search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure"

    • திண்டிவனம் அருகே மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் இளவழகி, உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் தமிழரசன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • இவர்கள் அடிக்கடி புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்தி ல்வதும் தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அருகே மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்ஸ்பெக்டர் இளவழகி, உதவி ஆய்வாளர் ஞானசேகரன் மற்றும் தமிழரசன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வேகமாக வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்தி சோதனை செய்தனர்  அதில் 37 அட்டைப் பெட்டிகளில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 1344 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை செய்தபோது, திருவண்ணாமலை மாவட்டம் வடகரை மண்ணூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் பிரகாஷ் (வயது 26), கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சம்மந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பரது மகன் விக்ரம் (22) என்பது தெரியவந்தது. இவர்கள் அடிக்கடி புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு மது பாட்டில்கள் கடத்தி செல்வதும் தெரிய வந்தது.

    இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், மதுபாட்டில் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.

    • திண்டிவனம் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான போதை பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தில் உள்ள கடையில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ரோசனை இன்ஸ்பெக்டர் அன்னகொடிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் ரோஷனை எஸ்ஐ தங்கபாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், சதாசிவம், ஏட்டு வெற்றி வேல் ஆகியோர் அதிரடியாக அந்த கடையில் சோதனை செய்தனர். அந்த கடையில் மறைத்து வைத்திருந்த தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பான் மசாலாவை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய பஸ் நிலையம் அருகே நின்ற இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது
    • உரிமையாளர்கள் வரவழைத்த போலீசார் அபராதம் வசூலித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் இருசக்கர வாகனங்களை, அதன் உரிமையாளர்கள் நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக புகார்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த வண்ணம் இருந்தன. அதனை தொடர்ந்து பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையில், நகர போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் நேற்று புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து லாரியில் ஏற்றி நகர போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அதன் உரிமையாளர்களை வரவழைத்து போலீசார் அபராதம் வசூலித்து, இரு சக்கர வாகனங்களை கொடுத்து எச்சரித்து அனுப்பினர். பெரம்பலூர் நகர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், சாலை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிசாமி எச்சரித்தார்.

    • போக்குவரத்து விதிகளை மீறி பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனைசெய்தனர்.
    • இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டியில் போலீசார் வாகன சோதனையின் போது ேபாதை பொருட்கள் மூட்டை, மூட்டையாக சிக்கியது. பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போக்குவரத்து போலீசார் பண்ருட்டி ராஜாஜி சாலையில் போக்குவரத்தை சீரமைக்கும்பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வழி பாதையில் போக்குவரத்து விதிகளை மீறி பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனைசெய்தனர்.

    காரில் அரசினால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டை ,மூட்டையாக இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காரை ஓட்டி வந்த திருச்செந்தூரை சேர்ந்த விக்னேஷ் காரில் பயணம் செய்த மணிக்குமார் ஆகிய இருவரையும் பண்ருட்டி போலீசில்ஒப்படைத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரெட்டிசாவடி அருகே வெடி விபத்து நடந்த பகுதியில் 1½ மூட்டை வெடி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதே போல் முத்தம்மாள் என்பவர் வீட்டிலும் ஒரு மூட்டை காக்கி வெடி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    கடலூர்:

    ரெட்டிச்சாவடி அடுத்த சிவனார் புரத்தில் மதலப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகருக்கு, அந்த பகுதியில் ஒரு வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெள்ளை கண்ணு என்பவர் வீட்டிற்கு சென்று பிரபாகர் சோதனை செய்த போது, அரசு அனுமதி இன்றி நாட்டு வெடி 1½ மூட்டை இருந்தது தெரிய வந்தது.  மேலும் இந்த நாட்டு வெடி சமீபத்தில் சிவனார்புரத்தில் பட்டாசு வெடிவிபத்தில் கைது செய்யப்பட்ட அரியாங்குப்பம் மணவெளி சேர்ந்த கோசலா மற்றும் சேகர் ஆகியோர் தயாரிக்கும் இடத்திலிருந்து கொண்டு வந்து வெள்ளைகண்ணு வீட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதே போல் முத்தம்மாள் என்பவர் வீட்டிலும் ஒரு மூட்டை காக்கி வெடி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வெடி வைத்திருந்த மூட்டைகளை கிராம நிர்வாக அலுவலர் பிரபாகர் பறிமுதல் செய்து, ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வெள்ளை கண்ணு, முத்தம்மாள், கோசலா, சேகர் ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சண்டைக்கு பயன்படுத்திய 2 சேவல்கள் பறிமுதல்.
    • வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள்கோவில் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ. செந்தில்குமார் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு சென்று போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது சுந்தரபெருமாள் கோவில் மணவாளம்பேட்டை தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் ஆதிகேசவன் (வயது 19), சுந்தர பெருமாள் கோவில் வெள்ளாளர் தெருவை சேர்ந்த செல்வகுமார் (19) ஆகிய 2 பேரும் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து சண்டைக்கு பயன்படுத்திய 2 சேவல்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் நாலுரோடு பகுதியில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. அதில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் குரவப்புலம் பகுதியை சேர்ந்த டிரைவர் அஜித்கு மார் (வயது27) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    • ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
    • தப்பியோடிய சத்தியசீலனை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியசீலன்.

    இவர் அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கஞ்சாநகரம் கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் தரங்கம்பாடி வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

    இதைத் தொடர்ந்து தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் விரைந்து வந்து சோதனை நடத்தியதில் அங்கு 310 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து குடிமை பொருள் வழங்கல் குற்றப் பிரிவு புலனாய்வு துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சத்தியசீலன் தப்பியோடி விட்டார் அவரை போலீசார் போலீசார் தேடி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட அரிசி மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள நுகர்வோர் வாணிபக் கழக கிடங்குக்கு கொண்டு செல்லப்படும் என வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார்.

    • மோட்டார் சைக்கிளில் 21 கிலோ கஞ்சாவை வாலிபர்கள் கடத்தினர்.
    • நேற்று கூடல்புதூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் கஞ்சா கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரநாயர் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில் செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று கூடல்புதூர் பகுதியில் போலீ சார் ரோந்து சென்றனர். கூடல்நகர், ெரயில் தண்டவாளம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்த இருவரிடம் விசாரித்தனர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அதில் 21 கிலோ கஞ்சா மற்றும் ஆயுதங்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அவர்கள் அருள் தாஸ்புரம், பிள்ளையார் கோவில் தெரு நாய்போடு கணேசன் மகன் ஹரிஹரன் (22), சோழவந்தான் அருகில் உள்ள ஊத்துக்குளி ரமேஷ் மகன் விஜயேந்திரன்(23) என்பது தெரிய வந்தது. இருவரையும் கூடல்புதூர் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை புது ஜெயில் ரோடு வெள்ளை அம்மன் கோவில் அருகே 30 கிராம் கஞ்சாவுடன் முரட்டன்பத்ரி ரஞ்சித்குமார் (25) என்பவரை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.

    • திருவெண்ணைநல்லூர் அருகே வீட்டில் பதுக்கிய சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • ஜெயா வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் விற்பனை செய்வதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே கன்னாரம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ெஜயா (வயது 47) இவரது கணவர் சிவக்குமார். இந்நிலையில் ஜெயா வீட்டின் பின்புறம் வைத்து சாராயம் விற்பனை செய்வதாக திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, போலீசார் வருவதை பார்த்து ெஜயா வீட்டிலிருந்து ஓடி விட்டார். இதனையடுத்து போலீசார் வீட்டில் மறைத்து வைத்திருந்த 10 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயாவை தேடி வருகின்றனர்.

    • கண்டமங்கலம் அருகே வேனில் கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டனர்.
    • அப்துல் சமது என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கண்டமங்கலம் அடுத்துள்ள சிறுவந்தாடு சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி சரக்கு வேனை சோதனை செய்தபோது அதில் 40 கிலோ எடையுள்ள 20 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து சரக்கு வேனுடன் பிடிபட்ட பெரம்பலுார் மாவட்டம் எலம்பாலுாரை சேர்ந்த சீனுவாசன் (வயது25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய திருச்சி மாவட்டம் ஆரியமங்கலத்தை சேர்ந்த அப்துல் சமது என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • சந்தேகத்தின் பேரில் நி்ன்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை.
    • அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், பேரளம் சுற்றுவட்டார பகுதிகளில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் நி்ன்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பேரளம் அருகே உள்ள துலார் காலனி தெருவை சேர்ந்த மாதவன் (வயது50) என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ×