என் மலர்
நீங்கள் தேடியது "pocso act"
- மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
- தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 மாணவர்கள், 7023 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 114 பேர் 53 மையங்களில் தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளி மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே திருப்புட் குழி அரசு மேல் நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்தார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் இதுபற்றி மாணவி அப்போது மற்ற ஆசிரியர்களிடம் தெரிவிக்கவில்லை.
தேர்வு முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி பள்ளியில் தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவிக்கு ஆசிரியர் ஜெகன்நாத் தேர்வு எழுத உதவியபோது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரியர் ஜெகன்நாத்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- இவா் பிரதமா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியதால், சி.பி.ஐ அலுவலா்களால் விசாரிக்கப்படுவதாகத் தகவல் பரவியது.
- தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள பூண்டி தோப்பு தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் விக்டா் ஜேம்ஸ் ராஜா (வயது 35). இவா் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முனைவா் பட்டம் பயின்று வருகிறாா்.
இவரை சி.பி.ஐ துணைக் காவல் கண்காணிப்பாளா் சஞ்சய் கௌதம் தலைமையிலான 11 போ் கொண்ட குழுவினா் கடந்த 15 ஆம் தேதி விசாரிக்க வேண்டும் எனக் கூறி, மத்திய அரசு கல்வி நிறுவன வளாகத்தில் ரகசியமாக வைத்து 2 நாட்களாக விசாரணை நடத்தினா்.
இவா் பிரதமா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியதால், சி.பி.ஐ அலுவலா்களால் விசாரிக்கப்படுவதாகத் தகவல் பரவியது.
இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக விக்டர் ஜேம்ஸ் ராஜா, 10 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகவும், சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்ததாகவும் இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து வந்தனர் எனவும் தெரிய வந்தது.
இதையடுத்து விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது போக்சோ சட்டம், கூட்டு சதி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
பின்னர் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை தஞ்சையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட விக்டர் ஜேம்ஸ் ராஜாவை 2 நாட்கள் தஞ்சை கிளை சிறையில் அடைக்குமாறும், வருகிற 20-ந்தேதி(திங்கட்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்து மாறும் உத்தரவிட்டார்.
இதையடுத்து விக்டர் ஜேம்ஸ் ராஜா சிறையில் அடைக்கப்பட்டார்.
- ராஜ்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
- சிறுமி சில தினங்களாக சோர்வாக இருந்துள்ளார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த ஏ.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி பண்ருட்டி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்.
அதே பகுதியான விலங்கல்பட்டை சேர்ந்த ராஜ்குமார் (வயது 24). அவரது சகோதரி வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி சில தினங்களாக சோர்வாக இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் நேற்று மாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சியடைந்து, 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை அவரது தாயாரிடம் தெரிவித்தார்.
இது குறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்தபோது ராஜ்குமார் நடந்து கொண்டதை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். மேலும், ராஜ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இதே போல நடந்து கொண்டதாக கூறினார்.
- போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை அன்னூரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி வழக்கம் போல பள்ளிக்கு சென்று வீட்டு வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது அவரை அவரது தாய் அந்த பகுதியில் உள்ள கடையில் பொருட்கள் வாங்குவதற்காக அனுப்பினார்.
சிறுமி செல்லும் போது பக்கத்து வீட்டை சேர்ந்த கூலித் தொழிலாளி ரமேஷ்குமார் (வயது 32) என்பவர் குடிபோதையில் நிர்வாணமாக நின்று கொண்டு சிறுமியை சைகை காட்டி அழைத்துள்ளார். இதனால் பயந்த சிறுமி தனது வீட்டிற்கு செல்லாமல் வெளியே நின்று கொண்டு இருந்தார்.
கடைக்கு சென்ற தனது மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பிவராததால் அவரது தாய் வெளியே சென்று பார்த்தார். அப்போது வெளியே சிறுமி பதட்டமாக நின்று கொண்டு இருந்தார். அவரை அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்று என்ன நடந்தது என விசாரித்தார்.
அப்போது சிறுமி தனது தாயிடம் பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ்குமார் நிர்வாணமாக நின்று கொண்டு சைகை காட்டி அழைத்ததாக தெரிவித்தார்.
மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இதே போல நடந்து கொண்டதாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் குடிபோதையில் 7 வயது சிறுமி முன் நிர்வாணமாக நின்று சைகை காட்டி அழைத்த ரமேஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
- திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமூக நல அலுவலர் ராமுத்தாய் புகார் செய்தார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த சிறுமி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
மருத்துவ பரிசோதனைக்கு வந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரியிலிருந்து சமூக நல அலுவலர் ராமுதாய்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர், கர்ப்பமான சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார்.
அதில் அந்த சிறுமிக்கும், திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்த 17வயது சிறுவனுக்கும் பழக்கம் இருந்ததும், 19-9-22 அன்று சிறுமியின் வீட்டில் வைத்து அவருக்கு அந்த சிறுவன் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதும், அதைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழ்ந்ததால் சிறுமி கர்ப்பம் அடைந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சமூக நல அலுவலர் ராமுத்தாய் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய மகளிர் போலீசார், சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
- சாய்குமார் கடந்த 6 மாதங்களில் 2 சிறுமிகளை கடத்திச் சென்று பலாத்காலம் செய்துள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரிலோவா பி.என்.ஆர். நகரை சேர்ந்தவர் சாய்குமார் (23). இவர் பி.எஸ்.சி. மைக்ரோபயாலஜி படித்துள்ளார். அங்குள்ள விடுதியில் தங்கி ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்துள்ளார். சாய்குமாரை அரிலோவா போலீசார் கைது செய்தனர். 2½ மாதங்கள் சிறையில் இருந்த அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
தற்போது அரிலோவா போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரிலோவா போலீஸ் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக சாய்குமார் பைக்கில் சென்றார்.
அங்குள்ள தெருவில் 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிந்தார். அந்த சிறுமியை அழைத்து தனியார் மருத்துவமனைக்கு வழி காட்டுமாறு கூறி பைக்கில் அழைத்துச் சென்றார்.
செல்லும் வழியில் உள்ள முடசர்லோவா பூங்காவிற்கு அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்தார்.
அதன்பின், சிறுமியை அங்கேயே விட்டுச் சென்றார். சிறுமியை அவரது தாயார் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அரிலோவா போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சிறுமியை மீட்டனர். மேலும் சாய்குமாரை பிடித்து விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சாய்குமார் கடந்த 6 மாதங்களில் 2 சிறுமிகளை கடத்திச் சென்று பலாத்காலம் செய்துள்ளார். சாய்குமாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- சிறுமிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
- போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் செமவூன் ரம்பானை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஊன்னுக்கல் பகுதியில் ஒரு தேவாலயம் உள்ளது. இதில் பத்தனம் திட்டையை சேர்ந்த செமவூன் ரம்பான் (வயது 77) என்பவர் பாதிரியாராக உள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று பாதிரியார் அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஊன்னுக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் சிறுமிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் செமவூன் ரம்பானை கைது செய்தனர்.
- குழந்தை பிறந்த சிறுமிக்கு வயதை சரிபார்த்தபோது 16 வயது என்பதால் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரர்போதுமணிக்கு தகவல் கொடுத்தனர்.
- புகாரின்பேரில் சிறுமியின் கணவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே பூதிப்புரம் வளையபட்டியை சேர்ந்தவர் கேசவன். இவருக்கும் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமண ஆசைவார்த்தை கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. ஆஸ்பத்திரியில் அவரது வயதை சரிபார்த்தபோது 16 வயது என்பதால் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரர்போதுமணிக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில வாலிபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.
- மனோஜ்குமார் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று விட்டார்.
- மாணவியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பிளஸ்-1 படித்து வந்தார். அவரும், தாதப்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார் (வயது22) என்பவரும் காதலித்து வந்தனர். இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்ததும். பிளஸ்-2 படிப்பதற்கு மாணவியை அனுப்பவில்லை. இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த மனோஜ்குமார், மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று விட்டார். வீடு திரும்பிய பெற்றோர், தங்களின் மகளை காணாமல் பல்வேறு இடங்களில் தேடினர். அன்று இரவு முழுவதும் மாணவி வரவில்லை.
நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் மனோஜ்குமார் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக தெரிவித்தார். இதுபற்றி மாணவியின் பெற்றோர் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த மனோஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
- விக்னேஷ் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு, கஞ்சா வழக்கு, கருங்கல் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்பட 4 வழக்குகள் உள்ளது.
- விக்னேஷ் பற்றி தெரிந்துகொண்ட மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி கதறினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவில், பார்வதிபுரம் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் (வயது 24), கட்டிட தொழிலாளி.
பள்ளி மாணவிகளிடம் நட்பாக பேசி பழகி காதல் வலை வீசுவதும், தன்னை காதலிக்கும் மாணவிகளிடம் நெருக்கமாக இருந்துவிட்டு பின்னர் அவர்களை கழற்றி விடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு மாணவியை காதலிப்பது போல் நடித்து நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு பலாத்காரம் செய்ததை சொல்லியே மிரட்டி தன் நண்பர்கள் 2 பேருக்கு அந்த மாணவியை விருந்தாக்கி இருக்கிறார். அப்போது அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் விக்னேஷ் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் அடிதடி வழக்கு, கஞ்சா வழக்கு, கருங்கல் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்பட 4 வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் விக்னேஷ் வழக்கம் போல ஆசாரிபள்ளத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகுதான் விக்னேஷ் பற்றி தெரிந்துகொண்ட மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் கூறி கதறினார். உடனே மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் விக்னேஷ் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். தற்போது அவர் மீது 2-வது முறையாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 2 முறை போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டும் போலீசாரிடம் சிக்காமல் விக்னேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். எனவே அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
- வீட்டில் இருந்த 5 வயது சிறுமிக்கு மகேஷ்ராவ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- ஆத்திரமடைந்த மகேஷ்ராவின் தங்கை சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.
சிதம்பரம்:
சிதம்பரம் முத்து மாணிக்க தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்ராவ் (வயது 40). பெயிண்டர் வேலை செய்யும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தங்கைக்கு திருமணமாகி 5 வயது பெண் குழந்தை உள்ளது. இவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சிதம்பரத்தில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த 5 வயது சிறுமிக்கு மகேஷ்ராவ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது தங்கை, மகேஷ்ராவை கண்டித்துள்ளார். இதனை பொருட்படுத்தாத மகேஷ்ராவ், தொடர்ந்து 5 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மகேஷ்ராவின் தங்கை சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் வனஜா, மகேஷ்ராவை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
தங்கையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமன் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் சிதம்பரம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குழந்தையின் பெற்றோர் குழந்தையிடம் விசாரித்தபோது குழந்தை பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளது.
- குழந்தையின் பெற்றோர் கூடுவாஞ்சேரி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியிடம் புகார் அளித்தனர்.
வண்டலூர்:
சென்னை புது பெருங்களத்தூர், லால்பகதூர் சாஸ்திரி தெருவில் வசித்து வருபவர் திவாகர் (24) ஏசி மெக்கானிக். இவருக்கு திருமணம் ஆகவில்லை, இவர் பக்கத்து வீட்டாரின் 4 வயது குழந்தையை அவரது வீட்டில் விளையாட விடுவது வழக்கம்.
கடந்த 2 தினங்களுக்கு முன் குழந்தையை விட்டுச் சென்றபோது திவாகர் அந்த 4 வயது பெண் குழந்தையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த பாட்டி திவாகரின் செயலை பார்த்து கடும் கோபம் கொண்டு சத்தம் போட ஆரம்பித்தார். பின்னர் குழந்தையின் பெற்றோர் குழந்தையிடம் விசாரித்தபோது குழந்தை பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளது.
இதனை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் கூடுவாஞ்சேரி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமியிடம் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். திவாகர் போலீசார் வருவதை பார்த்து ஓட முயற்சித்தார். சுதாரித்துக்கொண்ட மகளிர் போலீசார் திவாகரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.