என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விநாயகர் கோவில்"
- ஸ்ரீபகவத் விநாயகர், நவக்கிரகங்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளார்.
- திருக்கோவிலில் பகவத் முனிவருக்கு சிலை உள்ளது.
கோவில் மாநகரம் என்று போற்றப்படும் கும்பகோணம் மடத்துத் தெருவில் கோவில் கொண்டுள்ளார் ஸ்ரீபகவத் விநாயகர். இவர் ஆரம்ப காலத்தில் இக்கோவிலுக்கு அருகில் ஓடும் காவிரி நதிக்கரையில் ஓர் அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார்.
அந்தக் கால கட்டத்தில் வேதாரண்யம் திருத்தலத்தில் பகவத் முனிவர் என்பவர் தன் சீடர்களுடன் வாழ்ந்து வந்தார். இவரின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் தன் மகனிடம், "நான் இறந்ததும் என்னை தகனம் செய்த பின் அந்த அஸ்தியை ஒரு கலசத்தில் சேகரித்துப் புனிதத் திருத்தலங்களில் ஓடும் நதிக்கரைக்கு எடுத்துச்செல். எங்கு என்னுடைய அஸ்தி பூக்களாக மலர்கிறதோ அங்கு ஓடும் புனித நதியில் முறைப்படி கரைத்து விடு' என்று சொல்லி விட்டு உயிர்துறந்தார்.
அன்னை சொன்னதுபோல், தன் தாயாரின் அஸ்தியை ஒரு மண் கலசத்தில் சேகரித்து ஓர் ஓலைக் கூடைக்குள் பத்திரப்படுத்தி துணியால் மண் கலசத்தின் வாய்ப்பகுதியை மூடி, மூட்டையாகக் கட்டினார். பகவத் முனிவர், தன் சீடர்களில் ஒருவனை அழைத்துக்கொண்டு பயணமானார்.
'புனிதத்திருத்தலமான காசியில் ஓடும் கங்கைக் கரையில் தான் தன் அன்னையின் அஸ்தி, பூக்களாக மலரும்' என்ற எண்ணத்தில் பயணத்தைத் தொடர்ந்தவர். வழியில் கும்பகோணம் தலத்திற்கு வந்ததும், அங்கு ஓடும் காவிரியில் நீராட விரும்பினார். தன் தாயின் அஸ்தி உள்ள கலசக் கூடையை, அங்கு அரசமரத்தடியில் அமர்ந்திருந்த பிள்ளையார் முன்பு வைத்தவர். தன் சீடனைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு, காவிரியில் நீராட சென்றார்.
குருநாதர், காவிரியில் நீராடிக் கொண்டிருக்கும் போது, சீடனுக்குப் பசி எடுக்கவே, 'கூடையில் உள்ள மண் பாண்டத்தில் ஏதாவது பலகாரங்கள் இருக்கும்' என்று எண்ணியவன், அஸ்தியுள்ள மண்பாண்டமான கலசத்தைத் திறந்து பார்த்தான். மண் கலசத்திற்குள் பூக்கள் நிறைந்திருப் பதைக் கண்டு ஏமாற்றமடைந்தவன், மறுபடியும் முன்பு உள்ளது போல் மூட்டையைக்கட்டி பத்திரப்படுத்தி விட்டு, குருநாதருக்காகக் காத்திருந்தான்.
நீராடிவிட்டு வந்த பகவத் முனிவர், விநாயகருக்கு ஒரு கும்பிடுபோட்டு விட்டு மேற்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.
சில நாட்களில் காசியை அடைந்த முனிவர், அங்கே ஓடும் புனித நதியான கங்கையில் நீராடி விட்டு, அஸ்தி கலசத்திற்குப் பூஜை செய்த பின், திறந்து பார்த்தார். அந்த மண் கலசத்திற்குள் எலும்பு மற்றும் சாம்பல் அப்படியே இருந்ததால் என்ன செய்வதென்று யோசித்தார். அப்போது, பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சீடன் இந்த நிகழ்வுகளை அதிசயத்துடன் பார்த்தான்' கும்பகோணத்தில் இந்தக் கலசத்திற்குள் இருந்த மலர்கள். இங்கே எப்படி அஸ்தியாக மாறியிருந்தது!" என்று குழம்பினான். பகவத் முனிவர் தனக்குள், "அஸ்தி மலர்களாக மாறும் என்று நினைத்தேன். அப்படியே இருக்கிறதே" என்று முணு முணுத்தார்.
முனிவரின் நிலையை அறிந்த சீடன். "குருவே, என்னை மன்னித்து விடுங்கள். இது அஸ்தி கலசம் என்று எனக்குத் தெரியாது. தாங்கள் கும்பகோணத்தில் காவிரியில் நீராடும் போது எனக்குப் பசி எடுக்கவே, மண் கலசத்திற்குள் ஏதாவது பலகாரங்கள் இருக்கும் என்று கலசத்தை மெதுவாக திறந்து பார்த்தேன். அப்போது இந்தக் கலசத்திற்குள் பூக்கள் மலர்ந்து நிறைந்திருந்தன. இப்பொழுது, எலும்பும் சாம்பலுமாக அஸ்தி நிறைந் திருக்கிறதே. அது எப்படி என்று தெரியவில்லை?" என்றான் பயத்துடன். இதை ஏன் அங்கேயே கூறவில்லை?" என்று கோபித்துக் கொண்ட முனிவர். மீண்டும் கும்பகோணம் நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார்.
கும்பகோணம் வந்தடைந்ததும், முன்பு நீராடிய காவிரிக் கரைக்கு வந்து, காவிரியில் நீராடி, அங்கு அரசமரத்தடியில் எழுந்தருளியிருந்த விநாயகர் முன், அஸ்திக் கல்சத்தை வைத்துப் பூஜித்து விநாயகரை வேண்டினார். பிறகு, பயபக்தியுடன் கலசத்தைத் திறந்து பார்க்க அதிலிருந்த அஸ்தி, பூக்களாக மலர்த்திருந்தது கண்டு மகிழ்ந்தார்.
தன் அன்னைக்குச் செய்ய வேண்டிய பிதுர்காரியங்களை காவிரிக்கரையில் மேற்கொண்டு, பிதுர் பூஜைகள் செய்தபின், மலர்களாக மாறியிருந்த அஸ்திக் கலசத்தை காவிரியில் கரையச் செய்து மறுபடியும் வழிபாடு செய்தார் முனிவர்.
இதனால்தான் காசியைவிட மிக உயர்ந்தது கும்பகோணம் திருத்தலம் என்று பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
அஸ்தியானது பூக்களாக மாறிய காவிரிக்கரையே 'பகவத் படித்துறை' (பகவத் தீர்த்தம்) என்றும் முனிவர் வழிபட்ட விநாயகர், பகவத் விநாயகர் என்றும் போற்றப்படுகிறது.
அரசமரத்தடியிலிருந்த விநாயகருக்கு, அங்கு வசிக்கும் பக்தர்கள் உதவியுடன் காவிரிக் கரைக்கு அருகில் ஒரு கோவில் கட்டினார்.
அதுதான் இன்று மடத்துத் தெருவில் கோவில் கொண்டுள்ள ஸ்ரீபகவத் விநாயகர் கோவில் ஆகும்.
கும்பகோணம் மடத்துத் தெருவில் கிழக்கு திசை நோக்கி உள்ள இக்கோவில் ஆரம்ப காலத்தில் காவிரிப் படித்துறைக்கு அருகிலேயே இருந்தது. கால ஓட்டத்தில் காவிரி நதி குறுகி விட்டதால் தற்போது இக்கோவில் தனியாகவும், பகவத் படித்துறை தனியாகவும் உள்ளதைக் காணலாம்.
'இந்த ஸ்ரீபகவத் விநாயகர், நவக்கிரகங்களைத் தன்னுள் அடக்கி வைத்துள்ளார்' என்று தல புராணம் கூறுகிறது. இவர், சூரியனை நெற்றியிலும், சந்திரனை தாபியிலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழ் கையிலும், வியாழனை சிரசிலும், வெள்ளியை இடது கீழ் கையிலும் சனியை வலது மேல்கையிலும், ராகுவை இடது மேல்கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு அருள்புரிகிறார்.
ஜாதகத்தில் தோஷம் உள்ளவர் இந்த விநாயகரை பூஜித்து வலம் வந்தால் நவக்கிரக தோஷம் நீங்கும். மேலும், நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையும் போக்கி அருள்புரிவார் என் பது ஐதீகம்.
மிகவும் பழமையான கோவிலான இந்த ஆலயம் இன்று பலவித மாற்றங்கள் கொண்டு புதுமையாகத் திகழ்கிறது. இத்திருக்கோவிலில் பகவத் முனிவருக்கு சிலை உள்ளது.
காஞ்சி மகா பெரியவர். கும்பகோணம் சங்கர மடத்திற்கு வரும் போதெல்லாம் இந்த விநாயகரை வழிபடுவது வழக்கம் என்று கூறுகிறார்கள். 1952-ம் ஆண்டு காஞ்சி சங்கர மடத்திற்குச் சொந்தமான சந்திரமவு லீஸ்வரன் என்னும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது, காஞ்சி மகா பெரியவர், அந்த யானையின் இரண்டு தந்தங்களையும் விநாயகருக்கு சமர்ப்பித்து வழிபட்டார். மூன்றடி உயரமுள்ள இரு தந்தங்களை விநாயகரின் இருபுறமும் அலங்காரமாக வைக்க அருளினார். அதன்படி இருபுறமும் தந்தங்களுடன் அருள்புரியும் ஸ்ரீபகவத் விநாயகர் சுமார் இரண்டடி உயரத்துடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
- பொதுமக்கள் வழித்துணை விநாயகரை வழிபட்டு வந்தனர்.
- வழித்துணை விநாயகர் சிலை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
தேவிகாபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு டவுன் அவலூர் பேட்டை சாலையில் உள்ள குளம் அருகே திறந்த வெளியில் வழித்துணை விநாயகர் கோவில் உள்ளது.
அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் வழித்துணை விநாயகரை வழிபட்டு வந்தனர். இந்த விநாயகர் சிலையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றனர். விநாயகர் சிலையை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான விநாயகர் சிலையை ஏற்கனவே இருந்த இடத்தில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் வைத்துச் சென்றனர்.
மேலும் விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பக்தர்கள் வழித்துணை விநாயகர் சிலை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து விநாயகரை பக்தர்கள் வழிபட்டு சென்றனர். மேலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர்.
- முஸ்லிம்கள் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
- மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த பள்ளிவாசல் உள்ளது.
ஆனால் இந்துக்கள் வழிபாடு செய்ய கோவில் இல்லாத நிலையில் கோவில் ஒன்று கட்ட வேண்டும் என எண்ணிய மக்கள் அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில் நிலம் தேடி வந்தனர்.
இதையறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் ஆர்.எம்.ஜே. ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோவில் கட்ட தானமாக வழங்கினர். அனைவரும் மனிதர்கள், எல்லோரும் சமம், எல்லோரும் சகோதரர்கள் என சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் விதமாக முஸ்லிம்கள் தங்களது நிலத்தை தானமாக வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
இதையடுத்து அந்த இடத்தில் கோவில் கட்டும் பணி நிறைவடைந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் சீர்வரிசை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் முஸ்லிம்கள் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.
- பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
- கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டையில் 100 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இந்த சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அந்த பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பணிகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஏற்கனவே கட்டப்பட்டிருந்த யாகசாலைகளை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்தி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தண்ணீருக்குள் தான் அந்த விநாயகர் இருக்கிறார்.
- மூலவர் ஆட்சீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தி.
ஆந்திராவில் புகழ்பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோவில் கருவறை ஒரு கிணற்றின் மீது அமைந்துள்ளது.
தண்ணீருக்குள் தான் அந்த விநாயகர் இருக்கிறார்.
கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் உள்ள விராலிமலை சித்தர் ஆலயத்திலும் கருவறை முன்பு பெரிய கிணறு உள்ளது.
நோய் தீர்க்கும் தீர்த்தம் கொண்ட கிணறாக அது உள்ளது.
அச்சரப்பாக்கம் ஆட்சிபுரீஸ்வரர் ஆலயத்திலும் கருவறை முன்பு கிணறு உள்ளது.
மூலவர் ஆட்சீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தி.
தாழ அமைந்த சதுரமான ஆவுடையார் பெருமானுக்கு முன்பு நாம் நின்று வழிபடும் இடத்தில் கீழே கிணறு உள்ளதாம்.
கருங்கற்கள் போட்டு மூடப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் கற்களின் இடுக்கு வழியாக பார்த்தால் நீர் இருப்பது நன்கு தெரியுமாம்.
சிறப்பு பூஜை நாட்களில் பக்தர்களை அதன் மீதுதான் அமர வைக்கிறார்கள்.
- சங்கர் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
- விழாவையொட்டி விநாயகர் தேங்காய் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கணக்கபிள்ளைவலசை வாரியர் சமுகத்திற்கு பாத்தியப்பட்ட சங்கர் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. விழாவையொட்டி விநாயகர் தேங்காய் மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்று சென்றனர். ஏற்பாடுகளை சமுதாய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதேபோல் செங்கோட்டை அருகே உள்ள வல்லம், இலஞ்சி, பிரானூர் புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளைகுடியிருப்பு உள்ளிட்ட பகுதிகயில் உள்ள சிவபிள்ளையார் கோவில், செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், முக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் உள்ளிட்ட கோயில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. செங்கோட்டை பால விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மெலட்டூர்:
பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை பொய்யாமொழி விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கிராமவாசிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.
- கடலூர் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- விநாய கருக்கு 27 விதமான அபிஷேக பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
கடலூர்:
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. கடலூர் திருப்பாதிரி புலியூரில் உள்ள வேத விநா யகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து விநாய கருக்கு 27 விதமான அபிஷேக பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர் சிறப்பு அலங்கா ரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளாக கலந்து கொண்ட பக்தர்கள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.
பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் வேத விநாயகர் சிறப்பு அலங்கா ரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. இதேபோல் கடலூர் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில், மஞ்சக்குப்பம் விநாயகர் கோவில், நெல்லிக்குப்பம் கடைத்தெரு வரசித்தி விநா யகர் கோவில் உள்ளிட்ட விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம், மகா தீபார தனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டு சென்றனர்.
- நாளை திங்கட்கிழமை 6 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது
- விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்.செப்.17-
வெள்ளகோவில், எல்.கே.சி நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் நாளை திங்கட்கிழமை 6 ம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.
வெள்ளகோவில், எல்.கே.சி நகரில் உள்ள புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் 6 ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று காலை எல்.கே.சி நகர் பொதுமக்கள் கொடுமுடி சென்று தீர்த்தம் எடுத்து வந்து நாளை திங்கட்கிழமை காலை தீர்த்தாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை எல்.கே.சி நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- கோவில் அமைக்க எதிர்ப்பு ஏற்ப்பட்டதால் வட்டார வளர்ச்சி ஊழியர்கள் சிலை அமைக்கும் பகுதியில் கற்களால் மூடி வைத்தனர்.
- வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தில் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுப்படனர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி வட்டார வளர்சி அலுவலக வளாகத்தில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் 2016-2017 ஆண்டு நவீன முறையில் கட்டபட்டபோது கட்டிட கற்கள் மீதியானதை வைத்து விநாயகர் கோவில் கட்ட ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் அணைவரும் சேர்ந்து கூட்டு முயச்சியில் கட்ட முயச்சித்ததாக கூறப்படுகிறது.
பின்பு கோவில் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று விநாயகர் சிலை வைத்து திறக்க உள்ள நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் சிலர் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொது இடம் என்பதால், கோவில் வைக்க கூடாது, கடவுள் சிலை வைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பி.டி.ஓ அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். விநாயகர் கோவில் கட்டியதில் தவறு இல்லை என பா.ஜ.க., பா.ம.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆதரவு மனு அளித்தனர்.
இதனால் அந்த பகுதியில் கோவில் அமைக்க எதிர்ப்பு ஏற்ப்பட்டதால் வட்டார வளர்ச்சி ஊழியர்கள் சிலை அமைக்கும் பகுதியில் கற்களால் மூடி வைத்தனர். இதை அறிந்த கோவிலுக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினர் மாலை 4 மணி அளவில் அந்த பகுதியை முற்றுகையிட்டனர். இதை அறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, தாசில்தார் சக்திவேல், வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் அகிலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தில் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுப்படனர்.
இதுகுறித்து அனைத்து தரப்பினரையும் அழைத்து அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தாசில்தார், போலீசார் உறுதியளித்தனர். அந்த பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- சித்தூர் சாலையில் திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது.
- நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச்சென்று விட்டனர்.
திருத்தணி:
திருத்தணி, சித்தூர் சாலையில் திருத்தணி பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ஸ்ரீ வரசக்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது.
- விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.
செங்கோட்டை:
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு செங்கோட்டை செக்கடி விநாயகர் கோவிலில் மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேங்காய் மாலையால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்து அருள்பிரசாதம் பெற்று சென்றனர். விழா ஏற்பாடுகளை கணேச பட்டர் செய்திருந்தார். இதேபோல் செங்கோட்டை சுற்றுப்பகுதிகளான வல்லம், இலஞ்சி, பிரானூர், புளியரை, புதூர், கேசவபுரம், கட்டளை குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சிவபிள்ளையார், செல்வவிநாயகர் கோவில், சந்திவிநாயகர், முக்தி விநாயகர், வீரகேரள விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்