search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College"

    • தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.
    • சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவகல்லூரியிலும், ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவகல்லூரியில் இடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா நெய்விளக்கு வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி- ராணி தம்பதிக்கு ஸ்ரீபரன் (வயது 21) என்ற மகனும், சுபஸ்ரீ (18) என்ற மகளும் உள்ளனர்.

    இவர்கள் இருவரும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படிக்க உள்ளனர்.

    பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள வீராசாமி விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். மூட்டை தூக்கும் தொழில் செய்யும் போது விபத்து ஏற்பட்டு அதில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே உள்ளார்.

    இவரது மனைவி ராணி அதன்பிறகு தையல் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

    இந்த ஏழ்மையான சூழ்நிலையில் தன் மகன் மகள்களை மருத்துவராக பார்க்க வேண்டும் என பெற்றோர் கனவு கண்டனர்.

    இதற்காக இரவு பகல் பாராது ராணி தையல் வேளையிலும் ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு தனது பிள்ளைகளை படிக்க வைத்தார்.

    மிகுந்த சிரமங்களுக்கு இடையே ஸ்ரீபரன், சுபஸ்ரீ இருவரும் மருத்துவக் கல்லூரியின் கனவுகளோடு தஞ்சாவூரிலே பயிற்சியில் சேர்ந்து நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றனர்.

    இதில் சுபஸ்ரீ தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியிலும் ஸ்ரீபரன் கன்னியாகுமாரியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. 

    • ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் 19-வது மற்றும் 20-வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர். சின்னத்துரை அப்துல்லா தலைமை தாங்கி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.

    லாஜிடெக் நிறுவ னத்தின் முதன்மை மென்பொறியாளரும், கல்லூரியின் முன்னாள் மாணவருமான அப்துல் ரசீத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:-

    பட்டம் பெற்ற பொறியாளர்கள் இதோடு தங்களது முயற்சியை நிறுத்தி விடாமல் கல்லூரிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தயார் செய்துகொள்ள வேண்டும். கல்லூரியில் தேர்வு செய்த துறைகளுக்கேற்றவாறு திறமைகளையும், வாய்ப்புகளையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    பல்வேறு நிறுவனங்களில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உங்களுக்காக காத்திருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் உங்களை தயார் செய்து கொண்டு ஒவ்வொரு துறைகளிலும் சாதனைகளை வெளிக் கொணர வேண்டும்.

    ஒவ்வொரு பொறியா ளாருக்கும் ஒழுக்கம், கல்வி இவை இரண்டும் இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். நான் கற்ற கல்லூரியிலேயே நான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்த நிகழ்வு எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது.

    இதுபோன்று நீங்களும் சாதனைகளை அடைவதற்கு கூடுதலாக உங்களின் பங்களிப்பை வழங்கி வாழ்க்கை பயணத்தை இனி தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாலிகு கலந்து கொண்டார். திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இளம் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருபவரும், கல்லூரியின் முன்னாள் மாணவியுமான லட்சுமி முன்னிலை வகித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கினார்.

    செய்யது அம்மாள் அறக்க ட்டளை உறுப்பினர்கள் டாக்டர். பாபு அப்துல்லா, செல்லத்துரை அப்துல்லா, டாக்டர். செய்யதா அப்துல்லா, ராசாத்தி அப்துல்லா, முதல்வர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் 483 இளநிலை பொறியாளர்களுக்கும், 77 முதுநிலைப் பொறியா ளார்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக அளவில் 2 தங்கப் பதக்கங்களை கல்லூரி மாணவர்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். கணினித்துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மதுரை சமூகப்பணித்துறையைச் சேர்ந்த 23 மாணவர்களும் கலந்து கொண்டு களப்பணியாற்றினர் .

    சிவகாசி

    இயற்கை வளங்களை பேணிகாக்கும் விதமாகவும், மழைபெறுவதற்கும், வளாகத்தை பசுமையாக மாற்றும் விதமாக, விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை மாவட்ட வருமானவரித்துறை, மதுரை விஷ்டு ஹெல்ப் அறக்கட்டளை மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி விழாவை தொடங்கி வைத்தார்.இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை, கூடுதல் ஆணையாளர் ரங்கராஜன், வருமானவரித்துறை ஆய்வாளர் மலையப்பன், ஆகியோர் கலந்து கொண்டனர். டீன் மாரிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 400 நாட்டு மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன.

    இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியை சேர்ந்த சுமார் 70 மாணவர்களும், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மதுரை சமூகப்பணித்துறையைச் சேர்ந்த 23 மாணவர்களும் கலந்து கொண்டு களப்பணியாற்றினர் .

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், விருதுநகர், மதுரை மாவட்ட வருமானவரித்துறை அலுவலர் பணியாளர் குழு, மதுரை விஷ்டு ஹெல்ப் அறக்கட்டளை, கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்-பேராசிரியர் துர்க்கை ஈஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.
    • தமிழக அரசும், காவல்துறையும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கிண்டி, ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் 20 வயதான மகள் சத்யபிரியாயை சதீஷ் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் நின்ற மாணவியிடம் தகராறில் ஈடுபட்ட சதீஷ் அப்போது வந்த மின்சார ரயிலில் மாணவியை தள்ளி கொலை செய்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த மாணவியின் தந்தை அதிர்ச்சியில் மனமுடைந்து தற்ெகாலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவினால் பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது.

    எனவே இனியாவது தமிழக அரசும், காவல்துறையும் மிக தீவிர நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

    பள்ளி, கல்லூரி மாணவிகள், அன்றாடம் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கல்லூரி வளாகத்தில் பனை விதைகள் நடவு நடைபெற்றது.
    • மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே உள்ள அரியலூர் அண்ணா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தில் பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை கல்லூரி புல முதல்வர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி, பனை விதைகளை நடவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள் தங்கும் விடுதி, கேண்டீன் வளாகம், விளையாட்டு மைதானத்தை சுற்றி பல்வேறு இடங்களில் நாட்டு நலப்பணித் திட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து 700-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்தனர்.

    • அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் அரசு மாதிரி மேல்நிலை இரண்டாமாண்டு வகுப்புகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    • அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பினை வழங்கிட வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் அரசு மாதிரி மேல்நிலை இரண்டாமாண்டு வகுப்புகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு பூண்டி.கே.கலைவாணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்ததாவது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பினை வழங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கில் தமிழக அரசால் சிறப்புத் திட்டமாக மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகளில் தற்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்தாண்டு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடத்தப்பட்ட வினாடி, வினா தேர்வு மற்றும் 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியல் மாநில கல்வித்துறையால் வெளியிடப்பட்டது.

    அதனடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டது.

    மாணவ, மாணவிகளின் விருப்பத்தின் பெயரில் தற்போது 40 மாணவர்கள், 40 மாணவிகளுடன் அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உண்டு, உறைவிடத்துடன் கூடிய மாதிரி பள்ளி மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இம்மாதிரி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அகில இந்திய அளவில் நடைபெறும் அனைத்து விதமான தேர்வுகளிலும் பங்கேற்கும் வகையில் சிறப்பு பாட வல்லுநர்களை கொண்டு திறன் கரும்பலகை எனப்படும் ஸ்மார்ட் போர்ட் மூலம் இணைய வகுப்புகள், பல்வேறு பள்ளிகளிலுள்ள சிறந்த ஆசிரியர்களை கொண்டு நேரடி வகுப்புகளும் நடத்தப்படும்.

    மேலும், தினசரி வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது.

    இப்பள்ளியில் மாணவ, மாணவிகளும் தங்கி பயில்வதற்கான அனைத்து வசதிகளுடன் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் 100 சதவீதம் இந்த வசதிகளை முறையாக பயன்படுத்தி பெற்றோர், ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் கலியபெருமாள், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்டக் கல்வி அலுவலர் மாதவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கைப்பந்து, கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டும், கல்லூரியின் நிறுவனர் டாக்டர் இ.எம். அப்துல்லா பிறந்த நாளை முன்னிட்டும் மாநில அளவிலான கைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

    தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா முன்னிலை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், மாணவ-மாணவிகளும் கல்வி மட்டுமல்லாது விளையாட்டு துறைகளிலும் இணைத்துக் கொண்டு முன்னேற்றம் அடைந்து வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. மாணவ-மாணவிகள் தனக்கென்று தனித்துவம் வாய்ந்த விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.

    செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் பெரியசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரியாஸ் முகம்மது நபி கலந்து கொண்டார். கைப்பந்துப் போட்டிகளில் 18 அணிகளை சேர்ந்த வீரர்களும், கிரிக்கெட் போட்டிகளில் 17 அணிகளை சேர்ந்த வீரர்களும், மாவட்ட அளவிலான பெண்கள் பிரிவு கைப்பந்து போட்டிகளில் 7 அணிகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

    கைப்பந்து போட்டி ஆண்கள் பிரிவில் சென்னை செயின்ட்ஜோசப் பொறியியல் கல்லூரியும், பெண்கள் பிரிவில் ராமநா தபுரம் வேலுமனோகரன் கலைக்கல்லூரியும் கோப்பையை கைப்பற்றியது. கிரிக்கெட் போட்டியில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி கோப்பையை வென்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்க ளுக்கு சிறப்பு விருந்தினர் ரியாஸ் முகம்மது நபி சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன் நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

    • குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் பொறியியல் 2-ம் ஆண்டு படித்து வந்ததார்.
    • கல்லூரிக்கு செல்வதற்காக சேலம்-கோவை புறவழிச்சாலையை கடந்தார். அப்போது, எதிராக வேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில் பலியானார்.

    குமாரபாளையம்:

    சென்னையை சேர்ந்தவர் ஆகாஷ்(வயது 20). இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தனியார் கல்லூரியில் பொறியியல் 2-ம் ஆண்டு படித்து வந்ததார். ஆயுதபூஜை விடுமுறை முடிந்து சென்னையில் இருந்து குமாரபாளையம் வந்த இவர் கல்லூரிக்கு செல்வதற்காக சேலம்-கோவை புறவழிச்சாலையை கடந்தார். அப்போது, எதிராக வேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.

    இதையடுத்து அவர் சிகிச்சைகாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார். இது பற்றி குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் விசாரணையில் கார் டிரைவர் சேலம் அருகே உள்ள மிட்டாபுதூர் பகுதியை சேர்ந்த பத்மநாபன் (34) என்பவரை கைது செய்தனர்.

    • வேளாண் கல்லூரி காவலாளி பலியானார்.
    • கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை துரைசாமி புரத்தை சேர்ந்தவர் பிரமானந்த் (வயது46). மதுரை ஒத்தக்கடையில் வேளாண்மை கல்லூரியில் காவலாளியாக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி ரேவதி விருதுநகர் அருகேயுள்ள முத்துகுமார புரத்தில் அங்கன் வாடியில் பணிசெய்து வருகிறார். இதனால் ரேவதி மற்றும் குழந்தைகள் அங்கு வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் ஆயுத பூஜையை கொண்டாட பிரமானந்தம் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் விருதுநகருக்கு சென்றார். திருமங்கலம் அடுத்துள்ள சிவரக்கோட்டை அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பிரமானந்தம் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இதில் தூக்கிவீசப்பட்ட பிரமானந்தம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மனைவி ரேவதி கொடுத்த புகாரில் கள்ளிக்குடி போலீ சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார்.
    • மரக்கன்றுகளை வழங்கி முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கி வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார்.

    மேலாண்மை துறை தலைவர் பிரபாகரன் வரவேற்றார்.

    சட்ட பஞ்சாயத்து இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி முதலாம் ஆண்டு வகுப்பு துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் கார்த்திகேயன் மாரிமுத்து தாமரைச்செல்வி ராஜா அறிவுசெல்வன்அர்ஜுனன் இளையராஜா உள்ளிட்ட கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • மேலூரில் பள்ளி, கல்லூரி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அழகர் கோவில் ரோட்டில் உள்ள ஆற்றுக்கால் பிள்ளையார் கோவில்-4முனை சந்திப்பில் ஏற்படும் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த ரோட்டில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகள், 5-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இதனால் காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் ஒரே நேரத்தில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி வேன்கள், பஸ்கள் செல்கிறது. பிள்ளையார் கோவில் அருகில் தான் அரசு மருத்துவமனை உள்ளது.

    அழகர்கோவில், நத்தம் செல்லும் பஸ்கள் இந்த வழியாக செல்ல வேண்டும். அதேபோல் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் ஆம்புலன்ஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அவல நிலையும் ஏற்படுகிறது.

    பெரிய கடை வீதி சந்திப்பு, பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் கால்வாய் பாலம் சந்திப்பு, சிவகங்கை மற்றும் திருவாதவூர்ரோடு சந்திப்பு ஆகிய இடங்களிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இருபுறமும் பஸ்கள், வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நெரிசலில் சிக்கி மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்று விடுகின்றன.

    இதனால் பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத அவல நிலை ஏற்படுகிறது. இந்த இடங்களில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து காவலர்களை நியமித்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட அணி எண்.231 மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை நடந்தது.
    • நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான கவிதா பேசுகையில், மாணவர்கள் சேவை பணியில் தங்களை அர்ப்பணித்து கொள்வது குறித்து விளக்கி கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட அணி எண்.231 மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான கவிதா பேசுகையில், மாணவர்கள் சேவை பணியில் தங்களை அர்ப்பணித்து கொள்வது குறித்து விளக்கி கூறினார். நாட்டு நலப்பணித்திட்ட மாணவ செயலர் அருண் ராஜா சிங் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் பார்வதி தேவி நன்றி கூறினார்.

    ×