என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "College"
- அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- குடவாசல் பகுதியிலேயே கல்லூரி கட்டுவதற்கான போதிய இடம் உள்ளது.
திருவாரூர்:
நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியிருப்ப–தாவது:-
எனது கோரிக்கையை ஏற்று, 2017 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடவாசலுக்குக் கல்லூரியை வழங்கினார்.
குடவாசல் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை, நடுத்தரப் பகுதி மாணவர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட கல்லூரி குடவாசல் பகுதியிலேயே தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதுதான் அப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள் அனைவரின் கருத்தாகும்.
மாறாகத் தவறான தகவல்களைச் கூறி குடவாசல் தொகுதியை விட்டு கல்லூரியை வெளியில் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இது ஒரு தவறான முன்னுதாரணம்.
அ.தி.மு.க. ஆட்சியில் கல்லூரிக்குப் புதிய கட்டிடம் கட்டுவற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆனால் நீதிமன்ற வழக்கின் காரணமாக கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை.
குடவாசல் பகுதியில் இடம் கொடுப்பதற்கு பல நிலச் சொந்தகாரர்கள் முன் வந்திருக்கிறார்கள். குடவாசல் பகுதியிலேயே கல்லூரி கட்டுவதற்கான போதிய இடம் உள்ளது.
குடவாசல் பகுதியை விட்டு கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவு செயல்படுத்தப்பட்டால், மாணவர்கள், பொது மக்களுடன் இணைந்து, தலைமையேற்று நானே போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
தேர்வுக்குத் தயாராக வேண்டிய நிலையில், தற்போது குடவாசல் கல்லூரி மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
உடனடியாக அரசு அதிகாரிகள், குடவாசல் பகுதியிலேயேக் கல்லூரிக்–கானக் கட்டிடம் கட்டப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதியளித்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுத் மாணவர்கள் தேர்வுக்குத் தயாரக வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் அன்னை சாரதா தேவி ஜெயந்தி விழா நடைபெற்றது.
- விழாவில் கல்லூரி மாணவிகளின் பஜனை, நாடகம், சொற்பொழிவும் நடைப்பெற்றது.
கரூர்:
கரூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் 70-வது ஜெயந்தி விழா நடைப்பெற்றது. விழாவின் தொடக்கமாக காலையில் கோடங்கிப்பட்டியிலிருந்து கல்லூரிவரை மாணவிகளின் பேரணி நடைப்பெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் நாகதீபா வரவேற்புரை மற்றும் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் ஸ்ரீமத் சுவாமி சத்தியானந்த மகராஜ்,கல்லூரியின் செயலர் யத்தீஸ்வரி நீலகண்டப்ரியா அம்பா அருளுரை வழங்கினார்கள். மேலும் கல்லூரி மாணவிகளின் பஜனை, நாடகம், சொற்பொழிவும் கோடங்கிப்பட்டி பள்ளி குழந்தைகளின் நாடகமும் நடைப்பெற்றது. விழாவின் நிறைவாக அர்ச்சனை, மஹா தீபா ஆராதனை நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- வேலுநாச்சியார் பெயரில் பெண் போலீசாருக்கான பயிற்சி கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யப்படுகிறது.
- வேலுநாச்சியார் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிவகங்கை
வீரமங்கை வேலு நாச்சியாரின் 293-வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை-சூரக்குளத்தில் அமைந்துள்ள வேலு நாச்சியாரின் நினைவு மண்டபத்தில் அவரது சிலைக்கு, அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி, கார்த்திசிதம்பரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரமுகர்கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து, அதே வளாகத்தில் உள்ள வீரத்தாய் குயிலியின் நினைவுச்சின்னத்திலும் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-
இந்திய வரலாற்றில் முதல் பெண்மணியாக சுதந்திரத்திற்காக தனித்து நின்று போராடிய வீர மங்கை வேலுநாச்சியார் பிறந்த சிவகங்கை மாவட்டத்தில், இந்த வீரப் பெண்மணிக்கு நினைவு மண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்களிப்பை வெளிக்கொ ணரவும், தமிழ் சமூகத்தின் கலாச்சாரம், பண்பாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாறு கூறும் இசையார்ந்த நாடகத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்தது.
இதுபோன்று சுதந்திரப் போராட்ட தியாகிகளை போற்றும் வகையில் அவர்களை கவுரவிக்கும், இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக திகழும் வகையிலும், முதல்-அமைச்சர் சிறப்பான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர், சிவகங்கை மாவட்டத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் பெண்கள் காவலர் பயிற்சி கல்லூரி அமைத்துத்தருமாறு அரசிடம் வைத்துள்ள கோரிக் கையின் அடிப்படையில், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில், இடம் தேர்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
- சிவலிங்ககணேஷ் காரியா பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன். இவரது மகன் தனசேகர பாண்டியன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கணேஷ் (18). இவர்கள் 2 பேரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
நேற்று காரியாபட்டியில் உள்ள நண்பர்களை சந்திப்பதற்காக மோட்டார் சைக்கிளில் 2 பேரும் புறப்பட்டு சென்றனர். தனசேகரபாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரியனேந்தல் பகுதியில் வந்தபோது முன்னால்சென்ற லாரியை முந்திசெல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவே இருந்த தடுப்பில்மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த தனசேகர பாண்டி யன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிவலிங்ககணேஷ் காரியா பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.
- இந்த நிகழ்வில் 1,135 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உள் புகார்கள் குழு மாணவர்கள் ஆலோசனை குழு மற்றும் வேலைவாய்ப்பு குழு ஆகிய குழுக்கள் இணைந்து ''கல்வி மற்றும் வாழ்க்கை ஒழுக்கத்தின் முக்கியத்துவம்'' என்ற தலைப்பிலான வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தி னராக ரெக்சோனா நம்பிக்கை கல்வி பயிற்சியாளர் சுதா, கலந்து கொண்டார்.
மாணவர் ஆலோசனை குழு உறுப்பினர் மகாலட்சுமி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.துணை முதல்வர் மற்றும் உள் புகார்கள் ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் பேசுகையில், மாணவிகளின் கல்வி மற்றும் வாழ்க்கை ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார். இன்றைய சூழ்நிலையில், மாணவிகள் எவ்வாறு தங்களது கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, தன்னை தொழிற்துறையில் நுழை வதற்கு திறன்களை மேற்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களது இருதரப்பட்ட வாழ்க்கை சூழலை எதிர்கொள்வதற்கான யுக்திகளையும், நேர்த்திகளையும் பயிற்று வித்தார்.
வேலைவாய்ப்பு குழு பொறுப்பாளர் சங்கீதா நன்றி கூறினார். இந்த நிகழ்வில் 1,135 மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- தற்கொலை கடிதத்தில் தனக்கு ஓ.சி.டி. பாதிப்புகள் உள்ளது என தெரிவித்து உள்ளார்.
- பாதிப்பு ஏற்பட்டவருக்கு தேவையற்ற எண்ணங்கள் மற்றும் அச்சம் தோன்றும், அந்த நபருக்கு வேறு எதிலும் கவனம் இருக்காது என்று போலீசார் தெரிவித்தனர்.
ஐதராபாத்:
தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் ஐ.ஐ.ஐ.டி பாசார் என அழைக்கப்படும், ராஜீவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பானுபிரசாத் என்ற மாணவர் முதலாம் ஆண்டு பி.யூ.சி. படித்து வந்துள்ளார்.
இவர் ரங்காரெட்டி மாவட்ட பகுதியை சேர்ந்தவர். இந்த நிலையில், திடீரென அவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதில், தற்கொலை குறிப்பு ஒன்றை போலீசார் கண்டெடுத்து உள்ளனர். அந்த கடிதத்தில், தனக்கு ஓ.சி.டி. பாதிப்பு உள்ளது என அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பாதிப்பு ஏற்பட்டவருக்கு தேவையற்ற எண்ணங்கள் மற்றும் அச்சம் தோன்றும். அந்த நபருக்கு வேறு எதிலும் கவனம் இருக்காது. இதனால், கட்டாயத்தின் அடிப்படையில் திரும்ப, திரும்ப ஒன்றை செய்யும் நிலையில் அவர் காணப்படுவார்.
இதுபற்றி நிர்மல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு சல்லா பிரவீன் குமார் இன்று கூறும்போது, ஐ.ஐ.ஐ.டி. பசாரில் பானுபிரசாத் என்ற மாணவர் விடுதியில் நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மனநிலை பாதிப்புகள் இருந்துள்ளன. இதற்காக சில நாட்களுக்கு முன்பு, கல்லூரி நிர்வாகம் அவருக்கு 2 முறை கவுன்சிலிங் அளித்து உள்ளது. ஏனெனில் அவர் மனரீதியாக குழப்பத்தில் இருந்து உள்ளார். ஆனால், நேற்றிரவு அவர் தற்கொலை செய்து உள்ளார். தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதி வைத்து உள்ளார். அதில், தனக்கு ஓ.சி.டி. பாதிப்புகள் உள்ளது என தெரிவித்து உள்ளார். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார்.
- 10 -ம் வகுப்பு முடித்த பின்னர் 11 -ம் வகுப்பு எந்த பிரிவை தேர்தெடுத்து படிப்பது.
- 12 -ம் வகுப்பிற்கு பிறகு எந்தெந்த கல்லூரிகளில் எப்படி விண்ணப்பிப்பது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் "நான் முதல்வன்" என்ற மாபெரும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் என்ற மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டம் சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 1.12.2022 முதல் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நான் முதல்வன் திட்டத்தின் தொடர்ச்சியாக சிறந்த பயிற்றுநர்கள், மாவட்டத்தில் பணிபுரியும் வருவாய் கோட்டாட்சியர்கள் , துணை ஆட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வகுப்புகள் நடத்தப்படுவதன் மூலம் , 10- ம் வகுப்பு முடித்த பின்னர் 11- ம் வகுப்பு எந்த பிரிவை தேர்தெடுத்து படிப்பது தொழிற்கல்வி ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்பு 12- ம் வகுப்பிற்கு பிறகு எந்தெந்த கல்லூரிகளில் எப்படி விண்ணப்பிப்பது என்று மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான ஒரு விழிப்புணர்வு தெளிவு ஏற்படும்.
இதன் மூலம் மாணவர்களுக்கு ஊக்குவித்தலும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வகுப்பானது அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.
- வேலை வாய்ப்பு வழிகாட்டுதல்களை ஏற்பாடு செய்தது
கரூர்:
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி, கரூர், சேலத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி டெக்னிக்கல் சேஃப்டி மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது. இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி டெக்னிக்கல் சேஃட்டி மேனேஜ்மென்ட் ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா, சேலம் மற்றும் கரூர் எம் குமாரசாமி பொறியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ரமேஷ் பாபு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைவர் மெக்கானிக்கல் மோகன்பிரசாத், ஐஏஎம் அப்துல்லா, கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி முதல்வர் ரமேஷ்பாபு, கரூர் எம்.குமாரசாமி கல்லூரி செயலாளர் டாக்டர்.ராமகிருஷ்ணன், எச்எஸ்இ துறைத் தலைவர் ஜான் கிரேட்சன், இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி டெக்ளிக்கல் சேஃப்டி மேனேஜ்மென்ட் , சேலம், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை ஆசிரிய உறுப்பினர் டாக்டர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி டெக்னிக்கல் சேப்டி மேனேஜ்மென்ட் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
மேலும், இந்த புரிந்துரைவு ஒப்பந்தத்தின் மூலம், எம் குமாரசாமி பொறியியல் கல்லூரி, சேலத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் குவாலிட்டி டெக்னிக்கல் சேஃட்டி மேனேஜ்மென்ட் உடன் இணைந்து கருத்தரங்குகள், விருத்தினர் விரிவுரையாளர்கள் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல்களை ஏற்பாடு செய்தது.
- கல்லூரி நிர்வாகம் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மார்பக புற்று நோய், தைராய்டு போன்ற நோய்கள் குறித்தும் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
மன்னார்குடி:
மன்னார்குடி பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வர் முனைவர் விக்டோரியா தலைமை தாங்கினார்.
மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன், மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மன்னார்குடி தலைமை மருத்துவமனையின் மருத்துவர் கவிதா கலந்து கொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு, மார்பக புற்று நோய், தைராய்டு, கர்ப்பப்பை வாய் புற்று நோய் போன்ற நோய்கள் குறித்தும் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் லலிதாதேவி அனைவரையும் வரவேற்றார்.
இதில் மிட்டவுன் ரோட்டரி சங்க செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் சி. குருசாமி, எம். நடராஜன், ஹரிரவி, சுந்தர்ராஜ், மற்றும் சென்சுருள் சங்கம், நாட்டு நலப்பணி திட்டம், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கல்லூரி வணிகவியல் துறை உதவி பேராசிரியர் பிருந்தா நன்றி கூறினார்.
- தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
- இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
மூன்றாண்டுபயிலும்அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதுப்பித்தலுக்கு 10.11.2022 முதல் செயல்பட துவங்கும். புதுப்பித்தலுக்கான (Renewal) விண்ணப்பங்கள் 06.12.2022-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதே போல் புதிய இனங்களுக்கு (Fresh) இணையதளம் 15.12.2022 முதல் செயல்படத் துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.10.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (மின்னஞ்சல் முகவரி dbcwotpr@gmail.com மற்றும் தொலைபேசி 616001.0421-2999130) அணுகலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
http://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற அரசு இணையதளத்திலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- 24 மணி நேரமும் சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க டெக்னீசியன்கள் நியமிக்க வேண்டும்.
- மன்னார்குடியில் செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வேண்டும்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று மாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் நேரில் ஆய்வு செய்தார்.
அவரை மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா, நகர்மன்ற தலைவர் சோழராஜன், திமுக நகர செயலாளர் வீரா.கணேசன், மருத்துவமனை கண்காணிப்பாளர் என்.
விஜயகுமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மருத்துவமனையில் உள்ள ஐடிபிசிஆர் சோதனை மையத்தையும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும், அண்மையில் திறக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையத்தையும் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவரிடம் மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பான நேசக்கரம் சார்பில் முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.எஸ்.ராஜேந்திரன், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் டாக்டர் வி.பால கிருஷ்ணன், மிட்டம் ரோட்டரி சங்கத் தலைவர் ரெங்கையன், நுகர்வோர் அமைப்பு நிர்வாகி வே ல்முருகன், லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் சந்தோஷ், நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன், சிரில் ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இருதய நோய் டாக்டர் நியமிக்க வேண்டும், 24 மணி நேரமும் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க டெக்னீசியன்கள் நியமிக்க வேண்டும். 2019 ம் ஆண்டில் இடிந்துபோன கட்டிடத்துக்கு மாற்றாக சட்டமன்றத்தில் அறிவித்தபடி புதிய கட்டிடம் கட்ட வேண்டும், எம்.ஆர். ஸ்கேன் வசதி செய்து தர வேண்டும், மன்னார்குடியில் செவிலியர் பயிற்சி கல்லூரி தொடங்க வே ண்டும்.
லேப்ராஸ்கோபி முறையிலான அறுவை சிகிச்சை செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்க வேண்டும், பவர் லாண்டரி வசதி ஏற்படுத்த வேண்டும்,என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டன.
- புதிய தொழில்நுட்ப பயன்பாடு பற்றி ஒரு நாள் பயிற்சி பட்டறை.
- இணைச்செயலாளர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தார்.
நாகப்பட்டினம்:
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் மத்திய அரசின் கல்வி அமைச்சகம், அமிர்த விஷ்வா வித்யாபீடம் இணைந்து விர்ச்சுவல் லேப் என்ற புதிய தொழில்நுட்ப பயன்பாட்டினை பற்றி ஒரு நாள் பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் துவக்கி வைத்தார். அமிர்த விஷ்வா வித்யா பீடத்தை சார்ந்த அதன் வெர்ச்சுவல் லேப் ஒருங்கிணைப்பாளரான சனீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். கல்லூரி செயலர் செந்தி ல்குமார், இணைச் செயலர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஆலோசகர் பரமேஸ்வரன், நிர்வாக தலைவர் முனைவர் மணி கண்ட குமரன், கல்விசார் இயக்குனர்முனைவர் மோகன், முதல்வர்முனைவர் ராமபா லன், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை மற்றும் பேராசிரியர் முனைவர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இயந்திரவியல் துறை பேராசிரியர் முனைவர் கிருஷ்ணமோகன் வரவே ற்றார். பேராசிரியர் முனைவர் ராமானுஜம் நன்றி கூறினார்விழா ஏற்பாடு களை இயந்தி ரவியல் துறை ஒருங்கிணை ப்பாளர்கள் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்