என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "school building"
- கமுதியில் ரூ. 2.97 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
- முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை ேசர்ந்த வர்கள் கலந்து கொண்டனர்.
பசும்பொன்
ராமநாதபுர மாவட்டம், கமுதி அருகே உள்ள கோவி லாங்குளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட ரூ.2.97 லட்சம் மதிப்பிலான புதிய கட்டி டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங் கம், மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகா உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியை கார்லின் வரவேற்று பேசி னார். தெற்கு ஒன்றிய செய லாளர்
மனோகரன், தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன், துணை தலைவர் துரைப் பாண்டி, பள்ளி மேலாண் மை குழு தீபா காளிமுத்து, வட்டார வளமைய மேற் பார்வையாளர் ஸ்ரீராம், இல்லம் தேடி கல்வி ஒருங் கிணைப்பாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் தி.மு.க.வை சேர்ந்த கோவிலாங்குளம் ராமமூர்த்தி, செந்தில், வழி விட்டான், ஜெயராஜ், முத்து ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை ேசர்ந்த வர்கள் கலந்து கொண்டனர்.
- பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி மதில் சுவர் கட்ட வேண்டும்.
- மாத்தூர் ஆதிதிராவிடர் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் மாத்தூர் கிழக்கில் உள்ள ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதாகியதால் இடிக்கப்பட்டு ஓராண்டாகியும் கட்டுமான பணி தொடங்கப்படாமல் உள்ளது.
எனவே போர்க்கால அடிப்படையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரி மதில் சுவர் கட்ட வேண்டும்.
இடுகாடு, சாலை, எரியூட்டும் மேடை, மதில் சுவர், அடிபம்பு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இன்று தஞ்சை தாலுகா அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய செயலாளர் அபிமன்னன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு உறுப்பினர் அமுல்ராஜ், கிளை செயலாளர்கள் சரிதா, மலர்விழி, ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் தொடக்கி வைத்தார் .
மாநகர செயலாளர் வடிவேலன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், சங்கிலி முத்து, வன ரோஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பள்ளி கூடுதல் கட்டிடம் திறக்கப்பட்டது.
- தலைமை ஆசிரியை ஜீவா, ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். போதிய இட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது ரூ.29 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கட்டிடத்தை திறந்து வைத்தனர். தலைமை ஆசிரியை ஜீவா, ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்
- கல்வெட்டினை திறந்து வைத்தார்
காவேரிப்பாக்கம்:
வாலாஜா அஐகே உள்ள திருப்பாற்கடல் ஊராட்சியில் உள்ள எஸ்.தேவராஜ் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில், 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு நபார்டு திட்டத்தின் கீழ் திருப்பாற்கடல், வி.கே.மாங்காடு, ஆற்காடு, திமிரி, கலவை, ஒழுகூர், பனப்பாக்கம், புலிவலம், மகேந்திரவாடி, ரெண்டாடி, சோளிங்கர் உள்ளிட்ட 11 பள்ளிகளில் ரூ.18.23 கோடி மதிப்பீட்டில் பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் கல்வெட்டினை திறந்து வைத்து பணியினை தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழுத் தலைவர் வெங்கட்ரமணன், உதவி செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, முதன்மைக் கல்வி அலுவலர் உஷா. ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், ஓச்சேரி பாலாஜி, தெய்வசிகாமணி, மாவட்ட கவுன்சிலர்கள் மாலதி கணேசன், சக்தி, ஒன்றிய கவுன்சிலர் இந்திராணி சுந்தரம், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
- சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.
ராணிப்பேட்டை:
முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தார்.
அப்போது தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜாவில் அரசு பள்ளி தரம் வாய்ந்ததாக இருந்தது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் வாலாஜா அரசு பள்ளியில் சேர்ந்தார். இதற்காக அவர் வாலாஜாவில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து பள்ளி படிப்பை முடித்தார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
இந்த பள்ளி 120 ஆண்டுகளை கடந்தும் திறமைமிக்க மாணவர்களை உருவாக்கி வருகிறது .
இந்த பள்ளியில் மு.வரதராசனார் முன்னாள் தலைமைச் செயலர் பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் உள்ளிட்ட சாதனையாளர்கள் படித்துள்ளனர்.
இந்த அரசு பள்ளி 1867-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தால் அந்த காலத்திலேயே மிகத் தரம் வாய்ந்த பர்மா தேக்குகளால் மேற்தளம் மாடிபடிக் கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .
மிகப் பெரிய வாணிப நகரமாக விளங்கிய வாலாஜாவில் பல வியாபாரிகளின் பிள்ளைகள் இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி கற்பதை மிகவும் பெருமையாக கருதுகின்றனர்.
கடந்த 1920-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் திவான் பகதூராகவும் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த ராஜகோபாலாச்சாரியார் முயற்சியினால் எச். வடிவில் பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.
தற்போது பழமை வாய்ந்த இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சிதிலமடைந்து உள்ளன. சில கட்டிடங்கள் இடித்து விழும் நிலையில் உள்ளன.
ஓடுகள் சரிந்தும், சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது.
நாளை இந்த பள்ளியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- மானாமதுரை அருகே புதிய பள்ளி கட்டிடங்களை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- தலைமையாசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எஸ்.காரைக்குடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் மற்றும் பள்ளி கட்டிடத்தை மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி திறந்து வைத்து பேசினார். விழாவில் இளையான்குடி வடக்கு ஒன்றியம் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுபமதியரசன், எஸ்.காரைக்குடி ஊராட்சி மன்ற தலைவர் குழந்தை பாண்டியன், மாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தேசிங்கு ராஜா மற்றும் அரசு துறை அதிகாரி கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவி கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வாராப்பூர் ஊராட்சியில் ரூ.1.30 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது.
- அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்து வமனை பங்களிப்புடன் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார்.
அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் விழாவில் கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தை கல்வி வளம் மிகுந்த மாநில மாக உருவெடுக்கும் பொருட்டு சிறந்த திட்டங் களை கல்வித்துறையில் செயல்படுத்தி பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்விக்கு தனித்தனியாக அதிகளவில் தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து கல்வி துறையை மேம்படுத்தி வருகிறார்.
பள்ளிக்கல்வித்து றையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பிற மாநி லங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்திடும் வகையில் மாணவர்களுக்கு கற்றலுக்கு தேவையான கல்வி உப கரணங்கள் வழங்கி வருகிறார். அது மட்டுமன்றி ஆசிரியர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், கழிவறை கட்டிடங்கள், சுற்றுச்சுவர் அமைத்தல், வகுப்பறையில் தேவையான பொருட்கள் ஆகியவைகளை ஏற்படுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்கின்ற ஆர்வத்தை தூண்டுகின்ற வகையில் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அவ்வாறு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உறுது ணையாக இருந்திடும் வகை யில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், நன்கொடையாளர்களும் அரசிற்கு மேலும் வலு சேர்த்து வருகின்றனர்.
அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்கு அரசுடன் இணைந்து, பொதுமக்களின் பங்களிப்பு டனும் பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.
அந்த வகையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை நிறுவனத்தின் சார்பில் அதன் நிறுவனர் டாக்டர் சேதுராமன் பிறந்த ஊரான வாராப்பூர் ஊராட்சியில் தான் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியினை மேம்படுத்தும் விதமாக புதிய பள்ளி கட்டிடத்துடன் நூலகம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தி இந்த ஊராட்சிக்கு வழங்கி பெருமை சேர்த்துள் ளார்.
சேதுராமனின் கனவை நினைவாக்குகின்ற வகையில் அவரது புதல்வன் டாக்டர் குருசங்கர் சிறப் பான பணியை மேற் கொண்டு தனது தந்தைக்கு பெருமை சேர்த்து மருத்துவ சேவை மட்டுமன்றி, கல்வி சேவையும் புரிந்துள்ளார்.
இச்சேவையினை வழங்கிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றி கலந்த பாராட்டுகளை அரசின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் தற்போது வழங்கி உள்ள இக்கொடை மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வ தற்கும், இதுபோன்று பல்வேறு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அரசிற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் எனவும் இந்த நேத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் என்.சேதுராமன், தலைவர் டாக்டர் எஸ்.குரு சங்கர், மேலாளர் கோபால கிருஷ்ணன், பிராண்டிங் அண்ட் மார்க்கெட்டிங் கார்த்திக் ராஜன், ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன்,திட்ட இயக்குனர் சிவ ராமன், மாவட்ட கல்வி அலுவலர்களான அம்பி காபதி, சுவாமிநாதன், சந்திர சேகர், சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, தலை மையாசிரியர் அலமேலு மங்கை, திருப்புவனம் சேர்மன் வேங்கை மாறன், மாணவரணி ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய சேர்மன் சண்முக வடிவேல், எஸ்.புதூர் ஒன்றிய செய லாளர் செல்வராஜ், கட்டிட ஒப்பந்ததாரர் வி. என். ஆர். கன்ஸ்ட்ரக்சன் நாகராஜன், மற்றும் அரசு அலுவலர்கள், மாவட்ட தி.மு.க. ஒன்றிய நகர், கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- சிங்கம்புணரியில் பள்ளி கட்டிடம் கட்ட இடம் கிடைக்காமல் வருவாய்த்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர்.
- 14 ஆண்டுகளிலேயே அரசு பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கை பட்டியில் நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த கன மழையில் 14 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் இந்த பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்று அதிகாரிகளால் பூட்டி வைக்கப்பட்டது.
கட்டப்பட்ட 14 ஆண்டுகளிலேயே அரசு பள்ளி கட்டிடம் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்பில்லாத ஓட்டு கட்டிடத்தில் இந்த நடு நிலைப்பள்ளி தற்காலி கமாக செயல்பட்டு வரு கிறது. இங்கு மாணவ-மாண விகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி சாலையோரத்தில் மரத்தடியில் காம்பவுண்டு சுவர் இல்லாமல் உள்ளது.
இந்த நிலையில் இந்த பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
பள்ளி கட்டிடம் கட்ட தகுந்த இடம் கிடைக்காததால் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சுமார் ரூ.92 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டும், புதிய பள்ளிக்கட்டிட பணி தொடங்காமல் தாமதமாகி வருகிறது.
எனவே மாணவ-மாணவிகளின் பெற்றோர் விரைவில் புதிய பள்ளி கட்டிடம் அமைத்து மாண வர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
- புதிய பள்ளி கட்டிடம் கட்ட பொதுமக்கள் வலியுறுத்தல்
- மாணவர்களை மரத்தடியில் உட்கார வைத்து பாடம் நடத்துவதாக புகார்
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் மொத்தம் 196 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மழை நீர் பள்ளி வளாகத்தில் நின்றதாலும், பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்ததால் பாதுகாப்பு கருதி வளையாம்பட்டு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் சில மாதங்களாக பள்ளி இயங்கி வந்தது.
பாதுகாப்பு கருதி சேதம் அடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட கல்வித்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் பள்ளி அமைந்துள்ள இடம் அறநிலைத்துறைக்கு சொந்தமானது என்பதால் அங்கு மீண்டும் பள்ளி கட்டிடங்கள் கட்ட தடையாக உள்ளது என கூறப்படுகிறது.
தற்காலிகமாக பள்ளி இயங்கி வந்த அரசு கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாததால் மீண்டும் பழைய இடத்திலே பள்ளி இயங்க தொடங்கினர்.
இங்கு பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் ஒரு வகுப்பறையில் 2 வகுப்பு மாணவர்கள் அமர வைத்தும், ஆசிரியர்கள் தனித்தனியாக பாடம் நடத்தி வருகின்றனர்.
சில வகுப்புகள் மரத்தடியில் மாணவர்களை உட்கார வைத்து பாடம் நடத்துவதால் மரத்தில் உள்ள பூச்சிகள் மாணவர்கள் மீது அவ்வப்போது விழுந்து மாணவர்கள் பாதிப்ப டைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் பலமுறை கல்வி அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் கொடுத்தும் இதுவரையில் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று சில மாணவர்களுக்கு பூச்சிகள் கடித்து அதிகமாக அரிப்பு ஏற்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்ற தகவல் கல்வி அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
தகவலின் பேரில் ஆலங்காயம் ஒன்றிய வட்டார கல்வி அதிகாரி சித்ரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அதிகாரியை முற்றுகையிட்ட பகுதி மக்கள் சம்பவம் குறித்து பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதாகவும் ஆகையால் பள்ளி தலைமை ஆசிரியர் மாற்ற வேண்டும், அதே நேரத்தில் பள்ளி கட்டிடமும் விரைவாக கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்ததின் பேரில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.
- பள்ளி வளாகத்தில் ஆபத்தான கட்டிடம் அகற்றும் பணிகள் தொடங்கியது
- பழுதான சமையல் கூடமும் அகற்றப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பழைய பழுதான ஓட்டுக்கட்டிடம் ஓடுகள் உடைந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த கட்டிடம் உடைந்து விழுந்தால் அருகில் உள்ள மாணவர்களின் வகுப்பறை கட்டிடம் மீது விழுந்து ஆபத்து ஏற்படும் என்பதால் நேற்று பழுதான பழைய கட்டிடத்தை இடிக்க கோரி மாணவர்களை பள்ளி வகுப்பறைகளுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் மரத்தடியில் அமர வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மாணவர்கள், பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தகவலறிந்து வந்த வட்டாரக்கல்வி அலுவலர் கருணாகரன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கட்டிடம் இடிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் பழுதடைந்த ஆபத்தான ஓட்டுக்கட்டிடத்தின் ஓடுகள் அகற்றப்பட்டு சுவர்கள் அகற்றும் பணிகள் தொடங்கியது. அதே போல அருகில் உள்ள பழுதான சமையல் கூடமும் அகற்றப்பட்டது.
- திருமங்கலம் அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
- இதனால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்படுகிறது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள புல்லமுத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு 40 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி கட்டிடம் மோசமான நிலையில் இருக்கிறது. மாணவ-மாணவிகள் இங்கு தொடர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் பெற்றோர்கள் திருமங்க லம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு கூடம் இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும், இதனால் வெளியில் வைத்து சமைப்பதாகவும், மழை காலங்களில் மாணவ-மாணவிகள் கல்வி பயில முடியாமல் தவித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் மின்விளக்குகள் இல்லை. பள்ளி முன்பு மழை நீர் தேங்கி கிடப்பதால் கழிவுநீர் கலந்து விடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் அதிகாரியிடம் தெரிவித்தனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து பாடம் பயிலும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்
- வெயில் நேரத்தில் உள்ளே புழுக்கம் தாங்காமல் மரத்தடிக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தப்படுகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா ஆளப்பிறந்தான் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள
இப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாண, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும், 4 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும் என 2 கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழைய கட்டிடம் எனக்கூறி 4 முதல் 8-ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்கு கல்வி பயின்று வந்த 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் 1 முதல் 3-ம் வகுப்பிற்கான கட்டிடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் சிறிய கட்டிடத்திற்குள் 90-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இறுக்கமான சூழ்நிலையில் கல்வி கற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இது தொடர்பாக பெற்றோர்கள், பொதுமக்கள் தெரிவிக்கையில், பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு அங்கிருந்த பிள்ளைகள் 3-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். சி
றிய கட்டிடம் ஆகையால் இறுக்கமான சூழ்நிலையில் பிள்ளைகள் படித்து வருகின்றனர். அதோடு மட்டுமல்லாது ஒரே கட்டிடத்திற்குள் 90 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்.
இதனால் மாணவர்களுக்கு ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் தவிக்கின்றனர். மேலும் வெயில் நேரத்தில் உள்ளே புழுக்கம் தாங்காமல் மரத்தடிக்கு மாணவர்களை வரவழைத்து பாடம் நடத்தப்படுகிறது.
மதிய உணவு வேளையில் சாப்பிடக்கூட இடம் இல்லாமல் வெட்ட வெளியில், வெயிலில் உட்கார்ந்து பிள்ளைகள் சாப்பிடுவதைக் கண்டால் மனம் வேதனை அடைகிறது.
தற்போது கொரொனா பரவும் சூழலில் மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுகின்ற நிலையில் இங்கு மட்டும் நெருக்கடியில் பாடம் நடத்தப்படுகிறது. பள்ளிக் கூடத்தை சுற்றி இருந்த சுற்றுச்சுவர்கள் இடிந்து கீழே விழுந்ததால், முள்கம்பிகளை கொண்டு தற்காலிகமாக வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேலி வழியாக கிராமத்திலிருக்கின்ற நாய்கள் முழுவதும் பிள்ளைகள் சாப்பிடும்போது உள்ளே நுழைந்துவிடுகிறது. எனவே பிள்ளைகளை இங்கு படிக்க வைக்கவே அச்சமாக உள்ளது என்று வேதனை தெரிவித்தனர். நிலைமை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
எனவே தமிழக முதல்-அமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு முன்பிருந்தது போல் புதிதாக ஒரு கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டித்தர கேட்டுக்கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்