என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரேசன் அரிசி"
- குமரி மாவட்ட பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
- ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி அனுப்பும் நபரையும், லாரியின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கடையநல்லூர்:
தமிழகத்தில் இருந்து செங்கோட்டை வழியாக அதிக அளவில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாருக்கு பொதுமக்களிடம் இருந்து தொடர்ச்சியாக புகார் வந்தது.
அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் இன்று அதிகாலை 4 மணி அளவில் கேரளாவிற்கு செல்லும் சரக்கு வாகனங்களை கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமுவேல் ராஜ், தீபன் குமார் மற்றும் போலீசார் கடையநல்லூர் வழியாக கேரளாவுக்கு செல்லும் மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணாபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குமரி மாவட்ட பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் லாரியின் ஓரங்களில் கோழி தீவனங்களை வைத்துவிட்டு மையப்பகுதியில் நூற்றுக்கணக்கான ரேசன் அரிசி மூட்டைகளை மறைத்து வைத்து கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசாரின் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் லாரியுடன் அதில் இருந்த 12 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா வேம்புவிளை பாலப்பள்ளம் என்ற ஊரை சேர்ந்த லாரியின் டிரைவர் அசோக் (வயது 34) என்பவரை கைது செய்தனர். ரேசன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி அனுப்பும் நபரையும், லாரியின் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
- ரேஷன் கடை என்றாலே ஏழை மக்கள் அதிகம் அரிசி வாங்கி பயன்படுத்துவது வழக்கம்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசியை எப்படி விநியோகம் செய்கிறீர்கள் என மத்திய அரசிடம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. அதற்கு தலசீமியா, அனீமியாவால் பாதித்தவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசியை உண்ண வேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், அது குறித்த விளம்பரங்கள் ரேஷன் கடைகளில் வைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறி உள்ளது. அப்போது அரிசியை உண்ணக் கூடாதவர்களை எப்படி கண்டறிவீர்கள் என கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
அதுவும் ரேஷன் கடை என்றாலே ஏழை மக்கள் அதிகம் அரிசி வாங்கி பயன்படுத்துவது வழக்கம். அதனால் யார் இந்த அரிசியை பயன்படுத்தலாம். பயன்படுத்தக் கூடாது என்பதில் அரசு கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய கோர்ட்டுக்கு தே.மு.தி.க. சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே தரம் பிரித்து இந்த அரிசியை யார் உண்ண வேண்டும் என உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசி கொண்டுவர வேண்டும். அதுவரை பொது விநியோகத்திற்கு தமிழக அரசு இந்த அரிசியை அனுமதி செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பதுக்கி வைத்து இருந்த 6டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
சென்னை மதுரவாயல், பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை டி.எஸ்.பி சம்பத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி சப்-இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது மதுரவாயல் மேம்பாலம் அருகே உள்ள இடத்தில் பதுக்கி வைத்து இருந்த 6டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சதிஷ் குமார் (35) என்பவரை கைது செய்தனர்.
சதிஷ்குமார் ஏற்கனவே பலமுறை ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவருக்கு இவ்வளவு ரேசன் அரிசி கிடைத்தது எப்படி? ரேசன் கடை ஊழியர்கள் உடந்தையா? யாருக்கு கடத்தப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 21 மூட்டைகள் பறிமுதல்
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் போலீசார் நரசிங்கபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நரசிங்கபு ரத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேசன் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டி ருந்த நபர் தப்பிக்க முயன்றுள்ளார்.
அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் நரசிங்கபுரம், உடையார் தெருவை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பதும் , அங்கு அடுக்கி வைத்திருந்த அரிசி மூட்டைகளை பிரித்து சோதனை செய்த போது அதில் சுமார் 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் சுமார் 1,050 கிலோ ரேசன் அரிசி இருப்பதும் தெரியவந்தது.
ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை ரெயில் மூலம் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டை கொண்டு சென்று அங்குள்ள ஓட்டல்கள் மற்றும் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் வாலாஜாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படை க்கப்பட்டது.
இது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார், சரவணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 5 கிலோ மீட்டர் தூரம் துரத்தி பிடித்த வருவாய் துறையினர்
- கடத்தல் காரை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
களியக்காவிளை :
தமிழக கேரள எல்லைப் பகுதி வழியாக தமிழகத்தி லிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்எண்ணை உள்ளிட்ட பொருட்கள் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் வட்ட வழங்கல் அதிகாரி ராஜ சேகர் தலைமையில் வரு வாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார் கொண்ட குழுவினர் மார்த்தாண்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக சொகுசு கார் ஒன்று வந்து கொண்டி ருந்தது. அந்த காரை நிறுத்துமாறு சைகை காட்டினர். டிரைவர் காரை நிறுத்தாமல் சென்றார். உடனே அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து சென்று சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று கல்லுவிளை பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். ஆனால் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காரை சோதனை செய்து பார்த்தபோது சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரிசியை கேரளா விற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.
பிறகு காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் காரை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுநர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரோந்துப்பணியின் போது ராஜதானி அருகே சந்தேகத்திற்கிடமாக ஒருவர் அரிசி மூடைகளை ஏற்றி சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
- ரேசன்அரிசி கடத்திய வாலிபரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி, மறவபட்டி உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் பொதுமக்களிடம் ரேசன் அரிசியை வாங்கி அதனை சுத்தம் செய்து கேரளாவுக்கு விற்பனை செய்து வருவதாக போலீ சாருக்கு புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து போலீசாரும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரும் தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர்.
இன்று ராஜதானி அருகே சந்தேகத்திற்கிடமாக ஒருவர் அரிசி மூடைகளை ஏற்றி சென்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அவர் 900 கிலோ ரேசன் அரிசி மூடைகளை விற்பனைக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது.
பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி அதனை பாலீஸ் செய்து கேரளாவுக்கு விற்று வந்துள்ளார். பிடிபட்டவர் சின்னமனூரை சேர்ந்த முத்துக்குமார் என்பதும், இவர் தொடர்ந்து இதேபோல ரேசன் அரிசி விற்று வருபவர் எனவும் உறுதியானது.
இதனையடுத்து பறிமுதல் செய்த அரிசியை உத்தம பாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
முத்துக்குமாரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
- சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
- உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிலர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மணியனூர் காந்தி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை சிலர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இது குறித்த தகவலின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்து கடத்தலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக மணியனூர் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (60) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பலகாரம், தின்பண்டங்கள் விற்கும் கடைகளுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றது கண்டறியப்பட்டது. அவரிடம் இருந்து 1 டன் ரேஷன் அரிசி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
- இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை, டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுப்படி, திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு தினந்தோறும் வாகன சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது பொதுமக்களிடையே ரேஷன் பொருட் கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல்கள் தெரிவிக்கும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச தொலைபேசி எண் 1800 599 5950 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தஞ்சை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இலவச தொலைபேசி எண்ணுடன் போஸ்டர்களை ஒட்டி வருகிறார்கள்.
பொதுமக்கள் பார்வையில் படும் பகுதிகளான பஸ் நிலையங்கள், ரேஷன்கடைகள், ரெயில் நிலையங்கள், பஞ்சாயத்து அலுவலகம், டோல் கேட் மற்றும் பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஒட்டி விழிப்புணர்வு செய்து வரு கின்றனர்.
மேலும் ரேஷன் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோர் குறித்து தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
- 1 டன் சிக்கியது
- வருவாய் துறையினருடன் சோதனை செய்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியை அடுத்த ஜெயந்திபுரம் அருகே வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக அப்பகுதியில் உள்ள முட்புதரில் ரேசன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக நாட்டறம்பள்ளி தாசில்தார் குமாருக்கு தகவல் கிடைத்தது.
அதைதொடர்ந்து அவர் வட்ட வழங்கல் அலுவலர் ராமன் மற்றும் வருவாய் துறையினருடன் சென்று சோதனை செய்தார்.
அப்போது அரசனப்பள்ளி கிராமத்தில் முட்புதரில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேசன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- நெய்மண்டி அருணாச்சலம் தெருவில் ஒரு ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று நள்ளிரவு ஒரு லாரியில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
- அப்போது அந்த வழியாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் ரோந்து வந்தனர். பின்னர் அங்கு இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டை நெய்மண்டி அருணாச்சலம் தெருவில் ஒரு ரேசன் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் இருந்து நேற்று நள்ளிரவு ஒரு லாரியில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
போலீஸ் ரோந்து
அப்போது அந்த வழியாக செவ்வாய்ப்பேட்டை போலீசார் ரோந்து வந்தனர். பின்னர் அங்கு இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதையடுத்து லாரி டிரைவர் உள்பட 6 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் ரேசன் கடையில் இருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வாழப்பாடி அருகே உள்ள கீரிப்பட்டி பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.
6 பேர் கைது
இது தொடர்பாக போலீசார் ஆத்தூர் பகுதியை சேர்ந்த விக்டர் ேஜம்ஸ், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா, வாழப்பாடியை சேர்ந்த சுப்பிரமணி, குகை பகுதியை சேர்ந்த நடேசன், ஒடிசாவை சேர்ந்த ஷாமால் கோம் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர். லாரியில் 3 டன் ரேசன் அரிசி கடத்தப்படுவதற்கு தயாராக இருந்தது.
ஊழியர் தப்பி ஓட்டம்
இந்த நிலையில் இந்த ரேசன் கடையின் ஊழியருக்கும், இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தப்பி ஓடிய அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இரவு நேரம் என்பதால் யாரும் இருக்க மாட்டார்கள் என்று திட்டமிட்டு ரேசன் அரிசி கடத்த முயன்றனர்.
- குமரி மாவட்டம் வழியாக ரேசன் அரிசி, மண்எண்ணை போன்றவை கடத்தப்பட்டு வருகிறது.
- ரேசன் அரிசியை பறிமுதல் செய்து நாகர்கோவில் கோணம் கிடங்கில் ஒப்படைத்தனர்.
பூதப்பாண்டி, ஆக.12-
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு குமரி மாவட்டம் வழியாக ரேசன் அரிசி, மண்எண்ணை போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் உணவு கடத்தல் பிரிவு தனி தாசில்தார் சுரேஷ்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் அனில்குமார் ஆகியோர் தெரிசனங்கோப்பு பகுதியில் வாகன தணிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டெம்போவை மறித்து சோதனை செய்தனர்.
அப்போது டிரைவர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். மேலும் அந்த டெம்போவில் சோதனை செய்தபோது அதில் கேர ளாவிற்கு கொண்டு செல்வ தற்காக 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து டெம்போவை பறிமுதல் செய்தனர்.
மேலும் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து நாகர்கோவில் கோணம் கிடங்கில் ஒப்படைத்தனர்.
- 200 கிலோ சிக்கியது
- குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் நேற்று ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் மைசூர் நோக்கி செல்லும் ரெயில் ஜோலார் பேட்டையில் வந்து நின்றது. ரெயில்வே போலீசார் பொதுப்பட்டியில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது 4 மூட்டைகள் கேட்பாரற்று கிடந்தது. அதனை பிரித்துப் பார்த்தபோது 200 கிலோ அரிசி இருந்தது தெரியவந்தது. சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 35) என தெரிந்தது. அவர் ரேஷன் அரிசி பெங்களூருக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிந்தது. மேலும் ரெயில்வே போலீசார் விஜயை கைது செய்து திருப்பத்தூர் உணவு பொருள் கடத்தல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்