search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pradosha"

    • விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம்.
    • மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும்.

    சிவனுக்குரிய எட்டு வகையான விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்று. திரியோதசியும் சதுர்த்தசியும் இணையும் நாளை பிரதோஷம் என்கிறோம். வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு பிரதோஷங்கள் வீதம் வருடத்திற்கு மொத்தம் 24 பிரதோஷங்கள் வருகிறது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு உள்ள 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். தினமும் வருவதற்கு நித்ய பிரதோஷம் என்று பெயர்.

    அப்படி வரக்கூடிய பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் அவர்களுடைய கோவிலுக்குச் சென்று அவரை வழிபடுவது என்பது மிகவும் சிறப்பான ஒன்று.

    பிரதோஷ வேளையில் சிவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.

    இன்று ஆனி ஆனி மாத வளர்பிறை பிரதோஷ தினம் என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள நந்தியம்பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மழை எதிரொலியால் ஓடைகளில் குளிக்க தடை.
    • இரவில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவி லுக்கு அமாவாசை, பவுர்ண மிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்தில் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அந்த வகையில் பிரதோ ஷம், ஆனி மாத பவுர்ண மியை முன்னிட்டு இன்று முதல் வருகிற 22-ந்தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பிரதோஷ நிகழ்ச்சியில் பங் கேற்க சென்னை, நெல்லை, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு நள்ளிரவு முதல் வருகை தந்தனர்.

    வானம் மேக மூட்டத்துடன் மழை பெய்வது போன்ற சூழல் நிலவியதால் குறைந்த அளவிலான பக்தர்களே வந்திருந்தனர். இதையடுத்து காலை 6.15 மணிக்கு வனத்துறை கேட் திறந்துவிடப்பட்டது. குளுமையான சூழலால் பக்தர்கள் சிரமமின்றி மலையேறி சென்றனர். தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதாலும், மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதாலும், அப்படியே வந்தாலும் கோவிலுக்குச் செல்ல முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் பக்தர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருந்தது.

    இன்று மாலை சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இரவில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது என்றும், தரிசனம் முடிந்து திரும்பி வருபவர்கள் ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது என வனத்துறையினர் தெரி வித்துள்ளனர்.

    நாளை மறுநாள் (21-ந் தேதி) ஆனி மாத பவுர்ணமி நாளில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும்.
    • பிரதோஷம் வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலை யில் சதுரகிரி சுந்தர மகா லிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோ ஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் வரும் 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

    இதில் 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையி லும், 7-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படு வார்கள். 4-ந்தேதி வைகாசி மாத பிரதோஷத்தை யொட்டி மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற உள்ளது.

    பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதேபோல் 6-ந்தேதி வைகாசி அமாவா சையொட்டி சுந்தர மகாலி ங்கம் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. விடுமுறை தினத்தில் பிரதோஷம் வருவதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும், இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. சளி, இருமல், காய்ச்சல் உள்ள வர்கள் கோவிலுக்கு வர வேண்டாம். ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது, எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களான பீடி, சிகரெட், தீப்பெட்டி, மது மற்றும் போதை வஸ்து பொருட்கள், பாலிதீன் கேரிப்பை போன்றவற்றை கொண்டுவர தடை விதிக் கப்பட்டுள்ளது.

    வழிபாட்டிற்கான ஏற்பா டுகளை சுந்தரமகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்கா வலர் ராஜா என்ற பெரிய சாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்தால் அனுமதி மறுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

    • பார்வதி அன்னையின் கோவத்திற்கு ஆளாகலாம்.
    • பிரதோச தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக்கூடாது.

    பிரதோஷ காலங்களில் சிவனை வணங்குவதால் நல்ல பலன் பெற முடியும். பிரதோஷ நாளில் காலையில் இருந்து விரதம் இருந்து பிரதோஷ வேளையான மாலையில், சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும்.

    பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் கண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு.

    பிரதோஷ தினத்தில் சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது. அவற்றை பார்ப்போம்.


    பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது

    பிரதோஷ விரதத்தன்று பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது. பார்வதி அன்னையின் கோவத்திற்கு ஆளாகலாம் என்பதால் பிரதோஷ நாளில் பெண்கள் சிவலிங்கத்தை தொடக் கூடாது.

    மஞ்சள் கூடாது

    பிரதோச தினத்தன்று சிவபெருமானுக்கு மஞ்சள் படைக்கக் கூடாது. சிவலிங்கம் ஆண்மையின் அடையாளம். அதனால் சிவலிங்கத்துக்கு மஞ்சள் பூசக்கூடாது. அதற்குப் பதிலாக லிங்கத்தின் மீது சந்தனம், விபூதி, கங்கை நீர், பால் ஆகியவற்றை பூசலாம்.

    இவற்றையெல்லாம் படைக்கக் கூடாது

    சிவலிங்கத்திற்கு தேங்காய் தண்ணீர், சங்கு தண்ணீர், சங்கு புஷ்பம், லவங்க இலை, குங்குமம் ஆகியனவற்றை படைக்கக் கூடாது. இவற்றைப் படைத்தால் சிவபெருமான் கோபமடைவார்.

    பிரதோசத்தன்று இதை சாப்பிட கூடாது

    பிரதோச தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக்கூடாது. பெண்கள் பூண்டு, வெங்காயம், கத்தரிக்காய், கீரை வகைகள் சாப்பிடக் கூடாது. இறைச்சி தவிர்க்க வேண்டும். நிச்சயமாக மது அருந்தக் கூடாது.

    • விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம்.
    • மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும்.

    சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும்.

    இன்று சித்திரை வளர்பிறை பிரதோஷ நாள். பல திருக்கோயில்களில் சித்திரை விழாக்கள் நடைபெற்று வரும் இத்தருணத்தில் பிரதோஷமும் சேர்ந்து வருவது சிறப்பு. பிரதோஷ விரதம் இருப்பவர்கள் காலை முதல் மாலை உபவாசம் இருந்து மாலையில் பிரதோஷ வேளையில் சிவாலயம் சென்று அங்கு நடைபெறும் அபிஷேகங்களை தரிசித்து, பிராகாரத்தை வலம் வந்து, விரதத்தை நிறைவு செய்வதன் மூலம் பிற தோஷங்கள் எதுவாக இருந்தாலும் வெற்றி கொள்ளலாம்.

    பிரதோஷ வேளையில் சிவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவார்கள்.

    • 23-ந்தேதி சித்திரை மாத பவுர்ணமி மிகவும் விசேஷமான நாளாகும்.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அந்த வகையில் வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், 24-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. 21-ந்தேதி சித்திரை மாத பிரதோஷத்தை முன் னிட்டு மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

    அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்து வார்கள். 23-ந்தேதி சித்திரை மாத பவுர்ணமி மிகவும் விசேஷமான நாளாகும். அன்றைய தினம் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    24-ந்தேதியுடன் 4 நாள் அனுமதி முடிவடைகிறது. விடுமுறை நாட்களில் பிரதோஷம் மற்றும் சித்திரை மாத பவுர்ணமி வருவதால் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதேபோல் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களான பீடி, சிகரெட், பாலிதீன் பை, மது, போதை வஸ்து பொருட்கள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    நான்கு நாட்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அவசியம் மருத்துவக் குழுவினர் இருப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகா சிவராத்திரியன்று ஐந்து சிறப்புகள் இணைந்து வருவது சிறப்பானது.
    • 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள்.

    ஜோதிட சாஸ்திரங்களின்படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி சித்தி யோகம், சிவ யோகம், திருவோண நட்சத்திரம், வெள்ளிக்கிழமை பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்புகள் இணைந்து வருவது சிறப்பானது. இந்த நாளில் மகா சிவராத்திரி வருவது சிறப்பானது. இந்த மகா சிவராத்திரி நாளை தவற விடக்கூடாது. மகா சிவராத்திரி சுக்கிர வார பிரதோஷத்தில் வருவதால் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்து செல்வ வளம் சேரும். மகா சிவராத்திரியில் விரதமிருந்து கண் விழித்து சிவதியானம் செய்திட எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

    இந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. அன்று இரவு 8 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 4 கால பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. ஐந்து யோகங்கள் ஒன்று கூடும் சிறப்பு நிகழ்வும் ஜோதிட ரீதியாக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இது 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள்.

    சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள். இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய்மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.

    விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை வந்தால், மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது. இந்த நிலையில் நித்தியஆனந்தத்தை உணருவதே உன்னதமானது. அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது. உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது. இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்ந்தாலும் பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது. எனவே சிவராத்திரி தினத்தன்று மறக்காமல் நடராஜர் சன்னதியிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

    • அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
    • காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அமாவாசை மற்றும் பவுர் ணமி தினங்களை யொட்டி தலா மூன்று நாட்களும், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்களும் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    கடந்த இரண்டு மாதங்களாக கனமழை பெய்ததின் காரணமாக பிலாவடி கருப்பசாமி கோவில் ஓடை, சங்கிலி பாறை ஓடை, எலும்பு ஓடை, மாங்கனி ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வந்தது. அதோடு பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, உள்ளிட்ட விசேஷ நாட்களின் போது மட்டும் கனமழை பெய்து வந்ததால் பக்தர்கள் நலன் கருதி கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதிக்கவில்லை.

    இதில் மார்கழி 1-ந்தேதி மட்டும் நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் மழை காரணமாக அனுமதிக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.

    வருகிற 23-ந்தேதி தை மாத பிரதோஷ விழா நடைபெற உள்ளது. எனவே அன்று மாலையில் சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    25-ந்தேதி தை மாத பவுர்ணமி தினத்துடன், அன்றைய தினம் தைப்பூசம் என்பதால் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. 26-ந்தேதியுடன் நான்கு நாட்கள் அனுமதி முடிவடைய உள்ளது.

    தைப் பிரதோஷம் மற்றும் பவுர்ணமிக்கு பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த இரண்டு மாதங்களாக மழையின் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த 4 நாட்களிலும் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.

    அதோடு பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். இரவில் தங்குவதற்கு அனுமதி கிடையாது, ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது, பாலித்தீன் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரிய சாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர். மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொண்டி அன்ன பூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
    • பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம், சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    தொண்டி

    தொண்டி அருகே நம்புதாளையில் மிகவும் பழமையான சிவாலயமான அன்ன பூரணேஸ்வரி சமேத நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், பழம், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், அரிசி மாவு, பழங்களால் சிறப்பு அபிேஷகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா நடைபெற்றது. வாசு, சுவாமிநாதன் ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    அதே போல் தொண்டி சிதம்பரேஸ்வரர், திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர் தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அபிஷேக பால், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • கட்டிடகலைக்கு சிறந்த எடுத்துகாட்டாக தஞ்சை பெரிய கோவில் உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் வாய்ந்தது. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    பெரிய கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும்.

    இங்குள்ள மகாநந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.

    அதன்படி நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • நந்திபகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புதுப்பள்ளி கிராமத்தில் உள்ள ஞானாம்பிகை உடனுறைஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷச விழாவை முன்னிட்டு மற்றும் நந்திபகவானுக்கு பால், பன்னீர்,சந்தனம் ,பஞ்சாமிர்தம், இளநீர், தேன், தயிர் உள்ளிட்ட பல்வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.

    • சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு சோழவந்தான் பிரளயநாதர் கோவிலில் நந்திபெருமானுக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர்.சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சிறப்புஅர்ச்சனை, பூஜைகள், தீபாரதனை நடந்தது பிரதோஷ கமிட்டினர் பிரசாதம் வழங்கினர். இதேபோல் மன்னாடிமங்கலம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவலவயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்பட இப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×