என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "car accident"
- ராணிப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது
- ரூ.70 லட்சத்து 26 ஆயிரத்து 500 இழப்பீடு தொகை வழங்கப்பட்டது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடைபெற்றது.
மக்கள் நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி ஜெயசூர்யா, மாவட்ட உரிமையியல் நீதிபதி நவீன்துரைபாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் ஆற்காடு அடுத்த மேச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஜே.சி.பி. டிரைவர். சத்தியமூர்த்தி (28) கடந்த ஆண்டு ஆற்காடு - செய்யாறு சாலையில் மோட்டார் சைக்கிளில்சென்ற போது எதிரே வந்த கார் மோதி விபத்தில் உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக இழப்பீடு கேட்டு சத்தியமூர்த்தியின் குடும்பத்தினர் ராணிப்பேட்டை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இன்சூரன்ஸ் நிறுவனம் சத்தியமூர்த்தியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.
மக்கள் நீதிமன்றத்தில் மொத்தமாக 16 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.70 லட்சத்து 26 ஆயிரத்து 500 இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
- வேகமாக வந்த லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
- லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார். இவர் இந்திய அணிக்காக 68 ஒருநாள் போட்டி, 6 டெஸ்ட் போட்டி, 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அவர் அவுட் சுவிங், இன் சுவிங் என புது பந்தில் மிரட்டுவார். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார்.
2011- ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் விளையாடினார். கடைசியாக 2012-ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
இந்நிலையில் மீரட்டில் பிரவீன் குமார் மற்றும் அவரது மகன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அதிஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். வேகமாக வந்த லாரி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து வீசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரில் கோவிலுக்கு சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆதியூரை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனவைி பரிமளா (வயது 40), இவர்களது மகன் அருண்ராஜ் (19).
பழனிவேல் குடும்பத்துடன் தனது காரில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேற்று இரவு புறப்பட்டார். காரை டிரைவர் விக்கி ஓட்டினார். அதிகாலை சுமார் 3 மணியளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த வண்டு ராயன்பட்டு அருகே கார் வந்தது.
அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் வேகமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்தது. வேகமாக லாரி மீது கார் மோதியதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்து லாரியில் சிக்கிக் கொண்டது.
இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் இருந்த பழனிவேல் மகன் அருண்ராஜ் மற்றும் அருண்ராஜின் தாய் பரிமளா ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் மோதி விபத்தில் ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் புவனகிரி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த பழனிவேலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் காரை ஓட்டி வந்த டிரைவர் விக்கி படுகாயங்களுடன் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார். அவரை புவனகிரி போலீசார் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கார் லாரியில் லாவகமாக சிக்கிக்கொண்டது. இதனால் போலீசாரால் விக்கியை காரியிலிருந்து மீட்க முடியவில்லை.
உடனடியாக புவனகிரி போலீசார் சேத்தியாதோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லாரியில் சிக்கிக்கொண்ட டிரைவர் விக்கியை போராடி பத்திரமாக மீட்டனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த பரிமளா, அவரது மகன் அருண்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரில் கோவிலுக்கு சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
- வாலிபரின் உயிரை பறித்த கார் அதன் பிறகும் வேகமாக சென்று பச்சையப்பன் கல்லூரி சுவற்றில் மோதி நின்றது.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு 5-வது தெருவை சேர்ந்தவர் திருமகன். டிரைவரான இவர் தனது மோட்டார் சைக்கிளில் இன்று வீட்டில் இருந்து புறப்பட்டார்.
கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி அருகே அதிகாலை 5.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் திடீரென தாறுமாறாக ஓடியது. இதில் திருமகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கார் வேகமாக மோதியது. இதில் திருமகன் தூக்கி வீசப்பட்டு அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
இதனால் சம்பவ இடத்திலேயே திருமகன் துடிதுடித்து பலியானார். திருமணமான அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
வாலிபரின் உயிரை பறித்த கார் அதன் பிறகும் வேகமாக சென்று பச்சையப்பன் கல்லூரி சுவற்றில் மோதி நின்றது. இதைப் பார்த்து சாலையில் சென்றவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார் காரை ஓட்டி வந்த நபர் குறித்து விசாரித்தனர். அப்போது 18 வயது கல்லூரி மாணவரான ஸ்ரீசிஜிவ் விக்ரம் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டிய அவரும் விபத்தில் காயம் அடைந்தார். சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுங்கம்பாக்கத்தை சேர்ந்த இவர் ஓட்டுனர் உரிமத்துக்காக விண்ணப்பித்திருப்பதும், இன்னும் லைசென்ஸ் எடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக வாலிபர் விக்ரம் மற்றும் அவரது பெற்றோரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- எதிர்பாராத விதமாக சுரேஷ்குமார் மீது மோதியது.
- மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியம் சின்னியம்பாளையம் பஞ்சாயத்து பாலக்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (50) விவசாயி. இவருக்கு சசிகலா என்ற மனைவியும், கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை சுரேஷ்குமார் தனது மொபட்டில் லக்காபுரத்தில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி வந்து கொண்டிரு ந்தார். அப்பொழுது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக சுரேஷ்குமார் மீது மோதியது.
இந்த விபத்தில் மொபட்டில் வந்த சுரேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோ தனை செய்த டாக்டர் சுரேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து சுரேஷ் குமாரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கிருஷ்ணகிரி மாவட்டம் பண்டபள்ளி கொத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் நந்தகுமார் (23) மீது மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விமல் சென்னையில் மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
- கார் ஓட்டி வந்த விமல் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது 35). சாப்ட்வேர் என்ஜினியர். இவர் சென்னையில் மின் பொறியாளராக பணிபுரிந்து வரும் நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து தனது காரில் புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடு கட்டையை உடைத்துக் கொண்டு எதிர் திசை நோக்கி பறந்து சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நடந்த போது கார் ஓட்டி வந்த விமல் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர் பேட்டை போலீசார் விமலை மீட்டு போலீசாரின் நெடுஞ் சாலை ரோந்து வாகனத்தில் உளுந்தூர் பேட்டை அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாலம் கட்ட கொட்டப்பட்டிருந்த மண் மீது ஏறியதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் பகுதியில் உள்ள சஞ்சீவிராய பள்ளி எதிரே காவேரிப்பாக்கம் - பாணாவரம் செல்லும் சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றுவருகிறது.
இந்த பணியின் காரணமாக சாலையின் குறுக்கே மண் கொட்டப்பட்டிருந்தது. நேற்று இரவு அந்த பகுதியில் வேகமாக வந்த சொகுசு கார் மண் மீது ஏறி தலைகீழாக கவிழ்ந்தது.
அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 4 பேரும் எந்த சேதமும் இல்லாமல் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்தும் விசாரித்துவருகின்றனர்.
- அதிவேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
- கார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. ரூஹில்லா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடா, படமடா ராமலிங்கம் நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 21). விஜயவாடாவில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் உள்ளார். குடும்பத்தை காப்பாற்றுவதற்காக லட்சுமணன் இரவு நேரங்களில் பைக் டாக்ஸி ஓட்டி வந்தார்.
லட்சுமணனும் அவரது நண்பரும் நேற்று பைக் டாக்ஸியில் பானு நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்களது பைக் மீது மோதி 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த லட்சுமணன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து பரிதாபமாக இறந்தார். சீனிவாச ராவ் படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் சீனிவாச ராவை மீட்டு விஜயவாடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் வந்த வாலிபர்கள் சிலர் காரில் ஒட்டப்பட்டு இருந்த எம்.எல்.சி. ஸ்டிக்கரை கிழித்து எடுத்துச் சென்றனர்.
கார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.சி. ரூஹில்லா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
காரை ஓட்டி வந்தவர் அவரது உறவினர் ஜமீல். அவர் மது போதையில் காரை வேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. மேலும் காரில் 2 மது பாட்டில்கள் இருந்தன.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது எம்எல்சி யின் கார் இல்லை. ஜமீலின் சகோதரி ஷேக் நாகினாவின் கார் என தெரிவித்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜமீலை கைது செய்தனர்.
திருச்செந்தூர் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 55). இவர் உடன்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி செய்து வருகிறார்.
நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் திருச்செந்தூரில் இருந்து உடன்குடி வழியாக சாத்தான்குளத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது உடன்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற தனியார் ஆம்னி பஸ் உடன்குடி அருகே வந்த போது சந்தனகுமார் மீது மோதியது. இதில் சந்தனகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலியான சந்தன குமாரின் மனைவி ரவிகலா குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் நிலம் கையகப்படுத்தும் தாசில்தாராக பணி செய்து வருகிறார்.
இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதுசம்பந்தமாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
தனியார் பஸ்சை ஓட்டி வந்த சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த டிரைவர் செந்தில்குமார்(38) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள கரும்பாட்டூரை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 30). சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் முகேஷ் (46). இவர்கள் 2 பேரும் காரில் நெல்லைக்கு பொருட்கள் வாங்க வந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த வசந்தகுமார் (22), லீசா (23), ரோஷ்லின் (55), செல்வம் (40), திரவியம் (43), எலிசபெத் (65) ஆகிய 6 பேரும் தங்களது காரில் நெல்லைக்கு புறப்பட்டனர்.
இவர்கள் நேற்று நள்ளிரவு நெல்லை அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் வந்த போது 2 காரும் நேருக்கு நேர் மோதி கொன்டன.
இதில் பலத்த காயமடைந்த 8 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே முகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ளகோவில் நோக்கி வந்த கார் குமரேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது
- வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகேயுள்ள மூலனூர்- கிளாங்குண்டல் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (வயது 29) ,அவரது உறவினர் விவேக பிரியன் ( 17) ஆகிய இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வெள்ளகோவில் -கரூர் ரோட்டில் புஷ்பகிரி நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கரூரிலிருந்து வெள்ளகோவில் நோக்கி வந்த கார் குமரேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குமரேசன் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த விவேகப்பிரியன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்