என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மணல் கடத்தல்"
- சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தோம்.
- விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த நாசரேத் துரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமிபுரம் கிராமத்தில் நாலாயிர முடியார்குளம் மற்றும் நத்தகுளம் ஆகிய நீர்நிலைகள் அமைந்து உள்ளன. இந்த நீர்நிலை படுகைகளில் இருந்து மணல் அள்ளப்பட்டு கடத்தி வருகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. விவசாயத்துக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது.
இது தொடர்பாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களிடம் கேள்வி எழுப்பினால் மிரட்டி வருகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தோம்.
இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கந்தசாமிபுரம் கிராமத்தில் நத்தகுளம் மற்றும் நாலாயிர முடியார் குளத்தில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சம்பந்தப்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறதா? என மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி விட்டது.
- சண்முகம், ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம், கரிகாலன் உள்ளிட்ட மணல் ஒப்பந்ததாரர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை கடிதத்தில்,
* சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
* அரசு அதிகாரிகளின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.
* மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி விட்டது.
* 5 மாவட்டங்களில் சட்டவிரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டுள்ளது. மிக தெளிவான டிரோன், பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளோம்.
* நான்கு ஒப்பந்த நிறுவனங்களை அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. ஒரு இடத்தில் 2 இயந்திரங்களை வைத்து மட்டுமே மணல் அள்ளுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் பல்வேறு இயந்திரங்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளது.
* சண்முகம், ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம், கரிகாலன் உள்ளிட்ட மணல் ஒப்பந்ததாரர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
* அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாதது ஒப்பந்ததாரர்கள் சொத்துக்களை வாங்கி குவித்ததையும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டி உள்ளது.
* அனுமதிக்கப்பட்ட அளவை விட 23.64 லட்சம் யூனிட் கடந்த ஆண்டு மட்டும் அதிகம் அள்ளப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போலீசார் யாரெல்லாம் மணல் கடத்தல்கார்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ரகசியமாக விசாரித்தனர்.
- ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்ட இந்ந உத்தரவால் திருச்சி மாவட்ட போலீசார் பீதியில் உறைந்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாநகர பகுதியையொட்டி காவல் நிலையங்களில் முக்கியமானது கொள்ளிடம் டோல்கேட் காவல் நிலையம். இந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சில மாதங்களாக மணல் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதாக புகார் எழுந்தது.. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் வரை ஆதாரத்துடன் சிலர் புகார் அளித்தனர்.
அதை தொடர்ந்து, எஸ்பியின் தனிப்படை போலீசார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் யாரெல்லாம் மணல் கடத்தல்கார்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ரகசியமாக விசாரித்தனர்.
அதில் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டரை தவிர அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மணல் கடத்தல் கும்பலோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து எஸ்பி வருண்குமார், ஓபன் மைக்கில், "கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு சப் இன்ஸ்பெக்டரை தவிர மீதமுள்ள போலீசார் 22 பேரையும் உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு நேரடியாகச் சென்று ஒரு மணிநேரத்துக்குள் ரிப்போர்ட் செய்ய வேண்டும்"என்று உத்தரவு பிறப்பித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் நேற்று இரவுக்குள் மாவட்ட ஆயுதப்படைக்கு சென்று ரிப்போர்ட் செய்தனர். ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்ட இந்ந உத்தரவால் திருச்சி மாவட்ட போலீசார் பீதியில் உறைந்துள்ளனர்.
- ேராந்து பணி
- போலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவிராயன் தலைமையில் போலீசார் சீக்கராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொன்னையாற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீசார் மடக்கிபிடித்தனர்.
போலீசாரை பார்த்ததும் டிராக்டரை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குமாரபாளையம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது.
- காவிரி ஆற்றில் மணல் திருடுவது குறித்து தகவல் அறிந்து வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவு காவிரி கரையில் சோதனை நடத்தினர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை இணைக்கும் வகையில் காவிரி ஆறு ஓடுகிறது. இந்த இரு மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மணல் திருடும் கும்பல் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மூலம் விடிய, விடிய காவிரியில் மணல் அள்ளுவதாக வருவாய் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்தது.
இந்த நிலையில் பள்ளிபாளையம் சாலை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள காவிரி ஆற்றில் மணல் திருடுவது குறித்து தகவல் அறிந்து வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவு காவிரி கரையில் சோதனை நடத்தினர்.
அப்போது 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் காவிரி ஆற்றிலிருந்து மணல் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் 2 மாட்டு வண்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த மாது, சேகர் மற்றும் அவரது மகன் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் அப்பா, மகன், பேரன் ஆவார்கள். இதனையடுத்து வருவாய்த்துறையினர் 3 பேர் மீதும் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
- ஒருவர் கைது
- ரோந்து பணியில் சிக்கினார்
அணைக்கட்டு:
வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் ஒடுகத்தூர் உத்திர காவிரி ஆற்றில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்தவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் ஒடுகத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் ( வயது 50) என்பதும், இவர் ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
- இந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்த னர்.
- கெடிலம் ஆற்றங்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
கடலூர்:
கடலூர் அடுத்த கே.என்.பேட்டை கெடிலம் ஆறு பகுதியில் சப்-இன்ஸ் பெக்டர் கணபதி வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அவ்வழியாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்த னர். லாரியில் மணல் இருந்தது. இதற்கு ஆவணம் கேட்ட போது உரிய அனுமதி யில்லாமல் மணல் கடத்த லில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த சமயத்தில் திடீ ரென்று லாரி டிரைவர் கண்ணி மைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார்.
இதே போல் சப்-இன்ஸ் பெக்டர் குமாரசாமி திருமா ணிக்குழி கெடிலம் ஆற்றங்க ரை பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு டிராக்டர் நின்று கொண்டிருந்தது. அருகில் பார்த்த போது மணல் இருந்தது. லாரி மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து கடலூர் திருப்பா திரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மாட்டு வண்டிகளை பறிமுதல் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல்,பிரசன்னாமற்றும்போலீசார்வேல்முருகன்,உதயகுமார் ஆகியோர்இன்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பண்ருட்டி திருவதிகை கெடிலம் ஆற்றுப்பகுதியில் 2மாட்டுவண்டியில்அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் கடத்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட திருவதிகை குட்ட தெரு கணபதி(64),பண்ருட்டி ெரயில்வே காலனிமகாலிங்கம்(55) ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து அவர்கள் ஒட்டி வந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
- நவநீதகிருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்து செல்வது உறுதி செய்யப்பட்டது.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி காப்பு காட்டில், வனச்சரக அலுவலர் ரகுவரன், வனவர் சிவகு மார், பன்னீர்செ ல்வம்வ னக்காப்பாளர்கள் நவநீதகி ருஷ்ணன், அமுதபிரியன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வண்ணா ன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல், சின்ராசு, வேலாயுதம் மற்றும் ஒலையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி ஆகியோர் மோசட்டை சுடுகாடு அருகே அரசு அனுமதி இல்லாமல் மாட்டு வண்டியில் திருட்டு த்தனமாக மணலை எடுத்து சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை வனச்சரக அலுவலர் ரகுவரன் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது, அரசு அனுமதி இல்லாமல் மணல் எடுத்து செல்வது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாட்டு வண்டி உரிமையாளர்கள் 4 பேர் மீதும்தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலா 20 ஆயிரம் வீதம் வண்டிகளுக்கு 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- போலீசார் மடக்கி பிடித்தனர்
- 2 லோடு ஆட்டோ பறிமுதல்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பகுதியில், பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக லோடு ஆட்டோவில் மணல் கடத்தி வந்த விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்த சபரிநாதன் (வயது 26), வடுகன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (29) ஆகிய 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவர்கள் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லோடு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர்.
- மணல் கடத்தல் குறித்து தகவல் தெரிவித்ததால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 37), கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆற்றில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் மணல் கடத் தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கடேசன் ஜோலார் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படு கிறது.
இதனால் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மற்றும் வாணி யம்பாடி அருகே உள்ள தெக்குப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கள் 3 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு வெங் கடேசனின் வீட்டிற்கு சென்று நீதான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தாயா? என கேட்டு அவரது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கதவுகள் மற்றும் மினிவேன் முன்பக்க கண்ணாடி ஆகியவற்றை உடைத்து தாக்கி உள்ளனர்.
இதுகுறித்து வெங்கடேசன் ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல் கடத்துவதாக தகவல் தெரிவித்ததால் நள்ளிரவில் வீட்டை சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இருசக்கர வாகனங்கள், லாரிகள், படகுகள் மூலம் எடுத்து செல்லுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொதுப் பணித்துறை, காவல்துறை, வனத்துறை, போக்கு வரத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரியில் கனிம வளம் குறித்த ஆய்வு கூட்டம் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில் தாசில்தார் மதியழகன் முன்னிலையில் நடை பெற்றது.
கூட்டத்தில் அனுமதிக்கப்படாமல் இரவு நேரங்களில் சவுடு மண் மற்றும் ஆற்று மணல், கடல் மணல் ஆகிய கனிம வளங்களை இருசக்கர வாகனங்கள், லாரிகள், படகுகள் மூலம் எடுத்து செல்லுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விசயத்தில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்னேரி தாசில்தார் மதியழகன் தெரிவித்தார். அதன் பின் திருவிழாக்கள் மற்றும் இறுதி ஊர்வலம் நடைபெறும் போது வாகன ஓட்டிகளுக்கு பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் பட்டாசு வெடிக்க வேண்டும் என பொது மக்களுக்கு அரசு அதிகாரிகள் அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் துணை தாசில்தார் செந்தில், வருவாய் துறை, பொதுப் பணித்துறை, காவல்துறை, வனத்துறை, போக்கு வரத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்