search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி மரணம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போராட்ட களத்தில் இருந்த விவசாயிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
    • இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.

    புதுடெல்லி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளனர்.

    விவசாயிகளை டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிசெய்ய தடுப்புகள் வைத்து போலீசார் மறித்துள்ளனர். போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே அரியானாவின் அம்பாலா மாவட்டம் சம்பு எல்லையில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளை மீற முயன்றவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் முன்னேற முடியாமல் கடந்த 3 நாளாக சம்பு எல்லையிலேயே விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த கியான் சிங் (63) என்ற முதியவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் பஞ்சாப்பின் ராஜ்புராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின், மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள ராஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கியான் சிங்கை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.
    • கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமாரக்குடியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 70), விவசாயி. இவர் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திற்கு மனு அளிப்பதற்காக வந்திருந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் மனு எழுதிவிட்டு, அதனை நகல் எடுப்பதற்காக சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    இது பற்றி அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் உடனே ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ராஜதுரை, கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    ஊத்துக்கோட்டை அருகே ஆட்டோவில் சென்ற விவசாயி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சமுதாயம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (48) விவசாயி.

    இவர் சூளமேனி அருகே செங்கரையில் உள்ள காட்டு செல்லி அம்மன் கோவிலுக்கு செல்ல ஊத்துக்கோட்டை வந்தார். இங்கிருந்து புறப்பட்ட ஆட்டோவில் ஏறினார்.

    சூளமேனி கிராம எல்லையில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவிலிருந்து தவறி கீழே விழுந்து அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் அனுமந்து விசாரணை நடத்தி வருகிறார். இது குறித்து ஆந்திராவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (69). கூலி தொழிலாளி. இவர் அதே கிராமத்தில் கூலி வேலை செய்வதற்காக சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் மோதியது.

    இதில் படுகாயம்அடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் அனுமந்து விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர் அருகே சாலை விபத்தில் மகள் இறந்ததால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டார்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜு (வயது 70), விவசாயி. இவருக்கு தமிழரசி என்ற மகள் இருந்தார். அவர் கடந்த வருடம் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த ராஜு, உறவினர்களிடம் இது குறித்து கூறி வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மகள் பற்றி பேசிக் கொண்டிருந்த ராஜு திடீரென வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். இதனால் உறவினர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜு பரிதாபமாக நேற்று மாலை உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது மனைவி மாயஜோதி (55) அளித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்தார். மேலும் ராஜுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்க மகாராஷ்டிராவில் இருந்து வந்த விவசாயி இன்று மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Maharashtrafarmer #DelhiAmbedkarBhawan #Delhifarmerprotest
    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் மற்றும் பேரணியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர்.

    நேற்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் விவசாயிகளின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினார்கள்.

    தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ளவர்கள் டெல்லியில் உள்ள பல பகுதிகளில் தங்கியுள்ளனர்.


    அவ்வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்துள்ள ஒரு குழுவினர் பர்கஞ்ச் பகுதியில் உள்ள அம்பேத்கர் பவன் கட்டிடத்தில் தங்கி இருந்தனர்.

    இந்நிலையில், இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து இன்று தவறி கீழே விழுந்த ஒரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் பெயர் கிரண் சன்ட்டப்பா(52) என்றும் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோல்ஹாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. #Maharashtrafarmer #DelhiAmbedkarBhawan #Delhifarmerprotest
    ஆத்தூர் அருகே வேட்டைக்கு சென்ற விவசாயி துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை கலக்காம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வராஜ் (வயது 45).விவசாயி.

    இவர் தனது நண்பர்கள் பெரியசாமி, பாண்டி, ஆண்டி ஆகியோருடன் கருமந்துறை மலைப்பகுதிக்கு வேட்டைக்கு செல்வது வழக்கம்.

    அங்கு மான், காட்டுப்பன்றி, மற்றும் வன விலங்குகளை வேட்டையாடி வருவார்கள். நேற்று இரவு இவர்கள் 4 பேரும் கல்வராயன் மலை, கரியகோவில் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மோடூர் மலைக்கிராமத்திற்கு வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சென்றனர்.

    அவர்கள் புதர் மறைவில் இருந்து வனவிலங்குகளை கண்காணித்தனர்.

    அப்போது செல்வராஜ் முதுகில் குண்டு பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். உடனே செல்வராஜியின் நண்பர்கள் 3 பேரும் அவரது உடலை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவரது வீட்டு முன்பு பிணத்தை போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கரியகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரெண்டு சூரியமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். செல்வராஜியின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேட்டைக்கு சென்ற செல்வராஜ் எப்படி குண்டு பாய்ந்து இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. புதர் மறைவில் இருந்து வனவிலங்கை சுடும்போது தவறுதலாக அவர் மீது குண்டு பாய்ந்து இறந்தாரா? அல்லது அவருடன் சென்ற நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டாரா? கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக் கட்டப்பட்டாரா? என்பது புரியாத புதிராக உள்ளது.

    செல்வராஜியின் உடலை அவரது வீட்டு முன்பு போட்டு சென்ற நண்பர்கள் பெரியசாமி, பாண்டி, ஆண்டி ஆகிய 3 பேரும் குடும்பத்தினரிடம் எதுவும் சொல்லாமல் தலை மறைவாகி விட்டனர்.

    இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பி உள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.நண்பர்கள் சிக்கினால் தான் செல்வராஜ் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

    மர்மமாக இறந்த செல்வராஜிக்கு சரோஜா என்ற மனைவியும், ராமமூர்த்தி (9), சத்யமூர்த்தி (8), ஜெயவேல் (7) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் செல்வராஜியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இச்சம்பவம் கருமந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    திருத்துறைப்பூண்டி அருகே கஜா புயலால் பாதிப்பால் தென்னை விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gajastorm

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குரும்பல் கிராமம் ரயிலடி தெற்கு தெருவை சேர்ந்தவர் வீரரவி (வயது52). இவருக்கு மரகதவள்ளி (43) என்ற மனைவியும், துர்காதேவி(23), கார்த்திகா(19) என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    வீரரவிக்கு சொந்தமாக உள்ள கொல்லையில் 40-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அன்று கஜா புயலில் வீரரவியின் 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் விழுந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வீர ரவி தனதுகுடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் புலம்பி உள்ளார்.

    இந்த நிலையில் தென்னை மரங்கள் போய் விட்டதே. இனி என்ன செய்ய போகிறேன் என்று தெரிய வில்லையே என்று வீரரவி வேதனையில் இருந்து வந்தார். இதையடுத்து அவர் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்

    இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்தை 2 தென்னை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் தென்னை விவசாயி மாரடைப்பால் இறந்த சம்பவம் டெல்டா மாவட்ட விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Gajastorm

    தூசி அருகே வி‌ஷம் குடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெம்பாக்கம:

    செய்யாறு அடுத்த தூசி மாமண்டூரை சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது 65). இவருக்கு பத்மினி என்ற மனைவியும் 3 மகன்கள் 2 மகள் உள்ளனர். தீராத வயிற்று வலியால் கண்ணபிரான் அவதி அடைந்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று மாலை தன்னுடைய விவசாய நிலத்திற்கு சென்ற கண்ணபிரானுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த கண்ணபிரான் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.

    வயலுக்கு சென்ற தந்தை நீண்ட நேரம் வீட்டிற்கு வராததால் அவரை தேடி அவரது மகன் வெங்கடேசன் விவசாய நிலத்திற்கு சென்றார். அங்கு கண்ணபிரான் மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அப்போது அவர் பூச்சு மருந்து குடித்து விட்டதாக மகனிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணபிரான் இறந்தார்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை தொலைக் காட்சியில் பார்த்த விவசாயி அதிர்ச்சியில் மரணம் அடைந்ததாக அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் தெரிவித்தனர். #karunanidhideath #dmk
    குளித்தலை:

    குளித்தலை அருகேயுள்ள மருதூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி(வயது 80). விவசாயியான இவர் தி.மு.க. சார்பில் நடைபெற்ற இந்தி ஆதிக்க எதிர்ப்பு மொழிப்போர் போராட்டத்தில் கலந்துகொண்டு சட்ட நகலை எரித்து 36 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் கைதியாக இருந்துள்ளார். 

    கருணாநிதி குளித்தலை தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்டபோது அவருடன் தேர்தல் பணியை மேற்கொண்டு இருக்கிறார். நீண்டகால தி.மு.க. கட்சிக்காரரான இவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். 

    கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை தொலைக் காட்சியில் நேற்று முன்தினம் இரவு பார்த்து கொண்டிருந்த இவர் கருணாநிதியின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் மற்றும் கட்சியினர் தெரிவித்தனர்.  #karunanidhideath #dmk 
    திருவெண்ணைநல்லூர் அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்த விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பனைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி(வயது 55). விவசாயி. இவரது மனைவி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தட்சிணாமூர்த்தி மனவேதனை அடைந்தார். கவலையை மறக்க மதுகுடித்து வந்தார். நேற்று அவர் காந்திக்குப்பம் என்ற இடத்தில் விற்கப்பட்ட வெளிமாநில மதுவை வாங்கி குடித்தார். அளவுக்கு அதிகமாக மதுகுடித்ததால் சாலையோரம் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவெண்ணைநல்லூர் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே பைக் விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த நாகவேடு சி.எஸ்.ஐ. பள்ளி தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 73). விவசாயி.

    சுந்தர்ராஜன் நேற்று இரவு வீட்டில் இருந்து பைக்கில் நெமிலி நோக்கி சென்று கொண்டிருந்தார். சம்பத்ராயன்பேட்டை அருகே பைக் சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் சுந்தர்ராஜன் பைக்கில் இருந்து தூக்கி வீசபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த நெமிலி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர் அருகே பாக்கெட் சாராயம் குடித்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்படுகை கிராமத்தை சேர்ந்த குப்பு மகன் துரைசாமி (வயது 47). விவசாயி. இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு 18 வயதில் மகள் உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று துரைசாமி, அப்பகுதியை சேர்ந்த 2 பேரிடம் 1 பாக்கெட் சாராயம் வாங்கி குடித்துள்ளார். இதில் போதை அதிகமாகி துரைசாமி அங்கேயே மயங்கிக்கிடந்ததாக கூறப்படுகிறது. பின்னர் மாலை அங்கு மேலும் சிலர் அங்கே சாராயம் குடிக்கவந்தபோது, துரைசாமி இறந்துகிடந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் துரைசாமியின் குடும்பத்தினருக்கும், குடவாசல் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து துரைசாமியின் உடலை அவருடைய குடும்பத்தினர் வீட்டுக்கு எடுத்துச்சென்றனர்.

    இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ரகுபதி, குடவாசல் இன்ஸ்பெக்டர் மணிமாறன், நன்னிலம் தாசில்தார் அன்பழகன் ஆகியோர் வந்தனர்.

    அப்போது வீட்டில் இருந்து துரைசாமியின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்க போலீசார் முயன்றனர்.

    ஆனால் அவர்களை தடுத்த துரைசாமியின் உறவினர்கள் மற்றும் அந்தப் பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ‘‘எங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சாராய விற்பனை நடக்கிறது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பமாட்டோம்’’ என அவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குடவாசல் போலீசார் சாராய விற்பனையில் ஈடுபட்டதாக ஜெயபால், சிங்காரவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    மேலும் சாராய வியாபாரி கேசவனை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். #Tamilnews
    ×