search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சமீப காலமாக ரவீந்திர ஜடேஜாவின் பார்ம் சரியில்லை.
    • பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பி வருகிறார்.

    புதுடெல்லி:

    உலக அளவில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவும் ஒருவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அதிரடி காட்டி வருகிறார்.

    ஆனால், சமீப காலமாக ரவீந்திர ஜடேஜாவின் பார்ம் சரியில்லை. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பி வருகிறார். பீல்டிங்கிலும் தடுமாறி வருகிறார் என்பது இந்திய அணிக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

    நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ரவீந்திர ஜடேஜா, இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார்.

    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ரவீந்திர ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை.

    அக்சர் பட்டேல் சிறப்பாக பேட்டிங் செய்வதால் ஜடேஜாவின் இடத்தைப் பிடித்துள்ளார். வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். எனவே இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

    டி20 போட்டியில் ஜடேஜா ஓய்வை அறிவித்து விட்டதால், இனி ஒருநாள் போட்டிகளில் அவருக்கு இடம் கிடைப்பது கஷ்டம்தான். ரவிச்சந்திரன் அஸ்வின் போல டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

    • பெரும்பாலான பங்குகளை விற்க இருப்பதாக தகவல்.
    • தக்கவைத்துக் கொள்ளும் முடிவில் குஜராத் டைட்டன்ஸ்.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் 2022 ஆம் ஆண்டு சாம்பியன் பட்டமும், 2023 ஆம் ஆண்டு இரண்டாம் இடம் பிடித்த அணி குஜராத் டைட்டன்ஸ். சிவிசி கேப்பிட்டல் பார்ட்னர்ஸ் என்ற தனியார் நிறுவனம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமையாளராக உள்ளது. இந்நிறுவனம் பெரும்பாலான பங்குகளை விற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமம் மற்றும் டொரென்க் குழுமம் சிவிசி கேப்பிட்டல்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அணியில் பெரும்பான்மை பங்குகளை தக்கவைத்துக் கொள்ளும் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி உள்ளது.

    எனினும், அதானி குழுமம் மற்றும் டொரென்ட் குழுமம் குஜராத் அணியில் அதிக பங்குகளை வாங்க ஆர்வம் செலுத்துவதாக தெரிகிறது. தற்போதைய மதிப்பீட்டின் படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் மொத்த மதிப்பு 1 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 ஆயிரத்து 363 கோடியே 25 லட்சம் துவங்கி அதிகபட்சம் 1.5 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 12 ஆயிரத்து 544 கோடியே 87 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    முன்னதாக 2021 ஆம் ஆண்டு சிவிசி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் இந்த அணியை ரூ. 5 ஆயிரத்து 625 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளராக குமார் சங்ககாரா செயல்பட்டு வருகிறார்.
    • அவர் இலங்கையில் நடந்த உள்ளூர் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் பேட்டை வைத்து விளையாடி இருக்கிறார்.

    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா செயல்பட்டு வருகிறார். அந்த அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் இலங்கையில் கிராம கிரிக்கெட்டில் சங்கக்காரா விளையாடும் போது சஞ்சு சாம்சனின் பேட்டை வைத்து விளையாடி உள்ளார். அதில் சங்கக்காரா இங்கிலாந்தில் சில கிராம கிரிக்கெட் விளையாட சாம்சனின் பேட்களைப் பயன்படுத்துவதாகக் கூறினார்.

    இதன் புகைப்படத்தை சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குமார் சங்கக்கார என் பேட்டை பயன்படுத்துகிறார்! ஹஹாஹா... இது ஒரு கனவு!!" என்று எழுதினார்.

    இது தொடர்பாக சங்ககாரா கூறியதாவது:- எனது கிராமத்து கிரிக்கெட்டில், சஞ்சுவின் இரண்டு பேட்கள் என்னிடம் உள்ளன. ஏனெனில் அவர் தனது இரண்டு பேட்களை எனக்குக் மிகவும் அன்பாக கொடுத்தார். எனக்கு நினைவுச் சின்னங்கள் இல்லை. வீட்டில் பேட் எதுவும் இல்லை. மற்றப்படி ஒன்றும் இல்லை.

    சாஹல், நீங்கள் இதைப் பார்க்கிறீர்கள் என்றால், நீங்களும் எனக்கு சில கிட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காகவும் நான் காத்திருக்கிறேன் என கூறினார்.

    • இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன் (ஒருநாள்) ஆகியோர் இடம் பெறவில்லை.
    • சாம்சன் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார்.

    இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் டி20-யும் அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரும் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.

    இதற்கான டி20 அணியையும் ஒருநாள் அணியையும் பிசிசிஐ நேற்று அறிவித்தது. அதன்படி டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவும் ஒருநாள் கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டனர். இந்த தொடருக்கான அணியில் ருதுராஜ், சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணியின் தேர்வுக்கு லோக் சபா எம்.பி.யும் கிரிக்கெட் ரசிகருமான சசி தரூர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் சுவாரசியமான அணி தேர்வு. சாம்சன், தனது கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்தவர். ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

    அதேபோல அபிஷேக் சர்மா, ஜிம்பாப்வே தொடரில் நடந்த டி20 போட்டியில் சதம் அடித்தவர். அவரும் தேர்வு செய்யப்படவில்லை. இந்த வீரர்களின் வெற்றி, தேர்வாளர்களுக்கு மிகவும் குறைவாகவே தெரிகிறது. எப்படியும் அணிக்கு வாழ்த்துக்கள் என கூறினார்.

    இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய டி20 அணி:

    சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.

    இந்திய ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

    • இங்கிலாந்து தரப்பில் போப் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும் ஜெய்டன் சீல்ஸ், கவேம் ஹாட்ஜ், கெவின் சின்க்ளேர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    நாட்டிங்காம்:

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட் - ஜாக் கிராலி ஆகியோர் களமிறங்கினர். இதில் கிராலி 3-வது பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த பென் டக்கெட் -ஆலி போப் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். அதிலும் குறிப்பாக பென் டக்கெட் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல் அதிரடி காட்டினார். இவரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் 50 ரன்கள் அடித்து அசத்தியது.

    தொடர்ந்து ஆடிய அவர் 32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரூட் 14 ரன்களிலும் ஹரி ப்ரூக் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ஒல்லி போப் - பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர்.

    பொறுப்புடன் ஆடிய ஒல்லி போப் சதமும் பென் ஸ்டோக்ஸ் அரை சதமும் கடந்தனர். 127 ரன்கள் எடுத்த போது போப் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் 69 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்மித் 36 ரன்னும் கிறிஸ் வோக்ஸ் 37 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 88.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட்டும் ஜெய்டன் சீல்ஸ், கவேம் ஹாட்ஜ், கெவின் சின்க்ளேர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி 7 முறை சாம்பியனானது.

    தம்புல்லா:

    ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் 4 போட்டி 50 ஓவர் அடிப்படையில் நடத்தப்பட்டது. அவை அனைத்திலும் இந்திய அணி கோப்பையை வென்றது. இதேபோல் 20 ஓவர் அடிப்படையில் நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. ஒரே ஒரு முறை (2018) மட்டும் வங்காளதேசம் கோப்பையை தனதாக்கியது. கடைசியாக 2022-ம் ஆண்டு தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை தோற்கடித்து மகுடம் சூடியது.

    இந்த நிலையில் 9-வது ஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் உள்ள தம்புல்லாவில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகமும், 'பி' பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்தும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    தொடக்க நாளான இன்று 'ஏ' பிரிவில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இரவு 7 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும், பந்து வீச்சில் பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், தீப்தி ஷர்மா, ஸ்ரேயாங்கா பட்டீலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    நிதா தர் தலைமையிலான பாகிஸ்தான் அணி சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியை மறந்து வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்னதாக சரியான அணியை அடையாளம் காண இந்த போட்டியை பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும்.

    ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 20 ஆட்டங்களில் ஆடி 17-ல் வெற்றி பெற்று வலுவாக காணப்படும் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடருவதுடன், போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்க தீவிரம் காட்டும். பாகிஸ்தான் முடிந்த வரை கடும் சவால் அளிக்க முயற்சிக்கும். இவ்விரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 11-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

    முன்னதாக பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்து பர்மா தலைமையிலான நேபாள அணி, இஷா ஒஜா தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதுகிறது.

    இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் விளையாடிய சேப்பாக் அணி 156 ரன்கள் விளாசினர்.
    • இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரிஸ் குமார் 14 பந்தில் 33 ரன்கள் விளாசினார்.

    கோவை:

    டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சேலம் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சந்தோஷ் குமார் 17 ரன்களிலும், ஜெகதீசன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் கேப்டன் பாபா அபராஜித் தவிர மற்ற வீரர்கள் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

    பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபராஜித் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் அபிஷேக் தன்வார் (26 ரன்கள் 8 பந்துகள்) அதிரடியாக விளையாட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக பாபா அபராஜித் 41 ரன்கள் அடித்தார். சேலம் தரப்பில் பொய்யாமொழி மற்றும் சன்னி சந்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சேலம் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக்- கவின் களமிறங்கினர். இருவரும் சேப்பாக் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் அபிஷேக் 16 பந்தில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராஜேந்திரன் 9 பந்தில் 1 ரன்களும் கவின் 22 பந்தில் 11 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

    இப்படி அனைவரும் அதிரடியாக விளையாட திணறினர். அடுத்து வந்த ராபின் பிஸ்ட்- முஹம்மது அட்னான் கான் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். முஹம்மது அட்னான் கான் 31 ரன்னிலும் ராபின் பிஸ்ட் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரிஸ் குமார் 14 பந்தில் 33 ரன்கள் விளாசினார். அதில் 4 சிக்சர் 1 பவுண்டரி ஆகும். கடைசி வரை போராடிய அவரால் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.

    இதனால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • ஹர்திக் பாண்ட்யா- நட்டாசாவுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
    • கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் பிரிய இருப்பதாக தகவல் வெளியானது.

    செர்பியா நாட்டைச் சேர்ந்த நட்டாசாவை இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யா கடந்த நான்கு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையில் கருத்த வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இருவரும் அது குறித்து வெளிப்படையாக கருத்து ஏதும் கூறாமல் இருந்தனர்.

    உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், ஹர்திக் பாண்ட்யா வெற்றி கொண்டாட்டத்தில் இருந்தபோது நட்டாசா தனது குழந்தையுடன் செர்பியா சென்றார். இதனால் வதந்தி ஏறக்குறைய உண்யைமானது.

    இந்த நிலையில் பிரிந்து வாழ்வதற்கு இருவரும் பரஸ்பர முடிவு எடுத்துள்ளனர். இந்த தகவலை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இருவரும் பிரிய வாய்ப்புள்ளது என பரவி வந்த வதந்தி தற்போது உண்மையாகியுள்ளது.

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்டில் இங்கிலாந்து அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது.
    • ஜோ ரூட் மொத்தம் 142 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,817 ரன்கள் குவித்துள்ளார்.

    நாட்டிங்காம்:

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் உள்ளார். இங்கிலாந்து வீரரான அலெஸ்டர் குக் 5-வது இடத்தில் உள்ளார்.

    இதற்கிடையே, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து வருகிறது. ஒல்லி போப் சதமடித்து 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் ஜோ ரூ 14 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட், இலங்கை வீரர் ஜெயவர்தனேவை முந்தினார்.

    ஜோ ரூட் மொத்தம் 142 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,817 ரன்கள் குவித்துள்ளார். இதில் 31 சதங்கள் அடங்கும்.

    • ருதுராஜ், குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
    • சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த தொடரில் முக்கிய வீரர்களாக கருதப்படும் ஜடேஜா, குல்தீப் யாதவ், ருதுராஜ், அபிஷேக் சர்மா, சாம்சன்(ஒருநாள் தொடரில்) ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர். இதில் குல்தீப் யாதவ், ஜடேஜா உலகக் கோப்பையில் விளையாடினர். அதனால் அவருக்கு ஓய்வு கொடுப்பதற்காக கூட அவர்கள் அணியில் இடம் பெறாமல் இருந்திருக்கலாம். ஆனால் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ், சாம்சன் இடம் பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவர்கள் இருவரும் ஜிம்பாப்வே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அபிஷேக் சர்மா ஒரு சதம் விளாசினார். ருதுராஜ் 3 போட்டிகளில் விளையாடி ஒரு அரை சதம் ஒரு போட்டியில் 49 ரன்கள் குவித்தார். இதை தவிர சஞ்சு சாம்சன் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்றிருக்கிறார். ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை.

    இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை வருவார் செல்வார் என்பது போலவே இருக்கும். அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியில் இடம்பெறுவார். ஆனால் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறமாட்டார். அப்படி அணியில் இடம் பிடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதற்கு அடுத்த தொடரில் அவர் இடம் பெறமாட்டார். இப்படி தான் இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்க்கை நகர்கிறது. அந்த வகையில் தற்போதும் அவரை கழற்றி விட்டுள்ளனர்.

    நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு பின்னர் ஒருநாள் இந்திய அணியில் சாம்சன் இடம் பிடித்தார். தென் ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாடி சதமும் அடித்தார். அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இந்திய ஒருநாள் அணியில் அவர் இடம் பெறவில்லை. தற்போதும் அவரும் இடம் பெறாதது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    டி20 அணி விவரம் பின்வருமாறு:-

    சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.

    ஒருநாள் அணி விவரம் பின்வருமாறு:-

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அப்ராஜித் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • சேலம் அணி தரப்பில் சன்னி சந்து, பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    கோவை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற சேலம் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க வீரர்களாக சந்தோஷ் குமார் - ஜெகதீசன் களமிறங்கினர். தடுமாறிய இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த பிரதோஷ் ரஞ்சன் 15 ரன்னிலும் சித்தார்த் 9 ரன்னிலும் டேரில் ஃபெராரியோ 23 ரன்னிலும் அஸ்வின் கிறிஸ்ட் 0 என வெளியேறினா. ஒரு முனையில் சிறப்பாக ஆடிய கேப்டன் அப்ராஜித் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் அதிரடி காட்டிய அபிஷேக் தன்வர் 4 சிக்சர்களை பறக்க விட்டார். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. சேலம் அணி தரப்பில் சன்னி சந்து, பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
    • இன்று 2-வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

    நாட்டிங்காம்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் டக்கெட் - ஜாக் கிராலி ஆகியோர் களமிறங்கினர். இதில் கிராலி 3-வது பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த பென் டக்கெட் -ஆலி போப் அதிரடியாக ரன்கள் சேர்த்தனர். அதிலும் குறிப்பாக பென் டக்கெட் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவது போல் அதிரடி காட்டினார். இவரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களில் 50 ரன்கள் அடித்து அசத்தியது.

    இதன் மூலம் 147 ஆண்டு கால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 50 ரன்கள் எட்டிய அணி என்ற மாபெரும் சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.

    32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்திய பென் டக்கெட் 71 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ×