புதுச்சேரி

குருபூஜை மலரை 20-ம் பட்டம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் வெளியிட்டார்.

சிவஞான பாலய சுவாமிகள் குருபூஜை விழா

Published On 2023-07-04 08:57 GMT   |   Update On 2023-07-04 08:57 GMT
  • பாலய சுவாமிகளின் 12-ம் ஆண்டு குருபூஜை மற்றும் மலர் வெளியீட்டு விழா நடந்தது.
  • பெண்கள் கலை அறிவியல் கல்லூரி செயலர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

புதுச்சேரி:

மயிலம் பொம்மபுர ஆதீனம் 19-ம் பட்டம் குருமகா சன்னிதானம் சிவஞான பாலய சுவாமிகளின் 12-ம் ஆண்டு குருபூஜை மற்றும் மலர் வெளியீட்டு விழா நடந்தது.

பொம்மையார்பாளையம் மயிலம் பொம்மபுர ஆதின மட வளாகத்தில் நடந்த விழாவில் ராஜேஸ்வரி பெண்கள் கலை அறிவியல் கல்லூரி செயலர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

விழாவிற்கு மயிலம் பொம்மபுர ஆதீன 20-ம் பட்டம் குருமகா சன்னிதானம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி மலரை வெளியிட்டார். நிகழ்ச்சியில் விருத்தாச்சலம் குமாரதேவர் சுவாமி திருமடம் 24-வது வீர சிங்காசன குருமகா சன்னிதானம் தவத்திரு ரத்தின வேலாயுத சிவப்பி ரகாசம், திருப்பாதிரிப்பு லியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலய 9-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக ஆறுமுகம் மெய்ஞான சிவாச்சாரியார், தென்சேரிமலை ஆதீனம் நந்தவனத் திருமடம் சீர்வளர்சீர் முத்து சிவராமசாமி அடிகளார் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் டெல்லி தமிழ் சங்கத் தலைவர் பெருமாள், பொதுச்செயலாளர் முகுந்தன், புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் சீனிவாசன், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி லட்சுமணன் ஆகியோர் மலரை பெற்று சிறப்புரையாற்றினர்.

புதுவை தமிழ்ச் சங்க ஆட்சி குழுவில் புதிதாக பொறுப்பேற்ற தலைவர் முத்து, துணைத்தலைவர்கள் ஆதிக்கேசவன், திருநாவுக்கரசு, செயலாளர் மோகன்தாசு, பொருளாளர் அருள்செல்வம், துணை செயலாளர் தினகரன், ஆட்சி குழு உறுப்பினர்கள் உசேன், ராஜா, சுரேஷ்குமார், சிவேந்திரன் ஆனந்தராசன் மற்றும் புதுவை அரசின் கலைமாமணி விருது பெற்ற வர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது.

இதே போல் புதிதாக பொறுப்பேற்ற சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பூபதி பெரியசாமி, ஆலோசனைக் குழு உறுப்பினர் அரங்க முருகையன் ஆகியோரும் பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில் மயிலம் ஸ்ரீ சிவபிரகாச சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி செயலர் விஸ்வநாதன் நன்றி கூறினார். பள்ளி முதல்வர் திருநாவுக்கரசு நிகழ்ச்சியை ெதாகுத்து வழங்கினார்.

Tags:    

Similar News