என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீசார் ரோந்து பணி"
குளச்சல்:
குளச்சல் பகுதியில் இரவு வீடுகள் முன்பு நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடுபோயின. சைமன்காலனியைச் சேர்ந்த சுபின், சன்னதிதெரு ரமேஷ், பனவிளை மகேஷ், மேக்கோடு ஆனந்த் ஆகியோர் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களும் திருட்டு போனது.
இது குறித்து அவர்கள் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று குளச்சல் போலீசார் இரும்பிலி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் உதயமார்த்தாண்டத்தைச் சேர்ந்த மரிய கிராஸ்வின் (20), லியோன் நகரைச் சேர்ந்த எபின் நாயகம் (21), இரும்பிலி கரையைச் சேர்ந்த முகம்மது அனஸ் (22) , அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த கண்ணன் (20) என்பது தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் 4 பேரும் குளச்சல் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோட்டார் சைக்கிள்களை திருடி விற்றதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். திருடிய மோட்டார் சைக்கிள்களை ஆலஞ்சி குன்னங்கல் பாறைக்கு கொண்டு சென்று அவர்கள் பழைய நம்பர் பிளேட்டுகளை கழற்றி விட்டு போலி நம்பர் பிளேட்டுகளை பொருத்தி உள்ளனர். இவர்கள் குளச்சல் மட்டுமல்லாமல் தக்கலை, கருங்கல், மார்த்தாண்டம், கோட்டார் பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதானவர்களில் முகம்மது அனஸ் பி.பி.ஏ. பட்டதாரி ஆவார்.
மதுரை:
மதுரை மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் நேற்று மாலை நெல்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த போது குடிபோதையில் இருப்பது தெரியவந்தது.
அவர்கள் இன்ஸ்பெக்டர் மனோகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவரை தாக்க முயன்றதாக கே.புதூர் போலீசில் மனோகரன் புகார்செய்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கே.புதூர், விஸ்வநாதன் நகரைச் சேர்வந்த கண்ணன் (வயது 39), கடச்சனேந்தல் ஜெயபால் (32) ஆகியோரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்