search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother complaint"

    • பார்த்திபனுக்கும் இவரது பெற்றோருக்கும் இடையில் தகராறு ஏற்படு வந்தது.
    • வேலைக்காக தனது நண்பரை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பார்த்திபன் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே சம்பந்தக்கார தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பார்த்திபன் (வயது 27). பட்டதாரி. இவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். இதனால் பார்த்திபனுக்கும் இவரது பெற்றோருக்கும் இடையில் தகராறு ஏற்படு வந்தது.

    இந்நிலையில் நேற்று வேலைக்காக தனது நண்பரை பார்த்து வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற பார்த்திபன் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபனின் பெற்றோர் பார்த்திபனை உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் பார்த்திபன் கிடைக்கவில்லை.

    இது குறித்து பார்த்திபனின் தாய் அன்பரசி சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை தேடிவருகின்றனர்.

    தேனி அருகே கடைக்கு சென்ற மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி அருகே தேவாரம் அய்யப்பன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் குட்டிராஜ் மகள் காவ்யா (வயது 18). தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தற்போது தேர்வு எழுதி முடித்துள்ளார். சம்பவத்தன்று காவ்யா கடைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றுள்ளார். இரவு வெகு நேரமாகியும் காவ்யா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் தேவாரம் போலீசில் புகார் அளித்தார்.

    அந்த புகாரில் டி.மூணாண்டி பட்டியைச் சேர்ந்த பாண்டி என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    மேலூர் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தப்பட்டார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர்:

    மதுரை, மேலூர் அருகேயுள்ள மெய்யப்பன் பட்டியைச் சேர்ந்த ராசு மகள் ரவிதா (வயது 19). இவர் மேலூரில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ரவிதா சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது மேலூர் சருகு வளையப்பட்டியைச் சேர்ந்த மனோஜ் (20) என்பவர் திருமண ஆசை காட்டி ரவிதாவை கடத்திச் சென்று விட்டார்.

    இதற்கு மனோஜின் தந்தை வெள்ளைக்கண்ணு, தாய் மலர், உறவினர்கள் செல்வம், நாச்சம்மாள் மற்றும் தங்கம் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

    இது தொடர்பாக ரவிதாவின் தாய் லட்சுமி கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டு பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மதுரை ஊமச்சிக்குளம் அருகிலுள்ள செல்லாயி புரத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகள் வந்தனா. இவர் நேற்றிரவு டியூசன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கவுதம், பகத்சிங், விஜய், திருப்பதி, பிரசாந்த், அஜித்பாண்டி ஆகிய 6 பேரும் வந்தனாவை கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது.

    இதனை தங்கராஜ் தட்டிக்கேட்டார். எனவே 6 வாலிபர்களும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இது தொடர்பாக தங்கராஜ் ஊமச்சிக்குளம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சாந்த மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையம் செட்டி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவிதா (வயது 25). இவர் அந்தியூர் பர்கூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி கவிதா வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. எங்கு சென்றார் என தெரியவில்லை.

    அவரை பற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அவரது தாயார் மாரியம்மாள் அந்தியூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கடந்த 8-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற என் மகள் கவிதா மீண்டும் வீட்டுக்கு வலவில்லை. அவரை கண்டு பிடித்து தர வேண்டும் என கூறி உள்ளார்.

    சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டியை அடுத்துள்ள மிளித்திக்கி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி கவிதா (வயது20). இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில் கவிதாவுக்கு குழந்தை இல்லை.

    நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கவிதா திடீரென மாயமானார். இதனால் உறவினர்கள் கவிதாவை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து கவிதாவின் தாய் அஞ்செட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான கவிதாவை தேடி வருகின்றனர்.
    நாகர்கோவிலில் வீட்டில் இருந்த அக்காள்-தங்கை மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பூதத்தான். இவரது மனைவி ஜானகி(வயது47). இவர்களுக்கு 2 மகன்களும், பேச்சியம்மாள்(19), சீதா லெட்சுமி(17) என 2 மகள்களும் உள்ளனர். 

    இந்த நிலையில் மூத்த மகளுக்கு மாப்பிள்ளை பார்த்ததாக தெரிகிறது. தற்போது திருமணம் வேண்டாம். சில ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொள்வதாகவும் அவரது மகள் கூறினார். இந்த நிலையில் நேற்று தனது தாயார் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்தார். வீட்டில் 2 மகள்கள் மட்டும் தனியாக இருந்தனர். சிறிது நேரம் கழித்து தாயார் வீடு திரும்பினார். வீட்டில் இருந்த 2 மகள்களும் மாயமாகி இருந்தனர்.

    அதிர்ச்சி அடைந்த தாயார் தனது மகள்களான பேச்சியம்மாள், சீதாலெட்சுமி மாயமானது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தார். ஆனால் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறினர். இதையடுத்து தோழிகள் வீடு, உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கும் அவர்கள் இல்லாததால் இது குறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தாகுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் முகமது சம்சீர் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாயமான அக்காள்- தங்கையான பேச்சியம்மாள், சீதாலெட்சுமி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    மேலும் அவர்கள் எதற்காக வீட்டை விட்டு சென்றனர்? எங்கு சென்றார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சியில் இளம்பெண் திடீரென மாயமானர். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண் தேடி வருகிறார்கள்.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி தெற்கு தைக்கா தெருவை சேர்ந்தவர் அசன் மைதீன். இவரது மகள் ஆமீனா (வயது21). இவர் நெல்லையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 1-ந்தேதி வீட்டில் இருந்து வேலைக்கு வந்த ஆமீனா வேலைக்கும் செல்ல வில்லை. மாலையில் வீடு திரும்பவும் இல்லை. இதனால் உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடினார்கள். அங்கும் ஆமீனாவை பற்றி தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து நேற்று ஆமீனாவின் தாயார் உம்மு சுலைகா, கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆமீனாவை தேடி வருகிறார்கள்.

    தவளக்குப்பம் அருகே கடைக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே பூரணாங்குப்பம் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை, தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் சரண்யா (வயது21). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சரண்யா தனது தாய் மகேஸ்வரியிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடு உள்ளிட்ட பலஇடங்களில் தேடியும் எங்கும் சரண்யா இல்லை.

    இதையடுத்து மகேஸ்வரி தனது மகள் மாயமானது குறித்து தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சரண்யாவை யாராவது கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நெல்லையில் கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை டவுன் கோட்டையடி தெருவை சேர்ந்தவர் முருகன், தொழிலாளி. இவரது மகள் சுக்லாதேவி (வயது18). இவர் பாளையில் உள்ள தனியார் பயிற்சி கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வந்தார். 

    கடந்த 23-ந்தேதி பயிற்சி கல்லூரிக்கு சென்ற சுக்லாதேவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்க வில்லை. 

    இதைத்தொடர்ந்து அவரது தாயார் பார்வதி (48), நெல்லை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி சுக்லா தேவியை தேடி வருகிறார்கள்.
    புளியங்குடி அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 50). இவர் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 

    இதில் மூத்த பெண்ணான மகேஸ்வரி (23) என்பவர் கடந்த 26-ந் தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. சீதாலட்சுமி தனது மகளை அருகில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியுள்ளார் ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து புளியங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரியை தேடி வருகிறார்கள்.
    காட்டேரிக்குப்பத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் கூறி உள்ளார்.

    திருக்கனூர்:

    கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் தேவ இரக்கம். ஓய்வு பெற்ற போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர். இவரது மகள் கிரேசி ஜெசிந்தா. (வயது 24).

    இவர் காட்டேரிக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கல்லூரியில் இருந்து காட்டேரிக்குப்பத்துக்கு வந்து செல்ல சிரமம் இருந்ததால் கிரேசி ஜெசிந்தா காட்டேரி குப்பத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    கடந்த சில நாட்களாக கிரேசி ஜெசிந்தா தனது தாய் லலிதாவுக்கு போன் செய்யவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லலிதா காட்டேரி குப்பத்தில் கிரேசி ஜெசிந்தா பணி புரிந்த பள்ளிக்கு சென்று விசாரித்தார்.

    அப்போது கடந்த சில நாட்களாக கிரேசி ஜெசிந்தா பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். விடுதிக்கு சென்று பார்த்த போது அங்கும் கிரேசி ஜெசிந்தா இல்லை.

    இதையடுத்து லலிதா தனது மகள் மாயமானது குறித்து காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் கிரேசி ஜெசிந்தாவுக்கு கல்லூரியில் படிக்கும் போது அவருடன் படித்த ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்தது தெரிய வந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரேசி ஜெசிந்தாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை காதலன் சென்னைக்கு அழைத்து சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவனை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது குறித்து அவரது தாய் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் கும்பலை தேடி வருகிறார்கள்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள சக்கரகுப்பம் நேதாஜிநகரை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி பிரபாவதி இவர்களது மகன் சக்திவேல் (வயது 11). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.

    சக்திவேல் நேற்று காலை வீட்டின் அருகே உள்ள டீ கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வேனில் வந்த 5பேர் கொண்ட கும்பல் மாணவனை திடீரென கடத்தி சென்று விட்டனர். இதனை கண்ட சக்திவேலின் நண்பன் இது குறித்து அவரது அம்மாவிடம் கூறினார்.

    அதிர்ச்சியடைந்த பிரபாவதி இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.

    ×