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சசிதரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் நகரம், கிராமப்புறங்களில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வர்களின் எண்ணிக்கையை கண்டறிய திட்டமிட்டது.

நகராட்சிகள், கிராம பஞ்சாயத்து பகுதிகளில் தொகுதி வாரியாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினை சேர்ந்த வாக்காளர்கள் குறித்து அங்கன்வாடி ஊழியர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், வில்லியனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வில்லியனூர் கொம்யூனுக்கு உட்பட்ட உள்ளாட்சி தேர்தலில், இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு கணக்கிடும் பணி தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் முன்னிலை வகித்தார்.

ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதபதி சசிதரன் உத்தரவின் பேரில், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்திரன் தலைமையில் கூட்டம் நடந்தது.

இதில் அங்கன்வாடி ஊழியர்கள், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களால் நடத்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கான இட ஒதுக்கீடு கணக்கீடு தொடர்பான ஆய்வு அறிக்கை சமர்பிக்க ப்பட்டது.

இதுகுறித்து விரிவாக விவாதிக்க ப்பட்டது. கூட்டத்தில், ஊழியர்கள் தங்களுக்கு உள்ள பிரச்சினைகள், நடைமுறை சிக்கல்கள் குறித்து எடுத்து கூறினர். 70 சதவீத பணிகள் முடிந்து விட்டது. மீதமுள்ள 30 சதவீதத்தில் வீட்டில் யாரும் இருப்பதில்லை, சிலர் சாதி பெயரை கூறுவ தில்லை என தெரிவித்தனர்.

ஊழியர்கள் கள ஆய்வுக்கு காலை, மாலை நேரங்களில் செல்ல வேண்டும். அங்கு என்ன சூழ்நிலை உள்ளதோ அதனை குறித்துக்கொள்ள வேண்டும்.

காலதாமதம் ஏற்பட்டால், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, ஆலோசனை பெற்று, அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

கூட்டத்தில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒரு ங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி பாலாஜி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News