என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 174792"
- ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தார்.
- கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் இரு மார்க்கங்களிலும் ரெயில் நிறுத்தம் வழங்கி உள்ளது.
சங்கரன்கோவில்:
நெல்லை - தாம்பரம் - நெல்லை சிறப்பு ரெயில் (ரெயில் வண்டி எண் 06003/06004 ) சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நிற்காமல் சென்று வந்தது. இது குறித்து ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினரான ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு ரெயில் சங்கரன்கோவிலில் நின்று செல்ல வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார். அதனை ஏற்று தெற்கு ரெயில்வே நிர்வாகம் இரு மார்க்கங்களிலும் ரெயில் நிறுத்தம் வழங்கி உள்ளது.
அதன்படி வரும் வருகிற நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கி ழமை) முதல் நெல்லை - தாம்பரம் ரெயிலும், 22-ந் தேதி தாம்பரத்தில் புறப்படும் தாம்பரம்- நெல்லை சிறப்பு ரெயிலும் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ராஜா எம்.எல்.ஏ. மற்றும் தெற்கு ரெயில்வே அதிகாரிகளுக்கு சங்கரன்கோவில் பகுதி பொதுமக்கள், பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
- ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை சந்திப்பில் இருந்து டாக்டர் அம்பேத்கார் சாலை சந்திப்பு வரை போக்கு வரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
- வடபழனியில் இருந்து ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் ஆற்காடு சாலையில் செல்லலாம்.
சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் பணி காரணமாக ஆற்காடு சாலையில் சி.எம்.ஆர்.எல்-லில் மேற்கொள்ளப்பட உள்ள கட்டுமானப் பணிகளைக் கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ பணிகளை செய்ய வசதியாக போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 6-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஒரு வார காலத்திற்கு சோதனை ஓட்டம் நன்கு செயல்பட்டதால் சி.எம்.ஆர்.எல் கோரியபடி இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.
1. ஆற்காடு சாலையில் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலைசந்திப்பில் இருந்து டாக்டர் அம்பேத்கார் சாலை சந்திப்பு வரை போக்கு வரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
2. கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துகள் அனைத்தும் நேராக டாக்டர் அம்பேத்கர் சாலைக்கு ஆற்காடு சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு மேற்கண்ட வாகனங்கள் யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை ( லிபர்ட்டி சந்திப்பு). ரங்கராஜபுரம் பிரதான சாலை. ரத்தினம்மாள் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்,
3. வடபழனியில் இருந்து ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் ஆற்காடு சாலையில் செல்லலாம்.
4, யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலையில், ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து ஸ்டேக்ஷன் வியூ சாலை சந்திப்பு வரை ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது,
5, விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பில் இருந்து நேராக ஆற்காடு சாலைக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது, மேற்கண்ட வாகனங்கள். யுனைடெட் இந்திய காலனி 1-வது பிரதான சாலை. 2-வது குறுக்கு தெரு மற்றும் 2-வது பிரதான சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்,
6. விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனகள் தி,நகர் செல்ல. ஸ்டேக்ஷன் வியூ சாலை மற்றும் பசுல்லா மேம்பாலம் வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்,
7. கார்ப்பரேக்ஷன் காலனி பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் நேராக விஸ்வநாதபுரம் பிரதான சாலையை நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளன. மாறாக ரங்கராஜபுரம் பிரதான சாலை. விஸ்வநாத புரம் முதல் தெரு மற்றும் விஸ்வநாதபுரம் இரண்டாவது தெரு சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
8. ரத்தினம்மாள் தெருவில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் நேராக விஸ்வநாதபுரம் பிரதான சாலையை நோக்கி செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. மாறாக. விஸ்வநாதபுரம் முதல் தெரு மற்றும் விஸ்வநாதபுரம் இரண்டாவது தெரு சென்று அவர்கள் இலக்கை அடையலாம்,
9. டாக்டர் அம்பேத்கர் சாலையில் ஒரு வழி பாதை தற்போது ஆற்காடு சாலை சந்திப்பிலிருந்து 2-வது அவென்யூ வரை நடைமுறையில் உள்ளது, மேற்கண்ட சாலையில், ரத்தினம்மாள் தெரு சந்திப்பில் இருந்து ஆற்காடு சாலை சந்திப்பு வரை இருவழிபாதையாக மாற்றம் செய்யபட்டுள்ளது, ரத்தினம்மாள் தெருவில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கார் சாலை கார்பரேசன் காலனி ரோடு மற்றும் பாளையக்காரர் தெரு வழியாக ஆற்காடு சாலைக்கு சென்று அவர்கள் இலக்கை அடையலாம்,
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மறுமார்க்கத்தில் சேலம்- கோவை (06803) ெரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
- ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் விரைவு ெரயில் 31ந் தேதி வரை ஏதேனும் ஒரு இடத்தில் 50 நிமிடங்கள் நின்று செல்லும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
கோவை- சேலம் மெமு ெரயில் சேவை 31-ந் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
இது குறித்து சேலம் ெரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு- சேலம் ரெயில் நிலையம் இடையே தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.ஆகையால் வருகிற 31ந்தேதி வரை கோவை- சேலம் (06802) மெமு ெரயில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில் சேலம்- கோவை (06803) ெரயிலும் ரத்து செய்யப்படுகிறது.இது போன்றே, ஆலப்புழா- தன்பாத் (13352) ெரயில் 31-ந் தேதி வரை ஏதேனும் ஒரு இடத்தில் 30 நிமிடங்கள் வரை நின்று செல்லும். எர்ணாகுளம்- டாடாநகர் (18190) புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் விரைவு ெரயில் 31ந் தேதி வரை ஏதேனும் ஒரு இடத்தில் 50 நிமிடங்கள் நின்று செல்லும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவை நோக்கி சென்ற வந்தே பாரத் ரெயில் பாபா சிந்து மண்டல் மீது மோதியது.
- காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பாபா சிந்து மண்டல் (வயது 41). இவர் திருப்பூரில் கட்டிட வேலை செய்வதற்காக ஹவுரா ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தார்.
அங்கிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருப்பூருக்கு பயணம் செய்தார். ரெயில் வாலாஜா ரெயில் நிலையத்தில் நின்ற போது பாபா சிந்து மண்டல் கீழே இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றவாறு சிறுநீர் கழித்தார்.
அப்போது கோவை நோக்கி சென்ற வந்தே பாரத் ரெயில் பாபா சிந்து மண்டல் மீது மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில்வே கிராசிங் விபத்து குறித்து விழிப்புணர்வு நடந்தது.
- பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரு புறமும் ரெயில் வருகிறதா? என்று கவனித்து செல்ல வேண்டும்
மதுரை
ரெயில்வே கிராசிங்கை (ரெயில்வே கேட்) பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கடக்கும்போது கவனக்குறைவு காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.
அதனை தவிர்க்கும் வகையில் மதுரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது குலாம் தஸ்தகீர் தலைமையில் ரெயில்வே போலீஸ்காரர்கள் செந்தில்குமார், சதீஷ்குமார் ஆகியோர் விளாங்குடி-கரிசல்குளம் ரெயில்வே கேட்டில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
ஆளில்லாத ரெயில்வே கிராசிங்கை கடக்கும் போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இரு புறமும் ரெயில் வருகிறதா? என்று கவனித்து செல்ல வேண்டும் என்றும் எடுத்து கூறினர்.
- தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க கவுண்டர்களில் நள்ளிரவிலேயே காத்து கிடக்கிறார்கள்.
- நிமிடத்துக்கு நிமிடம் மீட்டர் வட்டி போல் கட்டணம் எகிறி கொண்டிருக்கும்.
சென்னை:
தொலைதூர இடங்களுக்கு செல்பவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புகிறார்கள். அதற்கு காரணம் பாதுகாப்பு, கட்டணம் குறைவு, சொகுசான பயணம் என்பதுதான்.
3 மாதங்களுக்கு முன்பே ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால் எல்லோராலும் 3 மாதங்களுக்கு முன்பே பயண திட்டம் போட முடியாது.
இதனால் குறுகிய காலத்தில் திட்டமிட்டு செல்பவர்கள், அவசர பயணம் மேற் கொள்பவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.
அவர்கள் கடைசி முயற்சியாக தட்கல் முறையில் முன்பதிவை தேடி செல்கிறார்கள். இந்த தட்கல் முன்பதிவு ஒருநாள் முன்பு நடைபெறுகிறது. அதுவும் காலை 10 மணிக்கு குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிக்கும், 11 மணிக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டிக்கும் தொடங்குகிறது. முன்பதிவு தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிடும்.
தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க கவுண்டர்களில் நள்ளிரவிலேயே காத்து கிடக்கிறார்கள்.
இணைய தளங்களை கையாள்பவர்கள் வீடுகளில் இருந்தே டிக்கெட் எடுக்கிறார்கள். இந்த வசதி இல்லாதவர்கள் இணைய தள சேவை மையங்களை அணுகுகிறார்கள்.
கடந்த சில நாட்களாக தட்கல் முன்பதிவுக்கு இணையதளத்தில் உள்ளே நுழைந்து ரெயிலை தேர்வு செய்து, பயணிகள் விவரங்களையும் பதிவு செய்துவிட்ட 'கேப்சா' என்ற குறியீட்டு எண்ணை பதிவு செய்ததும் உள்ளே செல்லாமல் முடங்கி விடுகிறது.
அடுத்த சில நிமிடங்களில் பிரீமியம் தட்கலுக்கு முயன்றால் ஒழுங்காக செயல்படுகிறது. பிரீமியம் தட்கல் என்பது இரண்டு மடங்கு அதிகம். மேலும் நிமிடத்துக்கு நிமிடம் மீட்டர் வட்டி போல் கட்டணம் எகிறி கொண்டிருக்கும்.
உதாரணமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு தட்கல் கட்டணம் ரூ.600 மட்டுமே. ஆனால் பிரிமீயம் தட்கல் கட்டணம் ரூ.1000-க்கு மேல். ஒரு டிக்கெட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் 1000 வரை ரெயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
இதற்காகவே தட்கல் முன்பதிவில் தில்லாலங்கடி வேலைகளை ரெயில்வே நிர்வாகம் செய்வதாக பயணிகளிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் ரெயிலவே அதிகாரிகளிடம் கேட்டால் ஒரே நேரத்தில் ஏராளமானோர் இந்த தளத்தை உபயோகப்படுத்துவதால் முடங்குகிறது. என்று சொல்லி எளிதில் தப்பி விடுகிறார்கள். அப்படியானால் பிரீமியம் தட்கலுக்கு மட்டும் எப்படி முடங்காமல் செயல்படுகிறது என்றால் பதில் சொல்ல யோசிக்கிறார்கள். தட்கல் முன்பதிவு தொடங்கும் போது தடங்கல் இல்லாமல் சேவையை வழங்குவதுதான் ரெயில்வேயின் கடமை.
- இரண்டு சக்கரங்கள் கீழே இறங்கியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
- பெங்களூரு ரெயில் தடம்புரண்டுள்ள நிலையில், அந்த வழியாகச் செல்லும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.25 மணிக்கு பெங்களூருக்கு டபுள் டக்கர் ரெயில் புறப்பட்டு சென்றது.
ஆந்திர மாநிலம் குப்பம் ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. காலை 11.21 மணிக்கு பங்காருபேட்டை அருகே உள்ள சி.சி. நத்தம் என்ற இடத்தில் சென்ற போது ரெயிலின் கடைசி பெட்டியான சி1 பெட்டி தண்டவாளத்தில் இருந்து புரண்டது. இரண்டு சக்கரங்கள் கீழே இறங்கியதால் பயங்கர சத்தம் கேட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து குப்பம் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் ரெயிலில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர்.
பெங்களூரு ரெயில் தடம்புரண்டுள்ள நிலையில், அந்த வழியாகச் செல்லும் ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
- திருச்சி - பாலக்காடு டவுன் ரெயில், 17-ந் தேதி வரையில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
- ஜம்முதாவிக்கு பாரத் கவுரவ்ரெயில் இன்று இயக்கப்படுகிறது.
திருப்பூர் :
மதுக்கரை பகுதியில் ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால் திருப்பூர் வழியாக கோவைக்கு இயக்கப்படும் சில ெரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை - கேரளா மாநிலம் பாலக்காடு டவுன் மாலை 6மணி பயணிகள் ரெயில் 12, 13, 15, 16, 27-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.கேரளா மாநிலம் சொரனூர் - கோவை காலை 8:20 மணி சிறப்பு ரெயில் 17-ந் தேதி வரையில் பாலக்காடு டவுன் வரை மட்டுமே இயக்கப்படும்கோவை - சொரனூர் மாலை 4:30 மணி சிறப்பு ரெயில் 17ந் தேதி வரையில் பாலக்காட்டில் இருந்து மாலை 5:55 மணிக்கு இயக்கப்படும். மங்களூர் சென்ட்ரல் - கோவை காலை 9 மணி விரைவு ரெயில் 17-ந் தேதி வரையில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்பாலக்காடு டவுன் - ஈரோடு மதியம் 2:40 மணி பயணிகள் ரெயில் 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையில் கோவையில் இருந்து மாலை 4:28 மணிக்கு இயக்கப்படும்ஈரோடு - பாலக்காடு டவுன் காலை 7:15 மணி பயணிகள் ரெயில் 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையில் கோவை வரை மட்டுமே இயக்கப்படும். திருச்சி - பாலக்காடு டவுன் மதியம்1மணி ரெயில், 17-ந் தேதி வரையில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும்.சொரனூர் - கோவை மாலை 3:10 மணி பயணிகள் ரெயில் 12, 13, 15, 16, 17ந் தேதிகளில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.மங்களூர் சென்ட்ரல் - கோவை காலை 11:05 மணி இன்டர்சிட்டி விரைவு ரெயில் 17ந் தேதி வரையில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பாரத் கவுரவ் ரெயில் இயக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஜம்முதாவிக்கு பாரத் கவுரவ்ரெயில் இன்று இயக்கப்படுகிறது.
கோவை - ஜம்முதாவி(06903) ரெயில் இன்று காலை, 7:45 மணிக்கு வடகோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. நாளை மறுநாள் 13-ந் தேதி இரவு, 1:30 மணிக்கு ஜம்முதாவி சென்றடையும்.ரெயிலில் தலா ஒரு முதல் வகுப்பு ஏ.சி., மற்றும் ஏ.சி., இரண்டடுக்கு, 8ஏ.சி., மூன்றடுக்கு, ஒரு தூங்கும் வசதி உள்ளிட்ட 14 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
திருப்பூர், ஈரோடு, சேலம், ஒயிட்பீல்டு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், சீராலா, விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், ஜான்சி ஆகிய ரெயில் நிலையங்களில் ரெயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நெரிசலான வழித்தடத்தில் போதிய ரெயில்கள் இயக்கப்படாததுதான், காரணம் என்று கருதப்படுகிறது.
- 1 கோடியே 76 லட்சம் பி.என்.ஆர். எண்கள் தானாகவே ரத்து ஆகிவிட்டன.
புதுடெல்லி :
மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், காத்திருப்போர் பட்டியல் ரெயில் பயணிகள் எண்ணிக்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு ரெயில்வே வாரியம் பதில் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த நிதிஆண்டில் (2022-2023) கோடியே 72 லட்சம் பயணிகளின் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகள் கடைசிவரை உறுதி ஆகவில்லை. அதனால், அவர்களது 1 கோடியே 76 லட்சம் பி.என்.ஆர். எண்கள் தானாகவே ரத்து ஆகிவிட்டன.
அவர்களால் ரெயிலில் பயணிக்க முடியாமல் போய்விட்டது. அவர்களுக்கு கட்டணம் திருப்பித்தரப்பட்டது.
இதுபோல், 2021-2022 நிதிஆண்டில், 1 கோடியே 65 லட்சம் பயணிகளும், 2020-2021 நிதிஆண்டில் 61 லட்சம் பயணிகளும், டிக்கெட் உறுதி ஆகாததால் பயணம் செய்ய முடியவில்லை.
2018-2019 நிதிஆண்டில் 68 லட்சத்து 97 ஆயிரம் பி.என்.ஆர். எண்களும், 2017-2018 நிதிஆண்டில் 73 லட்சம் பி.என்.ஆர். எண்களும், 2016-2017 நிதிஆண்டில் 72 லட்சத்து 13 ஆயிரம் பி.என்.ஆர். எண்களும், 2015-2016 நிதிஆண்டில் 81 லட்சத்து 5 ஆயிரம் பி.என்.ஆர். எண்களும், 2014-2015 நிதிஆண்டில் 1 கோடியே 13 லட்சம் பி.என்.ஆர். எண்களும் ரத்தாகி விட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நெரிசலான வழித்தடத்தில் போதிய ரெயில்கள் இயக்கப்படாததுதான், டிக்கெட் உறுதி ஆகாததற்கு காரணம் என்று கருதப்படுகிறது.
இதை கருத்திற்கொண்டு, சிக்னல் பராமரிப்பு, தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து வருவதாகவும், இதன்மூலம் கூடுதல் ரெயில்கள் இயக்க முடியும் என்றும் ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார். அதிகமான ரெயில்கள் இயக்கும்போது, காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் பெறும் வாய்ப்பு குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.
- நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயிலானது நேற்று இரவு பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் கடந்து சென்று கொண்டிருந்தது.
- சிக்னல் கம்பத்தில் மோதிய வாலிபர் தூக்கி வீசப்பட்டு இறந்தது விசாரணையில் தெரியவந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் இறந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தென்காசி ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். இறந்த அந்த நபர் யார்? எவ்வாறு உயிரிழந்தார்? என்பது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை மேற்கொண்டார்.
நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக இயக்கப்பட்டு வரும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயிலானது நேற்று இரவு பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் கடந்து சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டில் நின்று பயணம் செய்த அந்த வாலிபர் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டின் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் நின்ற சிக்னல் கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு இறந்தது தெரியவந்தது.
உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாவூர்சத்திரம் அருகே ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த வாலிபர் சிக்னல் கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் உயிரிழந்த வாலிபரின் முகவரி குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்தியா முழுவதும் உள்ள 53 முக்கிய வழித்தடங்களில் ரெயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ. ஆக அதிகரிக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.
- 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த 53 வழித் தடங்களிலும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.
சென்னை:
இந்தியா முழுவதும் உள்ள 53 முக்கிய வழித்தடங்களில் ரெயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ. ஆக அதிகரிக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்து உள்ளது.
2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இந்த 53 வழித் தடங்களிலும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூர்- மதுரை, திருவனந்தபுரம்- கோழிக்கோடு போன்ற வழித் தடங்களும் இதில் அடங்கும். இதையடுத்து சென்னை-மதுரை ரெயில் இனி 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும். மேலும் ரெயில்களின் செயல் திறனும் மேம்படுத்தப்படும்.
130 கி.மீ. வேகத்தை ரெயில்கள் எட்டுவதற்கான உள் கட்டமைப்பை மேம்படுத்துமாறு அந்தந்த பொது மேலாளர்களுக்கு ரெயில்வே அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் அரக்கோணம்- மைசூர், ஜோலார்பேட்டை- பெங்களூர், பெங்களூர்- மைசூர், கண்ணூர்- கோழிக்கோடு, திருவனந்தபுரம்- மதுரை, ஜோலார்பேட்டை, கோவை ஆகிய வழித் தடங்களிலும் வேகம் 130 கி.மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.
சென்னை- பெங்களூர் - மைசூர் வந்தே பாரத் ரெயில் கடந்த ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு சென்னை- ஜோலார்பேட்டை பிரிவில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது.
ஜோலார்பேட்டை- பெங்களூர், பெங்களூர்- மைசூர் வழித் தடத்தில் வேகம் அதிகரிக்கப்பட்ட பிறகு பயண நேரம் இன்னும் குறையும்.
தெற்கு ரெயில்வேயில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 5,081 கி.மீ. தூரத்துக்கு ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதில் 2,037 கி.மீட்டருக்கு ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
- தில்லைவிளாகம், பட்டுக்கோட்டை, மானாமதுரை வழியாக ஒரு நேரடி ரெயில் இயக்க வேண்டும்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், தில்லைவிளாகம் ராமர், நடராஜர் கோவிலுக்கும் உள்ள ஆன்மிக தொடர்பு.
திருத்துறைப்பூண்டி:
மத்திய ரயில்வே அமைச்சருக்கு, தில்லைவிளாகம் ரயில் பயணிகள் நல சங்க தலைவர் நாச்சிகுளம் தாஹிர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-
மயிலாடுதுறை - மதுரை இடையே திருவாரூர், தில்லை விளாகம், பட்டுக்கோட்டை, மானாமதுரை வழியாக ஒரு நேரடி ரயில் இயக்க வேண்டும்.
முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக் காடுகள் நம் மாநிலத்தின் பொக்கிஷம். நம் குழந்தைகள் இந்தப் பகுதிகளை எல்லாம் இது வரை பார்த்ததே இல்லை. காரணம், மதுரையிலிருந்து நேரடி ரயில் வசதி இல்லை என்பதே.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் திருவாரூருக்கும் இடையே தில்லைவிளாகம் ராமர், நடராஜர் கோயிலுக்கும் உள்ள ஆன்மிக தொடர்பு, பக்தர்களுக்கு இந்த ரயில் மூலம் இன்னும் வலுப்படும்.
டெல்டா, சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற எல்லைக்குள் வரும் இந்த பகுதி மக்கள், நீதிமன்ற அலுவலர்களுக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.
இதேப்போல் பல்வேறு கல்வி நிலைய மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். எனவே இக்கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறையில் இருந்து தில்லைவிளாகம் , முத்துப்பேட்டை வழியாக மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்