என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலெக்டரிடம் மனு"
- 350 மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி மனு அளிக்க வந்தார்.
- அக்கடவல்லி ஊராட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அக்கடவல்லியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.
இன்று காலை இவர் ஏற்கனவே அளித்த 350 மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அளிக்க வந்தார்.
அந்த மனுவில், அக்கடவல்லி ஊராட்சியில் கடந்த 1.5.2011 முதல் 28.4.2021 வரை ரூ.9 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை என பல்வேறு துறை அதிகாரியிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் கடந்த 2021-ம் ஆண்டு கடலூர் வந்த முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில், எங்கள் பகுதிக்கு விசாரணை நடத்த வந்த அதிகாரிகளும் ஊராட்சியில் முறைகேடுகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. அதனால் இதனை எங்களால் விசாரிக்க முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.
அதன் பிறகு தற்போது வரை விசாரணை நடைபெறவில்லை. அதனால் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் முடங்கி போய் உள்ளது.
- நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மனு.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயராக தி.மு.க.வை சேர்ந்த மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். மாநக ராட்சியில் தி.மு.க., அ.தி. மு.க., பா.ம.க., காங்கிரஸ், த.மா.கா, சுயேட்சை என 51 கவுன்சிலர்கள் உள்ளனர்.
இதில் அ.தி.மு.க, பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தி.மு.க. கவுன்சிலர்களே மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
மாநராட்சி கூட்டங்களை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் முடங்கி போய் உள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி போர்க் கொடி தூக்கி உள்ள தி.மு.க. உள்ளிட்ட கவுன்சிலர்கள் 33 பேர் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மனு அளித்தனர்.
ஏற்கனவே பணிக்குழு கலைக்கப்பட்ட நிலையில் பொது சுகாதார குழு, கணக்கு குழு, நகரமைப்பு குழு, வரிவிதிப்பு குழு உறுப்பினர்கள் பதவியை தி.மு.க. கவுன்சிலர்கள் உட்பட 18 எதிர்ப்பு கவுன்சிலர்கள் ராஜினாமா செய்து உள்ளனர்.
மீண்டும் மாநகராட்சி ஆணையரை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி 33 எதிர்ப்பு கவுன்சிலர்களின் பிரமாணம் பத்திரங்களையும் தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் 13 கவுன்சிலர்களை உள்ளடக்கி செயல்பட்டு வரக்கூடிய 2-வது மண்டல குழுவின் தலைவர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கூறி 7 எதிர்ப்பு கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 33 பேர் மீண்டும் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும், என்ற எங்கள் கோரிக்கையை தவிர்க்கும் வகையில் மேயருக்கு ஆதரவாக செயல்படும் கமிஷனரை மாற்றி, மன்ற கூட்டத்தை வேறொரு ஆணையரை வைத்து நடத்திட வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- சோழவந்தான் அருகே குடிநீர் வசதி கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
- கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள முதலைக்குளம் ஊராட்சியில் உட்பட்ட கீழப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி நிதி ஒதுக்கப்பட்டு போர்வெல் போடப்பட்டது. இதன் மூலம் குடிநீர் சப்ளை செய்வதற்கு ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிலையில்அந்த ஏற்பாட்டை ஒருசிலர் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கீழப்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் குடிநீருக்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்தஒரு மாதத்திற்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் குடிநீர் கிடைப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் ஒரு மாதம் கடந்த பின்னரும் குடிநீர் கிடைக்க வழியில்லாமல் கீழப்பட்டி கிராம மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தங்களுக்கு போர்வெல் மூலம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்துள்ளனர்.
தனி நபர்களின் நலனை கருத்தில் கொண்டு கிராம மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை தடுத்து வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- பூட்டுத்தாக்கில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிக்கை
- மது அருந்திய நபர்கள் சாலையில் விழுந்து கிடப்பதும் தொடர்கதையாக உள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க சார்பில் மாவட்ட செயலாளர் ப.சரவணன் தலைமையில் கட்சியினர் நேற்று மாலை கலெக்டர் வளர்மதியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பூட்டுத்தாக்கு பஞ்சாயத்திற்கு உட்பட்ட மேலகுப்பம் சாலையில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவிலும், பள்ளி மற்றும் கல்லூரி ,வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள் மற்றும் வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சாலையாகவும் மேலகுப்பம் சாலை உள்ளது.
சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள், பொதுமக்கள் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களில் வீட்டிற்கு திரும்ப செல்லும் போது மேலகுப்பம் சாலையில் அமைந்துள்ள மதுபான கடையில் மது அருந்தும் நபர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டுவிட்டு மது அருந்துவதும், மது அருந்திய நபர்கள் சாலையில் விழுந்து கிடப்பதும் தொடர்கதையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக மது கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாகவும், பா.ம.கவின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் பா.ம.க.வின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், வக்கீல். ஜானகிராமன் உள்பட மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர , நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருப்பூரை சேர்ந்த டாக்டர் கே.கிங் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு கொடுத்தார்.
- ஜீனியஸ் எபிடெமிக்ஸ் என்ற விதிப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓமியோபதி மருந்தை கொடுக்கலாம்.
திருப்பூர் :
தமிழ்நாடு அரசு ஓமியோபதி மருத்துவ முன்னாள் ஆலோசகரும், ஓமியோபதி டாக்டர்கள் சங்க முன்னாள் மாநில தலைவருமான திருப்பூரை சேர்ந்த டாக்டர் கே.கிங் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜை சந்தித்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
200 ஆண்டுகளுக்கு முன்பே டெங்கு காய்ச்சலுக்கு ஓமியோபதி மருந்து பயன்பாட்டில் இருந்துள்ளது. ஓமியோபதி மருந்துகள் பெரும்பாலும் உள்நாட்டு, வெளிநாட்டு மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. குறைந்த செலவில் இந்த மருந்தை அதிகப்படியான மக்களுக்கு வழங்கி டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியும். ஒரே வகையான நோய் அறிகுறியால் (எபிடெமிக்) பலரும் பாதிக்கப்படும்போது ஜீனியஸ் எபிடெமிக்ஸ் என்ற விதிப்படி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓமியோபதி மருந்தை கொடுக்கலாம்.
கடந்த 2009-ம் ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தபோது, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஏற்பாடு செய்திருந்த ஆயுஷ் மாநாட்டில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் குணப்படுத்தும் ஓமியோபதி மருந்து பெட்டகத்தை நான் வழங்கினேன். விளக்கத்தை கேட்டு, மருத்துவர்கள் மத்தியில் தடுப்பு மருந்தை அமைச்சர் உட்கொண்டார்.
தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக அறியப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போர்க்கால அடிப்படையில் டெங்கு தொற்று பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்கு ஓமியோபதி டாக்டர்கள் சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு, குணப்படுத்தும் ஓமியோபதி மருந்தின் குறிப்புகளை பெற்று உடனடியாக மக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை ஆணையாளர், இந்திய மருத்துவத்துறை ஆணையாளர், தலைமை செயலாளர் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். இதை அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
- தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- முகாமில் அரக்காசனஅள்ளியில் விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு பெற லஞ்சம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கலெக்டரிடம் மனு அளித்தார்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அரக்காசனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்.
இவர் இன்று தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் முகாமில் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
விவசாயியான நான், அரக்காசனஅள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு இலவச மின் இணைப்பிற்காக பெரும்பாலை மின்வாரியத்தில் அதிகாரியிடம் விண்ணப்பித்து இருந்தேன்.
அந்த அதிகாரி தனக்கு பிறகு விண்ணப்–பளித்த அனைவருக்கும் பணம் பெற்றுக் கொண்டு இலவச மின் இணைப்பு கொடுத்தது தெரியவந்தது. ஆனால், தனது நிலத்திற்கு இதுவரை மின் இணைப்பு தராமல் கால–ம் தாழ்த்தி வந்தார்.
இதுகுறித்து அதிகாரி–யிடம் கேட்டபோது, இலவச மின் இணைப்புக்காக லஞ்சம் கேட்டார். அப்போது நான் விண்ணப்பத்துடன் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தேன். அதனை பெற்றுக்கொண்டு மேலும் ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்க முடியும் என்று அதிகாரி கூறினார்.
ஒரு மின் இணைப்பிற்கு ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் மின் இணைப்பு வழங்கு–கிறார். மேலும் தனக்கு முக்கிய பிரமுகர்கள் ஆதரவு இருப்பதால் அதிகாரியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டி வருகிறார்.
எனவே இந்த மனுவை ஏற்று விசாரணை செய்து எனக்கு மின் இணைப்பு வழங்குமாறும், லஞ்சம் வாங்கும் மின்வாரிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர் சாந்தி உடனே அங்கிருந்த மின்–வாரிய அதிகாரியை அழைத்து விசாரிக்க உத்தர விட்டார்.
- பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டித்தர கோரிக்கை
- பள்ளி வளாகத்திற்குள் கழிப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் வேதனை
கோவை,
கோவை க.கா சாவடி பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
அப்போது அவர்கள் கலெக்டரிடம் கொடுத்து உள்ள மனுவில், எங்கள் பள்ளி ஆரம்ப பள்ளியாக இருந்து, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. அங்கு தற்போது 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.
ஆனால் தரம் உயர்த்தப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பிறகும் அங்கு தற்போதுவரை கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படவில்லை. கழிவறை வசதிகள் இல்லை. எனவே கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
பின்னர் மாணவ-மாணவிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எங்கள் பள்ளியில் தமிழ்-ஆங்கில வழி என 2 பிரிவுகளும் ஒரே வகுப்பறையில் நடத்தப்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்கு அருகில் உள்ள பொதுக்கழிவறையை உபயோகப்படுத்த வேண்டி உள்ளது.
பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு தனி கழிப்பறை வசதி இல்லை. மேலும் அங்குள்ள வகுப்பறைகள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் மாணவர்களை பெரும்பாலும் வெளியில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர். விளையாட்டு மைதானங்களும் இல்லை. இதுகுறித்து பலமுறை அரசு நிர்வாகிகளிடம் புகார் மனு அளித்தும் தற்போதுவரை நடவடிக்கை இல்லை.
எனவே தற்போது கலெக்டரிடம் மனு அளிக்க வந்து உள்ளோம்.
-இவ்வாறு அவர்கள் கூறினர்.
- அரசு மதுபானக்கடை அமைக்கப்பட்டால், மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள்.
- பள்ளி மாணவிகள் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்ப டுவார்கள்.
தருமபுரி,
அரசு மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காரியப்பன அள்ளி கிராம மக்கள் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி யிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப் பதாவது:-
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் காரியப்பன அள்ளி கிராமத்தில் அரசு மதுபானக்கடை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதியதாக மதுபானக்கடை திறக்க உள்ள இடம் அரசு உயர் நிலைப்பள்ளிக்கும், அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கும், இடை யில் உள்ளது.
இங்கு அரசு மதுபானக்கடை அமைக்கப்பட் டால், மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள். மேலும் பள்ளி மாணவிகள் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்ப டுவார்கள். பெண்களுக்கும், பொது மக்களுக்கும் மது பான கடையால் பாதிப்பு ஏற்படும்.
எனவே டாஸ்மாக் நிர்வாகம் எங்கள் பகுதியில் மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிடவேண்டும் என மனுவில் குறிப்பிட் டுள்ளனர்.
- விவசாயிகள் கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி வேளாண் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
- இதனால் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஈரோடு:
ஈரோடு பூங்கா சாலையில் இயங்கி வரும் மஞ்சள் மண்டியில் கோபி, ஈரோடு, மொடக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசா யிகள் பல ஆண்டுகளாக தங்களது மஞ்சள் மூட்டை களை இருப்பு வைத்து ள்ளனர். ஆண்டுக்கணக்கில் மஞ்சள் இருப்பு வைக்கும் விவசாயிகள் விலை உயரும் போது அவற்றை விற்பனை செய்வது வழக்கம்.
இதன்படி மஞ்சள் மூட்டைகளை இருப்பு வைத்திருந்த 11 விவசாயிகள் மூட்டைகளை எடுப்பதற்காக சென்று பார்த்த போது 1,300 மஞ்சள் மூட்டைகளுக்கு பதில் தேங்காய் மட்டைகள் நிரப்பிய மூட்டைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விவசாயிகள் அளித்த புகாரில் கிடங்கு காவலாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய கிடங்கு உரிமையாளரை கைது செய்து மஞ்சள் மூட்டைகளு க்கான தொகை யை விவசாயி களுக்கு வழங்க கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி ஈரோடு கலெக்டர் அலுவல கத்தில் நடைபெற்ற வேளா ண் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மஞ்சள் மூட்டை களுக்கான தொகை யை கேட்டால் கிடங்கு உரிமை யாளர் மிரட்டுவதா கவும், அவரது கிடங்குக்கு சீல் வைப்ப துடன், சொத்து க்க ளை முடக்கி பணத்தை மீட்டு த்த ருமாறு வலியுறுத்தினர்.
மஞ்சள் மூட்டைகளை திருடி விட்டு தேங்காய் மட்டை களை மூட்டைகளாக அடுக்கி தீ வைத்து அதனை விபத்து போல் ஜோடிக்க அவர்கள் திட்டமிட்டி ருந்ததாக விவசா யிகள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து மனுவை பெற்று கொண்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இதனால் இன்று வேளா ண்மை குறைத்தீர்க்கும் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- கரக செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு கோவிலுக்கு வருவாய் பெருக்க பொது ஏலம் விட வேண்டும்.
- கோவிலுக்கு சொந்தமான 32.5 ஏக்கர் நிலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா சிக்கார்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊரில் பழமை வாய்ந்த கரக செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 32.5 ஏக்கர் நிலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலத்தை பரம்பரை அறங்காவலர் மட்டும் அனுபவித்து வருகிறார். மேலும் திருவிழா காலங்களில் திருவிழா நடத்துவதற்கு கோவில் நிலத்தை பயன்படுத்து வதற்கும், திருவிழா நடத்துவதற்கும், உண்டான செல வினங்களை ஏற்றுக்கொள்ளாமல் கோவிலில் வரும் வருமானத்தையும் கோவில் நிலத்தையும் பல ஆண்டுகளாக ஒருவரே அனுபவித்து வருகிறார்.
கோவில் திருப்பணி செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார். ஊர் மக்களாகிய நாங்கள் எங்களுடைய சொந்த செலவில் திருவிழாக்களை நடத்தி வருகிறோம்.
மேலும் கரக செல்லியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு கோவிலுக்கு வருவாய் பெருக்க பொது ஏலம் விட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து கோவில் சொத்தை மீட்டெடுக்க வேண்டும். கோவில் திருவிழாவை சிறப்பாக நடத்த வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
- ஜே.சி.பி எந்திரம் மூலம் அடியாட்களுடன் வந்து பஞ்சாயத்து தலைவர் கடைகளை இடித்துள்ளார்.
- ரூ.15 லட்சம் மதிப்பிற்கு மேல் எனக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட மானியதள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மானிய தள்ளி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு சொந்தமான இரண்டு கடைகள் உள்ளது. அதில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தேன். அந்த கடைகளை சட்ட விரோதமாக ஜே.சி.பி எந்திரம் மூலம் அராஜக முறையில் அடியாட்க ளுடன் வந்து பஞ்சாயத்து தலைவர் இடித்துள்ளார். மேலும் கடைகளில் இருந்து எனது உடைமைகளை முற்றிலும் அழித்து மின் இணைப்பு சாதனங்கள் உட்பட அனைத்து பொருட்களையும் நொறுக்கி, சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிற்கு மேல் எனக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளார்.
எங்கள் குடும்பத்திற்கு கொலைமிரட்டலும் விடுத்து எங்கள் வாழ்வா தாரத்தை அழித்துள்ளார். எனவே பஞ்சாயத்து தலைவர் மீது தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி உரிய விசாரணை மேற்கொண்டு பஞ்சாயத்து தலைவர் மீதும், அவர்களது அடியாட்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே இடத்தில் கடைகளை கட்டிக் கொடுக்க ஆவனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
- கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்கள், ஒய்வு பெற்றப்பின்பு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
- நிலுவையின்றி ஓய்வு பெற்ற துப்பரவு பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்பரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் லட்சுமணன் தலைமையில் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்கள், ஒய்வு பெற்றப்பின்பு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ரூ.50 ஆயிரம் பணிக்கொடை மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஓய்வூதியம் கிடைக்காமல் ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். எனவே, நிலுவையின்றி ஓய்வு பெற்ற துப்பரவு பணியாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்