search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shop"

    • பண்டிகைக்கு பொருட்களான புத்தாடைகள், இனிப்புகள், வகைகளில் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
    • தீபாவளிப் பண்டிகையை ஆண்டவர் கடை அசோகா, அல்வாவுடன் கொண்டாடுவதற்காக மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    திருவையாறு:

    வருகிற 24ந்தேதி தீபாவளிப் பண்டிகை பொதுமக்களால் கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு திருவையாறு வணிக நிறுவனங்களில் இப்பண்டிகையில் படைக்கும் பொருட்களான புத்தாடைகள், இனிப்புகள், கண்ணைக் கவரும் பல்வேறு வகைகளில் தயாரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

    திருவையாறில் பாரம்பரியமாக உள்ள ஆண்டவர் அல்வாக் கடையியில். உலக நாடுகள் வியந்து போற்றப்டும் பாசிப்பருப்பு அசோகாவும், கோதுமை அல்வாவும் தயாரிக்கப்பட்டு ஏழை மக்களும் வாங்கிப் பயனடையக் கூடிய குறைந்த விலை பாக்கெட்டுகளில் அடைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால், தீபாவளிப் பண்டிகையை ஆண்டவர் கடை அசோகா, அல்வாவுடன் கொண்டாடுவதற்காக மக்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    மேலும், இதர இனிப்பு மற்றும் கார வகைப் பட்சணங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் இனிப்புக் கடைகளில் லட்டு, ஜாங்கிரி, மைசூர் பாகு, பால்கோவா முதலிய கண்கவரும் வண்ணங்களிலும் நாவூறும் சுவைகளிலும் தீபாவளியை முன்னிட்டு பிரத்யேகமாக தயாரித்து மிகக் குறைந்த விலையிலான அளவுகளில் அட்டைப்பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

    திருவையாறில் பாரம்பரி யமாக நடக்கும் மகாத்மா காந்தியின் அறக்கட்டளை நிறுவன மான சர்வோதய சங்கம் மற்றும் தனியார் ஜவுளி நிறுவனங்களில் தீபாவாளிக்காக சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான புத்தாடைகள் தருவிக்க ப்பட்டு விற்கப்படுகிறது.

    உள்ளூர் தயாரிப்பு பபட்டாசுளும் சிவகாசி முதலிய வெளியூர் தயாரிப்புப் பட்டாசுகளும் திருவையாறு கடைத்தெ ருவில் விற்பனை செய்ய ப்படுகிறது.

    • நியாயவிலை கடை காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு அதிகாரி தெரிவித்தார்.
    • (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணிக்கு விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் நியாய விலை கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள 114 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து www.drbramnad.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதா

    ரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில்

    (www.drbramnad.net) வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களு க்கான அறிவுரைகளை கவனமாக கொண்டு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மேலும் விற்பனையாளர் பணியிடத்திற்காக இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிப்பது தொடர்பாக

    https://youtube/G6c5e2ELJD8 என்ற வளையொளி

    (youtube Channcl - TNCOOP DEPT) தளத்தில் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

    விண்ணப்பிக்கும் முறைகுறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் drbpdsramnad@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவிமைய தொலைபேசி எண் 04567-230950 வாயிலாகவும் ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

    விண்ணப்பதாரர்கள் மேற்காணும் வளையொளி (யூ-டியூப்) தளத்தினை பயன்படுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணிக்கு விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

    இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெங்கமேடு பகுதியில், வருவாய் துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது.
    • குடிநீர் மேல் நிலைத்தொட்டி கட்ட மாநகராட்சிக்கு அந்த இடம் வகை மாற்றம் செய்து வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி, 9வது வார்டு, வெங்கமேடு பகுதியில், வருவாய் துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது. அப்பகுதி யில், குடிநீர் மேல் நிலைத்தொட்டி கட்ட மாநகராட்சிக்கு அந்த இடம் வகை மாற்றம் செய்து வழங்கப்பட்டது.

    கடந்த 2019ம் ஆண்டு முதல் அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி பிரபு, 40 என்பவர் ஆவின் பெயரில் டீ ஸ்டால் நடத்தி வருகிறார். இந்நிலையில், தொட்டி கட்டுமான பணி துவங்கும் வகையில், கடையை காலி செய்யுமாறு, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். பிரபு கடையை காலி செய்ய மறுத்தார். நேற்று காலை கடையை அகற்றும் விதமாக பொக்லைன் வாகனத்துடன் அதிகாரிகள் அங்கு சென்றனர். கடையை அகற்ற உரிய வகையில் அறிவிப்பு தரவில்லை என வாக்குவாதம் செய்த பிரபு, திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகிலிருந்தோர் அவரை மீட்டு அழைத்துச் சென்று சமாதானம் செய்தனர். அதன் பின் அவரே கடையை அகற்றிக் கொண்டார்.

    • ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தில் கடை நடத்தி வரும் கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் பாண்டியன் என்பவர் அங்கு அரசு முத்திரையுடன் கூடிய மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று வந்தார்
    • அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 250 மற்றும் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பகுதியில் உள்ள கடைகளில் மது மற்றும் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆறுமுகநேரி சப்-இன்ஸ்பெக்டர் பிரபாக்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிரடி ஆய்வை மேற்கொண்டனர்.

    அப்போது ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தில் கடை நடத்தி வரும் கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் பாண்டியன் (வயது 29) என்பவர் அங்கு அரசு முத்திரையுடன் கூடிய மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

    இதனால் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.7 ஆயிரத்து 250 மற்றும் 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் காயல்பட்டினம் பூந்தோட்டத்தில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக ஜெயராமன் (39) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • சம்பவத்தன்று காலை ஜெகதீஸ்வரன் தண்ணீரை காய வைக்க கியாஸ் அடுப்பை பற்ற போது கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
    • இந்த தீ விபத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வெட்டுக்காட்டு வலசு நல்லி தோட்டத்தில் ஒரு பிராய்லர் கடை செயல்பட்டு வருகிறது. இது காஞ்சிகோவிலை சேர்ந்த பரமசிவம் என்பவருக்கு சொந்தமானது. இதனை ஜெகதீஸ்வரன் என்பவர் கவனித்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை ஜெகதீஸ்வரன் தண்ணீரை காய வைக்க கியாஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றார். அப்போது டியூப்பில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டது. இதில் திடீரென தீப்பிடித்து அருகில் இருந்து பொரு ட்கள் எரிய தொடங்கின.

    இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தோடு கியாஸ் கசிவையும் நிறுத்தினர்.

    இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக கோழிகள், குஞ்சுகள் தப்பின. கடையில இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகி சாம்பலானது. மேற்புர பகுதியில் தகர ஷீட் அமைத்து இருந்ததால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வர்த்தக கியாஸ் சிலிண்டர் நல்ல நிலையில் இருந்து ள்ளது. நீண்ட நாட்களாக டியூப்பை மாற்றாமல் பயன்படுத்தி வந்துள்ளனர். பழுதான டியூப்பை பயன்படுத்தியதே தீ விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

    இந்த தீ விபத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மைக்ரோ ஏ.டி.எம். மூலம் பெருவிரல் ரேகை கொண்டு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதை பார்வையிட்டார்.
    • விவசாய கடனாக கறவை மாடு வாங்க 4 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் 17 மகளிர் குழுக்களுக்கு ரூ.46 லட்சம் கடன் உதவியை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    தஞ்சை சிந்தாமணி நியாயவிலைக்கடையில் வினியோகம் செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்தும், விற்பனை முனைய கருவியின் செயல்பாடு குறித்தும் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளருமான ராதாகிரு ஷ்ணன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர், மத்திய கூட்டுறவு வங்கியின் மருத்துவக் கல்லூரிகிளை மற்றும் மகளிர் கிளையில் உள்ள வங்கியியல் வசதி கொண்ட வாகனத்தில் வாடிக்கையாளர்களுக்கு மைக்ரோ ஏ.டி.எம். மூலம் பெருவிரல் ரேகை கொண்டு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டதை பார்வையி ட்டார்.

    மேலும் வங்கி கிளையில் 17 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.46 லட்சத்து 40 ஆயிரத்தையும், மத்திய கால விவசாய கடனாக கறவை மாடு வாங்க 4 பேருக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தையும் வழங்கினார்.

    இேத போல் நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி சார்பில் 3 பேருக்கும் மாற்றுத் திறனாளிகள் 3 பேருக்கும் கடனுதவி வழங்கப்பட்டது.

    அதன் பிறகு தஞ்சை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சென்ற முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அங்கு செயல்படும் சுயசேவை பிரிவு பல்பொருள் அங்காடி, எழுது பொருள் அங்காடி பண்ணை பசுமை காய்கறி விற்பனை கூட்டுறவு மருந்தகம் ஆகியவற்றை பார்வயைிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கூட்டு றவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, நுகர் பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஷ்வரி தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி உள்பட கூட்டுறவு த்துறை அதிகாரிகள், வருவா ய்த்துறை அதிகாரிகள், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பண்பொழி பகுதியில் முருகன் என்பவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வந்தது.
    • உணவு பாதுகாப்பு துறை மூலம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், அச்சன்புதூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பண்பொழி பகுதியில் முருகன் என்பவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததை கைப்பற்றி உணவு பாதுகாப்பு துறை மூலம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் புகையிலை விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ப்பட்டு அவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப் பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • பேட்டையை சேர்ந்த அரபாத் என்பவர் அப்பகுதியில் உள்ள பொட்டகுளத்தின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
    • சுமார் 15 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டையை சேர்ந்தவர் அபுதாகிர். இவரது மகன் யாசர் அரபாத்(வயது 23).

    இவர் அப்பகுதியில் உள்ள பொட்டகுளத்தின் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்டவைகளை சட்டவிரோதமாக பதுக்கி விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், டவுன் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ேசாதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுமார் 15 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் யாசர் அரபாத்தை கைது செய்தனர்.

    • நன்கொடை தரவேண்டுமென கேட்டதாக கூறப்படுகிறது.
    • ஆத்திரமடைந்தவர்கள் கடையின் முன்பு இருந்த அலமாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.

     பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரம் உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 31). அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சிலர் நன்கொடை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.சந்திரமோகன் இப்போது இல்லை பிறகு வாருங்கள் என கூறியுள்ளார். மீண்டும் வரமுடியாது, இப்போதே நன்கொடை தரவேண்டுமென அவர்கள் கேட்டதாக கூறப்படுகிறது .இதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த அவர்கள் கடையின் முன்பு இருந்த அலமாரியின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதையடுத்து சந்திரமோகன் கொடுத்த புகாரின்பேரில் பல்லடம் போலீசார் அருள்புரத்தை சேர்ந்த சரவணன் (28) என்பவரை கைது செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்ற ஜெப பாண்டியன் மாலையில் வீடு திரும்பினார்்.
    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை எம்.ஜி. ஆர்். நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெப பாண்டியன் (வயது 55).இவர் டீ வியாபாரம் செய்து வருகிறார்்.

    நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்ற ஜெப பாண்டியன் மாலையில் வீடு திரும்பினார்். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை காணவில்லை. இது தொடர்பாக அவர் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    பழைய பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத். இவரது மகன் முகமது ரியாஸ் (24). இவர் பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரி எதிரே டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற ரியாஸ் இன்று காலை கடைக்கு சென்றார்

    அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்குள்ள அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 ஆயிரம் பணம் திருட்டு போயிருந்தது. இது தொடர்பாகவும் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரேசன் கடை கட்டும் கட்டிட பணி ெதாடங்கி நடைபெற்று வருகிறது.
    • ஒன்றிய தலைவர் ஜே.பி.ரவிச்சந்திரன் ரேசன் கடை கட்டும் கட்டிட பணியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஜமீன் இளம்பள்ளி ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையத்தில் ரேசன் கடை கட்டும் கட்டிட பணி ெதாடங்கி நடைபெற்று வருகிறது. அதுபோல் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கபிலர்மலை ஒன்றிய தலைவர் ஜே.பி.ரவிச்சந்தி ரன், நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு வருகிறார் . அதேபோல் ஜமீன் இளம் பள்ளி ஊராட்சி நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் ரேசன் கடை கட்டும் கட்டிட பணியை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். அப்போது ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கட்சி பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

    • ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தவர்களுக்கு உரிய கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்படைக்கப்ட்டன.
    • கடையை ஒப்படைக்கும்படி பேரூராட்சி நிர்வாகம் பலமுறை அறிவித்தும் முன் ஏலதாரர் ஒப்டைக்க மறுத்து வந்தார்.

    திருவையாறு:

    திருவையாறு பஸ்நிலையத்தில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான கடைகள் சமீபத்தில் 2022-2025 ஆண்டுகளுக்கான ஏலம் பேரூராட்சி நிர்வாக த்தினரால் விடப்பட்டது. ஏலத்தில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தவர்களுக்கு உரிய கடைகள்ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்படை க்கப்ட்டன. இந்நிலையில், ஏற்கனவே 2 -ம் நம்பர் கடையை நடத்திய முன் ஏலதாரர் இவ்வாண்டுக்கான ஏலத்தில் கலந்து கொள்ளாமலும் பழைய ஏல உரிமைக் காலம் முடிந்த பின் கடையை பேரூராட்சியிடம் ஒப்படைக்காமலும் ஆக்கிர மித்துக் கொண்டிருந்தார். கடையை ஒப்படைக்கும்படி பேரூராட்சி நிர்வாகம் பலமுறை அறிவித்தும் முன் ஏலதாரர் ஒப்டைக்க மறுத்து வந்தார்.

    இதையடுத்து அந்தக் கடையை திருவையாறு பேரூராட்சி நிர்வாகமே முன்வந்து நடவடிக்கை மேற்கொண்டு கடையிலிருந்த மரச் சாமான்கள் உட்பட அனைத்துப் பொரு ட்களையும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தி பேரூராட்சி குப்பை வேனில் ஏற்றிச் சென்றது. மேலும், காலி செய்யப்பட்ட அந்த 2-ம் நம்பர் கடையை இவ்வாண்டு ஏலம் எடுத்துள்ள உரிய நபரிடம் பேரூராட்சி நிர்வா கத்தினால் ஒப்படைக்க ப்பட்டது.

    திருவையாறு பேரூராட்சி செயல்அலுவலர் சோமசு ந்தரம், பேரூராட்சி துணை த்தலைவர் நாகராஜன், வார்டு உறுப்பினர்கள், வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் பழனி, போலீசார் முன்னிலையில் கடை அப்புறப்படுத்தப்பட்டு ஏலதாரரிடம் ஒப்படைக்க ப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×