என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 107163"
- கரூர் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
- அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
கரூர்:
அமாவாசையை ஒட்டி கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதேபோல், வேலாயுதம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
- திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
- குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு சிறப்பு அன்னப்படையிலிட்டு தம்பதிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அடுத்துள்ள காருகுடி கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
திருமண தடை போக்குவது, குழந்தை பாக்கியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்ட இவ்வாலயத்தில் அமாவா சையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குழந்தை வரம் வேண்டி அம்மனுக்கு சிறப்பு அன்னப்படையிலிட்டு தம்பதிகளுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
முன்னதாக மகா மாரியம்மன், ஸ்ரீ நாக விநாயகர், ஸ்ரீ நாகம்மன், ஸ்ரீ மதுரை வீரன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால்,பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
- சனி பகவானுக்கு அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
- சனி பகவான் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி ஆகிய இரு மனைவியுடன் அருள்பாலிக்கிறார்.
சுவாமிமலை:
கும்பகோணம் அருகே திருநறையூரில் பருவதவர்த்தினி சமேத ராமநாதசாமி கோவில் உள்ளது. இங்கு சனி பகவான் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி ஆகிய இரு மனைவியுடன் மாந்தி குளிகன் இரு புதல்வர்களுடன் குடும்ப சமேதராய் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் தினமும் குளிகை காலத்தில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், கூட்டு வழிபாடு ஆராதனைகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று ஜப்பான் நாட்டை சேர்ந்த இரு குடும்பத்தினர்கள் சனி பகவானுக்கு அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
சனி பகவானுக்கு சிறப்பு விசேஷ பூஜைகளை அர்ச்சகர் ஞானசேகர சிவாச்சாரியார் செய்தார். சிறப்பு தரிசன ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பிரபாகரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- தாராபிசேகத்தின் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது.
- தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள்.
சிவாலயங்களில் கோடை காலங்களில் தாராபிசேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி சிவ லிங்கத்தின் மேல் உறி கட்டி அதில் சிறு துளையுடன் கூடிய மண் கலயத்தைத் தொங்கவிடுவார்கள். அந்த கலயத்திற்குள் வெட்டி வேர், விளாமிச்சை வேர், பச்சிலை, ஜடாமஞ்சி, பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய், கடுக்காய், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்த நீரை நிரப்புவார்கள்.
அந்த நீரின் துளிகள், கலயத்தின் துளை வழியாக லிங்கத்தில் சொட்டு சொட்டாக விழும் வண்ணம் செய்வர். இவ்வாறு ஜல தாரை வைப்பதால் சி வலிங்கம் குளிர்விக்கப்பட்டு மக்களை கோடை வெப்பத்தில் இருந்து காக்கலாம், இயற்கை உபாதைகளோ, பூமி அதிர்வோ ஏற்படாது என்பது நம்பிக்கை.
அதன்படி ஆண்டுதோறும் அக்னி நட்சத்திர நாட்களில் ஏற்படும் வெயில் கொடுமையினை தணிக்க சேலம் உத்தம சோழபுரத்தில் அமைந்துள்ள கரபுரநாதருக்கு தாரா பாத்திரத்தில் அபிசேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெயில் சுட்டெரிப்பதால் அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே கரபுரநாதர் கோவில் மூலவர் சிவலிங்கத்தின் மீது தாராபிசேகம் செய்யப்பட்டது. அதன்படி தாராபாத்திரம் அமைக்கப்பட்டு அதில் வெட்டிவேர், பன்னீர், விளாமிச்சவேர், ஏலக்காய், சாதிகாய், பச்சை கற்பூரம் உள்ளிட்ட பலவிதமான மூலிகைகளை கலந்து வைத்து இடைவிடாமல் சுவாமி மீது சொட்டு சொட்டாக நீர் விழுமாறு அமைக்கப்பட்டு அபிஷேகம் நடந்து வருகிறது.
இவ்வாறு இடைவிடாமல் அபிஷேகம் செய்யும்போது நல்ல மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி, அக்னி வெயிலின் தாக்கம் குறைந்து நாடு செழிப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தினசரி நடைபெறும் இந்த அபிஷேகத்துக்கு தேவையான பொருட்களை பக்தர்கள் அளிக்கலாம் என்று கோவில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
இந்த தாரா அபிஷேகத்துக்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவார்கள். அதில் நிரப்பப்படும் தண்ணீரில் பன்னீர், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் சேர்க்கப்படும். அந்த நறுமணத் தண்ணீர் சொட்டு, சொட்டாக விழும் போது, சிவபெருமானின் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியாகி விடுவார்.
தாராபிசேகத்தின் பின்னணியில் ஒரு புராண கதை உள்ளது. அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் தேவர்களை காப்பாற்றுவதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
இதன் காரணமாக சிவபெருமானின் உடல் முழுவதும் வெப்பம் பரவியது. அவரது நெற்றிக்கண்ணும் வெப்பத்தால் தகித்தது. இதனால் சிவபெருமான் தலையில் கங்கையையும் நிலாவையும் சூடினார்கள். அப்படி இருந்தும் சிவபெருமானின் உடல் வெப்பம் குறையவில்லை.
இதனால் அவர் உடல் சூட்டை தணிக்க அபிஷேகங்கள் செய்தனர். இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக, சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார். சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும், உள்ளமும் குளிர்ச்சியாகி, மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களை தந்தருள்வார் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.
- கடந்த மாதம் அவினாசி- அத்திக்கடவு திட்டம் முழுமை அடைந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
- இத்திட்டம் நிறைவேறியதற்கு, அம்மன் சுவாமிக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
அவினாசி-அத்திக்கடவு திட்டம் நிறைவேறியதை அடுத்து, போராட்ட குழுவினர் பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து, அம்மனுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர்.
அவினாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவேற காலதாமதம் ஆனதை அடுத்து, விவசாயிகள், பொதுமக்கள் அவிநாசி-அத்திக்கடவு திட்ட போராட்ட குழுவை ஏற்படுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
அதில் ஒன்றாக அந்தந்த கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள், மேட்டுப்பாளையம் அடுத்த வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து, பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து சென்றனர்.
அந்தந்த கிராமங்களில் கோவிலில் உள்ள அம்மன் சுவாமி உள்பட பல்வேறு சுவாமிகள் மீது தீர்த்தத்தை ஊற்றி, திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும் என 8 ஆண்டுகளாக அபிஷேகம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் அவினாசி- அத்திக்கடவு திட்டம் முழுமை அடைந்து வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அவிநாசி, அன்னூர் தாலுகாவை சேர்ந்த ராய்கவுண்டன்புதூர், வடுகனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் வாகனங்களில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு வந்தனர்.
ஆற்றில் தீர்த்தம் எடுத்து குடத்திற்கு மாலையிட்டு பூஜை செய்தனர். பின்பு விநாயகர், வனபத்ரகாளியம்மனை வழிபட்டனர்.
பின்னர் அவரவர் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள கோவில்களில் உள்ள அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் மீது தீர்த்தத்தை ஊற்றி, திட்டம் நிறைவேறியதற்கு, அம்மன் சுவாமிக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்து அபிஷேகம் செய்தனர்.
- பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- அன்னதானம் வழங்கப்பட்டது
கரூர்:
புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணியசுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
- பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளை யம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணியம்மன், அரசாயி அம்மனுக்கு பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பரமத்திவேலூர் மகா மாரியம்மன், செல்லாண்டி அம்மன், பேட்டை பகவதி அம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மகா மாரியம்மன், சேளூர் மகா மாரியம்மன், அய்யம்பாளை யம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரி யம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம் மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்க ளில் பங்குனி மாத பவுர்ண மியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
- வண்ண மலர்களை ஊர்வலமாக மேல தாளங்கள் முழங்க கோவிலுக்கு எடுத்து சென்றனர்.
- சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தர குஜலாம்பிகை உடனுறைஅட்சயலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலின் பங்குனித்திருவிழா பூச்சொரிதல் விழா தொடங்கியது முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலாவாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வண்ணம் பலவிதமான வண்ண மலர்களை ஊர்வலமாக ஆலய உட்பிரகாரத்தை மேல தாளங்கள் முழங்க எடுத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து பலிபீடம் மற்றும் உற்சவருக்கு மஞ்சள் பொடி பால் பன்னீர் இளநீர் தேன் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம்வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது.
- மேளதாளம் முழங்க திருமண சீர்வரிசைகள் எடுத்து வரப்பட்டது.
- ராமனுக்கு அபிஷேகம் செய்து புத்தாடை அணிவித்தனர்.
மதுக்கூர்:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பஜனைமடத்தெ ருவில் அமைந்துள்ள வேண்டும் வரம் தரும் ஸ்ரீகோதண்டராமர் கோவிலில் ஸ்ரீநாமநவமி விழா நடைபெற்றது.
ஆர்ய வைஸ்ய சமூகம் பிள்ளைமார் சமூகம் இணைந்து இதன் அறங்காவலர் பிரகாசம், சின்ன துரை ஆகியோர் தலைமையில் ஸ்ரீராமநவமி விழாவை நடத்தினர்.
மேளதாளம் முழங்க திருமண சீர்வரிசைகள் எடுத்து வந்தார்கள்.
ஸ்ரீராமபி ரானுக்கு அபிஷேகம் செய்து புத்தாடை அணிவித்து ஹோமம் நடைபெற திருமண கைங்கர்யம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- பஞ்ச நரசிம்மர்களின் யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர்கள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
- அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குவதாக வரலாறுகள் கூறுகின்றன.
சீர்காழி:
சீர்காழி அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் பஞ்ச நரசிம்மர்களின் யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர்கள் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றனர்.
வைணவ பெரியார்களில் முக்கியமானவராக கருதப்படும் திருமங்கை ஆழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது.
மேலும் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாள் இந்த கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.
திருமண தோஷம் இருப்பவர்கள் இங்கு மாலை மாற்றி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குவதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலில் பங்குனி பெருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
இதனை ஒட்டி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
பின்னர் கல்யாண ரங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கையாழ்வார் முன்னிலையில் பட்டாச்சாரி யார்கள் கொடி ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அன்பரசன், திருவிழா கமிட்டி செயலாளர் ரகுநாதன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.
- காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவிலில் உள்ளது. இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
முன்னதாக பைரவருக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
- நத்தம் மாரியம்மனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.
நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக அடையாள காணிக்கையாக கீழ்க்கண்ட பொருட்களை அபிஷேகம் செய்து வருகின்றனர்.
மஞ்சள் பொடி-ராஜ ஆட்சியம்
நெய்-மோட்சம்
புஷ்பகவ்யம்-புனிதத்துவம்
தீர்த்தம்-மன அமைதி தரும்
அரிசிமாவு-கடன் நீங்கும்
மாதுளைச்சாறு-அரசு லாபம்
சந்தனம்-பக்தி ஞானம்
வாசனை திரவியங்களும், எண்ணெய் காப்பும்-சவுக்கியம்
பால்-ஆயுள் விருத்தி
தேன்-விஷ்ணு பரிதி
கரும்புச்சாறு-உடல்நலம், ஆயுள்பலம்
எலுமிச்சைசாறு-ஞானம்
புஷ்பங்கள்-செல்வம் குவியும்
பன்னீர்-தெய்வ திருப்தி
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்