search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Explosion"

    • வெடி விபத்து காரணமாக 2 கி.மீ உயரத்துக்கு கரும்புகை சூழ்ந்துள்ளது.
    • தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்து காரணமாக 2 கி.மீ உயரத்துக்கு கரும்புகை சூழ்ந்துள்ள நிலையில், தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

    • பயணிகள் ரெயில் ரோஹ்தக் அருகே வந்துகொண்டிருந்தது.
    • சல்பர் பொட்டாசிய துப்பாக்கி அழுத்தம் காரணமாக வெடித்தது.

    அரியானாவில் ஓடும் ரெயிலில் ஏற்பட்ட வெடிவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை அரியானாவில் ஜிந்த் பகுதியில் இருந்து டெல்லி நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரெயில் ரோஹ்தக் அருகே வந்துகொண்டிருந்தபோது ஒருவரின் பையில் இருந்த வெடிபொருள் திடீரென தீப்பற்றியுள்ளது.

    இதனால் ஒரு பகுதி ரெயில் பெட்டிகளில் தீ மளமளவென பரவி உள்ளது. இதில் 4 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனே ரெயில் நிறுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறை தீயை கட்டுக்குள் கொண்டுவந்தது. தீக்காயம் அடைந்த 4 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    தொடர்ந்து ரெயில் ரத்து செய்யப்பட்டு பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. பயணி ஒருவரின் பையில் இருந்த சல்பர் பொட்டாசிய துப்பாக்கி அழுத்தம் காரணமாக வெடித்ததில் பையில் இருந்த பட்டாசுகள் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • கட்டட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
    • மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனம் இதை நடத்தி வருகிறது

    மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கமாரியா பகுதியில் செயல்பட்டு வரும் ஆயுதத் தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த காலையில் தொழிற்சாலையின் எரிபொருள் நிரப்பும் பிரிவில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 15 காயமடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் ஒருவர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. எனவே தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சமபவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த ஆயுத தொழிற்சாலையானது மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ள யந்திரா இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
    • காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரான் தலைநகர் தெக்ரானில் இருந்து தென்கிழக்கே சுமார் 540 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தபாஸ் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 70-க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சுரங்கத்துக்குள் மேலும் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதுகுறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறியதாவது:-

    நிலக்கரி சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கவும் அவர்களின் குடும்பங்களுக்கு உதவவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2017ம் ஆண்டு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். அதற்கு முன்பும் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மருந்து கலவை பணியில் ஈடுபட்டிருந்த கோவிந்தராஜ் (வயது25) என்பவர் உடல் சிதறி பலியானார்.
    • குருமூர்த்தி (19) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை செவல்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்று காலை பணிக்கு வந்த அவர்களில் சிலர் மட்டும் பட்டாசு தயாரிப்புக்கான மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    அடுத்த வினாடி அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளிலும் பரவி வெடித்துச்சிதறியது. இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மருந்து கலவை பணியில் ஈடுபட்டிருந்த கோவிந்தராஜ் (வயது25) என்பவர் உடல் சிதறி பலியானார். மேலும் குருமூர்த்தி (19) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

    விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த கோவிந்தராஜ் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் குருமூர்த்திக்கு ரூ.2 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியது.
    • இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்

    லெபனானில் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர் கருவிகள் நேற்றைய தினம் நூற்றுக்கணக்கில் அடுத்தடுத்து வெடித்ததில் 9 பேர் உயிரெலந்த நிலையில் 3000 க்கும் மேற்பட்டோர் வரை படுயாகம் அடைந்தனர். லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்தன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹிஸ்புல்லா குற்றம் சாட்டியது.

    இந்நிலையில் இன்று [செப்டம்பர் 18] லெபனான் தெற்கு பகுதிகளிலும் தலைநகர் பெய்ரூட்டில் பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லாவிரின் தகவல் பரிமாற்ற கருவிகளான வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    • பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் வெடி விபத்து.
    • 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (50). இவர் வெள்ளியம்பட்டி காட்டுவளவு பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். அதே பகுதியில் தனித்தனியாக 5 இடங்களில் பட்டாசு ஆலை சிறிய அளவில் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த ஆலையில் பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கியபோது ஏற்பட்ட உரசலில் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த வெடி விபத்தில், ஜெயராமன் படுகாயங்களுடன் உயிரிழந்தார். மேலும், 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலம் மாவட்டம், சேலம் வட்டம், குப்பனூர் கிராமம், வெள்ளையம்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று (4-9-2024) காலை 10 மணியளவில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிவகாசியை சேர்ந்த ஜெயராமன் (பெய்து 55) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

    மேலும் இவ்விபத்தில் சேலம் வட்டம் சின்னலூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 34) மற்றும் சிவகாசியை சேர்ந்த முத்துராஜா (வயது 47) ஆகிய இருவர் பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கிடவும், காயமடைந்த இரு நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன்.

    • வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் கண்ணன் மற்றும் விஜய் என தெரியவந்துள்ளது.
    • விபத்தில் , 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே தனியார் பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி இரண்ட பேர் உயிரிழந்துள்ளனர்.

    வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் கண்ணன் மற்றும் விஜய் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வெடி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திரா மருந்து நிறுவனத்தில் மதிய உணவு நேரத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
    • போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட அவசர சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன.

    ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZ) உள்ள Escientia என்கிற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதிய உணவு நேரத்தின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அணு உலை வெடித்ததால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது.

    வெடி விபத்து குறித்து தகவல் தெரியவந்ததை தொடர்ந்த, போலீசார் மற்றும் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, ஆம்புலன்ஸ்கள் வளாகத்திற்கு நுழைந்தது தெரிந்தது.

    இந்த விபத்தில், முதற்கட்ட தகவலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், இந்த வெடி விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கு பிறகு ஆலையின் சுவரும் இடிந்து விழுந்துள்ளது. மீட்புப்பணி தொடர்வதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    படுகாயமடைந்தவர்கள் அனகாபள்ளி என்டிஆர் மருத்துவமனை மற்றும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • பட்டாசுகளில் தீ பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • 4 பேர் வெடி விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியில் அச்சங்குளத்தை சேர்ந்த சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த ஆலையில் தற்போது வெளி மாநில தேவைகளுக்காக பட்டாசு உற்பத்தி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று காலை 4 தொழிலாளர்கள் ஒரு அறையில் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்துகளில் உராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பட்டாசுகளில் தீ பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஆலையில் இருந்த 3 அறைகள் இடிந்து தரை மட்டமாயின.

    பணியில் ஈடுபட்டிருந்த அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் (வயது 41), நடுசூரங்குடியை சேர்ந்த மாரிச்சாமி (40), மடத்துப்பட்டி ஆர்.சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (43), மோகன் (50) ஆகிய 4 பேர் வெடி விபத்தில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸ் டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயில் உடல் கருகி இறந்த 4 தொழிலாளர்கள் உடல்களை மீட்டனர். சம்பவம் தொடர்பாக ஏழாயிரம்பண்ணை போலீசார் மற்றும் தாசில்தார் லோகநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ஆலை உரிமையாளர் சகாதேவன், போர்மேன் குருசாமி பாண்டி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
    • வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிப்பு.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும், வெடி விபத்தில் 3 அறைகள் சேதமாகியுள்ளதாகவும், சிலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    மேலும் பட்டாசு ஆலை விபத்து குறித்து சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.

    வெடி விபத்து சம்பவத்தை தொடர்ந்து, பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • ஷாத்நகரில் உள்ள கண்ணாடி தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • பல தொழிலாளர்கள் கைகால்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம், ஷாத்நகரில் உள்ள கண்ணாடி தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 15 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த விபத்தானது ஷாட்நகரில் உள்ள தொழிற்சாலையில் கம்ப்ரசர் டேங்க் மாலை 4.30 மணியளவில் வெடித்து சிதறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. வெடிவிபத்தின் தாக்கத்தால் பல தொழிலாளர்கள் கைகால்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விபத்துக் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×