search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர்"

    திருக்கனூர் அருகே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த மனைவியை கணவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாத வேதனையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு புதுநகரை சேர்ந்தவர் நடராஜன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி விமலா (வயது 48). இவர்களுக்கு ஜிப்மரில் நர்சாக பணிபுரிந்து வரும் அனிதா உள்பட 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி விட்டது.

    இதற்கிடையே விமலாவுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதுபோல் சம்பவத்தன்றும் விமலாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும்படி நடராஜனிடம் கூறினார். ஆனால், விமலாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் நடராஜன் வெளியே சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த விமலா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த எலிமருந்தை (வி‌ஷம்) தின்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த நடராஜன் அங்கு மனைவி வி‌ஷம் தின்று மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் ஜிப்மரில் நர்சாக பணிபுரிந்து வரும் தனது மகள் அனிதாவுக்கு தகவல் தெரிவித்து விட்டு விமலாவை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விமலா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆண்டிப்பட்டி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    தேனி:

    ஆண்டிப்பட்டி தாலுகா, தெற்கு மூணான்டிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 26) இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தவசி என்பவருடைய மகள் பவித்ரா என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணமான நாள் முதல் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 2.6.16-ம் தேதி அன்று குடும்ப பிரச்சனை காரணமாக பவித்ரா தனது தாய் வீட்டிற்கு வந்து மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு போராடிய நிலையில் பவித்ராவை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த பவித்ரா கடந்த 5.6.16-ம் தேதி அன்று சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

    இது தொடர்பாக பவித்ராவின் தாய் கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் ஜெயக்குமார் மீது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கு விசாரணை முடிந்து மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி திலகம் தீர்ப்பு கூறினார்.

    தீர்ப்பில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூபாய் 50,000 அபராதமும் விதித்தார். இதில் அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ராஜேஸ்வரி ஆஜரானார். #tamilnews
    கணவரை மீட்டு தர வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் மலேசிய பெண் கோரிக்கை மனு அளித்தார்.
    திருவாரூர்:

    கணவனை மீட்டு தர வலியுறுத்தி மலேசியாவை சேர்ந்த துர்காதேவி என்பவர் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மலேசியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறேன். திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனியார் நிறுவன டிரைவராக சிங்கப்பூரில் பணியாற்றினார். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான பெருகவாழ்ந்தானுக்கு வந்த ராஜ்குமாருக்கு அவரது குடும்பத்தினர் வேறொரு பெண்ணுடன் நேற்று முன்தினம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்வதாக தகவல் அறிந்தேன்.

    இதனையடுத்து சிங்கப்பூரில் இருந்து ஆன்லைன் மூலம் திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் அளித்தேன். பின்னர் மலேசியாவில் இருந்து புறபட்டு நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்துக்கு போலீசாருடன் நேரில் சென்றேன். ஆனால் அங்கு ராஜ்குமார் இல்லை. அவரது உறவினர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் ராஜ்குமாருக்கும், வேறொரு பெண்ணுக்கும் திருமணம் நடந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே எனது கணவர் ராஜ்குமாரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், நீதிமன்றத்தின் மூலம் அணுகும்படி துர்கா தேவிக்கு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து இலவச சட்ட உதவி மையத்தை நாடுவதற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். தற்போது இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்்வதற்கான ஏற்பாடுகளை துர்காதேவி ரமீஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews 
    தொண்டாமுத்தூரில் கணவர் 10ம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ளதால் மனமுடைந்த பெண் என்ஜினீயர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை சுண்ட பாளையம் கலிக்கநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் நவீன்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சவுந்தர்யா (23). என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர்களுக்கு கடந்த 14.11.2018 அன்று திருமணம் நடந்தது. தலை பொங்கலுக்காக சவுந்தர்யா தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    நேற்று மாலை வீட்டில் சவுந்தர்யா மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு டி.எஸ்.பி. வேல்முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    என்ஜினீயரான சவுந்தர்யாவுக்கு தனது கணவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளது வேதனையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    இதேபோல் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் மாசாணம். டிரைவர். இவரது மனைவி தீபிகா(25). இவர்கள் காதலித்து கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். சம்பவத்தன்று தீபிகா வீட்டில் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் டி.எஸ்.பி. மணி விசாரணை நடத்தினார். குடும்ப பிரச்சினை காரமணாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணமாகி 1½ வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    கொரடாச்சேரி அருகே தாய் வீட்டு பொங்கல் சீர்வரிசையை கணவர் ஏற்காததால் மனமுடைந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரியை அடுத்த செட்டி சிமிலியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 26). சமையல் செய்யும் தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (21). இவர்களுக்கு 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி உள்ளது. குழந்தை இல்லை.

    இந்த நிலையில் காமராஜ் பெற்றோர்களுக்கும், கவுசல்யா பெற்றோர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி கவுசல்யாவின் தாய் ஜெயந்தி சீர்வரிசை பொருட்களை வாங்கி சென்று மகளிடம் கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த காமராஜ் மனைவியின் தாய் வழங்கிய சீர்வரிசை பொருட்களை வேண்டாம் என்று பிடிவாதம் செய்து அந்த பொருட்களை எடுத்து சென்று அதே பகுதியில் உள்ள மாமியார் வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டார். இது கவுசல்யாவுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. தாய்வீட்டு சீர்வரிசையை கணவர் வாங்க மறுத்துவிட்டாரே என்று மனமுடைந்தார். 

    இதைத்தொடர்ந்து அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி ஜெயந்தி கொராடச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமான 1 1/2 ஆண்டுகளில் கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால் இது தொடர்பாக திருவாரூர் ஆர்.டி.ஓ. முருகதாசும் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் கொரடாச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கூடுதல் வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.#DowryTorture
    விருதுநகர்:

    திருத்தங்கலை சேர்ந்த கணேசன் மகள் லாவண்யா (வயது 23)வுக்கும், வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் லாவண்யா புகார் செய்தார்.

    எனக்கு திருமணத்தின் போது 30 பவுன் நகையும், சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் கூடுதலாக 20 பவுன் நகை மற்றும் ரூ. 10 லட்சம் கேட்டு கணவர் ராஜமுருகன், அவரது பெற்றோர் ஹரிராம்- விஜயா, கணவரின் சகோதரி மகாலட்சுமி ஆகியோர் சித்ரவதை செய்தனர்.

    மேலும், சில நாட்களுக்கு முன்பு கணவர் ராஜமுருகன் தாலியை பறித்துக்கொண்டு என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ராஜமுருகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #DowryTorture
    தங்கையை கணவர் கடத்திச் சென்றதால் வேதனையடைந்த மனைவி 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றார்.

    பழனி:

    பழனி அருகே உள்ள கோதைமங்களத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). அ.தி.மு.கவைச் சேர்ந்த இவர் பழனி மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக உள்ளார். அவரது மனைவி தங்கவில்லம்மாள் (30). இவர்களுக்கு ஜெயராஜ் (5), அயன் சேவுககுமார் (4) ஆகிய மகன்கள் உள்ளனர்.

    தங்கவில்லம்மாளின் தங்கை சத்யா (25). இவருக்கு ராமமூர்த்தி என்பவருடன் திருமணம் ஆகி தனியாக வசித்து வந்தார். சத்யாவுக்கும் இளைராஜாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

    இது குறித்து தங்க வில்லம்மாள் தனது கணவரை கண்டித்தார். அதற்கு இளையராஜா தகாத உறவு வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று கோர்ட்டிலேயே சொல்லப்பட்டு விட்டது என கூறி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று இளையராஜா யாருக்கும் தெரியாமல் சத்யாவை கடத்திச் சென்று விட்டார். இதனால் வேதனையடைந்த தங்கவில்லம்மாள் தனது 2 குழந்தைகளுக்கும் சாணிபவுடரை கொடுத்து தானும் அதனை குடித்தார். 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    தனது மனைவி வேறு நபருடன் சென்றதால் சத்யாவின் கணவர் ராமமூர்த்தியும் வி‌ஷம் குடித்து பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். வி‌ஷம் குடித்த 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஒரே நேரத்தில் 4 பேரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காட்டுமன்னார்கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மருமகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மகள் சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர் போலீசில் புகார் செய்ததால் கணவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் செல்வகுமார் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவருக்கும், நாகை மாவட்டம் வக்காரமாரி கிராமத்தை சேர்ந்த அனுசுயா (23) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அனுசுயா எம்.ஏ. படித்துள்ளார். தற்போது அனுசுயா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கூடுதல் வரதட்சணை கேட்டதால் அனுசுயா கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் இருவீட்டினரும் சமாதானம் பேசி செல்வகுமாருடன் அனுசுயாவை அனுப்பி வைத்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தியும், அவரது மனைவியும் சிகிச்சைக்காக சென்னைக்கு சென்று விட்டனர். வீட்டில் அனுசுயாவும், செல்வகுமாரும் இருந்தனர்.

    அப்போது கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரவில் வீட்டில் உள்ள ஒரு அறையில் அனுசுயா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து செல்வகுமார் தனது தந்தை மூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். உடனே மூர்த்தி, அனுசுயாவின் பெற்றோருக்கு இது குறித்து கூறியுள்ளார்.

    அனுசுயா இறந்த தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பழஞ்சநல்லூர் கிராமத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு வீட்டில் அனுசுயா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதனர்.

    இதற்கிடையே இந்த தகவல் காட்டுமன்னார் கோவில் போலீசுக்கு தெரிந்தது. சேத்தியாத் தோப்பு துணை சூப்பிரண்டு ஜவகர்லால், காட்டு மன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அனுசுயாவின் உடலை கைப்பற்றி காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் செல்வகுமாரை தேடினர். அவரை காணவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அனுசுயாவின் பெற்றோர் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதனை தொடர்ந்து அனுசுயாவின் பெற்றோர், உறவினர்கள் காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு சென்றனர்.

    அவர்கள் அனுசுயாவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். இந்த பிரச்சினையில் போலீசார் ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்துகின்றனர். எனவே, அனுசுயாவின் சாவுக்கு காரணமான அவரது கணவர் செல்வகுமாரை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் அனுசுயாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அனுசுயாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் தலைமறைவாகி விட்ட அனுசுயாவின் கணவர் செல்வகுமாரை பிடிக்க சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் உத்தரவின் பேரில் காட்டுமன்னார் கோவில் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாகி விட்ட செல்வகுமாரை தேடிவருகின்றனர்.

    செல்வகுமார் பிடிபட்டால்தான் அனுசுயாவின் சாவில் உள்ள உண்மை நிலை தெரியவரும்.

    போடியில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    தேனி:

    போடி ஆர்.ஐ.ஆபிஸ் ரோட்டை சேர்ந்தவர் சிவபாலன்(வயது39). இவரது மனைவி கலைவாணி(31). இவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 15 பவுன்நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. 5 வயது குழந்தை உள்ளது.

    சிவபாலன் சவுதிஅரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய சிவபாலன் கலைவாணியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளார். கலைவாணியின் நகைகளை பறித்துக்கொண்டு மேலும் ரூ.5 லட்சம் பணம் வாங்கி வந்தால்தான் குடும்பம் நடத்த முடியும் எனக்கூறி அவரை தாய்வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

    இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலைவாணி போடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கொடுமைப்படுத்திய சிவபாலன், அவரது சகோதரன் சிவராமகாசி, மற்றும் உறவினர்கள் ஜெயகீதா, ஜெயலட்சுமி, மாலா, பாஸ்கரன் ஆகிய 6 பேர்மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கள்ளக்காதலியுடன் சேர்ந்து கணவர் கொடுமைப்படுத்துவதாக மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

    மதுரை:

    மதுரை திருமங்கலம் அருகேயுள்ள மறவன்குளம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 26). இவருக்கும் உச்சப்பட்டியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது மணமகள் வீட்டில் இருந்து 10 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்தனர். இந்த நிலையில் குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    அதன்பிறகு குமார் கள்ளக்காதலி மற்றும் உறவினர்களான ஜெயராமன், அவரது மனைவி தேவி ஆகியோருடன் சேர்ந்து நந்தினியை கொடுமைப்படுத்தினார்.

    இது தொடர்பாக நந்தினி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    சாத்தூரில் கூடுதல் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்ததாக கணவர் மற்றும் உறவினர்கள் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.
    விருதுநகர்:

    சாத்தூர் நடுச்சூரங்குடியை சேர்ந்த ஜெயச்சந்திரகுமார் (வயது 27) என்பவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த ஜெயலலிதா (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

    அதன்பிறகு ஜெயச்சந்திரகுமார் வேலைக்காக செங்கல்பட்டு சென்று விட்டார். இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மதுரை ஐகோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தாக்கல் செய்தார்.

    அதில் திருமணத்தின் போது 18 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம், ரூ. 1 லட்சம் மதிப்பிலான சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், வேலைக்காக செங்கல்பட்டு சென்ற கணவருக்கு அங்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் தன்னிடம் பேச மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் உறவினர்கள் மூலம் பேசி, கூடுதலாக நகை, பணம் கொடுத்த பிறகும் ஜெயச்சந்திரகுமார் என்னை புறந்தள்ளுகிறார். இது பற்றி மாமனார் குருசாமி, மாமியார் அந்தோணியம்மாள், உறவினர்கள் வள்ளியம்மாள், கணேசன் ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் கூடுதல் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்வதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜெயச்சந்திரகுமார் அவரது தந்தை குருசாமி, தாயார் அந்தோணியம்மாள், உறவினர்கள் வள்ளியம்மாள், கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சாத்தூர் நள்ளியை சேர்ந்த கற்பகவள்ளி (25) என்பவர், சாத்தூர் மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும் க.ரெட்டியபட்டியை சேர்ந்த சங்கரகுமார் (29) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. அப்போது நகை- பணம் வழங்கப்பட்டது.

    திருமணத்திற்கு பின்னர் வேலைக்கு எதுவும் கணவர் செல்லவில்லை. இந்த நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். சங்கரகுமார், அவரது தந்தை கணேசன், தாயார் முருகேஸ்வரி, உறவினர் மலர் விழி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #tamilnews
    வியாசர்பாடி அருகே தற்கொலை செய்து கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்து சென்ற கணவனை மீட்டு தர கோரி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
    பெரம்பூர்:

    வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்தவர் இம்ஜியாஸ். இவருடைய மனைவி ஆயிஷா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் வேலை பார்த்த இம்ஜியாஸ் சில மாதங்களாக பணம் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

    சமீபத்தில் ஊர் திரும்பிய இம்ஜியாசுக்கும் அவருடைய மனைவி ஆயிஷாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் இம்ஜியாஸ், ‘நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. என்னை மன்னித்துவிடு. இனி வரமாட்டேன். இறந்து விடுவேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்று விட்டார்.

    இதுகுறித்து வியாசர்பாடி போலீசில் ஆயிஷா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இம்ஜியாசை தேடி வருகிறார்கள். #tamilnews
    ×