search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "purchase"

    • மக்கள் ஆண்டு முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங் 'பண்டிகைகளை' எதிர்நோக்குகிறார்கள்.
    • பண்டிகை காலங்களில் மக்கள் இணையதளத்தின் தள்ளுபடி பார்த்து கணக்கு பார்க்காமல் வாங்கிவிட கூடாது.

    பண்டிகை காலம் என்றால் வழக்கமாகவே ஷாப்பிங்குடன் தொடர்பு கொள்கிறோம். ஆடைகள், இனிப்புகள்,உணவு பொருட்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் என எதுவாக இருந்தாலும், மக்கள் பல்வேறு காரணங்களுக்காக எப்போதும் பண்டிகைக் காலத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். 

    கடைகளில் ஏராளமான டீல்கள் மற்றும் தள்ளுபடிகளை கொண்டு வந்து மக்களை கவர்கிறார்கள். மேலும், இந்த ஆண்டின் பண்டிகை காலத்தில் புதிதாக எதையாவது வாங்குவதற்காக அதிக விரும்புகிறார்கள்.

    தொழில்நுட்பம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையின் முன்னேற்றங்களுடன், சமீப ஆண்டுகளில் பண்டிகை கால பொருட்கள் வாங்கும் பழக்கம் மாறியுள்ளது. ஷாப்பிங் நடத்தையில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம், கடை தெருவிலிருந்து ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மாறுவதாகும்.

    இன்றைய நாட்களில் மக்கள் ஆண்டு முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங் 'பண்டிகைகளை' எதிர்நோக்குகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில், பெரும்பாலான நுகர்வோர் காட்டும் பண்டிகைக் காலச் செலவுகளின் போக்கைப் பயன்படுத்திக் கொள்ள பெரிய இ-காமர்ஸ் நிறுவனங்கள் முயற்சித்தன.

    இதன் அடிப்படையில், வாராந்திர அல்லது இருவார விழாக்கள் அடிக்கடி தொடங்கப்பட்டு, பயன்படுத்த எளிதான, மலிவு பொருட்கள் இணையதளங்கள் மூலம் வாடிக்கையாளர்களை அதிக செலவு செய்ய வைக்கிறது. பண்டிகை காலங்களில் மக்கள் இணையதளத்தின் தள்ளுபடி பார்த்து கணக்கு பார்க்காமல் வாங்கிவிட கூடாது. தங்கள் பட்ஜெட்டின் படி கணக்கு வைத்து செலவழிப்பது முக்கியம். 

    மேலும், மக்கள் தாங்கள் வாங்க விரும்பும் ஒரு பொருளைப் பற்றி நிறைய அறிவைக் கொண்டுள்ளனர்.

    ஒரு கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நபர்கள் ஒரு பொருளை வாங்க ஆன்லைன் திருவிழா விற்பனைக்காக காத்திருந்திருகிறார்கள். மேலும் 84% பேர் வாங்குவதற்கு முன் ஆன்லைனில் மாற்று சாத்தியக்கூறுகளை பார்க்கிறார்கள்.

    நமது இருபத்தியோராம் நூற்றாண்டு தலைமுறையில் சமூக ஊடகத் தளங்கள், ஏற்படுத்திய தாக்கத்தையும் நாம் அனைவரும் கண்டிருக்கிறோம். அதில் வரும் விளம்பர படங்களை பார்த்து மக்கள் விருப்பதுடன், முக்கிய இணையதளங்களுக்கு சென்று, ஆன்லைனில் ஆடைகள் மற்றும் பிற பொருட்களை வாங்குவதின் மூலம் மகிழ்ச்சியடைகிறார்கள்.

    வீட்டு உணவு மட்டும் அலங்கார பொருட்களை நேரில் சென்று வாங்குவதே இணையத்தில் வாங்குவதை விட சிறந்தது.

    • நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒரு வாரமாக காத்து கிடக்கின்றனர்.
    • அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் இருக்க விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இரும்பு தலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை முன்பரு வத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும்பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    இரும்புதலை அரசு கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து விற்க முடியாமல் கடந்த ஒருவார காலமாக காத்து கிடக்கின்றனர். கொள்முதல்நிலையம் திறக்கப்படாததால் விவசாயிகள் பலர் அறுவடை செய்த நெல்லை மழையில் நனையாமல் இருக்க விவசாயிகள் தினசரி சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே கொள்முதல்நி லையத்தை உடனடியாக திறந்து நெல்கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பா் 30-ந் தேதி வரையில் 11,143 விவசாயிகளிடம் இருந்து ரூ.172.92 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    • தேங்காய் கொப்பரைக்கான உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களது வருவாயைப் பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயனடையும் வகையில் அவா்கள் விளைவித்த கொப்பரையை விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கூடுதலாக 6,600 மெட்ரிக் டன் அரவை கொப்பரை, 400 மெட்ரிக் டன் பந்து கொப்பரை ஆகியவற்றை கொள்முதல் செய்ய நவம்பா் 26-ந் தேதி வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தேங்காய் கொப்பரை கிலோ ரூ.108.60, பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலமாக கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு, கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் செப்டம்பா் 30-ந் தேதி வரையில் 11,143 விவசாயிகளிடம் இருந்து ரூ.172.92 கோடிக்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு விவரம் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். தேங்காய் கொப்பரைக்கான உரியத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகள் தமிழக அரசின் இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென்னிந்திய தேவை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் தகவல்
    • 15 நாட்களுக்கு ஒருமுறை பசுந்தேயிலையை பறித்து, தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்க அறிவுறுத்தல்

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் 63 ஆயிரம் சிறு-குறு விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக அங்கு 110 தொழிற்சாலைகளும், 35க்கும் மேற்பட்ட பெரிய எஸ்டேட் ஆலைகளும் செயல்பட்டு வருகிறது. மேலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு தேயிலைதோட்ட கழகம் மற்றும் இன்கோசர்வ் மூலமாகவும் தேயிலை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே பசுந்தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.இதுகுறித்து தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் கூறியதாவது:-

    தேயிலை விவசாயிகள் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் பசுந் தேயிலையை அறுவடை செய்ய வேண்டும். இதற்கு அவர்கள் கத்தியை பயன்படுத்தக்கூடாது. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை விவசாயிகள் சங்கம் மற்றும் கிராமப்புற விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.

    மேலும் பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை வழங்குவதற்கான முயற்சிகளை தென்னிந்திய தேவை வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த மாதம் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.14.90 வழங்க வேண்டுமென தேயிலை வாரிய விலை நிர்ணய கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரியில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பசுந்தேயிலை வரத்து அதிகரித்து உள்ளது. எனவே 7 மற்றும் 15 நாட்களுக்கு ஒரு முறை பசுந்தேயிலையை பறித்து, தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும். இதன் மூலம் தேயிலை வாரியம் நிர்ணயித்ததைவிட, தரமான இலைக்கு கூடுதல் விலை கிடைக்கும். எனவே சிறு-குறு விவசாயிகள் இதனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பருத்தியின் மதிப்பு சராசரியாக ரூ.16.79 லட்சம் ஆகும்.
    • குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 739 என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் இரா.தாட்சா யினி தலைமையில் பருத்தி ஏலம் நடைப்பெற்றது.

    பருத்தி ஏலத்தில் பாபநா சத்தை சுற்றியுள்ள கிராம த்தில் இருந்து மொத்தம் 209 லாட் பருத்தி கொண்டு வரப்பெற்றது.

    சராசரியாக 292.60 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.

    கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 8 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்ட னர் பருத்தியின் மதிப்பு சராசரியாக 16.79 லட்சம் ரூபாய் ஆகும்.

    இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6,999/- குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,409 /-சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.5,739/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    • தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 996.
    • சராசரி மதிப்பு குவிண்டாலுக்கு ரூ.6,009-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைப்பெற்றது

    பருத்தி ஏலத்தில் பாபநாசத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 342 லாட் பருத்தி கொண்டுவரப்பெற்றது. சராசரியாக 358.80 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம்,தேனி, திருப்பூர், சார்ந்த 06 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.6,996/-

    குறைந்தபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.5,329/- சராசரி மதிப்பு குவிண்டா லுக்கு ரூ.6,009/- என்ற விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    • 20 ஆயிரம் டன் மூட்டைகள் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
    • குறைந்தபட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டில் 93 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இந்த பயிர்கள் ஆகஸ்டு மாதத்தில் துவங்கி அறுவடை செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சேமிப்பு கட்டிடங்கள் கூடிய நெல் கொள்முதல் நிலையம், திறந்தவெளி கொள்முதல் நிலையம் என 120 இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கொள்முதல் நிலையங்களிலும் இதுவரை 35ஆயிரம் டன்களுக்கு மேல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் 20 ஆயிரம் டன் மட்டுமே கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    15 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடப்பதால் எடை குறைவு ஏற்பட்டால் ஊழியர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து கொள்முதல் நிலைய ஊழியர்கள், விவசாயிகள் தெரிவிக்கையில் குறுவை நெல் எப்போதும் அறுவடை செய்து பல நாட்கள் அடுக்கிவைத்திருந்தால் இயல்பாகவே எடை குறையும்.

    கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டுசெல்லப்படாமல் தேங்கி கிடக்கிறது, கடந்த சில நாட்களாக தினந்தோறும் மாலை நேரத்தில் மழையும் பெய்துவருகிறது.

    கடந்த சில வாரங்களாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் குறைந்த பட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் குறையாமல் தேங்கி கிடக்கிறது,

    இதனால் ஏற்படும் எடை இழப்பிற்கு ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது.

    மேலும் மழைபெய்வதாலும், கால்நடைகள், எலி ஆகியவற்றால் ஏற்படும் சேதத்திற்கும் ஊழியர்கள்தான் ரெக்கவரி கட்டவேண்டிய சூழல் இருந்து வருகிறது, கொள்முதல் செய்யப்பட்ட பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவத்றகு முன்பு உடனுக்குடன் கிடங்கிற்கு கொண்டு செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனையாகி வருகிறது
    • தமிழ்நாட்டில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

    கோவை,

    தமிழ்நாட்டில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

    இந்த பண்ணைகளில் தினமும் சராசரியாக 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நா டகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

    தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியா ளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது. கடந்த 7-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.99 என இருந்தது.

    கடந்த 8-ந் தேதி ரூ.101, 10-ந் தேதி ரூ.105, 11-ந் தேதி ரூ.107, நேற்று முன்தினம் ரூ.112 என கொள்முதல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    ஒரு வாரத்தில் நுகர்வு அதிகரித்து கறிக்கோழி கொள்முதல் விலை கிலோவிற்கு ரூ.13 வரை உயர்ந்து உள்ளது. தற்போது ஒரு கிலோவிற்கு ரூ.18 வரை உற்பத்தியாளர்க ளுக்கு லாபம் கிடைக்கிறது.

    இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோகறிக்கோழி இறைச்சி ரூ.200 முதல் ரூ.220 வரை விற்பனையாகி வருகிறது.தற்போது ஆடி மாதம் முடிவடைய உள்ளதால் வரும் நாட்களில் நுகர்வு இன்னும் அதிகரித்து விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • 1,000 டன் நெல் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலை யத்துக்கு எடுத்து வரப்பட்டன.
    • நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் ஏற்றப்பட்டு அரவைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக விளங்கி வரும் தஞ்சையில் விளைவி க்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்ப ப்பட்டு பொதுவி னியோக திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்ப ப்பட்டு வருகின்றன.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,000 டன் நெல் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலை யத்துக்கு எடுத்து வரப்பட்ட ன. பின்னர் நெல் மூட்டை கள் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதேபோல் ஆந்திராவில் இருந்து 1300 டன் டி.ஏ.பி. உரம் சரக்கு ரயில் மூலம் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டது.

    • நேற்று முன்தினம் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
    • கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்.

    இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.

    இவரது மனைவி ராஜலெட்சுமி.

    இவர்களுக்கு முருகபாண்டியன் என்ற மகனும், கீர்த்திகா என்ற மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் நவநீதகிருஷ்ணன் தற்பொழுது திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பாதுகாப்பு ஊழியராக தற்காலிகமாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றுள்ளார்.

    கோவில் தரிசனத்தை முடித்துக் கொண்டு நேற்று மாலை குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள், 70 ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    அதனையடுத்து திருவாரூர் தாலுகா காவல்துறை யினருக்கு நவநீதகிருஷ்ணன் தகவல் கொடுத்துள்ளார்.

    தகவலின் அடிப்படையில் திருவாரூர் தாலுகா காவல்துறையினர் திருட்டு நடந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் ஆண்டிபாளையம் பகுதி முழுவதுமாக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ கடப்பாரையால் நெம்பப்பட்டு உடைத்து இந்த திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் நள்ளிரவு நேரத்தில் யார் வந்திருக்கிறார்கள் என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தன்னுடைய மகளின் திருமணத்திற்காக தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் சேர்த்து வைத்தி ருந்ததாகவும், தற்பொழுது இவை அனைத்தும் திருட்டுப் போய் இருப்பது நவநீதகிருஷ்ணன் குடும்பத்தினர் இடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 10 பைசா குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்வரத்து அதிகரித்து வருவதால் முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-610, பர்வாலா-473, பெங்களூர்-600, டெல்லி-490, ஹைதராபாத்-540, மும்பை-605, மைசூர்-603, விஜயவாடா-535, ஹொஸ்பேட்-560, கொல்கத்தா-570.

    முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.95-க்கும் விற்கப்பட்டது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை கோழி கிலோ ரூ.97 ஆக உயர்ந்தது.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 120 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

    • இரண்டு பேருக்கு கிரையம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
    • பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறித்துக் கொண்ட சிவாவை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயரத்தினம் (வயது 50).

    இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான இடம் நாடியம்மாள்புரத்தில் உள்ளது.

    இந்த சொத்தில் பங்கு கேட்டு அவரது உறவினர்கள் அவ்வப்போது தகராறு செய்து வந்தனர்.

    இந்த விவரத்தை தனது குடும்ப நண்பரான பாப்பாநாடு கிராமத்தை சேர்ந்த சிவாவிடம் தெரிவித்தார்.

    அதற்கு அவர் இந்த சொத்தை எனது பெயருக்கு ஒரு பொது அதிகார ஆவணம் எழுதி வைத்தால் நான் பார்த்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

    இதனை உண்மை என்று நம்பிய ஜெயரத்தினம் தனது பேரில் இருந்த சொத்தை சிவாவிற்கு பவர் எழுதி வைத்தார்.

    ஆனால் அதன் பிறகு ஜெயரத்தினத்திற்கு தெரியாமல் அந்த இடத்தை சிவா தனது உறவினரிடம் அடமானம் வைத்தார்.

    பின்னர் அந்த இடம் இரண்டு பேருக்கு கிரையம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அறிந்த ஜெயரத்தினம் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து அவர் தஞ்சை மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள எனது சொத்துக்களை அபகரித்துக் கொண்ட சிவா உள்பட 3 பேரை கைது செய்து எனது சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவாவை கைது செய்திருந்தனர்.

    மற்ற 2 பேரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜெயபிரகாசை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

    ×