என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 174792"
- சுரங்கப்பாதை பணிகள் காரணமாக செங்கோட்டை ரெயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.
- தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து இயக்கப்படும்.
மதுரை
திண்டுக்கல்-திருச்சி பிரிவில் தாமரைப்பாடி-வடமதுரை இடையே சுரங்கப்பாதை பணிகள் நடக்கிறது. அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில், இன்றும் நாளையும் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் செல்லும். இந்த ரெயில் மானாமதுரையில் மட்டும் நிற்கும். குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் செல்லும். இந்த ரெயில் மானாமதுரையில் மட்டும் நிற்கும்.
எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் செல்லும். மானா மதுரையில் மட்டும் நிற்கும். மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானா மதுரையில் மட்டும் நிற்கும். சென்னை எழும்பூரில் இருந்து நாளை புறப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில், திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மதுரையில் இருந்து இன்று புறப்படுவதாக இருந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சியில் இருந்து இயக்கப்படும்,
மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- ரெயிலானது வாரம் மும்முறை ரெயிலாக வரும் ஜூன் 1-ந் தேதி முதல் இயங்க தொடங்கும்.
- பெட்டிகள் அனைத்தும் ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட எல்.எச்.பி. பெட்டிகள் ஆகும்.
தென்காசி:
தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை ரெயில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதனை நேற்று பிரதமர் மோடி வாராந்திர ரெயிலாக தாம்பரத்தில் தொடங்கி வைத்தார். இந்த ரெயிலானது வாரம் மும்முறை ரெயிலாக வரும் ஜூன் 1-ந் தேதி முதல் இயங்க தொடங்கும்.
1904-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையாக ரெயில்கள் இயங்கிகொண்டிருந்த நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மீட்டர் கேஜில் இருந்து அகலப்பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரெயில்கள் இயக்கம் மீண்டும் தொடங்கியது.
ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த மீட்டர் கேஜ் வழித்தடத்தில் கொல்லத்தில் இருந்து 2 தினசரி ரெயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டன. ஆனால் அகலப்பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை இந்த வழித்தடத்தில் சென்னைக்கு ரெயில்கள் இல்லாத நிலையே இருந்து வந்தது.
தற்போது தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை ரெயில் அம்பை, பாவூர்சத்திரம் வழியாக இயக்கப்படும் என்ற அறிவிப்பு அம்பை வழித்தட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் வண்டி எண் 20683 தாம்பரம்-செங்கோட்டை ரெயில் இயக்கத்தை பிரதமர் சென்னையில் தொடங்கி வைத்தார். வழக்கமான ரெயில் சேவைகள் வண்டி எண் 20683/20684 தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரத்தில் இருந்தும், 17ந் தேதி (திங்கள் கிழமை) முதல் செங்கோட்டையில் இருந்தும் வாராந்திர சேவையாக ஏப்ரல், மே என இரண்டு மாதங்கள் இயங்கும்.
ஜூன் 1-ந் தேதி முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மாதேவி அம்பை பாவூர்சத்திரம் தென்காசி ரெயில் நிறுத்தங்களுடன் செங்கோட்டையை 10.50-க்கு சென்றடையும்.
ஜூன் 2-ந் தேதி முதல் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.5-க்கு தாம்பரத்தை சென்றடையும்.
2 இரண்டடுக்கு குளிர்சாதனப்பெட்டிகள், 5 எக்கனாமிக் மூன்றடுக்கு குளிர்சாதனப்பெட்டிகள், 5 தூங்கும் வசதி பெட்டிகள், மூன்று முன்பதிவில்லா பெட்டிகள், 2 ஜெனரேட்டர் கார் உள்பட மொத்தம் 17 பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டிருக்கும். பெட்டிகள் அனைத்தும் ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்ட எல்.எச்.பி. பெட்டிகள் ஆகும்.
தாம்பரம்-திருவாரூர் இடையே மின்சார என்ஜினிலும், திருவாரூர்-செங்கோட்டை இடையே டீசல் இன்ஜினிலும் இயங்கும். தாம்பரம்-செங்கோட்டை இரு மார்க்கத்திலும் பயண நேரம் 13 மணி 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ரெயில் பயணிகள் கூறுகையில்,
சென்னைக்கு நிரந்தர ரெயில்களே இல்லாத நெல்லை-தென்காசி வழித்தடத்தில் சென்னைக்கு நிரந்தர ரெயில் கிடைத்தது மகிழ்ச்சி.மேலும் கடையத்தில் ரெயில் நிறுத்தம் வழங்க வேண்டும். செங்கோட்டை-நெல்லை இடையே முன்பதிவிக்கு ஜெனரல் கோட்டா வழங்க வேண்டும். தற்போது 5 தூங்கும் வசதி பெட்டிகளும், 7 குளிர்சாதன பெட்டிகளும் கூடுதலாக 3 தூங்கும் வசதி பெட்டிகள் சேர்க்க வேண்டும். செங்கோட்டையில் மாலை 5 மணிக்கு மேல் புறப்படும் வகையிலும் காலை 9 மணிக்குள் செங்கோட்டை சென்றடையும் வகையிலும் அட்டவணை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நேற்று மாலை தாம்பரத்தில் புறப்பட்ட செங்கோட்டை சிறப்பு ரெயில் பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் இன்று காலை வந்தது. அப்போது பாவூர்சத்திரம் பொதுமக்கள் சார்பில் ரெயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ரெயிலை ஒட்டிய ஓட்டுநர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டு அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா, பாவூர்சத்திரம் தொழிலதிபர் சேவியர் ராஜன், சமூக அலுவலர் தங்கராஜ், கல்லூரணி ஊராட்சி தலைவர் மற்றும் ரெயில் பயணிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- இதையொட்டி சேலம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சேலம்:
சென்னை, கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் சேவையை பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையொட்டி சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் காணொளி காட்சி மூலம் நிகழ்ச்சியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத், மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, பொதுச் செயலாளர் ஐ. சரவணன், மாவட்ட துணை தலைவர்கள் ரமேஷ், ராஜேந்திரன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கௌதம், இளைஞர் அணி பொதுச் செயலாளர்கள் காளிமுத்து என்ற கவுதம், கலைச் செல்வன், பொருளாளர் ராசி எஸ்.கிரிதரன் உள் பட பலர் பங்கேற்று பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நேற்று இரவு 8.37 மணிக்கு சென்னை கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ஜங்ஷன் முதலாவது நடை மேடைக்கு வந்தது.
அப்போது ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.
தொடர்ந்து சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் ரயிலுக்கு பச்சைக்கொடி காண்பித்து கோவைக்கு உற்சாகமாக வழி அனுப்பி வைத்தார்.
முன்னதாக சேலம் மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் கட்சியினர் மேள தாளங்கள் முழங்க மலர் தூவி ரயிலை வரவேற்றனர்.5 நிமிடம் சேலத்தில் நின்ற நிலையில் இரவு 8. 43 மணிக்கு கோவைக்கு புறப்பட்டு சென்றது.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காண்பதற்காக 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.இதையொட்டி கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில்
வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு
- பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய 3 ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
- வந்தே பாரத் ரெயில் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு ரெயில் புறப்படும்.
திருப்பூர் :
வந்தே பாரத் ரெயில் இயக்கம் தொடங்குவதால், கோவையில் இருந்து பெங்களூரு உதய், திருப்பதி, சென்னை செல்லும் இன்டர்சிட்டி ஆகிய 3 ரெயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. திருப்பூர் வரும் நேரம் மாறுகிறது. கோவை - சென்னை வந்தே பாரத் ெரயில் (எண்:20644) இயக்கம் நாளை (9ந் தேதி) தொட ங்குகிறது. கோவையில் இருந்து காலை 6 மணிக்கு ரெயில் புறப்படுமென அறிவிக்கப்ப ட்டுள்ளதால், அதே நேரத்தில் கோவையில் இருந்து புறப்படும் 3 ரெயில்களின் நேரம் புதிய அட்டவணைப்படி மாற்றப்பட்டடுள்ளது.
அதன்படி கோவை - பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ் (எண்:22666) காலை 5:45 மணிக்கு பதில் 5 நிமிடம் முன்பாக 5:40 மணிக்கு புறப்படுகிறது. 6:23 மணிக்கு பதில் 6:18 மணிக்கு திருப்பூர் வந்து விடும். கோவை - திருப்பதி சூப்பர்பாஸ்ட் ரெயில் (எண்:22616) வழக்கமான நேரத்தை விட 10 நிமிடம் தாமதமாக 6:10 மணிக்கு புறப்படும். திருப்பூரை 6:50 மணிக்கு கடக்கும்.
கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) 5 நிமிடம் தாமதமாக 6:20 மணிக்கு புறப்படும். திருப்பூரை 7 மணிக்கு கடக்கும்.காலை 6 மணிக்கு கோவையில் புறப்படும் வந்தே பாரத் ெரயில் (எண்:20644) 6:35 மணிக்கு திருப்பூர் வந்து, இரண்டு நிமிடம் நின்று 6:37 மணிக்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
- இந்த ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் இயங்கும்.
விருதுநகர்
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக நாளை 8-ந் தேதி சென்னை வருகிறார். அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தாம்பரம்-செங்கோட்டை வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இந்த ரெயில் வருகிற 9-ந் தேதி முதல் இயங்கும். இந்த ரெயில் ஞாயிற்க்கிழமை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும். மறுமார்கத்தில் திங்கட்கிழமை செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு தாம்பரத்திற்கு செல்லும். 20683 என்ற எண் கொண்ட ரெயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை காலை 10.50 செங்கோட்டை செல்லும்.
மறுமார்கத்தில் திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 6.05 மணிக்கு தாம்பரத்தை அடையும். விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய நிறுத்தங்களில் இந்த ரெயில் நின்று செல்லும்.
9-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை 2 மாதங்களுக்கு இந்த வாராந்திர ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த தாம்பரம்-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுவது பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
- ரெயில் நெய்க்கா ரப்பட்டி அருகே சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
- மர்ம நபர்கள் ெரயிலின் மீது கற்களை வீசினர்.
சேலம்:
கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு செல்லும் கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16382) சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நெய்க்கா ரப்பட்டி அருகே சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வந்து கொண்டி ருந்தது.
அப்போது மர்ம நபர்கள் ெரயிலின் மீது கற்களை வீசினர். இதில் ரெயிலின் ஏ1 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியின் கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் முறையிட்டனர்.
அவர், சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், சேலம் ரெயில்வே கோட்ட போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாது காப்பு படையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசிய மர்மந பர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.கல்வீச்சு நடந்த பகுதியில் போலீசார் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- உடுமலை ரெயில் நிலையம் வழியாக கோவை, திருச்செந்தூர், திருவனந்தபுரம், சென்னை ஆகிய ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கோடை காலத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை :
திண்டுக்கல் - பாலக்காடு வழித்தடம் அகல ெரயில்பாதையாக மாற்றப்பட்டு 2015ல் பயன்பாட்டுக்கு வந்தது. பின்னர் மின்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக மேம்படு த்தப்பட்டது.தற்போது உடுமலை ரெயில் நிலையம் வழியாக கோவை - மதுரை, பாலக்காடு - திருச்செந்தூர், திருவனந்தபுரம் - மதுரை, பாலக்காடு - சென்னை ஆகிய ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இம்மாதத்துடன், பள்ளிதேர்வுகள் முடிவடைய உள்ளன. கோடை விடுமுறை துவங்கி யவுடன் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில்களை அதிக அளவில் பயன்படுத்துவர். ஆனால் தற்போது செல்லும் ெரெயில்கள் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.
எனவே கோடை காலத்தில் தென்மாவட்டங்க ளுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் ரெயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
- தாதாபீர் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
- தண்டவாளத்தை கடக்க முயன்றபோது தாதாபீர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
தென்காசி:
தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதை அப்பகுதி வழியே சென்ற பொதுமக்கள் பார்த்தனர். பின்னர் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் தென்காசி ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், கணேசன், அய்யப்பன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில் தென்காசி மாலிக் காம்பவுண்ட் பகுதியில் வசித்து வரும் தாதாபீர் (வயது 45) என்பதும், இவர் தென்காசியில் உள்ள தனியார் லாரி செட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. நேற்று இரவு தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து கிழக்கு பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் மோதி தொழிலாளி பலியானார்.
- தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புது நெடுங்குளம் கிரா மத்தை சேர்ந்தவர் முத்து மணி(வயது35). இவர் அதே பகுதியில் உள்ள கல் உடைக்கும் ஆலையில் பணி யாற்றி வந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி.
இந்தநிலையில் இன்று காலை முத்துமணி வீட்டில் இருந்து அருகில் உள்ள வடகரை தண்டவாள பகுதிக்கு சென்றதாக கூறப் படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முத்துமணி மீது மோதியது. இதில் உடல் சிதறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதா பமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முத்துமணி குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொ ண்டாரா? அல்லது தண்ட வாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்சியிலிருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு திருவாரூக்கு முற்பகல் 11.40 மணிக்கு சென்றடையும்.
- திருவாரூரில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு திருச்சியை மாலை 6.05 மணிக்கு வந்தடையும்.
தஞ்சாவூர்:
திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூரில் நாளை (சனிக்கிழமை) உலக புகழ் பெற்ற ஆழித்தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது.
இதனையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் திருச்சி-திருவாரூர் இடையே சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06131) இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் திருச்சியி லிருந்து காலை 9.20 மணிக்கு புறப்பட்டு பொன்மலை, மஞ்சத்திடல், திருவெறும்பூர், சோளகம்பட்டி, பூதலூர், ஆலங்குடி, தஞ்சாவூர், சாலியமங்கலம், நீடாமங்கலம், கொரடாச்சேரி, குளிக்கரை வழியாக திருவாரூக்கு முற்பகல்
11.40 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்க மாக திருவாரூர்-திருச்சிக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06132) திருவாரூரில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு திருச்சியை மாலை 6.05 மணிக்கு வந்தடையும்.
இதேபோல் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் மயிலாடுதுறை-திருவாரூர் சிறப்பு ரெயிலானது (06133) மயிலாடுதுறையில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு திருவாரூரை இரவு 10.20 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக, நாளை ஒரு நாள் மட்டும் திருவாரூர்-மயிலாடுதுறை சிறப்பு ரெயில் (06134) திருவாரூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு காலை 5.55 மணிக்கு வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மூத்த குடிமக்களுக்கான பயணக்கட்டண சலுகை 20-3-2020 முதல் திரும்பப்பெறப்பட்டது.
- 2019-2020-ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு அரசு ரூ.59,837 கோடி மானியம் வழங்கியது.
புதுடெல்லி :
நாட்டில் இயக்கப்படும் ரெயில்களின் எண்ணிக்கை, ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை மற்றும் மூத்த குடிமக்கள், பெண்களுக்கு கீழ் 'பெர்த்' (கீழ்ப்படுக்கை) கிடைப்பதற்கான வசதிகள் குறித்து மக்களவை உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி (தி.மு.க.) மற்றும் தீபக் அதிகாரி (திரிணாமுல் காங்கிரஸ்) ஆகியோர் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாட்டில் 2,687 பயணிகள் ரெயில்கள், 2,032 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட மொத்தம் 10,378 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மூத்த குடிமக்களுக்கான பயணக்கட்டண சலுகை 20-3-2020 முதல் திரும்பப்பெறப்பட்டது.
2019-2020-ம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு அரசு ரூ.59,837 கோடி மானியம் வழங்கியது. மூத்த குடிமக்களுக்கு சலுகை வழங்கியதில் அந்த ஆண்டு சுமார் ரூ.1,667 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
ரெயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அவர்கள் விருப்பம் தெரிவிக்காவிட்டாலும் முன்பதிவின்போது கீழ் 'பெர்த்' தானாகவே கிடைக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இது தூங்கும் வசதிகொண்ட பெட்டியில் 6 முதல் 7 படுக்கை என்ற அளவிலும், 3 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 4 முதல் 5 படுக்கை என்ற அளவிலும், 2 அடுக்கு ஏ.சி. பெட்டியில் 3 முதல் 4 படுக்கை என்ற அளவிலும் ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கும் இருமார்க்கத்தில் வாரத்தில் 3 நாட்கள் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- அகலரெயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில் அங்கு 2 ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங் களுக்கு கூடுதலாக புதிய ரெயில்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து தாம்பரத்திற்கும் இருமார்க்கத்தில் வாரத்தில் 3 நாட்கள் ரெயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரெயில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு மார்க்கத்திலும் 3 நாட்கள் இந்த ரெயில் சேவை வாரந்தோறும் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமை ஆகிய 3 நாட்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக செங்கோட்டை ரெயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கத்தில் வாரந்தோறும் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 7.35 மணிக்கு வந்தடையும். இந்த ரெயிலுக்கான கால அட்டவணை தென்னக ரெயில்வே சார்பில் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கத்தினர் கூறும்போது, நாட்டின் அதிவேக ரெயில் சேவைகளில் ஒன்றான வந்தே பாரத் ரெயிலை கோவை-சென்னை இடையே இயக்குவதற்கு தென்னக ரெயில்வே பரிசீலித்து வருகிறது. திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரையிலான மீட்டர்கேஜ் பாதை அகலரெயில் பாதையாக மாற்றப்பட்ட நிலையில் அங்கு 2 ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல் தாம்பரம் முதல் செங்கோட்டை வரை வாரம் 3 முறை இயக்கக்கூடிய ரெயில் சேவையும் தொடங்கப்பட உள்ளது. இந்த 3 ரெயில் சேவைகளையும் அடுத்த மாதம் 8-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென்னக ரெயில்வே துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்