என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Alumni meet"
- அரசு நடுநிலைப்பள்ளி இந்த நடுநிலைப் பள்ளியில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை படித்த 30 முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது துத்திப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி. இந்த நடுநிலைப் பள்ளியில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை படித்த 30 முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஓசூர், நாமக்கல், கோவை போன்ற பல்வேறு இடங்களில் வசித்து வரும் இவர்களை தனபால் மற்றும் வெங்கடாசலம் ஆகியோர் ஒருங்கிணைத்து பள்ளிக்கு வரவழைத்தனர். இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தங்கள் இளமைக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு தங்கள் மரியாதையை செலுத்தி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர். அதேபோல் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். ஆண்டுதோறும் இதேபோன்று ஒன்றிணைந்து பள்ளி வாழ்க்கையை நினைவு கூற வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்தனர்.
தொடர்ந்து முன்னாள் மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 27 வருடங்களுக்கு முன்பு எடுத்துக் கொண்டதை போல தங்கள் ஆசிரியர்களுடன் மீண்டும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி தாளாளர் கணேஷ் நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
- மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவ தற்கும் ரூ. 6 லட்சம் நன்கொ டையாக வழங்கினர்.
புதுச்சேரி:
காரைக்கால் பண்டிதர் ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா மற்றும் கல்லூரி நிறுவன நாள் கொண்டாட்டம் நடந்தது.
பேராசிரியர் நடராஜன் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மாணவர்கள் மன்ற ஆலோசகர் நாராயணன் விழா குறித்து முன்னுரை வழங்கினார். பாண்டிச்சேரி வேளாண் அறிவியல் கல்லூரி தாளாளர் கணேஷ் நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.
இதில் புதுவை சட்டப்பேரவை செயலாளர் தயாளன், வருவாய் அதிகாரி மற்றும் நிர்வாக மேஜிஸ்ட்ரேட் அருள் அய்யாவு, கேரளா தலைமை வன பாதுகாப்பு அதிகாரி ஜஸ்டின் மோகன், சென்னை கல்வித்துறை செயலாளர் ஜெயந்தி, புதுடெல்லி வெளியுறவுத்துறை அமைச்சகத் துணைச் செயலர் சந்துரு, அப்பர் வேளாண் துறை அலுவலர் மற்றும் கல்லூரி பேராசி ரியர் மாவட்ட கலெக்டர்கள், வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரி கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவ தற்கும் ரூ. 6 லட்சம் நன்கொ டையாக வழங்கினர்.
இறுதியாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- இங்கு கடந்த 1973-ம் ஆண்டு 11-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- இதில் 50 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நத்தம்:
நத்தத்தில் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1973-ம் ஆண்டு 11-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் 50 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்தித்து கொண்டதால் ஒருவருக்கொருவர் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தை பார்வையிட்ட முன்னாள் மாணவர்கள் பின்னர் புகைப்படம் எடுத்து கொண்டனர். இதில் பள்ளியின் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- 27 வருடங்களுக்கு பிறகு, ஒன்றாக கூடி விழா நடத்தினர்.
பசும்பொன்
கமுதி அருகே பெருநாழி சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில், 1996-97-ம் வருடம்
10-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் 27 வருடங் களுக்கு பிறகு, ஒன்றாக கூடி விழா நடத்தினர்.
பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்று கூடிய இவர்கள் பெருநாழி யில் தாங்கள் படித்த பள்ளியில், கல்வி கற்றுத் தந்த ஆசிரிய, ஆசிரியை களை அழைத்து, அவர்கள் முன்னிலையில், தங்களது பள்ளி பருவ கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் ஆசிரியர்கள் தங்களிடம் கண்டிப்புடன் நடந்து கொண்டதால் தான், தற்போது, ஒழுக்க மாகவும் உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்று ஆசிரி யர்கள் முன்பு, பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் ஆசிரியர் களுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தனர். மேலும் ஆசிரியர்கள் முன்பு, வரிசையாக நின்று, பள்ளி நினைவுகளை ஞாபகப் படுத்தும் வகையில், கம்பால் அடி வாங்கி கொண்டனர்.
- பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.
சிவகங்கை
சிவகங்கையில் புனித சூசையப்பர் நடுநிலைப்பள்ளியில் 1976-ம் ஆண்டில் 7-ம் வகுப்பு பயின்ற பழைய மாணவர்கள் 47 வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியை சாவித்திரி வரவேற்றார். இதில் பழைய மாணவர்கள் நீண்ட நாடகளுக்கு பிறகு சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் தங்களது குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. பழைய மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.
- மாவடிபண்ணை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2003-2004-ம் ஆண்டு முன்னாள் ஆசிரியர் மற்றும் மாணவ -மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- ஏராளமான மாணவ- மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தென்திருப்பேரை:
தென்திருப்பேரையில் உள்ள மாவடிபண்ணை அரசு மேல்நிலைப் பள்ளி யில் 2003-2004-ம் ஆண்டு முன்னாள் ஆசிரியர் மற்றும் மாணவ -மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முன்னாள் தலைமை ஆசிரியர் அந்தோணி மிக்கேல் தலைமை தாங்கி னார். முன்னாள் மாணவ- மாணவிகளின் ஆசிரிய ர்களான சங்கர நாராயணன், ஜான், ஸ்டீபன், மகாராஜன், முத்தம்மாள், சிவ புஷ்பம், சொர்ணம், லதா, புஷ்ப ராணி, சார்லி விஜய சுந்தரி, ஸ்டான்லி ராஜா, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ -மாணவி களிடை யே கடந்த கால நிகழ்வு களை பகிர்ந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் 2003-2004-ம் ஆண்டு பள்ளியில் படித்த முன்னாள் மாணவ- மாணவிகள் தங்களது பள்ளி அனுப வங்களை சக மாணவர் களுடன் பகிர்ந்து கொண்ட னர். ஏராளமான மாணவ- மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவி செல்வி நன்றி கூறினார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடு களை வள்ளிநாயகம், ராஜா மணி, ஹரி ராமன், அழகு பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.
- திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி செயலாளர் நாராயண ராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி கல்லூரி அறிக்கையை வாசித்தார். முன்னாள் மாணவரும், கல்லூரி மின்னணு தகவல் தொடர்பு துறை பேராசிரியரும், பயின்றோர் கழக செயலாளருமான ஜோஸ்வா பாபு வரவேற்று பேசினார். வேலைவாய்ப்பு அலுவலர் பொன்னுகிருஷ்ணன் வேலைவாய்ப்பு அறிக்கையை வாசித்தார்.
முன்னாள் மாணவர்கள் தங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கல்லூரியில் படித்த அனுபவங்களையும், தற்போது பணியாற்றும் பணிகள் குறித்தும் உரையாற்றினர். முன்னாள் மாணவர்களான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மூத்த துணை போக்குவரத்து மேலாளர் ரமேஷ், மூத்த தொழில்நுட்ப கட்டிட கலைஞர் ஸ்ரீராம் பாலாஜி, சென்னை இன்போசிஸ் நிறுவன அதிகாரி முகமது முனாவர் உசேன், சோகோ நிறுவன அதிகாரி முகமது இப்ராஹிம் அன்சாரி, அமேசான் நிறுவன அதிகாரி பிரபாகரன், டேட்டா என்ஜினீயர் ராஜாராம், ஆராய்ச்சி மாணவி நூர்பஸ்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியரும், பயின்றோர் கழக பொருளாளருமான சித்ராதேவி கணக்கு அறிக்கையை வாசித்தார். கணினி துறை பேராசிரியரும், பயின்றோர் கழக துணை செயலாளருமான ஜென்சி நன்றி கூறினார்.
- முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
- பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
விருதுநகர்
விருதுநகர் டி.டி.கே. சாலையில் உள்ள ஹாஜி பி.செய்யது முகம்மது மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1978-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்த மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் உமர் பாரூக் தலைமை தாங்கினார்.ஆசிரியர்கள் சுப்பையா, ஜப்பார், துரைப்பாண்டி, சார்லஸ் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக்கு தேவையான பொருட்களையும் முன்னாள் மாணவர்கள் வழங்கினர்.
விழாவில் முன்னாள் மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படித்த நாங்கள் அரசுத்துறை அதிகாரிகளாகவும், தனியார் துறை அதிகாரிகளாகவும், தொழில் அதிபர்களாகவும் உள்ளோம். இந்த நிலைக்கு நாங்கள் உயர்ந்ததற்கு காரணம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களும், அவர்கள் கற்றுக்கொடுத்த விதமும் காரணம் என்றனர்.
ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் வெங்கடேஷ், சவுந்தரராஜன், ராஜேஸ்வரன், முகம்மது நெய்னார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் இப்ராகிம் வாழ்த்துரை வழங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சந்திரசேகர் நன்றி கூறினார்.
- பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
- கேக் வெட்டி ஒன்றாக மதிய உணவு அருந்தினர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பின் இன்று ஒன்று கூடி கட்டித்தழுவி ஆரவாரம் செய்து பிரிந்தனர்.
அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 1992-94-ம் கல்வியாண்டில் படித்த 52 மாணவர்கள் ஒன்று கூட முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை முதல் ஒவ்வொரு நண்பர்களும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் படித்த அரக்கோணம் அரசு ஆண்கள் வந்தனர்.
52 பேரில் சுமார் 45 பேர் பள்ளியில் ஒன்று கூடி தங்களது பள்ளி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மதியம் பள்ளி நண்பர்கள் சேர்ந்து கேக் வெட்டி ஒன்றாக மதிய உணவு அருந்தினர்.
தங்கள் படித்த பள்ளிக்கு நினைவாக மைக்செட்களை தற்போதைய பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கி குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.
- காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரியில் 36 ஆண்டுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு விழா நடந்தது.
- தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றியும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தியும் வருகின்றனர்.
பெரும்பாறை:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பழவிளையில் செயல்பட்டு வரும் மதுரை நாடார் மகாஜன சங்கத்திற்குட்பட்ட காமராஜ் தொழில்நுட்பக்கல்லூரியில் 36 ஆண்டுக்கு முன்பு படித்த மாணவர்களின் சந்திப்பு விழா நடந்தது.
விழாவில் 1984-87-ம் ஆண்டுகளில் படித்த 13 பேர் 36 ஆண்டுகளுக்கு பின்பு கொடைக்கானலில் சந்தித்தனர். இதில் முன்னாள் மாணவர்கள் சந்தித்து பேசினர். இவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பணியாற்றியும், பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தியும் வருகின்றனர்.
பின்னர் தங்களுடைய அன்பு, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
- அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 மற்றும் 2000 -ம் ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நினைவு கூர்ந்து, அப்போது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1999 மற்றும் 2000 -ம் ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜய் கணேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்று தங்களின் பள்ளி பருவ நாட்களையும், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நினைவு கூர்ந்து, அப்போது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து, பள்ளிக்கு தேவையான உதவிகள் என்னென்ன என்பது குறித்தும், அதனை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
- முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா பேச்சு
- வி.ஐ.டி.யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
வேலூர்:
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் குடியரசு தினத்தையொட்டி விஐடி வேந்தர் டாக்டர் கோவிசுவநாதன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடையே பேசினார்.
அதைத்தொடர்ந்து விஐடியில் குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இப்ராஹிம் கலிபுல்லா பேசுகையில், ஊழலற்ற நேர்மையான நன்னடத்தை கொண்ட சமுதாயமாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.
கல்வி ஒன்று மட்டுமே மனித இனத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் கருவியாக செயல்படுகிறது. கல்வியால் மட்டுமே மனிதனை அறியாமையில் இருந்து விடுவிக்க முடியும் என்றார்.
விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் பேசுகையில்:- உலகில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அனைவருக்கும் கல்வி கிடைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
தேசிய புதிய கல்விக் கொள்கையில் அனைவருக்கும் உயர்கல்வியில் சேரும் சதவிகிதம் தற்போது 27 ஆக உள்ளது, இதை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.
இதில் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் ஏற்கனவே 27 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது என்றார்.
விழாவில் கவுரவ விருந்தினராக எம்பசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (மனித வளம்) சதீஷ் ராஜரத்தினம், வி ஐ டி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச. விசுவநாதன், துணைவேந்தர் டாக்டர். ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் டாக்டர். பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டாக்டர். ஜெயபாரதி, விஐடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்