என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "car accident"
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (வயது 38). தொழில் அதிபர். இவர் செஞ்சி பகுதியில் உரக்கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை லட்சுமிநாராயணன் மற்றும் வக்கீல்கள் சக்திவேல் (42), ஆதிமூலம் (55), சின்னையா வீரப்பன் (40), சின்னதுரை (40), ஏழுமலை (45) ஆகியோர் ஒரு காரில் இன்று காலை செஞ்சியில் இருந்து ஆந்திராவுக்கு புறப்பட்டனர்.
காரை செஞ்சியை சேர்ந்த டிரைவர் நிஜாமொய்தீன் (30) ஓட்டினார். அந்த கார் காலை 11 மணி அளவில் செஞ்சி அருகே வளத்தியை அடுத்த தேவனூர் கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென ரோட்டை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை டிரைவர் திடீரென்று திருப்பினார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது. அதில் பயணம் செய்த லட்சுமிநாராயணன், சக்திவேல், கார் டிரைவர் நிஜாமொய்தீன் ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சின்னையா வீரப்பன், ஏழுமலை, ஆதிமூலம், சின்னதுரை ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்து குறித்து வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். இவருடைய மகள் அசீகா (வயது 19). இவர் நர்சிங் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் மகள் நிவேதிதா (18), கோபால் மனைவி அர்ச்சனா(25), சந்திரப்பா மகள் மாணிக்கியா(20). இவர்கள் அனைவரும் உறவினர்கள் ஆவார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவி அசீகா, நிவேதிதா, அர்ச்சனா, மாணிக்கியா ஆகிய 4 பேரும் அதே பகுதியில் உள்ள தங்கள் விவசாய தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது.
அந்தநேரம் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த அசீகா உள்ளிட்ட 4 பேர் மீதும் மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி அசீகா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய காரை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திருப்போரூரை அடுத்த மடையத்தூரைச் சேர்ந்தவர் சிவா. இவர் நேற்று இரவு மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்போரூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
இரவு 8 மணியளவில் திருப்போரூர் அடுத்த தண்டலம் அய்யப்பன் கோவில் அருகே வந்தபோது காரின் ஏ.சி.யிலிருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக சிவா, மனைவி மற்றும் குழந்தையுடன் இறங்கினார். சிறிது நேரத்தில் கார் கொழுந்து விட்டு எரிந்தது.
இதுபற்றி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறு சேரி தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காரில் பிடித்த தீயை அணைத்தனர். என்றாலும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
கார் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சிவா குடும்பத்துடன் கீழே இறங்கியதால் அவர்கள் தப்பினர்.
இதுகுறித்து திருப்போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். # tamilnews
பேரையூர்:
விருதுநகரைச் சேர்ந்தவர் மரகதவேல் (வயது 41). இவர் தனியார் எண்ணை நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார். இவரது நண்பர்கள் திலீபன் (29), கலைராஜன் (49), ஆரோக்கியராஜ் (27). இவர்கள் 4 பேரும் 4 சக்கர வாகனத்துக்கு உதிரி பாகங்கள் வாங்குவதற்காக காரில் மதுரை வந்தனர்.
பின்னர் விருதுநகருக்கு புறப்பட்டனர். திருமங்கலத்தை அடுத்த ராயபாளையம் அருகே கார் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி மரகதவேல் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹாஜிப்பூர் பகுதியை சேர்ந்தவர் கட்டம் ராகுல் (வயது 22). இவர் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் அதே கல்லூரியில் படிக்கும் தனது நண்பர்களான தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விஷ்ணுசோவர்த்தன் ரெட்டி (22), தேவசாய் (23), புத்தி வம்சி (21) உள்பட 5 பேருடன் ராமேஸ்வரத்து சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று இரவு ஒரு வாடகை காரில் கட்டம் ராகுல் தனது நண்பர்களுடன் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டார். காரை புத்திவம்தி ஓட்டிவந்தார்.
அந்த கார் இன்று அதிகாலை விக்கிரவாண்டியை அடுத்த ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்னை-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது காருக்கு முன்னால் திட்டக்குடி நோக்கி ஒரு அரசு பஸ் சென்றது. திடீரென அந்த பஸ்சின் பின்புறம் கார் மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் கட்டம் ராகுல் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். தேவசாய், புத்திவம்சி உள்பட 5 பேர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேரையும் காரில் இருந்து வெளியே மீட்டனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி சேரன் காலனியை சேர்ந்தவர் செந்தில் முருகன் (53). இவர் நெகமம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சேரன் நகரில் உள்ள வளைவில் திரும்பிய போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தூக்கி வீசப்பட்டார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி செந்தில் முருகன் இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
தர்மபுரி மாவட்டம் குமாரசாமிபேட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 69). கோவில் பூசாரி. இவரது மகள் காயத்ரி கோவை வடவள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக சீனிவாசன், அவரது மனைவி லட்சுமி (63), மகன் பால மோகன்(36) ஆகியோர் நேற்று இரவு காரில் கோவை புறப்பட் டனர். காரை பால மோகன் ஓட்டினார்.
நள்ளிரவு 1.15 மணி அளவில் கார் சேலம்- கொச்சின் பைபாஸ் சாலையில் கருமத்தம்பட்டி மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர் பாராத விதமாக கார் பால மோகனின் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்புச் சுவரில் வேகமாக மோதியது. இதில் கார் தலை குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த சீனிவாசன், லட்சுமி ஆகியோர் ரத்தவெள்ளத்தில் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பாலமோகன் தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
சம்பவ இடத்துக்கு கருமத்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று பாலமோகனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளி போலீஸ் நிலைய பகுதியை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் அந்தோணிராஜ். இவர் காரில் அதே பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி(வயது 50), கோவிந்தம்மாள், கீதா ஆகியோருடன் ராமநாதபுரம் சென்றார். பின்னர் அவர்கள் 4 பேரும் காரில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
உச்சிப்புளி அருகே அம்மாச்சி அம்மன் கோவில் அருகில் கார் வந்தபோது திடீரென நிலைதடுமாறியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் வேகமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. இதில் காரில் இருந்த 3 பெண்களும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தோணிராஜ் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காரில் இருந்து 3 பெண்களின் உடல்களையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கலெக்டர் வீரராகவராவ் விபத்து குறித்து கேட்டறிந்தார். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #Accident #Death
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காமன்தொட்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் பெங்களூருவில் இருந்து குடியாத்தத்திற்கு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது.
அந்த காரை பெங்களூரை சேர்ந்த டிரைவர் நைமோன் (வயது37) என்பவர் ஓட்டிவந்தார். அவருடன் அந்த காரில் ஆனந்த் (32), ஆனந்தம்மா (57), பாலு(33), அர்சுணன் (26) ஆகியோர் பயணம் செய்தனர். டிரைவர் காரை ஓட்டிக் கொண்டிருக்கும்போது தூக்கத்தில் கண் அயர்ந்து விட்டார்.
இதனால் கார் முன்னால் சென்ற சிமெண்ட் பாரம் ஏற்றி சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது.
இதில் காரில் முன் சீட்டில் பயணம் செய்த அர்சுனன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயத்துடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்