என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "College"
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வட்டூர் கிராமம், பெத்தாம்பட்டி வண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் கிஷோர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
- மோர்பாளையம், தனியார் வே-பிரிட்ஜ் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், கிஷோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வட்டூர் கிராமம், பெத்தாம்பட்டி வண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 55). இவரது மகன் கிஷோர் (19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், பக்ரீத் பண்டிகை விடுமுறைக்காக கிஷோர் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை கிஷோர், தனது பாட்டியை வைகுந்தத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் பெத்தாம்பட்டி கிராமத்திற்கு திரும்பி கொண்டிருந்தார்.
மோர்பாளையம், தனியார் வே-பிரிட்ஜ் அருகே வந்தபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில், கிஷோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள், கிஷோர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உடல் மற்றும் உள்ளத்திற்கான நன்மைகள் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரை க்கப்பட்டது.
- இயன்றவரை யோகா பயிற்சி செய்து பலன் பெற வேண்டும் என்றார்.
அவினாசி:
அவினாசி அரசு கலை -அறிவியல் கல்லூரி மற்றும் பரம்பொருள் அறக்கட்டளை சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. யோகா பயிற்றுனர் பெத்தண்ணசாமி வரவேற்றார். யோகா பயிற்சியின் அவசியம் குறித்தும், அதன் மூலம் ஏற்படும் உடல் மற்றும் உள்ளத்திற்கான நன்மைகள் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரை க்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் நளதம் பேசுகையில் , வேலைப்பளு மற்றும் வாழ்வில் ஏற்படும் இன்னல்களால் ஏற்படும் மனச்சோர்வினை தடுக்கும் வகையில் யோகா உள்ளது. இயன்றவரை யோகா பயிற்சி செய்து பலன் பெற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம், நாடி சுத்தி, மஹாரம் போன்ற யோக நிலைகள் , மன அமைதிக்கான தியான பயிற்சிகள் வழங்கப்பட்டது. அனைத்து துறை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஒருங்கிணைத்த சர்வதேச வணிகத்துறை தலைவர் பாலமுருகன் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
- சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
- அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசி ரியர்கள் 423 பேருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது.
சேலம்:
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 1000 பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு காரணமாக காலி பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் காலி பணியிடங்களை நிரப்ப கவுன்சிலிங் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசி ரியர்கள் 423 பேருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்ற வரும்படி 423 டாக்டர்களுக்கும் மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் முடிந்த பிறகு பேராசிரியர் பணியிடங் களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
- கல்லூரியில் ஒரு அறையில் 45 கம்ப்யூட்டர்கள் வைக்க ப்பட்டு பூட்டப்பட்டிருந்தன.
- 6 கம்ப்யூட்டர்களை திருடிக் கொண்டு தப்பி ஓடினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அமைந்துள்ளது.
இந்தக் கல்லூரியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரியில் ஒரு அறையில் 45 கம்ப்யூட்டர்கள் வைக்க ப்பட்டு பூட்டப்பட்டிருந்தன.
இதனை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து அறைக்குள் புகுந்தனர்.
அங்கிருந்து 6 கம்ப்யூட்டர்களை திருடிக் கொண்டு தப்பி ஓடினர்.
இந்த நிலையில் பணிக்கு வந்த பேராசிரியர்கள் கம்ப்யூட்டர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது 6 கம்ப்யூட்டர்களை மர்ம நபர்கள் திருடி சென்றது அவர்களுக்கு தெரியவந்தது.
இது குறித்து கல்லூரி முதல்வர் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 1,100 மாணவிகள் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
- எம்.பி.ஏ படிப்பதற்கு நீண்டதூரம் சென்று அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பாரதிதாசன் மாதிரி உறுப்பு கல்லூரி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இக்கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்.சி., போன்ற பட்ட படிப்புகள் உள்ளன.
மேலும், இக்கல்லூரியில் கடந்த 2014-ம் ஆண்டு எம்.பி.ஏ வகுப்புகள் தொடங்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு வரை நடைபெற்றது.
இதில் 240 மாணவர்கள் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு இக்கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு முதல் இக்கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு நிறுத்தப்பட்டது.
இக்கல்லூரியில், தற்போது 1,270 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
அதில் 1,100 மாணவிகள் பட்டப்ப டிப்பு படித்து வருகின்றனர்.
கிராமப்புறத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் இக்கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு நிறுத்தப்பட்ட தால் இங்கு பயிலும் மாணவ- மாணவிகள் எம்.பி.ஏ படிப்பதற்கு நீண்டதூரம் சென்று அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே, கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி மீண்டும் இக்கல்லூரியில் எம்.பி.ஏ. பாடத்தை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
- பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி செயலாளர் திலீபன்ராஜா தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்று ஆண்டறிக்கையை சமர்பித்தார். சிறப்பு விருந்தி னர், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப் பாளர் சபரிநாதன் கலந்து கொண்டார்.
விழாவில் கடந்த ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற மாணவி செல்வகுமாரிக்கு கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ரூ. ஆயிரம் ரொக்க பரிசை வழங்கினார். தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி சீதாலட்சுமிக்கு கல்லூரியின் முன்னாள் தமிழ் பேராசிரியர் முருகேசபாண்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. வணிகவியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கலாமணிக்கு கல்லூரியின் முன்னாள் நிர்வாகி ராஜசேகரன் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
ஆங்கில பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கவிஇந்திரா, கணிதப்பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி துர்காதேவி, வரலாற்று பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கனகராஜ், அறிவியல் துறையில் முதலிடம் பெற்ற மாணவி கள் தேவி, ஜனனி, மேனகா தேவி, கணிப்பொறி பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி காளீஸ்வரி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
கலை இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பின்பு கல்லூரி அளவில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் சந்துருவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற மாணவி அட்சயாவுக்கும் மாணவன் கார்்த்திக்ராஜாவுக்கும் நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
கல்லூரியில் பணிபுரியும் நிர்வாக அலுவலர், முதல்வர் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கல்லூரி செயலாளர் நினைவுப்பரிசு வழங்கினார். முடிவில் பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவிகள் மாதேஸ்வரி, முத்துப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி நடுத்தெரு சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் இந்திராணி (வயது 20). இவர் நெல்லையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று வழங்கம் போல கல்லூரி சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்லும் வழியில் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ெநல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இந்திராணி கல்லூரி படிப்பு முடித்ததும் மேல்படிப்பு படிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
ஆனால் தற்போது குடும்ப பொருளாதார சூழ்நிலையில் முடியாது என பெற்றோர் கூறிஉள்ளனர். இதில் மனமுடைந்த இந்திராணி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்