search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 172319"

    • எல்லா மக்களுக்கும் அனைத்து விதமான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்
    • அனைவரும் புத்தகங்களை படிப்பதோடு மட்டுமல்லாது, அதனை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டு்ம

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெ ரும் புத்தக திருவிழா நாகர் கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். புத்தக திருவிழா கண்காட்சியினை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா நிலையிலும் எல்லா மக்களுக்கும் அனைத்து விதமான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்பதற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகி றார்கள்.

    தொழில்நுட்ப துறை வாயிலாக திருக்குறள் வாசிப்பினை அதிகப்படுத்த வேண்டுமென்பதற்காக திருக்குறள் ஓவியப்போட்டி, திருக்குறள் வாசிப்பு, நாடகம் போன்றவைகள் நடை பெற்று கொண்டிருப்ப தோடு, தமிழ் டிஜிட்டல் நூலகம் ஒன்று ஆரம்பித்து லட்சக்கணக்கான புத்தகங் களை அனைவரும் பார்த்து பயன்பெறுகின்ற வகையில் தமிழ் இணைய கல்வி கழகம் இணையத்தில் பதிவு செய் யப்பட்டுள்ளது.

    நமது இளைய தலைமுறையினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே புத்தகம் வாசிப்பு திறனை அதிகப்படுத்த வேண்டுமென்பதற்காகவும், வள்ளுவர் கூறியதுபோல் அனைவரும் புத்தகங்களை படிப்பதோடு மட்டுமல்லாது, அதனை முழுமையாக புரிந்து கொள்ளக்கூடிய வகை யிலும், படித்தவை என் னென்றும் உங்கள் மனதில் நிற்க வேண்டும்.

    படித்ததின் வாயிலாக கிடைத்த அறிவினை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டுமென திருக்குறளில் எழுதப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி எந்த வேலைப் பளு இருந்தாலும், புத்தகம் படிப்பதற்கென தனி நேரத்தினை ஒதுக்கீடு செய்வார்கள். அவர்களின் புத்தகம் வாசிப்பு திறனை உதாரணமாக கொண்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பொது அறிவு சார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    முன்னதாக, அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் புத்தக கண்காட்சியில் அமைக்கப் பட்டிருந்த 100-க்கும் அதிகமான அரங்குகள் மற்றும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, பள்ளிக்கல்வித் துறையில் எண்ணும், எழுத்தும் மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்டம், சமூ கநலத்துறை, மாற்றுத்திற னாளிகள் நலத்துறை, பொது சுகாதாரத்துறை, காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டி ருந்த கண்காட்சியினையும் பார்வையிட்டார்கள்.

    இக்கண்காட்சியில், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, மாவட்ட வன அலுவலர் இளையராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர் கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, வருவாய் கோட்டாட் சியர் சேதுராமலிங்கம் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கொல்கத்தா ஐகோர்ட்டு வக்கீல் உள்பட பலரும் பாரக்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.
    • தகவல் வெளியானதும் மாணவிகள் இருவரும் தாங்கள் பதிவிட்ட வீடியோவை நீக்கி விட்டனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மாணவிகள் 2 பேர் சிகரெட் புகைத்தபடி தேசிய கீதம் பாடிய வீடியோ வெளியானது.

    அந்த வீடியோவில் மாணவிகள் 2 பேரும் அருவருக்கத்தக்க அங்க அசைவுகளுடன் கைகளில் சிகரெட் வைத்தப்படி தேசிய கீதம் பாடுகிறார்கள். மாணவிகள் பாடும் விதம் தேசிய கீதத்தை அவமரி யாதை செய்வதாக இருந்தது.

    இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக அந்த மாணவிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக கொல்கத்தா ஐகோர்ட்டு வக்கீல் உள்பட பலரும் பாரக்பூர் போலீஸ் கமிஷனரிடம் இது தொடர்பாக புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட மாணவிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.

    இதுபற்றிய தகவல் வெளியானதும் அந்த மாணவிகள் இருவரும் தாங்கள் பதிவிட்ட வீடியோவை நீக்கி விட்டனர். மேலும் இன்னொரு சமூக வலைதளத்தில் நேரலையாக தோன்றி விளக்கமும் அளித்தனர். அதில் விளையாட்டு தனமாக இப்படி செய்து விட்டதாகவும், இதற்காக வருந்துவதாகவும் கூறியுள்ளனர்.

    இதற்கிடையே பாரக்பூர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில் மாணவிகள் பற்றிய விபரங்கள் தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவர் மீதும் தேசிய சின்னங்களை அவமதிப்பது தொடர்பான சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • தற்போது குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    நாகர்கோவில் :

    பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி நாகர்கோவில் ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவியர்கள் மீண்டும் மஞ்சப்பை தொடர் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் சுமார் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விழாவில் பங்கேற்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து மாபெரும் மஞ்சப்பை விழிப்புணர்வு தொடர் சங்கிலி நடத்திய தற்காக இந்தியன் வெர்ல்ட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட உலக சாதனை விருதினை ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சகாய செல்வியிடம், கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது குளங்கள், கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் நீர் நிலைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து அடுத்த தலைமுறையினரும் தெரிந்துகொள்ளும் வகையில் மாணவ, மாணவிகள் அனைவரிடமும் எடுத்துக்கூற வேண்டும்.

    இதன் தாக்கத்தை நாம் அனைவரும் புரிந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்திட முன்வர வேண்டும்.

    தொடர்ந்து நமது மாவட்டத்தை பசுமை மாவட்டமாகவும், நெகிழி இல்லா குமரி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவியர்கள் கலந்து கொண்டு, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்

    நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, சமூக நல அலுவலர் சரோஜினி, ஹோலி கிராஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் கில்டா, துணை முதல்வர் லீமா ரோஸ், திருப்புமுனை இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி:

    புதுமைப்பெண் திட்டம் குறித்து, கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமா மிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் புதுமைப் பெண் திட்டத்தினை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயின்று பல்வேறு கல்லூரிகளில் பயிலும் 1981 மாணவியருக்கு முதற்கட்டமாக மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வரு கிறது. தற்போது, முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த 2-ம் கட்ட புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி பயிலும் 1187 மாணவி யர்கள் என மொத்தம் 3168 கல்லூரி மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், ஏழை, எளிய வர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில போதிய வசதி இல்லாத காரணத்தினாலும், சில பெற்றோர்கள் பணியின் காரணமாக வெளியூரில் வேலைபார்ப்பதினால் தங்களது குழந்தைகளை உறவினர்கள் வளர்ப் பதினாலும், பள்ளி பரு வத்திலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பதினாலும் பெண் குழந்தைகளால் உயர்கல்வி பயில முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை உணர்ந்த முதல்-அமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தினால் பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தை களின் இடை கல்விநிற்றல் விகிதத்தைக் குறைப்பது மட்டுமல்லாது பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கவும், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்ப டுத்தி அனைத்துத் துறை களிலும் மகளிரை முன் உதாரணமாக பங்கேற்கச் செய்யவும், உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண் களுக்கான தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்திடவும் இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கவும் வழிவகை செய்கிறது.

    தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிக ரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவி களுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற் கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 ஆயிரம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.

    மேலும், மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

    இத்திட்டத்தில் பயன் பெறுவது குறித்து தங்களுக்குத் தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப் பேசி எண்.14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறலாம்.

    இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வியில் 2-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப் பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப் பங்களை ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், 6-ம் வகுப்பு முதல்

    12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்று மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ் போன்ற ஆவண நகல்களைக் கொண்டு மாணவியர்கள் தாங்களாகவே தங்களது கைப்பேசி அல்லது கணினி வாயிலாகவும் இணையதளம் முகவரியை பயன்படுத்தி பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதனை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்து கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப் பட்டு சிறப்பாக செயல் படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டத்தி னால் அனைத்து மாணவி யர்களும் உயர்கல்வி பயின்று, வேலைவாய்ப்பு பெற்று, பொருளாதாரத்தில் சுதந்திரமாக, சொந்தகாலில் நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.
    • அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    தமிழக பள்ளிக் கல்வி துறை மூலம் அரசுப்பள்ளிகளில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் 3 மாத கால தற்காப்பு கலை பயிற்சி (டேக்வாண்டோ) நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம் முன்னிலையில் டேக்வாண்டோ பயிற்சியாளர்கள் பாண்டியன்.

    வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதேபோல் திருமருகல், திருக்கண்ணபுரம், ஏனங்குடி, அம்பல் உள்ளிட்ட அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

    நாகர்கோவில், மார்ச்.14-

    தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொது தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 10508 மாணவர்களும், 11572 மாணவிகளும் என மொத்தம் 22080 பேர் எழுதுகிறார்கள். இதை யடுத்து தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டது. 84 தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதையடுத்து காலையிலேயே மாணவ- மாணவிகள் பள்ளிக்கு தேர்வு எழுத வந்திருந்தனர். பள்ளி வளாகத்தில் அமர்ந்து தேர்வுக்கான இறுதிக்கட்ட படிப்பை மேற்கொண்டனர்.

    பின்னர் தேர்வு மையத்திற் குள் மாணவ-மாணவிகள் சென்றனர். அப்போது பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்துக்களை கூறி தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைத்தனர். மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைகள் குறித்த விபரம் பள்ளி வளாகத்திற்குள் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த அடிப்படையில் மாணவ-மாணவிகள் தேர்வு மையத்திற்குள் சென்றனர். தேர்வு மையத்திற்குள் எலக்ட்ரானிக்கல் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. மேலும் தேர்வு எழுதுபவர்களை தவிர மற்றவர்கள் யாரையும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவில்லை.

    தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங் கியது. இதையடுத்து மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதத் தொடங்கினார்கள். மதியம் தேர்வு முடிவடைந்தது. தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப் பட்டிருந்தது. பறக்கும் படை அதிகாரிகள் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

    தேர்வுகள் முடிவடைந்து தொடர்ந்து பலத்த பாது காப்புடன் விடைத்தாள்கள் பாதுகாப்பு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது.நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கான விடைத் தாள்கள் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளிக்கும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்திற்கான விடைத்தாள்கள் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் படந்தாலுமூடு சேகரட் கார்ட் மெர்டிக் மேல்நிலைப்பள்ளிக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. விடைத்தாள்கள் வைக்கப் பட்டுள்ள மையத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
    • பிளஸ்-1, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 3,892 மாணவர்களும், 4,320 மாணவிகளும் என மொத்தம் 8,212 பேர் எழுதுகின்றனர்.

    அதேபோல பிளஸ்-1 பொதுத் தேர்வை 3,420 மாணவர்களும், 4,122 மாணவிகளும் என மொத்தம் 7,542 பேர் எழுதுகின்றனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 4,547 மாணவர்களும், 4,277 மாணவிகளும் என மொத்தம் 8,824 பேர் எழுதுகின்றனர்.

    பிளஸ்-1, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், நாகையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் ஆசீர்வதித்து நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும் என அறிவுரை கூறினார்.

    இந்த பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படை குழுவினர், 56 நிலையான பறக்கும் படை உறுப்பினர்களும் தயாராக உள்ளனர் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தேர்வு மையங்களில் தேர்வு எண் எழுதும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

    • 300-க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
    • அறிவியல் கண்காட்சியில் சுமார் 1500 மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்தில் உள்ள மதுக்கூர் -வடக்கில் மதுக்கூர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் மன்றம் மற்றும் வானவில் மன்றத்தின் சார்பாக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை ஏற்று துவங்கி வைத்தார்.

    உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம் ஆலோசனைகளை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மணிகண்டன், பொருளாளர் ரெங்கராசு, ஆசிரியர் சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    பேரிடர் மேலாண்மை, நீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, அறிவியல் தத்துவங்கள் மற்றும் இயற்கை உணவு ஆகிய தலைப்புகளில் 300-க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாரகேஸ்வரி உள்ளிட்ட அறிவியல் ஆசிரியர்கள் செய்திருந்தனர். சுமார் 1500 மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

    முடிவில் ஆசிரியர் இருளப்பசாமி நன்றி கூறினார்.

    • உற்சாக மிகுதியில் கேக்குகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும், நுரைவரும் ஸ்பிரேயை மற்றவர்கள் மீது அடித்தும் கூச்சலிட்டனர்.
    • மாணவிகளின் இந்த செயல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி செல்லும் காலை மற்றும் மாலை நேரத்திலும் கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவள்ளூரில் நடுரோட்டில் மாணவிகள் 'கேக்' வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் காமரா ஜர் சிலை அருகே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு கடையில் கேக் ஒன்றை வாங்கினர். பின்னர் அவர்கள் தங்களது தோழி ஒருவரது பிறந்தநாளை நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினர்.

    அப்போது உற்சாக மிகுதியில் கேக்குகளை ஒருவர் மீது ஒருவர் வீசியும், நுரைவரும் ஸ்பிரேயை மற்றவர்கள் மீது அடித்தும் கூச்சலிட்டனர். அந்த நுரை சாலையில் சென்ற பொதுமக்கள் மீது விழுந்தது. இதனை பொதுமக்கள் கண்டித்தும் மாணவிகள் கண்டுகொள்ளாமல் கத்தியபடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் இந்த செயல் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் அந்த மாணவிகளின் விபரத்தை சேகரித்து அவர்களுக்கு அறிவுரை கூற போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    • கரூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 மாணவிகளை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
    • மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனர்

    கரூர்:

    கரூர் மாவட்டம் காவிரி ஆற்றின் மாயனூர் கதவணை அருகே புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளான தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் குளிக்க சென்றனர்.முன்னதாக அவர் அங்கு நடைபெற்று வரும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தனர். பின்னர் போதிய இடைவேளை கிடைத்ததால் அவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்றிருந்தனர்.அப்போது மாணவி ஒருவர் திடீரென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரை மீட்கும் முயற்சியில் மற்ற மாணவிகள் 3 பேரும் காவிரி ஆற்றில் இறங்கினர். துரதிஷ்டவசமாக அவர்களும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு மாணவியின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் வாழ்வில் வெற்றிபெற உறுதியான முயற்சியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
    • மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தருமை ஆதினம் 27ஆவது ஸ்ரீலதி குருமகா சந்திதானம் அருளாசிடனும் ஆட்சியன்றக் குழுக தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் ஆலோசனையின் படியும் தொடக்கப்பள்ளியின் 38-வது ஆண்டு விழா நடைபெற்றது.

    ஆட்சிமன்றக்குழுத் துணைத்தலைவர் பேராசி ரியர் முருகேசன் தலைமை தாங்கினார்.

    பேராசிரியர் ஞானசேகரன், பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாகச் செயலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சிவதாஸ் கலந்துக்கொண்டார். முதல்வர் சரவணன் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசினை வழங்கினர். சிறப்புரையில் மாணவர்கள் வாழ்வில் வெற்றிபெற உறுதியான முயற்சி, பணிவு, அன்பு போன்ற குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    இந்த குணங்கள் மாணவர்களிடம் இருந்தால் அனைத்து செல்வங்களும் அவர்களை தேடி வரும் எனகூறினார்கள்.

    பொறுப்பாசிரியை லதா தொடக்கப்பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்கள்.

    இலக்கிய மன்ற விழாவில் நடைப்பெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    ஆண்டு விழாவில் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழாவிற்கான ஏற்பாடு களை இருபால் ஆசிரியர்கள், அலுவலகள் செய்திருந்தனர். விழாவில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் சசிகலா நன்றி கூறினார்.

    • வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி?
    • பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம்- நாகை சாலையில் உள்ள அரசு கல்லூரி மாணவிகள் விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை இணைந்து மாணவ- மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார்.

    நாகை மாவட்ட காப்பாளர் ஆசிரியர் சங்க தலைவர் வைரவமூர்த்தி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் கலந்து கொண்டு வாழ்க்கையில் மாணவிகள் சாதித்து வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து பேசினார்.

    முன்னதாக தோப்புத்துறை பள்ளி மாணவ விடுதி காப்பாளர் விஸ்வலிங்கம் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துணைக்கண்ணன், நல்லாசிரியர்கள் வீரப்பன், செங்குட்டுவன் மற்றும் திருத்துறைப்பூண்டி அலெக்சாண்டர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    வேதாரண்யம் அரசு கல்லூரி மாணவிகள் விடுதி காப்பாளார் கலைவாணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.முடிவில் நாகப்பட்டினம் பாலிடெக்னிக் விடுதி காப்பாளர் அகிலன் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி- கல்லூரி விடுதி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×