என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 104872"
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல இடங்களிலும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2-ம் கட்டமாக கடந்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின்போது, தமிழகத்தில் மட்டும் 227 கோடியே 95 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. 3,113 கிலோ தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் மதுபானங்கள், போதை பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.950 கோடியே 12 லட்சம் ஆகும்.
3-ம் கட்ட தேர்தல் நடைபெற்ற குஜராத்தில் 552 கோடியே 72 லட்சம் பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இங்கு பணம் 9 லட்சத்து 53 ஆயிரம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. மதுபானங்கள் மற்றும் பிற போதை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.525 கோடி ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக தலைநகர் டெல்லியில் ரூ.426 கோடி மதிப்பிலும், பஞ்சாபில் ரூ.284 கோடி மதிப்பிலும், ஆந்திராவில் ரூ.229 கோடி மதிப்பிலும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாடு முழுவதும் மொத்தம் 839 கோடியே 26 லட்சம் ரொக்கப்பணமும், ரூ.293 கோடியே 60 லட்சம் மதிப்புக்கு மதுபானங்கள், ரூ.1,269 கோடியே 63 லட்சம் மதிப்புக்கு போதை பொருட்கள், ரூ.986 கோடியே 73 லட்சம் மதிப்புக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள், ரூ.58 கோடியே 53 லட்சம் மதிப்புக்கு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றியதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 ஆயிரத்து 447 கோடியே 74 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களில் குறிப்பிட்ட அளவு, சம்பந்தப்பட்டவர்களால் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டு திரும்ப பெறப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே சத்தமில்லாமல் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னை மாநகர் முழுவதும் 323 இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை பதட்டமான இடங்கள் என்று அறிவித்து அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். #LokSabhaElections2019
அப்போது லாரியை முற்றுகையிட்ட பொது மக்கள் கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைக்க முற்பட்டனர். இதனால் அந்த இடத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல் துறையின்ர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களை களைந்து செல்லுமாறு அறிவித்தனர்.
பொது மக்கள் அந்த இடத்தை விட்டு செல்ல மறுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு தேர்தல் பறக்கும் படையினர் வந்து லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரிடம் விசரணை செய்து வருகின்றனர். அப்போது லாரியின் ஓட்டுனர் லாரியில் டீ தூள் இருப்பதாக தெரிவித்துள்ள நிலையல் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இடத்திலேயே பூட்டை திறக்க வேண்டும் என தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் இங்கு இதனை திறப்பது சட்டப்பிரச்சனை ஏற்படும் என்று தெரிவித்த அதிகாரிகள் லாரியை ஆட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து சென்று திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் பொது மக்கள் லாரியை சூழ்ந்து கொண்டு அவ்விடம் விட்டு செல்ல மறுத்துவரும் நிலையில் கோவை ஆத்துப்பாலம் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கண்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. பொதுமக்களை கலைந்து செல்லுமாறு உதவி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆலந்தூர:
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூற செல்கிறேன்.
பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க அழுத்தமான அரசு வேண்டும். இதனை கட்டுப்படுத்த காவல் துறைக்கு முழுமையான அதிகாரம் அளிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் மக்களை சந்திக்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.
தீர்ப்பு என்பது மக்கள் கையில் தான் உள்ளது. வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பது என்பது நல்ல விஷயம் எனக்கு கூட ஆரத்தி எடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பணம் கொடுப்பது தவறு.
நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் பெண்களுக்கென்று முழுமையான தனி காவல் நிலையம் செயல்படும். ஏற்கனவே உழவர் சந்தை என்று ஒன்று உள்ளது. ஆனால் அது முழுமையாக செயல்படவில்லை. மற்ற கட்சிகள் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்வோம்.அதைவிட்டுவிட மாட்டோம்.
தேர்தல் நேரத்தில் பி.எம். மோடி படம் வெளியிட காங்கிரஸ் தடை கேட்டுள்ளது. இது சரியானது தான். தேர்தலில் அந்த கட்சிக்கு இது விளம்பரம் தான்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHassan
பொள்ளாச்சி திலகர் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவர் பொள்ளாச்சி அடுத்துள்ள கெடிமேடு பகுதியில் தர்பூசணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவர் பொள்ளாச்சி ரெயில்வே காலனி பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் செல்வராஜை தாக்கிவிட்டு அவரிடமிருந்த ரூ.620 பணம் கையில் போட்டிருந்த 5 கிராம் மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.
நகை, பணத்தை பறிகொடுத்து விட்டு வீட்டுக்கு சென்ற செல்வராஜ் தனது மகன் கண்ணனிடம் நடந்த சம்பவத்தை கூற கண்ணன் தனது நண்பர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்துக் கொண்டு ரெயில்வே காலனி பகுதிக்கு சென்றார். ஆனால் அங்கு வழிப்பறி கொள்ளையர்கள் இல்லை. இதையடுத்து நேதாஜி ரோடு மார்க்கெட் பகுதிக்கு சென்றபோது அங்கு 3 பேர் நின்று கொண்டு இருந்தனர். செல்வராஜ் அவர்களை அடையாளம் காட்டவே பொதுமக்கள் அவர்கள் 3 பேரையும் துரத்திப் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது 2 பேர் மட்டும் சிக்கி கொண்டனர். அவர்களை பொள்ளாச்சி மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் பொள்ளாச்சி செரிப் காலனியை சேர்ந்த முகமது ஷேக் பரீத் (23), கண்ணப்பன் நகரை சேர்ந்த சுலைமான் ( 27 )என்பது தெரியவந்தது . அவர்களை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடியவர் பொள்ளாச்சி அழகாபுரி வீதியை சேர்ந்த ரபிக் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
இலங்கையில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னையை சேர்ந்த ரஷீத்கான் (28) என்ற பயணியிடம் சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரது சூட்கேசில் சோதனை நடத்தினார்கள். அதில் 2 கிலோ 50 கிராம் தங்கநகைகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த முகமது என்ற பயணியின் நடவடிக்கையிலும் சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.
அப்போது அவர் உள்ளாடையில் 150 கிராம் தங்க கட்டியை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.
அதே விமானம் அதிகாலை 4.15 மணிக்கு மீண்டும் இலங்கை புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யவந்த சென்னையை சேர்ந்த ஆஷிப்கான் (38) என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அவரிடம் அமெரிக்க டாலர்கள் கட்டுக்கட்டாக இருந்தன. இதன் இந்திய மதிப்பு ரூ.7½ லட்சம் ஆகும். அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தனது பையில் ரூ.1 லட்சம் ரொக்கம், தங்க மோதிரம், செல்போன் உள்ளிட்டவை இருந்ததாக சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து திமுக எம்எல்ஏ சக்கரபாணி அளித்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்துகின்றனர். #DMK #Sakkarapani
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகரில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஜோதி பாசு. இவரது மகள் சரிதா பாரதி (வயது 19). இவர், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி., இறுதியாண்டு படித்து வந்தார்.
நேற்று வீட்டில் இருந்த சரிதா பாரதி, திடீரென மாயமானார். இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கத்துடன் சரிதா பாரதி மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஜோதிபாசு திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்துடன் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அன்புநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (35). லாரி அதிபரான இவர் குடும்பத்துடன் கடந்த 24 ந் தேதி திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
நேற்றிரவு சிவக்குமார் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த நகை, பணம் மற்றும் எல்.டி.டிவியை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
மேலும் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் மோட்டார் சைக்கிளும் திருட்டு போனது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை. சிவக்குமார் ஊரில் இல்லாத சமயம் பார்த்த மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதனால் உள்ளூரை சேர்ந்த கொள்ளையர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது.
இதுகுறித்து சிவக்குமார் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியை அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் செல்லும் வழியில் நெம்பர்1 டோல் கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது.
இங்கு திருச்சி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். அத்துடன் விவசாயிகளும், பொதுமக்களும் நகைகளை அடகு வைத்துள்ளனர்.
அத்துடன் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் தங்களது நகைகளை சேப்டி லாக்கர் எனும் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்துள்ளனர். தினந்தோறும் கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடைபெறும் இந்த வங்கியில் நேற்று நள்ளிரவில் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
அப்போது வங்கியின் பல்வேறு பகுதிகளில் அடையாளங்களை மாற்றும் அளவிற்கு பொருட்கள் சின்னாபின்னமாகி கிடந்தன. அங்கு கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை ஊழியர்கள் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது வங்கியின் தனி அறையில் இருந்த வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது. மேலும் அதன் அருகிலேயே லாக்கர்களை உடைக்க பயன்படுத்திய கியாஸ் வெல்டிங் மெஷின், சிலிண்டர், சுத்தியல், கடப்பாரை உள்ளிட்டவை கிடந்தன.
இதில் வாடிக்கையாளர்களின் லாக்கர்களில் இருந்த ரூ.5 கோடி பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2 நாட்கள் வங்கிக்கு விடுமுறை என்பதால் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
தகவல் அறிந்த மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் வங்கி முழுவதும் ஆய்வு செய்தனர்.
வங்கியின் பிரதான முன் வாசலில் இருந்த பூட்டை உடைக்க கொள்ளையர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அது தோல்வி அடைந்ததால் பின்புறம் உள்ள சுவரில் துளைபோட்டு கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பல நாட்களாக திட்டம் தீட்டிய பின்னரே இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
வங்கியில் கணக்கு வைத்துள்ள தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்களின் செயல்பாடுகள், அவர்கள் வங்கி லாக்கர்களில் என்னென்ன பொருட்கள் வைத்துள்ளனர் என்பதை அறிந்து வைத்துள்ளனர்.
அதனால்தான் குறிப்பிட்ட 5 வாடிக்கையாளர்களின் லாக்கர்களை உடைத்துள்ளனர். குறிப்பாக வங்கி லாக்கர்களுக்கான 2 சாவிகளில் ஒன்று வாடிக்கையாளரிடமும், மற்றொன்று வங்கி நிர்வாகத்திடமும் இருக்கும். லாக்கரில் இருக்கும் நகை குறித்த விபரம் வேறு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது குறிப்பிட்ட 5 லாக்கர்களை மட்டும் உடைக்க காரணம் என்பது புதிராகவே உள்ளது.
மேலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வங்கியில் சுழற்சி முறையில் காவல் பணியிலும் செக்யூரிட்டிகள் பணியில் இருக்கிறார்கள். அதனை முழுமையாக கணித்த கொள்ளையர்கள் அவர்கள் கண்ணில் படாதவாறு உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கொள்ளை நடந்த வங்கிக்கு உடனடியாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அத்துடன் இன்று காலை முதல் வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. வங்கி அதிகாரிகள், ஊழியர்களிடம் முதல்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கினர். #BankRobbery #LockersBrakes
திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள தேவத்தூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் நாட்ராயன். கூலி தொழிலாளி. அவரது மனைவி குப்பாத்தாள் . இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு கூலி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் ஏறி குதித்தனர். பூட்டியிருந்த பூட்டை உடைத்து, வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
மாலை வீட்டிற்கு வந்த குப்பாத்தாள் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை- பணம் மாயமானது கண்டு பதறினார்.
இதுகுறித்து உடனே அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அம்பிளிக்கை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நத்தம் அண்ணாநகரை சேந்தவர் வேலவன் (வயது45). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தைப்பொங்கலை முன்னிட்டு தனது குடும்பத்துடன் குலதெய்வ சாமி கும்பிட சென்று விட்டார். இதனை நோட்டமிட்டு மர்மநபர்கள் இவரது வீட்டிற்குள் புகுந்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைக்க முயன்றனர். ஆனால் அது முடியாமல் போகவே மாடியில் உள்ள அறைக்கு சென்றனர். அங்குள்ள பீரோவை உடைத்து அதில் இருந்து 17½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.
மேலும் அதே பகுதியில் உள்ள புகழேந்தி என்பவரது வீட்டிற்குள்ளும் நுழைந்து கொள்ளையடிக்க முயன்றனர். பீரோ லாக்கரை தூக்கி சென்று வெளியில் வைத்து உடைத்து பார்த்ததில் அதில் எதுவும் சிக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.
ஊருக்கு சென்று திரும்பிய வேலவன் தனது மாடி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் நகை, பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. வினோத் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் லிண்டா வரவழைக்கப்பட்டது. மேலும் தடையவியல் நிபுணர்கள் வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்