search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laksharchanai"

    • மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சிவ கோஷங்களை எழுப்பினர்.
    • முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.

    சிதம்பரம்:

    பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சன விழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆனி திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

    முன்னதாக இன்று அதிகாலை சித்சபையில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், தேர் நிலையான கீழரத வீதியில் தனித்தனியே அமைக்கப்பட்ட தேர்களில் வைக்கப்பட்டனர்.

    சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சிவ கோஷங்களை எழுப்பினர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி ஆனந்த நடனமாடி சிவபக்தர்கள் முன்னே சென்றனர். அங்கு திரண்ட திரளான பக்தர்கள் இன்று காலை 6.45 மணிக்கு தேரை இழுத்தனர்.

    தேரானது கீழரதவீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் தேர்நிலையான கீழரத வீதிக்கு இரவு இரவு 7 மணிக்கு வந்தடையும். பின்னர் இரவு 8 மணிக்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.

    நாளை ஜூலை 12-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. 

    • பரிகார மகா யாக பூஜை நடந்தது.
    • குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.

    இந்த சன்னதியில் குருபகவான் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அருகில் சக்கரத்தாழ்வாரும் காட்சி தருகிறார்.

    இதைத்தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா கடந்த 29-ந்தேதி லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. நேற்று முன்தினமும், நேற்றும் லட்சார்ச்சனை நடந்தது.

    நேற்று பகல் 2 மணி அளவில் பரிகார மகா யாக பூஜை நடந்தது. 10-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக பூஜை நடத்தினர். பின்னர் மகா பூர்ணாகுதி நடந்து அர்ச்சகர்கள் புனித தீர்த்தக்குடங்களை எடுத்து கொண்டு கோவிலை வலம் வந்தனர்.

    அதன்பிறகு நேற்று மாலை 5.21 மணிக்கு மேஷம் ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடப்பெயர்ச்சி ஆனதையொட்டி குருபகவானுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

     அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் குருபகவானை வழிபட்டனர். பரிகார ராசிதாரர்கள் பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.

    பிரளயநாதசுவாமி

    சோழவந்தானில் உள்ள பிரளயநாத சுவாமி கோவிலிலும் நேற்று மாலை பரிகார யாகம் நடந்தது. இதைத்தொடர்ந்து புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை தரிசித்தனர்.

    • குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார்.
    • லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு சித்திர ரத வல்லபபெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

    இங்கு குருப்பெயர்ச்சி விழா 3 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வருகிற 29-ந்தேதி காலை 9.30 மணிக்கு லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் குருப்பெயர்ச்சி விழா தொடங்குகிறது.

    1-ந்தேதி (புதன்கிழமை) பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து 3 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.அன்று மதியம் 3 மணி அளவில் யாகசாலை தொடங்கி 5.21 மணிக்குள் பரிகார மகாயாகம், மகா பூர்ணாகுதி, திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

    பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

    குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை மற்றும் பரிகாரம் செய்ய விரும்பும் ராசிக்காரர்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி, சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் மற்றும் சுகாதாரத்துறையினர் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு வருகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, நித்தியா, ஜனார்த்தனன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அன்று இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி காலை 8 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் மாலை 6 மணி வரையும், வியாழக்கிழமை அன்று காலை 7.30 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்களுடைய வசதிக்காக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, சிறப்பு அபிஷேகம்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூரில் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மிகச்சிறந்த பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆடி மாதம் வரும் சனிக்கிழமை மற்றும் சனிப்பெயர்ச்சி நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி சனிபகவான் இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில்இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனை முன்னிட்டு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    இதற்காக நேற்று காலை 9 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்சணை தொடங்கியது. இன்று காலை 9 மணி முதல் தொடர்ந்து லட்சார்ச்சணை பூஜை, நவக்கிரஹ பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளை தொடர்ந்து 5.20 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் கோவில் முன்பு உள்ள சுரபி நதியில் நீராடி தங்கள் பரிகார பூஜைகளை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • திருப்பதி சென்று வழிபட்ட பலன்களை இங்கு பெறலாம்.
    • இன்று காலை 7 மணிக்கு உலக நன்மைக்காக ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தெற்கு வீதியில் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. திருப்பதி பெருமாளே இங்கு கலியுக வெங்கடேச பெருமா ளாகவும் சதுர்புஜ வரதராஜ பெருமாளாகவும் காட்சி தருகிறார்.

    திருப்பதி சென்று வழிபட்ட பலன்களை இங்கு பெறலாம். திருப்பதி வேண்டுதல்களை இங்கு நிறைவேற்றி கொள்ளலாம்.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக நன்மைக்காக ஏகதின லட்சார்ச்சனை நடைபெறும் வழக்கம். அதன்படி இன்று காலை 7 மணிக்கு உலக நன்மைக்காக ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. இதில் பதினைந்து பட்டாச்சார்யார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள்

    ஏகதின இலட்ச்சா ர்சனைக்கு துளசிகள் , தாமரை, மல்லிகை, மருக்கொழுந்து, சம்பங்கி உதிரிப்பூக்கள் வாங்கி தந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • உலக நன்மை வேண்டி 18-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ராஜாளிகாடு பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி, விவசாயம் செழிக்கவும், மக்கள் நோயின்றி வாழ வேண்டி 18-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

    முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், அம்மனுக்கு வெள்ளி அங்கி அணிவித்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், பக்தர்களுக்கு பிரசாத பைகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    கள்ளிமேடு கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கிராம கமிட்டி மற்றும் லட்சார்ச்ச னை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
    • பக்தர்கள் அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் அமாவாசை நாட்கள், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த கோவிலுக்கு கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தன்று ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த வருடத்திற்கான 30-ம் ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 18-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது.

    குண்டம் திருவிழாவினை முன்னிட்டு நேற்று கோவில் வளாகத்தில் தமிழ்முறைப்படி லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக கணபதி ஹோமம் நடைபெற்றது. இதனை கோவில் அறங்காவலர் வசந்தா சம்பத், தாரணி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    லட்சார்ச்சனை நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வனபத்ரகாளியம்மனுக்கு பல வண்ண மலர்களால் தமிழ் முறையில் ஓதுவார்கள் ஒரு லட்சம் முறை அம்மன் திருநாமத்தை வணங்கினர்.

    அன்னைத்தமிழ் லட்சார்ச்சனையை முலத்துறை சக்திவேல், குழந்தைவேல் ஆகியோர் நடத்தி வைத்தனர். உபயதாரர்கள் பாக்கியலட்சுமி குடும்பத்தார்கள், கர்த்திக், கனகாச்சலம், நந்தினி, ஜெகதா, பிரபு, பூர்ணிமா உள்ளிட்டோர் லட்சார்ச்சனைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் கோவில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பால் குட ஊர்வலம் நடக்கிறது.
    • 108 சங்கு பூஜை, ஹோமம், மதியம் 11மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா, லட்சார்ச்சனை, பால் குட ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கி ழமை) காலை 9-30மணிக்கு லட்சார்ச்சனை ஆரம்ப மாகிறது. மதியம் 1-30 மணிக்கு தீபாரா தனை, மாலை 3-30மணிக்கு லட்சார்ச்சனை தொடர்ச்சி நடக்கிறது. இரவு 8மணிக்கு லட்சார்ச்சனை நிறைவடை கிறது.

    5-ந்தேதி (புதன்கிழமை) காலை 7-30மணிக்கு பால் குட ஊர்வலம், 10மணிக்கு 108 சங்கு பூஜை, ஹோமம், மதியம் 11மணிக்கு மகா அபிஷேகம், 12-30மணிக்கு சுவாமி திருவீதி உலா, மகா தீபாராதனை நடக்கிறது. புதன்கிழமை மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    • ரிஷப வாகனத்தில் அமர்ந்து குரு பகவானுக்கு லட்சார்ச்சனை.
    • தருமபுர ஆதீனம் அருளாசியுடன் நடைபெற்றது.

    தரங்கம்பாடி:

    குரு பெயர்ச்சி விழா ஏப்ரல் 22 ம்தேதி சனிக்கிழமையில் இரவு 11. 24 மணிக்கு குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

    அதனை முன்னிட்டு நேற்று மயிலாடுதுறை சேந்தங்குடியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வதான்யேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் (வள்ளலார் கோயிலில்) ரிஷப வாகனத்தில் அமர்ந்து ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி குரு பகவானுக்கு லட்சார்ச்சனை ஒவ்வொரு தினம் மாலையில் நடைபெற்றுவருகிறது.

    இதில் பரிகார ராசிகள், பயன்பெறும் ராசிகள், பரிகாரத்தில் மற்றும் யாகத்திலும் பங்கு பெற்று பயனடைய தருமபுர ஆயுதம் 27ஆவது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாசியுடன் நடைபெறுகிறது.

    ×