search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141588"

    • பாலித்தீன் நிறுவனத்தில் ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பேராலி ரோட்டில் தனியார் பாலித்தீன் பை தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மார்க்கெட்டிங் மேலாளராக கலைசெல்வன் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஈரோட்டை சேர்ந்த நடராஜன் வாசுதேவன் என்ற வியாபாரி அறிமுகமானார்.

    இதைத் தொடர்ந்து பல தவணைகளில் ரூ.16 லட்சத்து 42 ஆயிரத்து 351 மதிப்புக்கு நடராஜன் வாசுதேவன், கலைச்செல்வன் மூலமாக பாலித்தீன் நிறுவனத்தில் பொருட்கள் வாங்கினார். இதற்கான தொகை செலுத்துமாறு கலை ச்செல்வன் அவரிடம் கேட்ட போது, 15 நாட்களுக்குள் தொகையை முழுவதுமாக கொடுத்து விடுவதாக கூறியுள்ளார்.இந்த நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் விருதுநகருக்கு வந்த நடராஜன் வாசுதேவன், ரூ.16லட்சம் மதிப்புக்கு 2 காசோலைகளை கலைச்செல்வனிடம் கொடுத்தார். பின்னர் அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்து விட்டது.

    இதையடுத்து கலைச்செல்வன் ஈரோட்டுக்கு சென்று, நடராஜன் வாசுதேவனிடம் தொகையை ரொக்கமாக தருமாறு கேட்டுள்ளார். அப்போது பணம் கேட்டு நேரில் வந்து சந்திக்க கூடாது என்று கூறி, நடராஜன் வாசுதேவன் கொலைமிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் நிலை யத்தில் கலைச்செ ல்வன் புகார் செய்தார். அதன்பேரில் நடரா ஜன் வாசுதேவன் மீது போலீசார் வழக்கு ப்பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சமூக வலைததளங்களில் நடந்து வரும் இந்த நூதன மோசடியில் ஏமாறாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு சைபா் கிரைம் போலீசாா் அறிவுறுத்தியுள்ளனா்.
    • இணையம் மூலம் பணம் செலுத்தி அதிக லாபம் பெறலாம் என ஒரு இலக்கை அறிமுகப்படுத்துகிறாா்கள்.

    சென்னை:

    சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் மூலம் குறுஞ் செய்திகள் அல்லது விளம்பரங்கள் வாயிலாக நிதி மோசடி அதிக அளவில் நடை பெறுகிறது. ஒரே ஒரு லைக் போட்டால் ரூ.200 கிடைக்கும் என்று மக்களை மயக்கி ஏமாற்றி நூதனமாக பணம் பறிக்கிறார்கள்.

    சமூக வலைததளங்களில் நடந்து வரும் இந்த நூதன மோசடியில் ஏமாறாமல் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தமிழ்நாடு சைபா் கிரைம் போலீசாா் அறிவுறுத்தியுள்ளனா்.

    இதுகுறித்து சைபா் கிரைம் போலீசாா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மக்களை சமூகவலை தளத்தின் மூலம் தொடா்பு கொண்டு ஏமாற்றும் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளது. முதலில் சில யூடியூப் காணொலிகளுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்வதால் நல்ல வருமானம் கிடைக்கும் என பொது மக்களை நம்ப வைக்கின்றனா். அதற்கு சிறிது பணமும் கொடுக்கிறாா்கள். பின்னா், அவா்கள் அனைவரும் ஒரு டெலிகிராம் குழுவில் சோ்க்கப்பட்டு, சில ஓட்டல் பக்கங்கள், நிறுவனங்களுக்கு லைக் செய்ய சொல்லி அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

    இதற்கிடையில் இணையம் மூலம் பணம் செலுத்தி அதிக லாபம் பெறலாம் என ஒரு இலக்கை அறிமுகப்படுத்துகிறாா்கள். அவற்றில் பிட்காயின், கிரிப்டோகரன்சி போன்றவற்றில் மக்களை முதலீடு செய்ய வைக்கின்றனா். இதற்கு பயனாளா் உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உருவாக்கம் செய்கின்றனா்.

    பொதுமக்களை நம்ப வைக்க, மோசடி நபா்கள், தாங்கள் ஏற்கெனவே இதில் முதலீடு செய்து நல்ல லாபம் பெற்றதைப்போல் போலியான ஆதாரங்களைக் காட்டுவா். இதை நம்பி பொதுமக்கள் முதலீடு செய்வா். முதலில் லாபம் வருவதைப்போல் உருவகம் செய்யப்பட்டு மக்களின் முதலீட்டுத் தொகை அதிகரிக்கத் தொடங்கியவுடன் பல்வேறு பொய்களைக் கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனா்.

    எனவே, சமூகவலைதளம் மூலம் அடையாளம் தெரியாத நபா்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கவோ, லிங்க்கை தொடவோ, தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி மூலம் பெறப் படும் கடவுச்சொல்லை யாருடனும் பகிரவோ வேண்டாம்.

    1930 என்ற உதவி எண்ணை 24 மணி நேரத்துக்குள் தொடா்பு கொண்டால் இழந்த பணத்தை விரைவில் மீட்டெடுக்க முடியும். நிதி இழப்பு அல்லாத பிற புகாா்களுக்குwww.cybercrime.gov.in-ல் உள்நுழைந்து புகாரை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது
    • 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    திருச்சி,

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கீழத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அருள் மாணிக்கராஜ் (வயது 39).இவரிடம் திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த ஷாஜகான் என்பவர் அறிமுகமாகி, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி முதல் கட்டமாக ரூ.75 ஆயிரம் பணம் பெற்றுள்ளார்.மேலும் அவருடைய நண்பர்கள் ரஞ்சித் குமார், அருள்ஜோரன், குமார் ஆகியோருக்கு வெளிநாடு வேலைக்கு மேலும் சில லட்சங்களை மாணிக்கராஜ் ஷாஜகானிடம் கொடுத்துள்ளார்.பின்னர் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பாமல் ஷாஜகான் காலம் தாழ்த்தி வந்தார். பணத்தையும் திருப்பி தரவில்லை. இதையடுத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த அருள் மாணிக்கராஜ், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சத்ய பிரியா உத்தரவின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் ஷாஜகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோன்று திருச்சி எடமலைப்பட்டிப்புதூர் பாப்பா காலனியை சேர்ந்தவர் பாலு (வயது 47)இவரிடம் ஆன்லைனில் மூலம் திருவாரூர் மாவட்டம் தில்லை வளாகம் தெற்கு காடு கிராமத்தை சேர்ந்த வேலரசன் மற்றும் வைரவேல் ஆகிய இருவர் அறிமுகமாகி கனடாவில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி பாலுவை நம்ப வைத்தனர். இதனை நம்பிய பாலு, தனக்கும் தன்னுடைய நண்பர்கள் 8 பேருக்கும் கனடா வேலைக்கு ரூ.12 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் இருவரும் இழுத்தடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து பாலு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பொழுது சரிவர பதில் கூறவில்லை. இது தொடர்பாக பாலு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கமிஷனர் சத்யப்பிரியா உத்தரவின் பேரில் இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வேலரசன், வெற்றிவேல் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏஜென்சி நடத்தி வந்த ஜஷ்வா மங்கலநிசாந்தா மற்றும் உறவினர்களுக்கு போலி விசாவை தந்துள்ளார்.
    • போலீசார் மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜஷ்வாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    இலங்கையை சேர்ந்த பிரேமரத்னா மகன் மங்கலநிசாந்தா (வயது 48). இவர் திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் கடந்த 2021-ம் ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம், வடகோவையில் தனியார் ஏஜென்சி நடத்தி வந்த ஜஷ்வா (வயது34) என்பவரிடம், எனக்கும் உறவினர்களுக்கு விசா ஏற்பாடு செய்து தர வேண்டும் என கேட்டார். இதற்காக அவர் சகல ஆவணங்களையும் சமர்ப்பித்து இருந்தார்.

    அப்போது விசா பெறுவதற்கு ரூ.11 லட்சத்துக்கும் மேல் செலவாகும் என்று ஜஷ்வா கூறினார். எனவே மங்கல நிசாந்தா மற்றும் உறவினர்கள் ஜஷ்வாவின் வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 11 லட்சத்து 71 ஆயிரத்து 466 பணத்தை செலுத்தி உள்ளனர்.

    அதன்பிறகு அவர்களுக்கு போலி விசா தரப்பட்டது. இந்த நிலையில் மங்கலநிசாந்தாவின் உறவினர் அந்த விசா மூலம் இலங்கை சென்றார். அப்போது கொழும்பு விமானநிலைய அதிகாரிகள் சோதனை செய்து பார்த்தனர். இதில் அது போலி விசா என்பது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து அதிர்ச்சி அடைந்த மங்கலநிசாந்தா, ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏஜென்சி உரிமையாளர் ஜஷ்வாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜ்குமார் செல்போனுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது.
    • இதனை நம்பி ரூ. 5 லட்சத்து 15 ஆயிரத்தை அனுப்பினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள காட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கவியரசன் (வயது 28), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவருக்கு கடந்த 27 ஆம் தேதி இவரது செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்று வந்துள்ளது இதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு

    லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது அதன்படி கவியரசன் ரூ1000 அனுப்பிய நிலையில் 2000 ரூபாய் கிடைத்தது இதனால் நம்பிக்கை அடைந்த கவியரசன் இப்படியாக ரூ.7லட்சத்து47 ஆயிரத்து 199 ரூபாய் பல்வேறு வங்கி கணக்கு மூலம் அனுப்பி உள்ளார் அதன் பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது அறிந்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கவியரசன் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    இதேபோல் ஊத்தங்கரை பி. மல்லிப்பட்டியை சேர்ந்த ராஜ்குமார்(33) என்பவர் தனது செல்போனுக்கு பகுதி நேர வேலை இருப்பதாக மெசேஜ் வந்துள்ளது இதனை நம்பி ரூ. 5 லட்சத்து 15 ஆயிரத்தை அனுப்பினார் இதன் பின்னர் இவரும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

    மேலும் கிருஷ்ணகிரி அடுத்த என்னேகோல்புதூர் ஒட்டப்பட்டி சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹரிஷ் (27)கடந்த 31ஆம் தேதி இவரது செல்போனுக்கு கமிஷன் அடிப்படையில் வேலைவாய்ப்பு இருப்பதாய் கூறி வந்த மெசேஜை நம்பி ரூ.6 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இவரும் ஏமாற்றம் அடைந்துள்ளார் இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • தி.நகரில் ஆடை விற்பனை நிறுவனம் நடத்தி வந்த ராமச்சந்திரன், ராஜேஷ், ரத்தன் ஆகியோர் ஆடைகள் வாங்கி தொழில் செய்து வந்தனர்.
    • திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர் பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் உற்பத்தியாளர்கள் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:- நாங்கள் திருப்பூரில் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் சிறிய அளவில் நடத்தி வருகிறோம். எங்களிடம் சென்னை தி.நகரில் ஆடை விற்பனை நிறுவனம் நடத்தி வந்த ராமச்சந்திரன், ராஜேஷ்,ரத்தன் ஆகியோர் ஆடைகள் வாங்கி தொழில் செய்து வந்தனர்.

    ஆடைகள் வாங்கியதற்கான பணத்தை காசோலையாக கொடுத்தனர். ஆனால் அந்த காசோலையில் பணம் இல்லாமல் ரிட்டன் ஆகி விட்டது. அவர்கள் இது போல் திருப்பூரில் உள்ள 60-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களிடம் ரூ.11கோடியே 62 லட்சத்து 64ஆயிரத்து 218க்கு ஆடைகள் வாங்கி பணம் கொடுக்காமல் உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

    இது பற்றி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்ய ப்பட்டுள்ளது. பணமோசடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியு ள்ளனர்.   

    • செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்றார்.
    • ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டோமினிக், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்

    கோவை,

    கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் டோமினிக் (வயது 22). இவரது செல்போனுக்கு கடந்த மாதம் 9-ந் தேதி வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆன்லைன் மூலம் வேலை செய்வது குறித்து குறுஞ்செய்தி வந்தது.

    இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நாங்கள் கொடுக்கும் வேலைகளை ஆன்லைன் மூலம் செய்து கொடுத்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என கூறி அதற்கான வழிமுறைகளை தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து சிறிது, சிறிதாக டோமினிக், அந்த மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 98 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கமிஷன் தொகை எதுவும் வரவில்லை. மேலும் அவருக்கு ஏற்கனவே வந்த கமிஷன் தொகை மற்றும் முதலீடு செய்த பணத்தை ஆன்லைன் மூலம் திரும்ப தனது கணக்கிற்கு வரவு வைக்க முடியவில்லை.

    இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தொடர்ந்து பணம் செலுத்துமாறு கேட்டார். ஆனால் அவரால் பணம் செலுத்த முடியவில்லை. மேலும், அவர் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதையடுத்து அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரால் முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை மாநகரில் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் பணத்தை இழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முதலீடு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களின் வழிகாட்டுதலின்படி ஆன்லைனில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

    • இரும்பு வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தை சேர்்ந்தவர் சேரிப்பழம்(53), பழைய இரும்பு வியாபாரி. இவருக்கு சிவகாசியை சேர்ந்த வசந்த் என்ற வியாபாரி அறிமுகமாகி உள்ளார். அவர் பழைய இரும்பை ஏலம் எடுத்து தருவதாகவும், அதற்கு ரூ.2½ செலவாகும் என்றும் சேரிப்பழத்திடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

    அதை நம்பிய அவர் கூகுள்-பே மூலம் வசந்திற்கு ரூ.2½ லட்சம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் வசந்த் பழைய இரும்பை ஏலம் எடுத்து தரவில்லை. ரூ.50 ஆயிரம் மட்டும் திருப்பி கொடுத்தார். மீதி பணத்தை கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் சேரிப்பழம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வசந்த் மற்றும் சென்னையை சேர்ந்த சொர்ணம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை தருவதாக கூறி விளம்பரம் கொடுத்துள்ளனர்.
    • 45 க்கும் மேற்பட்ட பெண்கள் கால் கொலுசு, காதணிகளை அடமானம் வைத்தும், ரூ.6 லட்சம் வரை பணத்தைக் கட்டி சேர்ந்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி அருகே உள்ள அமுதம் காலனி பகுதியில் ட்ரான்ஸ் இந்தியா என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் படித்த குடும்ப பெண்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை தருவதாக கூறி சமூக வலைதளம் மற்றும் உள்ளுர் சேனல்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர். விளம்பரத்தை பார்த்த பெண்கள் அந்த நிறுவனத்தை அனுகியுள்ளனர்.

    நிறுவனத்தில் வேலை கேட்டு வந்த பெண்களிடத்தில் நுழைவு கட்டணம் 100 ரூபாய் என்றும், நேர்முகத் தேர்வு எழுத ஆயிரம் ரூபாயும், நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு 10 ஆயிரத்து 500 ரூபாய் கட்டினால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் எனக் கூறினர்.

    இதனை நம்பி சுமார் 45 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுடைய கால் கொலுசு, காதணிகள் உள்ளிட்டவைகளை அடமானம் வைத்தும், விற்றும் ரூ.6 லட்சம் வரை பணத்தைக் கட்டி பணியில் சேர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் பணியில் சேர்ந்த போது அவர்களுக்கு சில அழகு சாதன பொருட்கள், சத்துமாவு உள்ளிட்ட கிஃப்ட் பாக்ஸை கொடுத்து இது உங்களுக்கு இலவசம் என்று கொடுத்துள்ளனர். பின்னர் மூன்று மாத காலம் முடிந்த பின்னும் வேலை இன்றியும் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவது தெரிந்த பெண்கள் நிறுவனத்திற்கு சென்று விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது நிறுவன உரிமையாளர் மற்றும் நிறுவனத்தில் பணிபுரிபவர் ஆகியோர் பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டி நீங்கள் கட்டிய பணத்திற்கு அழகு சாதன பொருட்கள் கொடுக்கப்பட்டது எனக் கூறி பெண்களை தாக்கியதாகவும், மன உளைச்சலுக்கு ஆளான பெண்கள் ஒன்று திரண்டு தனியார் நிறுவனத்தை இழுத்து பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று தங்களுடைய பணத்தை மீண்டும் பெற்றுதர வேண்டும், ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • என்ஜினீயரிங் பட்டதாரியிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாதாங்கோவில் தெருைவ சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 28), என்ஜினீயரிங் பட்டதாரி. இவரது நண்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலையை சேர்ந்த பிரபுகண்ணன். இவர் மூலமாக அய்யப்பன் என்பவர் கார்த்திக்குமாருக்கு அறிமுகம் ஆனார்.அவர் மின்வாரியத்தில் அரசு வேலை பெற்றுத்தருவதாக கார்த்திக்குமாைர நம்பவைத்து ரூ.20 லட்சம் கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டில் 2 தவணையாக ரூ.14 லட்சம் கார்த்திக்குமார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

    இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கார்த்திக்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் அய்யப்பன், பிரபுகண்ணன் உள்பட 5 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாங்கித் தருகிறேன்.
    • போலி பணி நியமன ஆணை என அறிந்த பிரான்சிஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் (வயது 45).

    இவர் நிலையான வேலை யில்லாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவர் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாங்கித் தருகிறேன்.

    அதற்கு நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று பிரான்சிஸ் சேவியரிடம் கூறினார். இதனை உண்மை என்று நம்பிய பிரான்சிஸ் சேவியர் ரூ.58000-த்தை ராஜ்குமாரிடம் கொடுத்தார்.

    அடுத்த சில நாட்களில் ஒரு பணி நியமன ஆணையை தயார் செய்து

    பிரான்சிஸ் சேவியரிடம் கொடுத்தார். அந்த ஆணையை எடுத்து க்கொண்டு நுகர் பொருள் வாணிப கழகத்தில் காண்பித்தார்.

    இதனை வாங்கி பார்த்த அதிகாரிகள் இது போலி பணி நியமன ஆணை என்று கூறினர்.

    அப்போது தான் ஏமாற்றபட்டோம் என்பதை பிரான்சிஸ் சேவியர் உணர்ந்தார்.

    இது குறித்து அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

    • பெண்ணிடம் மோசடி செய்த வடமாநில வாலிபர்கள் சிக்கினர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியாபுரம் தெருவை சேர்ந்தவர் சபரிஅம்மாள் (வயது 40). நேற்று காலை இவரது வீட்டின் முன்பு 2 வடமாநில வாலிபர்கள் வந்தனர். அவர்களிடம் சபரி அம்மாள் விசாரித்தபோது,   பாலீஷ் செய்து தருவதாக கூறி உள்ளனர்.

    அதனை நம்பிய சபரி அம்மாள் தனது 4 பவுன் தாலி செயினை எடுத்து பாலீஷ் செய்வதற்காக அவர்களிடம் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து நகையை பாலீஷ் போட்டு சபரி அம்மாளிடம் அந்த வாலிபர்கள் கொடுத்தனர்.

    அப்போது நகையின் எடை குறைந்திருப்பதாக சபரி அம்மாள் உணர்ந்தார். அதுகுறித்து அந்த வாலிபர்களிடம் கேட்டார். அப்போது அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சபரிஅம்மாள் அவர்களிடம் மீண்டும் கேட்டுள்ளார்.

    உடனே அந்த வாலிபர்கள் அங்கிருந்து ஓட முயற்சித்தனர். அதில் ஒரு வாலிபரின் கையை சபரிஅம்மாள் இறுக்கி பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். அந்த வாலிபர் சபரி அம்மாளின் கையை உதறி விட்டு ஓடி உள்ளார்.

    சபரிஅம்மாளின் சத்தத்தை கேட்டு திரண்ட அக்கம் பக்கத்தினர் விரட்டி சென்றனர். அப்போது அந்த வாலிபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் மிதுன்குமார், சர்வன்குமார் என்பது தெரியவந்தது. நகையை எடைபோட்டு பார்த்தபோது 26 கிராம் மட்டுமே இருந்துள்ளது. இதையடுத்து சபரி அம்மாள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×