என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாகனம் மோதல்"
சேலம் மாவட்டம், பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கார்த்திக் ஆனந்த் (வயது 28). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கார்த்திக் ஆனந்துக்கு திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது.
நேற்று நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடந்த நண்பர் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு இன்று அதிகாலை கார்த்திக் ஆனந்த் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டார்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம், கார்த்திக் ஆனந்த் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிச் சென்றது.
இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் ஆனந்த் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்செந்தூர்:
மதுரை அய்யர் பங்களா பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி (வயது55). தைப் பூசத்தை முன்னிட்டு பிச்சை மணி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வந்தனர். நேற்று இரவு இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் அவரது ஊரை சேர்ந்த பாதயாத்திரை பக்தர்கள் குழுவுடன் இணைந்து பயணம் மேற்கொண்டார்.
இன்று அதிகாலை அவர்கள் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது முன்னால் மற்றவர்கள் செல்ல, பின்னால் மெதுவாக பிச்சைமணி நடந்துசென்றார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பிச்சைமணி மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
சத்தம் கேட்டு மற்ற பக்தர்கள் பார்த்த போது ரத்த வெள்ளத்தில் பிச்சை மணி சம்பவ இடத்திலேயே பலியாகி கிடந்தார். இது குறித்து திருச்செந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா போலீசார் பலியான பிச்சை மணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து பிச்சை மணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
சேத்துப்பட்டு அருகே உள்ள தத்தனூரை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 57). விவசாயி. இவர் சம்பவத்தன்று ஆரணி சேத்துபட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் காத்தரவராயன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்தகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு காத்தவராயன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள புதுக்குடியை சேர்ந்தவர் விவசாயி காமராசு (வயது40). இவரது மனைவி தேவி (30).இவர்களுடைய மகன் பாலமுருகன் (3).
இந்த நிலையில் காமராசு நேற்று தனது மனைவி மகனுடன் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
அவர் நாஞ்சிக்கோட்டையை அடுத்துள்ள பைபாஸ் சாலை அருகே செங்கிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த போது மதுபோதையில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் தஞ்சையில் இருந்து பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த வாகனம் காமராசுவின் மோட்டார் சைக்கிள் பின்புறம் வேகமாக மோதியது. இதில் காமராசு, தேவி மற்றும் குழந்தை பாலமுருகன் ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது கேரளாவில் இருந்து அந்த வழியாக பஸ்சில் வந்த சுற்றுலா பயணிகள் , சாலையில் காயங்களுடன் கிடந்த 3 பேரையும் மீட்டனர். பிறகு அவர்கள் 3 பேருக்கும் முதலுதவி அளித்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரும் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாலாஜா:
ஆற்காடு அருகே உள்ள வளவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 51). இவர் மாந்தாங்கலில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
முருகானந்தம் நேற்று இரவு வேலைக்கு ஷேர் ஆட்டோ மூலம் மாந்தாங்கலுக்கு சென்றார். அங்கு ஆட்டோவில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முருகானந்தம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவருடைய மனைவி சத்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் இரண்டாவது பெண் குழந்தை பவித்தகுரு (1½ வயது).
இன்று காலை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அம்மாபட்டியை சேர்ந்த பாபு மகன் ஆனந்த்பாபு (32) இந்தப்பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விற்பனை செய்வதற்காக வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது வாகனம் ஏறியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. தண்ணீர் வண்டி ஏறி ஒன்றரை வயது பெண் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து நாகையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்