search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car accident"

    • நிலைதடுமாறிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் சாலைக்கு சென்றது.
    • எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி நசுங்கியது.

    சூளகிரி:

    ஓசூர் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது 48). ஆசாரி வேலை பார்த்து வருகிறார்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டு விசேஷத்திற்கு செல்ல முடிவு செய்த காந்தி நேற்று இரவு தனது மனைவி நவநீதா (40), குழந்தைகள் பிரதீபாஸ்ரீ, கோகுலன் ஆகியோருடன் வாடகை காரில் புறப்பட்டுள்ளனர்.

    காரை ஓசூர் ஆர்.கே.நகரை சேர்ந்த தினேஷ்(32) என்பவர் ஓட்டி சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்னப்பள்ளி என்ற இடத்தருகே சென்றபோது திடீரென கார் டயர் வெடித்தது.

    இதில் நிலைதடுமாறிய கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரை தாண்டி எதிர் சாலைக்கு சென்றது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி நசுங்கியது.

    இதில் கார் டிரைவர் தினேஷ், காந்தியின் மனைவி நவநீதா இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காந்தி மற்றும் குழந்தைகள் ஆகிய 3 பேரும் காருக்குள் சிக்கி உயிருக்கு போராடினர்.

    இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இடிபாடுகளில் சிக்கிய காந்தி, பிரதீபாஸ்ரீ, கோகுலன் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஜே.சி.பி.எந்திரம் விபத்தில் சிக்கிய காரை சாலையிலிருந்து அகற்றினர்.

    இந்த விபத்தால் ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கட்டுப்பாடு இழந்து, சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வாழப்பாடி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவிரிநகர் பகுதியில் சேர்ந்தவர் மருந்து விற்பனை பிரதி நிதி லட்சுமிபதி (வயது 52). இவரது மகள் அனு ஸ்ரீக்கு, அண்மையில் நடை பெற்ற கலந்தாய்வில், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி யில் இடம் கிடைத்துள்ளது.

    மகளை கல்லூரியில் சேர்த்து விடுவதற்காக, லட்சுமிபதி தனது மனைவி ஜெயசுதா (42). மகள் அனுஸ்ரீ (18). மகன் திருப்புகழ் (11). உறவினர் நாராயணன் ஆகியோருடன், இன்று அதிகாலை போச்சம்பள்ளியில் இருந்து வாழப்பாடி வழியாக சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் நோக்கி காரில் சென்றார். இந்த காரை அதே பகுதியைச் சேர்ந்த இவர்களது உறவினரான ஓம்சக்தி (28).என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

    வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அருகே, இன்று காலை கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கட்டுப்பாடு இழந்து, சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லட்சுமிபதி, ஜெயசுதா, திருப்புகழ், அனுஸ்ரீ, ஜெயசுதாவின் சகோதரர் நாராயணன், கார் டிரைவர் ஓம்சக்தி ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    காருக்கு அடியில் சிக்கி தவித்த இவர்களது அலறல் சத்தம் கேட்ட இப்பகுதி பொதுமக்களும், பயணிகளும் இணைந்து 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவம னைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டனர்.
    • உயிரிழந்த அசோக்குமார் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடையம்:

    சென்னையை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 28). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    தீபாவளி விடுமுறையையொட்டி இவர் காரில் தனது நண்பர்களான சென்னையை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகன் அசோக்குமார், ஆசிக் ஆகியோருடன் காரில் நெல்லைக்கு வந்தார்.

    நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் சுற்றுலா சென்ற அவர்கள் 3 பேரும் இன்று அதிகாலை அங்கிருந்து கடையம் வழியாக குற்றாலத்திற்கு செல்ல முடிவு செய்து புறப்பட்டனர். காரை அசோக்குமார் ஓட்டினார். அதிகாலை 4 மணி அளவில் கடையத்தை அடுத்த முதலியார்பட்டி அருகே கார் சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்து புளியமரத்தில் மோதியது.

    இந்த பயங்கர விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அந்த இடிபாட்டில் காரை ஓட்டி வந்த அசோக்குமார் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த அவரது நண்பர்களான மற்றொரு அசோக்குமார், ஆசிக் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டனர். மேலும் உயிரிழந்த அசோக்குமார் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மற்றொரு அசோக்குமார் மற்றும் ஆசிக் ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • 10 மணி நேரத்திற்கு மேல் மின் தடை

    ராணிப்பேட்டை:

    ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன் (50). இவர் குடும்பத்தினருடன் காரில் சென்னை வந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    காரை அவரே ஓட்டிச்சென்றார். ராணிப்பேட்டை எம்.பி.டி சாலையில் நவல்பூர் அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறிய கார் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது.

    இதில் மின் கம்பம் சேதம் அடைந்து, காரின் மீது உடைந்து விழுந்தது. நல்லவேளையாக காரை ஓட்டி சென்ற திருக்கும ரன், மற்றும் அதில் பயணம் செய்த அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் தப்பினர்.

    மின் கம்பம் உடைந்து விழுந்ததில், மின்சாரம் தடை ஏற் பட்டது. சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் மின் தடை நீடித்தது. மின் ஊழியர்கள் கடுமையாக முயற்சி எடுத்து மின் வினியோகம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 60) பால் வியாபாரி. இவர் நேற்று தேனீர் அருந்திவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் பூபதி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் கார் வந்து கொண்டிருந்தது.
    • கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி மேம்பாலத்தில் தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    உளுந்தூர்பேட்டை:

    சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் உஷேன் அவரது மனைவி ஷமீம் (வயது 50). இவர் தனது மகன் அம்ரீன் (22), உறவினர் மகன் சுபேதா (21), உறவினர் நசீம் ஆகியோருடன் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    நேற்று இரவு அவர்கள் சென்னை நோக்கி காரில் புறப்பட்டனர். இந்த காரை சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த டிரைவர் ஏஜாஷ் ஓட்டினார்.

    இந்த கார் இன்று அதிகாலை 2 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய அந்த கார் மேம்பாலத்தில் தடுப்பு கட்டையில் மோதி 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஷமீம், அம்ரீன், சுபேதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    இவர்கள் தவிர கார் டிரைவர் ஏஜாஷ், நசீம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் வலியால் துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம், ஏட்டு சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    விபத்தில் பலியான 3 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜெலன்ஸ்கிக்கு உடலில் எந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டது என்ற எந்த விவரம் வெளியிடவில்லை.
    • கார் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. இந்த போர் மூலம் ரஷிய படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது.

    இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில் உள்ள இசியம் நகருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்று போரால் சேதமான பகுதிகளை பார்வையிட்டார்.

    அதன் பிறகு அவர் கிவ் நகருக்கு காரில் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிபர் ஜெலன்ஸ்கி லேசான காயம் அடைந்ததாக அவரது செய்தி தொடர்பாளர் நிகிபோ ரோவ் தெரிவித்து உள்ளார்.

    விபத்து நடந்ததும் அவருடன் சென்ற மருத்துவர்கள் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது கார் ஓட்டுனர் ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் 2 பேரும் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஜெலன்ஸ்கிக்கு உடலில் எந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டது என்ற எந்த விவரமும் தெரியவில்லை.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ெபண் பலி
    • 3 குழந்தைகள் உள்ளனர்

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் இவருடைய மனைவி கண்ணம்மா (வயது 32) அதே பகுதியைச் சேர்ந்த செல்வரசு என்பருடன் பைக்கில் பில்லூரில் இருந்து திருவண்ணாமலை அருகே உள்ள தனது தாய் வீடான மல்லவாடி கிராமத்திற்கு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    நாயுடு மங்கலம் கூட்ரோடு அருகே பின்புறமாக வந்த கார் ஒன்று அதிவேகமாக மோதியதில் நிலைத்தலைமாறி கீழே விழுந்தனர்.

    இதில் கண்ணம்மாவிற்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு கலசப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணம்மா பரிதாபமாக இறந்தார்.

    அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இது சம்பந்தமாக கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார்.
    • சைரஸ் மிஸ்திரி பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

    மும்பை :

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54). இவர் நேற்று முன்தினம் மும்பை அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருடன் பயணித்த மற்றொரு தொழில் அதிபர் ஜகாங்கிர் பண்டோலேவும் பலியானார். ஜகாங்கிர் பண்டோலேவின் சகோதரர் டாரியஸ் பண்டோலே (60), இவரது மனைவியான டாக்டர் அனகிதா (55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். டாக்டர் அனகிதாதான் விபத்துக்குள்ளான காரை ஓட்டினார்.

    பெண் டாக்டர் மற்றும் அவரது கணவர் குஜராத் மாநிலம் வாபி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் நேற்று மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

    கார் விபத்தில் பலியான சைரஸ் மிஸ்திரி பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தவர். ரத்தன் டாடா பதவி விலகியதை அடுத்து 2012-ம் ஆண்டு டாடா குழுமத்தின் தலைவராக பதவி ஏற்று, அந்த பொறுப்பில் 2016-ம் ஆண்டு வரை நீடித்தார்.

    பிரபல தொழில் அதிபரான அவர் கார் விபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சைரஸ் மிஸ்திரியுடன் காரில் உடன் பயணம் செய்தவர்கள் அவரது நண்பர்கள். இவர்கள் அனைவரும் பிரபல தொழில் அதிபர்கள். மேலும் அனகிதா மும்பையில் பிரபல மகப்பறு மருத்துவர் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆவார். இவர்கள் குஜராத் மாநிலம் உடவா பகுதியில் உள்ள ஒரு பார்சி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு மும்பை திரும்பி உள்ளனர். காரை பெண் டாக்டரான அனகிதா ஓட்டி உள்ளார். அவரது கணவர் டாரியஸ் முன் இருக்கையில் இருந்துள்ளார். சைரஸ் மிஸ்திரியும், ஜகாங்கிரும் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்துள்ளனர்.

    கார் மும்பையை நெருங்கி கொண்டு இருந்தபோது பால்கர் அருகே ஆற்றுப்பால தடுப்புச்சுவரில் மோதியபோதுதான் இந்த துயர சம்பவம் நேர்ந்தது.

    இதற்கிடையே காரின் அதிவேகம், சீட் பெல்ட் அணியாதது, காரை ஓட்டிய பெண் டாக்டரின் தவறான கணிப்பு போன்ற காரணங்கள் சைரஸ் மிஸ்திரியின் உயிரை பறித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கார் அதிவேகமாக சென்று உள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, கார் சரோட்டி சுங்கச்சாவடியில் இருந்து, விபத்து நடந்த பகுதிக்கு 20 கி.மீ. தூரத்தை 9 நிமிடங்களில் கடந்து உள்ளது. முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவரில் பயங்கர வேகத்தில் மோதி விட்டது.

    மோதிய வேகத்தில், பின் இருக்கையில் இருந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் ஜகாங்கிர் ஆகிய 2 பேரின் தலையும் முன் இருக்கையில் மோதி உள்ளது. இவர்கள் 2 பேரும் சீட் பெல்ட் அணியவில்லை. மேலும் உடனடியாக ஏர் பலூனும் விரியவில்லை. இதனால் முன் இருக்கையில் தலை மோதி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர்.

    காரை ஓட்டிய பெண் டாக்டர் மற்றும் அவரது கணவர் சீட் பெல்ட் அணிந்து உள்ளனர். மேலும் முன் இருக்கையில் ஏர் பலூன் விரிந்ததால் அவர்கள் உயிர் தப்பி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்திரி பற்றி மராட்டிய முன்னாள் துணை கலெக்டரும், தொழில் அதிபருமான கணேஷ் ஜக்தாப் கூறியதாவது:-

    சைரஸ் மிஸ்திரி எனக்கு மிகவும் நெருக்கமானவர். விமான பயண வசதிகள் இருந்தாலும் அவர் சாலை பயணத்தையே அதிகம் விரும்புவார். அவர் விரும்பிய சாலை பயணமே அவரது உயிரை பறித்துள்ளது.

    பெரிய தொழில் அதிபராக இருந்தாலும் சாலையோர உணவு கடைகளில் விற்கப்படும் வடபாவ், பாவ் பாஜி ஆகியவற்றை வாங்கி சாப்பிடுவார். சாலையோர டீக்கடைகளில் டீ குடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம அடி
    • விரட்டி பிடித்தனர்

    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டையில் இருந்து நேற்று இரவு 8 மணி அளவில் ஜோலார்பேட்டை யில் இருந்து திருப்பத்தூர் நோக்கி அதி வேகமாக வந்த கார் நுகர்பொருள் வாணிபக்கழகம் அருகே ஒரு கார் மீது மோதியது.

    பின்னர் அங் கிருந்து நிற்காமல் வேகமாக சென்ற கார் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே முதிய வர் மீது மோதியது . இதில் முதியவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் . அப்போதும் கார் நிற்காமல் சென்றது . உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் துரத்தி சென்று திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே காரை மடக்கி பிடித்த னர் .

    அப்போது கார் டிரைவர்குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது . அவரை அடித்து வெளியே இழுத்த னர் . அதற்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் காரை ஓரமாக எடுத்துச் சென்று நிறுத்தி பார்த்தபோது காரின் பின் சீட்டில் குடிபோதையில் ஒரு வர் மயங்கி கிடந்தார். அவ ரையும் வெளியே இழுத்துப் போட்டு அடித்தனர். அதற்குள் காரை ஓட்டி வந்த டிரைவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தும்டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து காரை பறிமுதல் செய்து, குடி போதையில் இருந்தவரை திருப்பத்தூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய டிரைவர் மீது வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள் . இந்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது .

    கண்டாச்சிபுரம் அருகே கார் மோதி மூதாட்டி பலி ஆனார்.

    விழுப்புரம்:

    கண்டாச்சிபுரம் அருகே திருவண்ணாமலை- சென்னை செல்லும் சாலையில் அடுக்கம் வன அலுவலர் அலுவலகம் அருகில் அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கார் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே கார் டிரைவர் வேட்டவலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    இது குறித்து கண்டாச்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் காவல் துைறயைினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை்ககாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.  

    • 2 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    சென்னை அருகே முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 65). இவரது மனைவி திலகவதி இவர்கள் இருவரும் கர்நாடக மாநில பெங்களூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.காரை நாகராஜ் என்பவர் ஒட்டி சென்றார்.

    அப்போது நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் குப்பம் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருக்கும் ேபாது திடீரென கார் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் காரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 3 பேர் பலத்த படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த வர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திலகவதி பரிதாபமாக இறந்தார். மேலும் சண்முகசுந்தரம் டிரைவர் நாகராஜ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து தகவ லறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திலகவதி உடலை சப் இன்ஸ்பெக்டர் தானாக முன்வந்து ஸ்ட்ரச்சர் மூலம் உடலை தூக்கி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ×