என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீசார் நடவடிக்கை"
சென்னை:
சென்னை அமைந்தகரையில் தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நக்சலைட் பயங்கரவாதி ஒருவன் பணி புரிந்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சிலிகுரி என்ற இடத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக கூறி அம்மாநில போலீசாரால் இவன் கைது செய்யப்பட்டவன் என்றும், அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியில் வேலைக்கு சேர்ந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் பிடிபட்ட அந்த வாலிபரை போலீசார் அமைந்தகரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவனது பெயர் கந்தர்பதாஸ் (24) என்பது தெரிய வந்தது. அசாம் மாநிலத்தை சேர்ந்த இவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறையில் இருந்தது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது கந்தர்பதாஸ் எனக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளான்.
ஆனால் பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்ட சிலருடன் கந்தர்பதாஸ் கைது செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து கியூ பிரிவு போலீசாரும் கந்தர்பதாசிடம் விசாரணை நடத்தினர். சென்னை போலீசார் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர், நக்சலைட் பயங்கரவாதியான கந்தர்பதாஸ், கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற கந்தர்பதாஸ், ஜாமீனில் விடுதலையான பின்னர் சென்னைக்கு வந்துள்ளான்.
கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் அமைந்தகரையில் உள்ள ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்ந்துள்ளான். இவன் சென்னைக்கு வந்ததன் பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குற்ற வழக்கில் தொடர்புடைய நக்சலைட் அமைப்பை சேர்ந்த நபர் பிடிபட்ட சம்பவம் சென்னை போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கு பின்னர் கந்தர்பதாஸ் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மேற்குவங்காள போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவான் என்று தெரிகிறது.
அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்தான் கந்தர்பதாஸ் பணிபுரிந்து வந்துள்ளான். இங்கு வட மாநிலத்தவர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள், ஆஸ்பத்திரியில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தவர்களுடன் கந்தர்பதாஸ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவன் நான் ஒரு பயங்கரவாதி என்று மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி பாதுகாப்பு அதிகாரியான ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ராமதாஸ் அவர் பற்றிய தகவல்களை சேகரித்தார். யூடியூப்பில் தேடிப்பார்த்த போதுதான் கந்தர்பதாஸ் பற்றிய தகவல்கள் தெரிய வந்தது. இதன் பின்னர்தான் அதிகாரி ராமதாஸ் பயங்கரவாதியை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.
கந்தர்பதாஸ் உல்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே கந்தர்பதாஸ் சட்டை அணியாமல் வெற்று உடம்புடன் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் காட்சி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து சென்னைக்கு வரும் வெளி மாநிலத்தவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். #Naxalitearrested
ராயபுரம்:
தண்டையார்பேட்டை, நேதாஜிநகரில் உள்ள முருகன் கோவிலில் கடந்த 19-ந்தேதி திருவிழா நடைபெற்றது. இதில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தண்டையார்பேட்டை வைத்திய நாதன் மேம்பாலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஆட்டோவில் கத்தி, அரிவாளுடன் வந்த அந்த பகுதியை சேர்ந்த திவாகர், மணிகண்டன், அக்பர் மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்களை கைது செய்தனர்.
இதேபோல் தண்டையார் பேட்டை ஐ.ஓ.சி. பஸ்நிலையம் அருகே கத்தியுடன் பதுங்கி இருந்த மற்றொரு தரப்பை சேர்ந்த 2 சிறுவர்கள் மற்றும் சையது, ஆசிப், அப்பாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 53). இவர் நேற்று இரவு சைக்கிளில் மடத்து தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது சைக்கிள் பழுதாகி விட்டது. அதனை அவர் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வந்த ராமையா மகன் மண்டை செல்வம் மற்றும் சங்கர் என்பவரது மகன் தினேஷ் ஆகியோர் பணம் கேட்டு கத்தியை காட்டி மிரட்டினர்.
கோவிந்தராஜ் பணம் கொடுக்க மறுத்ததால் அவரைத் தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர்.
இதனை பார்த்த ஜாபர் சாதிக் என்பவர் தட்டிக்கேட்டு தடுக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அவரையும் கத்தியால் தாக்கி அவரது செல்போனையும் பறித்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மண்டை செல்வம் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் 2 பேர் மீதும் கிழக்கு போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாசரேத்:
நாசரேத் ஒய்.எம்.சி.ஏ. சதுக்கம் பகுதியை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (வயது 67). ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி (பொறுப்பு). இவர் கடந்த 17-ந் தேதி இரவு நாசரேத் பஜாரில் கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டின் வெளியே பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது பைக்கின் கவரில் வைத்திருந்த ரூ. 4 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது. பணத்தை யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து சுவாமிதாஸ் நாசரேத் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை சோதனை செய்தனர். சோதனையில் அந்த தெருவில் சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் பைக்கில் செல்வதையும், பைக் நம்பரும் தெரியவந்தது.
விசாரணையில் அவர் நாசரேத் அருகில் உள்ள ஞானராஜ் நகரை சேர்ந்த இளைய பெருமாள் மகன் ராமச்சந்திரன் (27) என்பதும், பணத்தை அவர் திருடியதும் தெரியவந்தது. இவர் அங்குள்ள கடையில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் துரை வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தார்.
பழனி:
பழனி முல்லைநகரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது45). இவர் கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பழனி சட்டப்பணிகள் குழுவிற்கு புகார் அனுப்பப்பட்டது. இதனைதொடர்ந்து சட்டப்பணிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
ஆசிரியர் ஸ்டீபன்ராஜ் மற்றும் மாணவிகளிடம் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணையில் ஸ்டீபன்ராஜ் மாணவிகளிடம் ஆபாசமாக பேசியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் பழனி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. அப்பகுதியில் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது அடிக்கடி நடந்து வருகிறது. மயில்களை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜகம்பீரம் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரன் (வயது 50) என்பவர் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
குத்தகை எடுத்து விவசாயம் செய்த நிலத்தில் புகுந்து மயில்கள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் நெல்லில் குருணை மருந்தை கலந்து மயில்களை கொன்றேன் என்று கைதான சந்திரன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நீர்வரத்து 60 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து உள்ளது.
இன்று பிற்பகலுக்குப் பிறகு நீர் வரத்து 1 லட்சம் கன அடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒகேனக்கல், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து மிக அதிகமாக உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு ஆற்றில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் மற்றும் பரிசலில் செல்ல தடை செய்யப்பட்டு உள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை. இதன் இருகரைகளிலும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு தேனி மட்டுமல்லாது தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால் பூங்காக்களில் கள்ளக்காதல் ஜோடிகள் சில்மிஷத்தில் ஈடுபடுவது குடும்பத்துடன் வருபவர்களை முகம்சுழிக்க வைக்கிறது. இதுகுறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் ஆண்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் பாலகுரு, சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு வைகை அணை பூங்காவில் இருகரைகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதர்களுக்கு இடையே அத்துமீறிய காதல்ஜோடிகளை போலீசார் விரட்டியடித்தனர்.
இதில் பிடிபட்ட 17 வயதுக்கும் குறைந்த சிறுவர்-சிறுமிகளை போலீசார் கவுன்சிலிங் கொடுத்து படிக்கவேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் கள்ளக்காதல் ஜோடிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து அனுப்பினர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், போலீசாரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இருந்தபோதும் வைகைஅணைப்பூங்காவில் நிரந்தரமாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். அத்துமீறுபவர்களை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சென்னையில் ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தலைமறைவு குற்றவாளிகளை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்து வருகிறார்கள்.
சமீபத்தில் ராயப்பேட்டை பகுதியில் ரவுடி ஆனந்தன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்ட போது போலீஸ்காரர் ராஜவேலு தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி கும்பல் ராஜவேலுவை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினர்.
இதையடுத்து போலீசார் தப்பி ஓடிய ரவுடி ஆனந்தன் உள்பட 7 பேரை பிடித்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் கொல்லப்பட்டான்.
ஏற்கனவே போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கைது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் என்கவுண்டர் நடந்து இருப்பது ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் ரவுடிகள் பலர் சென்னை நகரில் இருந்து வெளியேறி புறநகர் பகுதிகளில் பதுங்கி உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தையொட்டி உள்ள சென்னை புறநகர் பகுதிகளிலும் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம் இருந்து வந்தது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி ரவுடிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
சோழவரம் பகுதியில் ரவுடிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்து நேற்று இரவு போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி நேரடியாக களம் இறங்கி சோதனையில் ஈடுபட்டார். போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோழவரத்தில் உள்ள காந்தி நகர், சோலையம்மன் நகர், ஆட்டங்தாங்கல் ஆகிய இடங்களில் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் 40-க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் வழிப்பறி கொள்ளையர், சிறு சிறு வழக்குகள் உள்ளவர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் அனைவரையும் காரனோடையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
பிடிபட்டவர்கள் மீது எந்தெந்த போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்பது குறித்து விசாரித்தனர்.
இதில் மணிகண்டன், நாகராஜ், ராமு, சங்கர் உள்பட 8 ரவுடிகள் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை எச்சரித்து குற்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கூறி அனுப்பி வைத்தனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகரில் உள்ள மீன் மார்க்கெட் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை உடனடியாக அகற்றக்கோரியும் பா.ஜனதா சார்பில் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் இந்த போராட்டத்திற்கு எதிராக சில அமைப்புகளும் போராட்டத்தை அறிவித்தனர். இதனால் முத்துப்பேட்டையில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து முத்துப்பேட்டை போலீசார் இரு தரப்பினரின் அனைத்து போராட்டத்திற்கும் அனுமதி மறுத்து தடை செய்தனர். இருந்தும் போராட்டங்கள் அறிவிப்பதும், பின்னர் தடை செய்வதுமாக தொடர்ச்சியாக பரபரப்பான சூழ்நிலை உருவானது. இந்தநிலையில் இன்று பா.ஜனதா சார்பில் மீன் மார்க்கெட்டை உடன் அகற்றக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பேட்டை சிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படலாம் என்ற நிலையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இரு தரப்பினரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தும் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் பா.ஜ சார்பில் திட்டமிட்டப்படி இன்று உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருவாரூர் எஸ்.பி. மயில்வாகனன், ஏ.டி.எஸ்.பி. ஜான்ஜோசப், முத்துப்பேட்டை டி.எஸ்.பி. இனிகோ திவ்யன், நன்னிலம் டி.எஸ்.பி. அருண் உள்ளிட்ட 5 டி.எஸ்.பி.க்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் ஜாம்புவானோடை கிராமத்தில் உள்ள பா.ஜ. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.
அதேபோல் பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா தலைமையிலான போலீசார் பேட்டை கிராமத்தில் உள்ள பா.ஜ. மாவட்ட தலைவர் பேட்டை சிவா வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர்.
மேலும் உண்ணாவிரதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, கோட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் ராமலிங்கம், செல்வம், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் டி.ஐ.ஜி. லோகநாதன் சம்பவ இடங்களை பார்வையிட்டார்.
மதுரை:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னையன். இவரது மனைவி கருப்பாயி. இவர்களது 13 வயது மகள் அந்தப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அந்த சிறுமியை உப்படாபட்டியைச் சேர்ந்த அஜித் (17), திரவியம் (16) ஆகிய 2 பேர் வீடு புகுந்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமி கூச்சல் போட்டவுடன் சிறுமியின் தாயார் கருப்பாயி வீட்டுக்கு ஓடி வந்தார். அப்போது 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து கருப்பாயி மேலவளவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித், திரவியம் ஆகிய 2 பேரையும் போஸ்கோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்