என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வழக்குபதிவு"
தேனி:
போடி அருகே சில்லமரத்துப்பட்டி எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது40). இவர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது குமார்பொம்மு (39) என்ற வாலிபர் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனை கணேசன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று அவ்வழியே சென்ற கணேசனை, குமார்பொம்மு வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணேசனின் உடலை கீறினார்.
இதனை தடுக்க வந்த கணேசனின் தந்தை மல்லையனும் தாக்கப்பட்டார். 2 பேரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் பொம்முவை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த குருங்குளம் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 33). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பாலன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பாலன் அடியாட்களுடன் வல்லத்தில் வசிக்கும் ராஜாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ராஜாவின் சகோதரி சந்திரா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து பாலன் தரப்பினர் சந்திராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதையடுத்து ஆத்திரமடைந்த பாலன் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து சந்திராவை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரது வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.
இந்த தாக்குதலில் சந்திரா பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் சந்திராவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜா வல்லம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பாலன், விஜயா, குமார் , குப்பன் மற்றும் சிங்கா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கீழ ஆறுமுககட்டளையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் செந்தில்குமார் (வயது 33). இவர் மீது வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாரிடம் பரிந்துரை செய்தார். அதனை பரிசீலனை செய்த கலெக்டர் சுரேஷ்குமார், செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் செந்தில்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டி குளத்துப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகள் பவித்ரா (வயது 15). காமாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை.
அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் வனம் இது குறித்து ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் அழகாபுரி காலனியைச் சேர்ந்த சிகாமணி மகன் விஜய் (22) என்பவர்தான் தனது மகளை கடத்திச் சென்றுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும் அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.
மதுரை:
அவனியாபுரம் தந்தை பெரியார் நகர் ஜெகதீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் பிரவீன்குமார் (வயது22). இவர் 17 வயது பிளஸ்-2 மாணவியுடன் நெருங்கி பழகி உள்ளார்.
மேலும் மாணவிக்கு திருமண ஆசை காட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.
இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாணவி கேட்டார். ஆனால் பிரவீன் குமார் மறுத்து விட்டார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை ஏமாற்றிய பிரவீன்குமாரை தேடி வருகின்றனர்.
இதேபோல் மதுரை எஸ்.ஆலங்குளம் குலமங்கலம் மெயின்ரோடு அன்பு நகரைச் சேர்ந்தவர் ராஜபூபதி, கூலி தொழிலாளி (35). இவருக்கும், 17 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தினமும் கல்லூரிக்கு சென்றுவரும்போது அவர்களிடையே நெருக்கம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து மாணவியை தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தண்டான்தோப்பு பகுதிக்கு ராஜபூபதி அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார்.
இதுகுறித்து ராஜபூபதியிடம் தெரிவித்தபோது அவரும், உறவினர்கள் செல்வராணி, முருகேச பாண்டியன், வளர்மதி ஆகியோரும் கருவை கலைக்கும்படி கூறி உள்ளனர். மேலும் அதற்கான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபூபதி மற்றும் முருகேசபாண்டியனை கைது செய்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன் (வயது38). காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் கம்பத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரிடம் ரூ.1.20 லட்சம் வாரவட்டிக்கு கடன் வாங்கினார்.
இதற்காக வட்டி மட்டும் ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் சரவணன் என்பவரிடம் ரூ.50 ஆயிரம், ரவியிடம் ரூ.15 ஆயிரம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த கார்த்திக்கிடம் ரூ.20 ஆயிரம், ராமராஜிடம் ரூ.50 ஆயிரம், அணைப்பட்டி குட்டியிடம் ரூ.20 ஆயிரம், சிவாவிடம் ரூ.80 ஆயிரம், குணசேகரனிடம் ரூ.60 ஆயிரம், சுருளிபட்டியை சேர்ந்த இளம்பருதியிடம் ரூ.25 ஆயிரம், கே.எம்.பட்டியை சேர்ந்த ஜக்கப்பனிடம் ரூ.10 ஆயிரம், நல்லதம்பியிடம் ரூ.20 ஆயிரம், முருகனிடம் ரூ.20 ஆயிரம், மணிகண்டனிடம் ரூ.10 ஆயிரம் என 13 பேரிடம் கடன் வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.
இதனால் அவருக்கு தொழிலில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் கடன் கொடுத்தவர்கள் சென்றாயனிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி உள்ளனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அவர் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்த ராயப்பன்பட்டி போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் கந்துவட்டி கேட்டு மிரட்டிய 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே விஸ்வாசபுரத்தை சேர்ந்தவர் ஆண்டவர். இவரது மகன் ராஜா(வயது26). இவருக்கும் உப்புக்கோட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
18 வயது பூர்த்தியாகாத சிறுமியை திருமணம் செய்ததாக தேனி குழந்தைநலக்குழு தலைவர் சுரேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ்குமார் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதற்கு இருவீட்டாரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்படி சிறுமியை திருமணம் செய்த ராஜா, அவரது தந்தை ஆண்டவர், தாய் குருவம்மாள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்