என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 174792"
- 10 நாள் வரையிலான கொண்டாட்டங்கள் முடிந்து, வடமாநிலத்தவர் பலர் திருப்பூர் வர தொடங்கியுள்ளனர்.
- திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும்.
திருப்பூர் :
ேஹாலி பண்டிகை முடிந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் திருப்பூர் திரும்ப தொடங்கி உள்ளனர். இவர்களின் தொடர் வருகையால், பின்னலாடை தொழிலில் தொழிலாளர் தட்டுப்பாடு சீராகும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.கடந்த 8-ந் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வட மாநில தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பண்டிகை கொண்டாட ஒரு வாரம் முன்னரே தங்கள் சொந்த மாநிலங்களுக்கு படையெடுத்தனர்.
இது ஒருபுறமிருக்க வடமாநிலத்தவர் குறித்தும், அவர்களது செயல்பாடுகள் குறித்து தேவையற்ற பிரச்சினை கிளப்பும் வகையிலான வீடியோக்கள் வதந்தியாக பரவியது. வீடியோ பரப்பியவர்களை கைது செய்து போலீசார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். தமிழகம் பாதுகாப்பான நகரம், திருப்பூர் உங்களை பிழைக்க வைக்கும் ஊர் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பண்டிகை நிறைவு பெற்று ஒரு வாரம் முதல் 10 நாள் வரையிலான கொண்டாட்டங்கள் முடிந்து, வடமாநிலத்தவர் பலர் திருப்பூர் வர தொடங்கியுள்ளனர்.
திருப்பூர் ரெயில் நிலைய முன்பதிவு மைய அதிகாரிகள் கூறுகையில், வடமாநில ெரயில்களில், பொதுப்பெட்டியில் பயணிப்பவரே அதிகம். கடந்து 10 நாட்களில், 12 ஆயிரம் பேர் வரை ெரயில் மூலம் திருப்பூர் வந்தனர். ேஹாலி முடிந்தாலும் கூட வடமாநிலத்தவர் சொந்த மாநிலம் பயணிப்பதும் தொடர்கிறது. தினமும் 4 ஆயிரம் பேர் செல்கின்றனர். அங்கு சென்று குடும்பத்தினர் உறவினர்களை பார்த்து விட்டு இவர்களும் ஒரு மாதத்துக்குள் திருப்பூர் திரும்புவர் என்றனர்.
ெரயில்களில் வந்திறங்குபவர்களுக்கு உடனே வேலை தர நிறுவனங்கள் பல விசிட்டிங் கார்டுகளுடன் காத்திருக்கின்றன. தங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இந்தி தெரிந்த, வடமாநில தொழிலாளர்களை தேர்வு செய்து அவர்களை அழைத்து வந்து ெரயில் நிலையத்தில் நிறுத்தி விடுகின்றனர். ெரயிலை விட்டு இறங்குபவர்களை அழைத்து ஈர்க்கும் வகையில் பேசும் இவர்கள் வேலை, சம்பளம், தங்குமிடம் தருகிறோம் என அழைத்து சென்று விடுகின்றனர்.
இதனிடையே பீகார் தொழிலாளர்கள் திருப்பூர் வருகையையொட்டி பாட்னா ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் கேரளா எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் பாட்னா எக்ஸ்பிரஸ் 3-ம் நாளில் பாட்னா செல்கிறது.இதில் இதுவரை 24 பெட்டிகள் இருந்தது.
என்ஜினை அடுத்துள்ள இரண்டு பெட்டி, ெரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் என மொத்தம் நான்கு பெட்டிகள் பொது பெட்டிகளாக உள்ளது. பீகார் மாநிலத்தவர் தொடர் வருகையால் இந்த ெரயிலுக்கான பயணிகள் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் வருகிற 27-ந் தேதி முதல் ஒரு பொதுப்பெட்டி கூடுதலாக சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ரெயில் பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் வரும் போதும் (30-ந் தேதி முதல்) ஒரு பொதுப்பெட்டி இணைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மன்னார்குடி அருகே வடகரை வயல் கிராமத்தில் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
- தகவல் அறிந்தத ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அருகே வடகார வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40).
கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு வேலைக்குச் சென்றபோது மன்னார்குடி அருகே வடகரை வயல் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த ரெயில் எதிர்பாராதவிதமாக ரமேஷ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரமேஷ்சின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடிஅரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- ராஜபாளையம், மதுரை வழியாக காசிக்கு சுற்றுலா ெரயில் விடப்படுகிறது.
- மே மாதம் 4-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும்.
மதுரை
இந்திய ெரயில்வே உணவு சுற்றுலா கழகம் சார்பில் திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து காசிக்கு 'பாரத் கவுரவ்' சுற்றுலா ெரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ெரயில் மே மாதம் 4-ந் தேதி கொச்சுவேலியில் இருந்து புறப்படும். இதனை தொடர்ந்து கொல்லம், செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக மே மாதம் 6-ந் தேதி ஒடிசா மாநிலம் பூரி செல்லும்.
அங்கு ஜெகநாதர் கோவில், கொனார்க் சூரிய கோவில் ஆகிய தலங்களில் தரிசனம் செய்யலாம். மே 8-ந் தேதி கொல்கத்தாவில் காளி கோவில் தரிசனம். 9-ந் தேதி பால்குனி நதியில் நீராடி முன்னோர் பித்ரு பூஜை. அதன் பிறகு மகா போதி கோவில் தரிசனம். மே 10-ந் தேதி கங்கையில் நீராடி காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்கள் தரிசனம். 11-ந் தேதி அயோத்தியா சரயு நதியில் நீராடி ராம ஜென்ம பூமி, அனுமன் கோவில்கள் தரிசனம். 12-ந் தேதி பிரக்யாராஜ் திரிவேணி சங்கமத்தில் நீராடி அனுமன் கோவில் தரிசனம். 14-ந் தேதி சுற்றுலா ெரயில் மீண்டும் கொச்சுவேலி வந்து சேரும். இந்த சுற்றுலா ெரயி லுக்கான பயண சீட்டுகள் பதிவு நடந்து வருகிறது.
- தற்போது தாம்பரம் மற்றும் கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- புதிதாக இயங்க இருக்கும் ரெயிலானது 13 மணி நேரத்தில் தாம்பரம் சென்றடையும் வகையில் அட்டவணை ஏற்படுத்த வேண்டும்.
தென்காசி:
நெல்லை - தென்காசி இடையே 21.9.2012 அன்று மீட்டர் கேஜ் பாதையானது அகலப்பாதையாக மாற்றப்பட்டு பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நேரடி ரெயில் இல்லை
இந்த வழித்தடமானது அகலப்பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை இந்த வழித்தடத்தில் தலைநகர் சென்னைக்கு ரெயில்கள் இல்லாத நிலையே இருந்து வருகிறது.
பொதுமக்களின் தொடர் வலியுறுத்தல் காரணமாக தற்போது நெல்லையில் காலியாக இருக்கும் 2 ரெயில்களை பயன்படுத்தி தாம்பரம் மற்றும் கோவை மேட்டுப்பாளையத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரெயில் அம்பை, பாவூர்சத்திரம் வழியாக இயக்கப்படும் என்ற அறிவிப்பு அம்பை வழித்தட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
13 மணி நேர பயணம்
இதுகுறித்து மதுரை ரெயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறியதாவது:-
செங்கோட்டையில் இருந்து பாவூர்சத்திரம், அம்பை, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு நிரந்தர ரெயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது பொதிகை செங்கோட்டை - தாம்பரம் இடையே மதுரை வழியாக 10 மணி 30 நிமிடத்திலும், சிலம்பு எக்ஸ்பிரஸ் 11 மணி நேரத்திலும் கடக்கின்றன.
புதிதாக இயங்க இருக்கும் செங்கோட்டை - தாம்பரம் மும்முறை ரெயிலானது பாவூர்சத்திரம், நெல்லை, விருதுநகர், திருவாரூர், விழுப்புரம் வழியாக 766 கிலோமீட்டர் தூரத்தை 60 கிலோமீட்டர் வேகத்துடன் 13 மணி நேரத்தில் தாம்பரம் சென்றடையும் வகையில் அட்டவணை ஏற்படுத்த வேண்டும்.
தாமிரபரணி எக்ஸ்பிரஸ்
செங்கோட்டையில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு தாம்பரம் சென்றடையு மாறும், தாம்பரத்தில் இரவு 8 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் வகையிலும் அட்டவணை ஏற்படுத்த வேண்டும்.
பிரதமர் மோடி கொடி யசைத்து தொடங்கிவைக்க உள்ள இந்த ரெயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மேலப்பாளையம் - நாங்குநேரி இடையே இரட்டை தண்டவாள அமைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் :
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் - நாங்குநேரி இடையே இரட்டை தண்டவாள அமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாகர்கோவில் - கோவை ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நாகர்கோவிலில் காலை7.35 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு வர வேண்டிய ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் நாளை (சனிக்கிழமை) கோவையில் காலை 8மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்ல வேண்டிய ரெயில் சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.இந்த தக–வலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
- ஹூப்ளியிலிருந்து தஞ்சாவூருக்கு சிறப்பு ரெயில் சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
- மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரெயில் தடத்துக்கு நிகழாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர்-ஹூப்ளி இடையே விரைவு ரெயில் சேவை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக இயக்கும் விதமாக ஹூப்ளியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்த ரெயில் தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் ஹூப்ளி நோக்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணிக்கு புறப்பட்டது.
அப்போது, இந்த ரெயிலில் பயணித்த பயணிகளுக்கு எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூரிலிருந்து மேற்கு நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கு போதுமான அளவுக்கு ரெயில் சேவை இல்லை என்கிற குறை இருந்து வந்தது. அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என ரெயில்வே வாரியத்திடம் நீண்ட காலமாக கேட்டு வருகிறோம்.
இந்த கோடை கால நெருக்கடியைக் குறைப்பதற்காக தற்காலிக சிறப்பு சேவையாக 5 முறை தஞ்சாவூரிலிருந்து ஹூப்ளிக்கும், ஹூப்ளியிலிருந்து தஞ்சாவூருக்கும் சிறப்பு ரெயில் சேவை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேலம், பெங்களூரு வழியாக இயக்கப்படுகிறது. இதற்கு மக்களிடம் உள்ள வரவேற்பைப் பொருத்து, இச்சேவையை நிரந்தரமாக்குவதற்கு ரெயில்வே அமைச்சரை சந்தித்து முயற்சி செய்வேன்.
தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு இப்போது உழவன் விரைவு ரயில் மட்டுமே புறப்பட்டுச் செல்கிறது. வைகை, பல்லவன் போன்று சோழன் விரைவு ரயிலையும் இன்டர்சிட்டி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறோம்.
தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை, மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய ரெயில் தடத்துக்கு நிகழாண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்துதலுக்கு அளவீடு செய்யப்பட்ட இடங்களில் புதிய குடியிருப்புகள் உருவாகிவிட்டன. பொதுமக்களின் கருத்தை அறிந்து புதிய தடம் போடுவதற்கு வேலை நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் செந்தில்குமார், நிலைய மேலாளர் ஜாகீர் ஹூசைன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- 26ம் தேதி திருச்சூர் வரை மட்டும் இயக்கப்படும்.
- சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர்-திருவனந்த புரம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள மேம்பாட்டு பணி நடப்பதால் குறிப்பிட்ட சில ரயில்களின் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை - திருவனந்தபுரம் மெயில் எக்ஸ்பிரஸ் எண்: 12623 வரும் 26ம் தேதி திருச்சூர் வரை மட்டும் இயக்கப்படும்.இதனால் அங்கமாலி, ஆலுவா, எர்ணாகுளம் டவுன், திரிபுனிதிரா, கோட்டயம், செங்கனச்சேரி, திருவல்லா, செங்கனுார், மாவேலிக்கரை, காயன்குளம், கொல்லம், வர்கலா, திருவனந்தபுரம் ஸ்டேஷன்களுக்கு, 26ம் தேதி அந்த ரயில் செல்லாது.
மறுமார்க்கமாக, 26ம் தேதி திருவனந்தபுரத்துக்கு பதில், திருச்சூரில் இருந்து சென்னைக்கு மெயில் எக்ஸ்பிரஸ் எண்: 12624 இயக்கப்படும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பூரி-காசி-அயோத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ரெயில் புறப்பட்டு சென்றது.
- சுற்றுலா ரெயில் மூலம் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் குறிப்பிடத்தக்க இடங்களுக்கு ரெயில் பயணிகள் சென்றுவரலாம்.
திருப்பதி:
நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும், பாரம்பரிய கோவில்களுக்கும் ரெயில்களை இயக்க, 'பாரத் கவுரவ்' திட்டம் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பறைசாற்றும் நோக்கிலும், ரெயில்வேக்கு வருவாய் கிடைக்கவும், தனியார் வாயிலாக இந்த ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
'இத்திட்டத்தில், ரெயில் பராமரிப்பு மற்றும் நிறுத்துமிடம் போன்ற வசதிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் உதவும். ரெயில்களை இயக்குவது மட்டுமே தனியார் நிறுவனங்களின் பணியாகும்.
தெலுங்கானா-ஆந்திரா மாநிலத்திற்கான முதல் பாரத் கவுரவ் ரெயில் இன்று செகந்திராபாத்லிருந்து இயக்கப்பட்டது.
பூரி-காசி-அயோத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ரெயில் புறப்பட்டு சென்றது.
இந்த ரெயில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள முக்கியமான மத, வரலாற்று மற்றும் கலாச்சார தளங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சுற்றுலா ரெயில் மூலம் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் உள்ள இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் குறிப்பிடத்தக்க இடங்களுக்கு ரெயில் பயணிகள் சென்றுவரலாம்.
குறைந்த செலவில் புனித இடங்களுக்கு பொதுமக்களை ரெயில்வே நிர்வாகம் அழைத்து செல்வதால் இந்த பாரத் கவுரவ் ரெயிலுக்கு பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது.
- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பல் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
- சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூரை சேர்ந்தவர் பால செல்வகுமார் (வயது 25). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பல் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.இவர் நேற்று விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை வரை செல்லும் பாசஞ்சர் ரெயிலில் சிதம்பரத்தி லிருந்து மயிலாடுதுறை செல்ல டிக்கெட் எடுத்துக்கொண்டு, நடைமேடையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் வரை செல்லும் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது. அதில் பாலசெல்வகுமார் ஏறினார்.ரெயில் விழுப்புரம் மார்க்கம் செல்வதாக தெரிந்த பிறகு வண்டியில் இருந்து கீழே இறங்கிய போது தவறி கீழே விழுந்தார்.
இதில் அவரது கால் துண்டானதுடன் தலையிலும் அடிபட்டது.படுகாயம் அடைந்த மருத்துவ கல்லூரி மாணவர் பால செல்வகுமாரை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். துண்டான காலும் பதப்படுத்தப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டது.
- நாகர். ரெயில் நிலையத்தில் முறையான அறிவிப்பு வெளியிடாததால் நடந்த சோகம்
- அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பாதியில் நிறுத்தினர்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னைக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரியில் இருந்து தினமும் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.55 மணிக்கு இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்து அடையும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு சென்னை செல்லும். இந்த ரயிலில் தினமும் கன்னியாகுமரி, நாகர்கோவிலில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்கி றார்கள். இதனால் கன்னி யாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினமும் கூட்டம் நிரம்பி வழியும்.
நேற்றும் மாலை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர். முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறுவதற்காக ரயிலின் பின்பகுதி மற்றும் முன்ப குதியில் பிளாட்பாரங்களில் பொதுமக்கள் காத்திருந்தனர். முன்பதிவு செய்யப் பட்ட பெட்டிகளில் ஏறுவ தற்கும் பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது கன்னியா குமரியில் இருந்து 5.45 மணிக்கு திப்ரூகர் செல்லும் ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதை பார்த்த பொதுமக்கள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் என்று சில பயணிகள் அந்த ரயிலில் முண்டியடித்துக் கொண்டு ஏறினார் கள். முதல் பிளாட்பாரத்தில் வந்திருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிறிது நேரத்தில் இங்கிருந்து புறப்பட்டு சென்றது.
ஒழுகினசேரி பகுதியில் ரயில் திரும்பிய போது பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயி லுக்கு பதிலாக வேறு ரயிலில் ஏறியதை உணர்ந்த பயணிகள் அபாய சங்கிலி யை பிடித்து இழுத்தனர்.இதைத் தொடர்ந்து ரயில் நடுவழியில் நின்றது. உடனடியாக ரயிலில் ஏறிய பயணிகள் அதிலிருந்து இறங்கினார்கள்.
பின்னர் அங்கிருந்து தண்டவாளம் வழியாக ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். ரயில் நடுவழியில் நின்றதையடுத்து ரயில்வே அதிகாரிகளும் போலீசாரும் அங்கு சென்று விசாரித்தனர். அப்போதுதான் ரயில் பயணிகள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் என்று தவறுதலாக ஏறி விட்டதாக கூறினார்கள். இதனால் நேற்று மாலை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் ரயில் நிலை யத்தில் உள்ள முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தது. திப்ரூகர் ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகள் இங்கு வந்து சேருவதற்கு முன்னதாகவே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாரானது. ரயில் பயணிகள் அவசரமாக ஓடி வந்து ரயிலை பிடித்தனர். பின்னர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ரயில் நிலையத்தில் சரி யான அறிவிப்புகள் வெளி யிடப்படவில்லை. கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயில் வரக்கூடிய நேரத்தில் கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகர் ரயில் வந்தது. அறிவிப்புகள் வெளியிடாததால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் என்று நினைத்து ரயிலில் ஏறி விட்டதாகவும் ரயில் நிலையத்தில் முறையான அறிவிப்புகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் தெரிவித்தனர்.
- உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே 5 முறை இயங்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
- உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07326) வருகிற 21, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய 5 நாட்கள் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.
சேலம்:
கர்நாடக மாநிலம் உப்பள்ளி-தஞ்சாவூர் இடையே 5 முறை இயங்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி-தஞ்சாவூர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 07325) வருகிற 20-ந்தேதி, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3, 10, 17, 24-ந்தேதி ஆகிய 5 நாட்கள் இரவு 8.25 மணிக்கு உப்பள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 2.15 மணிக்கு தஞ்சாவூரை சென்றடையும்.
மறுமார்க்கமாக தஞ்சாவூர்-எஸ்.எஸ்.எஸ். உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07326) வருகிற 21, அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந்தேதி ஆகிய 5 நாட்கள் தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு உப்பள்ளியை வந்தடையும்.
இந்த ரெயில் இருமார்க்கமாகவும் ஹாவேரி, ராணிபென்னூர், ஹரிகர், தாவணகெரே, பீரூர், அரிசிகெரே, துமகூரு, சிக்கபானவாரா, சர் எம்.விசுவேஸ்வரய்யா முனையம் பெங்களூரு, கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், கரூர், திருச்சி போர்ட், திருச்சி சந்திப்பு, பூதலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தென்மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.
- வெள்ளியன்று, கோவையில் புறப்படும் ெரயில் ஞாயிறு அன்று காலை ஜெய்ப்பூர் சென்றடையும்.
- சன்ட்ஹிர்தரம்நகர் நிலையத்திலும், விக்ரம்கர்ஹ்ஹலாட் நிலையத்தில் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் 6 மாதங்களுக்கு நின்று செல்லும்.
திருப்பூர் :
கோவையில் இருந்து ஜெய்ப்பூருக்கு இயக்கப்படும் வாராந்திர ரெயில் மத்திய பிரதேச மாநிலத்தில் கூடுதலாக இரு ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்:12969) இயக்கப்படுகிறது. வெள்ளியன்று, கோவையில் புறப்படும் ரெயில் ஞாயிறு அன்று காலை ஜெய்ப்பூர் சென்றடையும்.
மறுமார்க்கமாக செவ்வாய்க்கிழமை புறப்படும் ரெயில் வியாழன் மாலை கோவை வந்தடைகிறது. தமிழகத்தில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம், போபால் - செேஹார் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சன்ட்ஹிர்தரம்நகர் நிலையத்திலும், நாக்டா -ஷம்கர்ஹ் நிலையங்களுக்கு இடையே உள்ள விக்ரம்கர்ஹ்ஹலாட் நிலையத்தில் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் அடுத்த 6 மாதங்களுக்கு (அதாவது செப்டம்பர் 11 வரை) நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்