என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள் விபத்து"
- சகோதரி-3 வயது மகள் படுகாயம்.
- வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் வெள்ளார் பகுதியை சேர்ந்தவர் சிமி(வயது35). நேற்று சிமி மற்றும் அவரது 3 வயது மகள் சிவன்யா, சகோதரி சினி(35) ஆகிய 3பேரும் ஸ்கூட்டரில் சென்றனர். சினி ஸ்கூட்டரை ஓட்ட, சிமி தனது மகளுடன் பின்னால் அமர்ந்து பயணித்தார்.
திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெண்பால வட்டம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டர் திடீரென சினியின் கட்டுப்பாட்டை மீறி ஓடி, பாலத்தில் மேலே இருந்து தடுப்புச்சுவரை தாண்டி கீழே இருந்த சர்வீஸ் சாலையில் விழுந்தது.
பல அடி உயரத்தில் இருந்து ஸ்கூட்டருடன் 3 பேர் கீழே விழுந்ததை அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் சிமி, அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிமி பரிதாபமாக இறந்தார். அவரது மகள் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிமி உள்ளிட்ட 3 பேரும் மேம்பாலத்தில் இருந்து ஸ்கூட்டருடன் சர்வீஸ் சாலையில் விழுந்தது ஏதே சினிமாவில் பார்த்தது போன்று இருந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிமி உள்ளிட்டோர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழும் காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், வாசுகி மீது மோதியது.
- மருத்துவமனையில் வாசுகி பரிதாபமாக இறந்தார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த ஆயக்கரன்புலம் 3ஆம் சேத்தி அண்ணா நகர் பகுதி சேர்ந்தவர் பாண்டியன்.
இவரது மனைவி வாசுகி (வயது 40).
இவர் சம்பவதன்று வேதாரண்யம் காந்தி நகரில் உள்ள தன் மகளுக்கு தீபாவளி வரிசை பொருட்கள் கொடுக்க சென்றார். பின்னர் சீர்வரிசை கொடுத்துவிட்டு தனது மருமகன் பூவரசன் (27) என்பவரிடம் அவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து ஊருக்கு செல்வதற்காக காரியப்பட்டினம் மின்சார வாரியம் அருகே வந்துள்ளார்.
அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், வாசுகி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் வாசுகி பலத்த காயம் அடைந்தார்.
உடனடியாக இவர் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு வாசுகி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அகஸ்தியம்பள்ளி கணக்கன்காடு பகுதியை சேர்ந்த ஐயப்பதாஸ் (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சதீஷ் எருமாட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு புறப்பட்டார்.
- சதீஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 40).
இவருக்கு திருமணமாகி அனிதா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகள், 1 பெண் குழந்தை உள்ளது.
சதீஷ் சேரங்கோட்டில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு செல்வது வழக்கம்.
இன்று காலை சதீஷ் எருமாட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பணிக்கு புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் எருமாடு-சேரங்கோடு சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே லாரி ஒன்று வேகமாக வந்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக லாரி சதீஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் சதீஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சேரம்பாடி போலீசார் லாரி டிரைவரான சோனமுத்து என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
- சூரப்பள்ளி அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் சூரப்பள்ளி பகுதியை சேர்த்தவர் ராஜா. இவரது மகன் மாதேஷ் (23). இவர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். சூரப்பள்ளி அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மாதேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாதேசை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் மின் விளக்கை ஒளிர விடாததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இது போன்ற விபத்துக்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து உரிய நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தொழில் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வந்தார்.
- நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்
நாகர்கோவில் :
ராஜாக்கமங்கலம் பண்ணையூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ஐவின்ராஜா (வயது 25). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை பார்த்து வந்தார்.
தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று ஐவின்ராஜா வீட்டிலிருந்து நாகர்கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஆசாரி பள்ளம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கார் மீது ஐவின்ராஜாவின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலை உடல் பகுதியில் பலத்த காயும் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஐவின்ராஜா இறந்துவிட்டதாக கூறினார்கள். இதுகுறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்கள். ஐவின்ராஜா பலியானது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. அவர்கள் அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். விபத்து குறித்து போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான ஐவின் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர். விடு முறையில் ஊருக்கு வந்த நேரத்தில் ஐவின்ராஜா விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தி னர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
- லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு சிக்னலும் செய்யாமல் திடீரென்று பிரேக் போட்டதால் ராஜாமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து மோதியது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி என்கிற பன்னீர்செல்வம் (வயது58). இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாளர் பதவி வகித்து வந்தார்.
எண்ணகோள்புதூர் பகுதியைச் சேர்ந்தவரும், ஓ.பி.எஸ் அணியின் பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சகாதேவன் (63).
இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் முன்பு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஓட்டி சென்ற டிரைவர் எந்த ஒரு சிக்னலும் செய்யாமல் திடீரென்று பிரேக் போட்டதால் ராஜாமணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து மோதியது.
இதில் ராஜாமணி என்கிற பன்னீர்செல்வம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சகாதேவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ராஜாமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து குறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் சையது இப்ராகிம் (வயது45). தர்காவில் அஜிரத்தாக உள்ளார். இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.
கூவத்தூர் அடுத்த பெருந்துறவு கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டு இருந்த போது எதிரே பெருங்குடியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ராகுல்(23) மற்றும் அவரது நணபர் ஒருவர் என 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென ராகுல் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இப்ராகிம் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிள்களும் நொறுங்கின.
மோட்டார் சைக்கிளில் வந்த இப்ராகிம் மற்றும் என்ஜினீயர் ராகுல் பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ராகுலுடன் வந்த அவரது நண்பர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிய வாலிபருக்கும் அதே ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நேருக்குநேர் மோதியது
- பேலீசார் விசாரணை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 56).
இவர் நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டை தனியார் திரையரங்கம் அருகே தனது மோட்டர் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த சோளிங்கர் அடுத்த நாரைகுளம் மேடு பகுதியை சேர்ந்த தீனா (21) ஓட்டி வந்த மோட்டர் சைக்கிள் சரவணன் மீது நேருக்குநேர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகாக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த தீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காங்கயம் ஈரோடு சாலை அரசு கல்லூரி அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கராஜ் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின.
- தங்கராஜ், ராமசாமி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள முள்ளிப்புரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 59), விவசாயி. இவர் அவரது உறவினர் ராமசாமி(61) என்பவருடன் காங்கயத்திற்கு சென்று விட்டு நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் முள்ளிப்புரத்திற்கு புறப்பட்டனர்.
காங்கயம் ஈரோடு சாலை அரசு கல்லூரி அருகே செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், தங்கராஜ் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதின. இதில் தங்கராஜ், ராமசாமி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ், ராமசாமி உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் விசாரணை நடத்தி வருகிறார். விபத்து நடந்ததும் எதிரே மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். விபத்தில் விவசாயி உள்பட 2பேர் பலியான சம்பவம் காங்கயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பலத்த காயம் அடைந்த பிரபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒரத்தி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுராந்தகம்:
கோவூர், லட்சுமி நகரில் உள்ள பாபு கார்டன் பகுதியில் வசித்தவர் பிரபின் (வயது.31). இவர் சென்னை வியாசர்பாடியில் அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக வேலைபார்த்து வந்தார்.
இவர் அச்சரப்பாக்கம் அருகே வசிக்கும் நண்பர் ஒருவரை பார்க்க வந்தார். பின்னர் அவர் நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு படூர் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்றார்.
பின்னர் திரும்பி வந்து கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த பிரபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஒரத்தி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மற்றொருவர் படுகாயம்
- ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
ராஜாவூரை அடுத்த ஆதலவிளை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுபா (வயது 43). இவர், நாக்கால் மடம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் வேலை பார்த்து வந்தார்.
நேற்று வேலை முடிந்து அதே ஊரைச் சேர்ந்த தங்கசெல்வி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். மோட்டார் சைக்கிளில் சுபா பின்னால் அமர்ந்திருந்தார்.
வெள்ள மடம் நான்கு வழிச்சாலையில் சென்ற போது பணகுடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த விஜய் என்பவர் அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.
இதில் சுபா தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுபா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தங்க செல்விக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த விஜய் மற்றும் முடி சூடும் பெருமாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இறந்து போன சுபாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் முருகன் வெல்டிங் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
- கொயிலாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கட்டிலபீடிகா அருகே இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
- விபத்தில் பலத்த காயமடைந்த 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
திருவனந்தபுரம்:
கோழிக்கோடு அருகே உள்ள வடகரை, குற்றியடி பகுதியை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 18). இவரது நண்பர் தீக்சித் (18). இவர்கள் இருவரும் புதியப்பாவில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
கொயிலாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கட்டிலபீடிகா அருகே அவர்கள் வரும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்