என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 104469"
ஆலந்தூர்:
மடிப்பாக்கத்தை அடுத்த கீழ்கட்டளை காந்திநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது37). ஆட்டோ டிரைவர். இவர் ஆட்டோவில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவரது அட்டோவை நிறுத்த போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கண்ணனை போலீசார் கைது செய்தனர்.
நெகமம்:
நெகமம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நெகமம் என்.சந்திரபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியனை (வயது 66) கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கோவை வெள்ளலூர் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த, அதேபகுதி கோன வாய்க்கால் பாளையம் போயர் தெருவை சேர்ந்த டேவிட் ராஜாவை (வயது 23) போதனூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கஞ்சா கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் கஞ்சா கும்பலை தீவிரமாக கண்காணித்து வந்தனர். களியக்காவிளை பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இதேப்போல் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று புதுக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பைங்குளம் சந்திப்பு பகுதியில் வரும்போது அங்கு 4 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் பத்மநாபபுரத்தை சேர்ந்த அஜித் (23), அஜிமல் (19), நிசாந்த் (21), ராமபிரகாஷ் (19) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா வைத்திருந்த 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கஞ்சா யாரிடம் வாங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் குன்றுவிளை சந்திப்பில் வரும்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்தார்.
போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த பையில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை பேரூர் அருகே உள்ள காலாம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே சில மர்மநபர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பச்சாபாளையத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 31), தீத்திபாளையத்தை சேர்ந்த சுஜித்குமார் (30) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, ரூ. 1,200 பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
போரூர்:
அமைந்தகரையை அடுத்த டி.பி. சத்திரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் கஞ்சா விற்பனை மற்றும் சப்ளை செய்யப்பட்டு வருவதாக கீழ்ப்பாக்கம் துனை கமிஷனர் ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து உதவி கமிஷனர் ஜெகதீசன் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது அங்கு உள்ள குடியிருப்பின் மொட்டை மாடியில் சிறிய பொட்டலங்கள் போட்டு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்கிற குணசேகரன், கருப்பு என்கிற ஞானசேகரன், தமிழரசன், செந்தில்குமார், வினோத்குமார், கவணன், வினோத், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கீர்த்தி வாசன், சரத்குமார் உள்ளிட்ட 9 பேரையும் மடக்கி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ஒரு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்
மேலும் டிபி சத்திரம் பகுதியில் உள்ள வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக புகுந்து தொடர்ந்து சோதனை நடத்தினர்.
ஈரோடு:
பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாசம் தலைமையிலான போலீசார் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். அந்த நபரை சோதனை செய்ததில் அவரது இடுப்பில் பிளாஸ்டிக் கவரில் 225 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில் அவர் பர்கூர் கிராமம், எலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என தெரியவந்தது கர்நாடக மாநிலம் சென்று கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை:
மதுரை விளாங்குடி மந்தையம்மன் கோவில் தெருவில் சிலர் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அந்தப்பகுதிக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தொடர்ந்து போலீசார் அந்தப்பகுதியைச் சோதனையிட்டனர்.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 11 1/2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து சிக்கந்தர் சாவடி குபேந்திரன் (வயது 42), அய்யங்கோட்டை பாலமுருகன் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போரூர்:
அசோக் நகர் அம்பேத்கர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் அந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த உசேன் என்கிற ஜாகிர் உசேன் என்பவரை கைது செய்த போலீசார் வீட்டில் இருந்த 3 ½ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய கூட்டாளிகளான தீன் முகமது மற்றும் அவரது மனைவி சுந்தரி இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து அதை சிறிய பொட்டலங்கள் மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மாதவரம் பஸ் நிலைய நுழைவு வாயிலில் அசார் என்ற அசாருதீன் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். கேரளாவை சேர்ந்த இவரது பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. விசாரணையில் இந்த கஞ்சா ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து கேரளாவிற்கு கொண்டு செல்வதற்காக சென்னை மாதவரம் பஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தது தெரியவந்தது.
புதுவண்ணாரப்பேட்டை காமராஜர் சாலையிலுள்ள அரசு பாலிடெக்னிக் அருகில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பிரசாந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றத்தை சேர்ந்த அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள், 500 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள், மற்றும் கஞ்சா ஆகியவை கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர் 24 நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தாலும், இன்று வரை இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்துவது நடைபெற்று தான் வருகிறது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை கடற்கரையில் இன்று 13 மூட்டைகள் கரை ஒதுங்கி இருந்தன.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவ கிராம மக்கள், இதுபற்றி கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கடற்கரையில் ஒதுங்கிய மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. 13 மூட்டைகளிலும் தலா 2 கிலோ வீதம் மொத்தம் 26 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதேபோல் பெரிய குத்தகை கடற்கரையிலும் இன்று தலா 2 கிலோ வீதம் 22 கிலோ கஞ்சா 11 மூட்டைகள் இருந்தன. இதையும் கடலோர காவல் படையினர் கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள். இதன் மதிப்பு சர்வசேத சந்தையில் ரூ.2 லட்சம் ஆகும்.
வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற கும்பல் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற போது மர்ம கும்பல் இதை விட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
கடற்கரையில் கஞ்சா மூட்டைகள் கிடந்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலூர்:
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் வீதி வீதியாகச் சென்று போர்வைகள் விற்று வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த போர்வைகள் குளிரை தாங்கும் என அவர்கள் கூறுவதை நம்பி ஏராளமானோர் வாங்கி வருகின்றனர்.
போர்வை வியாபாரத்தை பயன்படுத்தி போதைப் பொருளான கஞ்சாவை சிலர் விற்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இந்த நிலையில் மேலூர் சத்தியபுரம் 4 வழிச்சாலை பகுதியில் போலீஸ்காரர்கள் கோபால் மற்றும் முத்து ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக போர்வைகளுடன் நின்றவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் மேலூர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் அவர் வைத்திருந்த போர்வைகளை சோதனை செய்தபோது அதற்குள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போர்வைக்குள் இருந்த 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை கொண்டு வந்தவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், அவரது பெயர் பாண்டி (வயது 50) என்பதும், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இவர் ஒரிசாவிற்கு சென்று போர்வை வாங்குவது போல் வாங்கிவந்து அதனுடன் கஞ்சாவையும் விற்று வந்துள்ளார். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி மற்றும் போலீசார் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்ற 3 பெண்களிடம் சோதனை நடத்தினர். அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் லட்சுமி, வனிதா, கன்னியம்மாள் என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்