என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 174792"
- தஞ்சாவூரிலிருந்து இரவு 7. 40 மணிக்கு புறப்பட்டு ஹூப்ளிக்கு மறுநாள் காலை 12:30 மணிக்கு சென்றடையும்.
- ஏப்ரல் 25-ம் தேதி வரை முதல் கட்டமாக இயக்கப்பட இருக்கிறது.
தஞ்சாவூர்:
கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதிகளான ஹுப்ளி பெல்காம் உள்ளிட்ட இடங்களில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு பெருவாரியானயாத்திரிகர்கள் தினந்தோறும் வந்து தரிசித்து செல்கிறார்கள்.
அதேபோல் டெல்டா மாவட்டத்திலிருந்து கர்நாடகப் பகுதிகளில் வர்த்தகத் தொடர்பு இருந்து வருகிறது.
இதையடுத்து தஞ்சாவூர்- கும்பகோணம் ரெயில் பாதை அகல பாதையாக மாற்றப்பட்ட 2004-ம் ஆண்டு முதல் கும்பகோணத்தில் இருந்து பெல்காம் வரை நேரடி ரெயில் இயக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது.
இதேப்போல் பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூர் வரை சிறப்பு ரெயில் ஒன்றினை தென் மத்திய ரெயில்வே இயக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த ரெயில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8:25 மணிக்கு ஹூப்ளியில் புறப்பட்டு தாவனகரே, தும்கூர் ,கிருஷ்ணராஜபுரம், பைப்பனஹள்ளி (பெங்களூரு), சேலம், கரூர், திருச்சி, பூதலூர் வழியாக தஞ்சாவூருக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 2.15 மணிக்கு வந்தடையும்.
மறு மார்க்கத்தில் இந்த ரெயில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தஞ்சாவூரிலிருந்து இரவு 7. 40 மணிக்கு புறப்பட்டு அதே வழியாக ஹூப்ளிக்கு மறுநாள் காலை 12:30 மணிக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயில் மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை முதல் கட்டமாக இயக்கப்பட இருக்கிறது.
மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க செயலாளர் கிரி தெரிவித்துள்ளார்.
- ரெயில்வேயில் இந்த நிதியாண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக 28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள் மற்றும் லக்கேஜ் எடுத்து சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
தெற்கு மத்திய ரெயில்வேயில் இந்த நிதியாண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக 28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அவர்களிடம் இருந்து ரூ. 200.17 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2019-20-ம் நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.154.29 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது.
டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள் மற்றும் லக்கேஜ் எடுத்து சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
- சரக்கு ெரயில்கள் மூலமாக மைசூர், பெங்களூர், ராய்ச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது
- கோவையில் இருந்து பழங்கள், பொறியியல் பொருள்கள் புதுடெல்லி, குவா ஹாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பார்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோவை,
சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதி களில், சரக்கு ெரயில்கள் மூலமாக நடப்பு நிதியாண்டில் ரூ.282.58 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில்வே சேலம், ஈரோடு, திருப்பூர்,கோவை ெரயில் நிலையங்களில் இருந்து சரக்கு ெரயில்கள் மூலமாக உணவுப் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், துணிகள், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கோவை இருகூரில் இருந்து பெட்ரோலியப் பொருள்கள், சரக்கு ெரயில்கள் மூலமாக மைசூர், பெங்களூர், ராய்ச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
கரூர் அருகே உள்ள பாளையம் மற்றும் வீரராக்கியத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகள் சரக்கு ெரயில்கள் மூலமாக சேலம், ஈரோடு, திருப்பூர்,இருகூர், கூடல் நகர்( மதுரை) நெல்லை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப் பி வைக்கப்படுகின்றன. மேச்சேரி சாலை நிலையத்தில் இருந்து சரக்கு ெரயில் மூலமாக இரும்பு மற்றும் உலோகங்கள், காரைக்கால், சென்னை துறைமுகங்களுக்கு அனுப்பிவைக்கப்ப டுகின்றன.
சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ெரயில் நிலையங்களில் இருந்து சரக்கு ெரயில்கள் மூலமாக 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 28 லட்சத்து 81 ஆயிரத்து 722 டன் சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் மூலமாக சேலம் ெரயில்வே கோட்டத் துக்கு ரூ.282.58 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சரக்கு ெரயில்களில் பொருள்கள் அனுப்பப்பட்டு ரூ.241.47 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் 17.02 சதவீதம் சரக்கு ெரயில்களின் மூலமாக வருவாய் அதிகரித்துள்ளது.
கோவையில் இருந்து பழங்கள், பொறியியல் பொருள்கள் புதுடெல்லி, குவா ஹாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு பார்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
திருப்பூரில் இருந்து துணிகள், பருத்தி ஆடைகள் மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநி லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஈரோட்டில் இருந்து பாட்னா, மால்டா, குவாஹாட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு முட்டைகள் அனுப்படுகின்றன.சேலத்தில் இருந்தும் பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்ப டுகின்றன.
அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 31 ஆயிரத்து 391.60 குவிண்டால் பார்சல்கள் ெரயில்கள் மூலமாக அனுப்பப்பட்டு, ரூ. 1 கோடியே 85 லட்சத்து 87 ஆயிரம் வருவராய் ஈட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்று ரெயில்வே ஆய்வு கூட்டத்தில் வைகோ எம்.பி. வலியுறுத்தினார்.
- சென்னை- ஐதராபாத் இடையே 3 ஜோடி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
மதுரை
மதுரையில் இன்று தென்னக ரெயில்வே வளர்ச்சி ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். எம்.பி.க்கள் வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருது நகர்), ரவீந்திரநாத்குமார் (தேனி), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), திருநாவுக்கரசர் (திருச்சி), வேலுச்சாமி (திண்டுக்கல்), சண்முக சுந்தரம் (பொள்ளாச்சி), தனுஷ்குமார் (தென்காசி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதியில் நிறை வேற்றப்பட வேண்டிய ரெயில்வே வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினர். இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. பேசியதாவது:-
மதுரை கோட்டத்தில் விருதுநகர்- செங்கோட்டை இடையே அகல ரெயில் பாதை மாற்றப்பட்டபோது, கரிவலம் வந்தநல்லூர், சோழபுரம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட 2 ரெயில் நிலை யங்களையும் திறக்க வேண்டும்.
தெற்கு ரெயில்வேயின் சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை கோட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு திருவனந்தபுரம் ரெயில்வே தேர்வு வாரியம் ஆட்களைத் தேர்வு செய்கிறது. அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
நெல்லை-சென்னை எழும்பூர் இடையே இரட்டை ரெயில் பாதை பணி முடிந்துவிட்டது. எனவே கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே முக்கியமான வர்த்தக நகரங்களை இணைக்கும் வகையில் 4 ஜோடி டெமு ரெயில்களை இயக்க வேண்டும். அதனை சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்கு ன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடை ரோடு வழியாக இயக்கினால் பயணிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன் அடைவர்.
நெல்லை-மும்பை இடையே கொங்கன் ரெயில்வே வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. அதனை தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்ற வேண்டும். சேரன்மகாதேவி, கல்லிடை க்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம் மற்றும் பாவூர்சத்திரம் ஆகிய பகுதி களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கி ன்றனர். எனவே நெல்லை யில் இருந்து தென்காசி வழியாக சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும். செங்கோட்டை யில் இருந்து பெங்களூருவுக்கு நேரடி ரெயில் இயக்க வேண்டும்.
சென்னையில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில், சிவகாசியில் நிற்பது இல்லை. அங்கு நிறுத்தம் கொண்டு வர வேண்டும். நாகர்கோவில்- கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூரில் நின்று செல்ல வேண்டும், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இரு மார்க்கங்களிலும் திருமங்க லத்தில் நிறுத்தம் கொண்டு வர வேண்டும்.
சென்னை- ஐதராபாத் இடையே 3 ஜோடி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் தென் மாவட்டங்க ளில் இருந்து ஹைதரா பாத்துக்கு தினசரி நேரடி ரெயில் சேவை இல்லை. எனவே மேற்கண்ட ரயில் சேவையை நாகர்கோ வில் வரை நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து வெங்க டேசன் எம்.பி. பேசுகையில், மும்பை-புனே சிறப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டு, பயணிகளுக்கு சீசன் டிக்கெட் அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதே போல மதுரை- திருச்சி, மதுரை - நெல்லை ஆகிய பகுதி களை சிறப்பு மண்டலமாக அறிவித்து, பயணிகளுக்கு சீசன் டிக்கெட் வழங்க வேண்டும். மேட்டுப்பாளை யம்-மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வாரம் 3 நாட்கள் ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
- வேளாங்கண்ணி-எர்ணாகுளம் ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் நின்று செல்ல வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை வைத்துள்ளனர்.
- தொழில்துறை பிரிவு மாவட்ட துணை தலைவர் வேலாயுதம் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ரெயில் பயணிகளுக்கான வசதிகள் குழுவினர் 3 நாட்கள் மதுரை கோட்டத்திற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் ஆய்வு பணியில் ஈடுபட்ட னர். ரெயில் பயணிகள் வசதிகள் குழு உறுப்பினர்க ளான ரவிசந்திரன், மதுசுதானா, கோட்டளா உமாராணி, அபிஜித் தாஸ் உள்ளிட்டோர் விருதுநகர், ஸ்ரீவில்லி புத்தூர், ராஜபாளையம் ரெயில் நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்தில் ''ஒரு நிலையம் ஒரு பொருள்'' திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள பால்கோவா விற்பனை நிலையம், மாற்று திறனாளி களுக்கான சுகாதார வளாகம், நடைமேடை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.அப்போது ரெயில் பயணிகள் சேவை குழு உறுப்பினர்களிடம், சென்னை-கொல்லம் ரெயில் சிவகாசியிலும், வேளாங்கண்ணி- எர்ணாகுளம் ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் நின்று செல்ல வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரில் 22 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு நடைமேடை உள்ளதால் 24 பெட்டிகள் கொண்ட பொதிகை விரைவு ரெயிலில் ஏறுவதற்கு பயணிகள் சிரமப்படுகின்றனர்.
அதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடை மேடையை விரிவாக்கம் செய்து முதல் வகுப்பு ஓய்வு அறை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பா.ஜ.க. தொழில்துறை பிரிவு மாவட்ட துணை தலைவர் வேலாயுதம் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர்.
- ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் வடகரை சாலையில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையின் மேலே உள்ள தண்டவாளத்தில் ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக விருதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து விருதுநகர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார், ரெயில்வே போலீஸ் படையை சேர்ந்த செல்வராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயில் மோதி பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், பலியான வாலிபர் திருமங்கலத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கதிரவன் (வயது 23) என்றும், அவர் நேற்று இரவு வீட்டுக்கு தாமதமாக வந்ததால் பெற்றோர் கண்டித்ததாகவும், இதில் மனமுடைந்த அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 12 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நெல்லை-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து தென்காசி வரை 121 கிலோமீட்டர் அதிவேகத்தில் ரெயில் இயக்கி சோதனை செய்யப்பட இருக்கிறது. வருகிற 9-ந்தேதி நெல்லையில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் அதிவேக ரெயிலானது 10.15 மணிக்கு தென்காசி சென்றடையும்.
மறுமார்க்கத்தில் தென்காசியில் இருந்து 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் மதியம் 12 மணிக்கு நெல்லை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நெல்லை-திருச்செந்தூர் இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. சோதனை முடிந்த பின் நெல்லையில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 8.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், நெல்லை-சென்னை இடையே இரட்டை அகல ரெயில் பாதை பணிகள் 100 சதவீதம் முடிவடைந்து விட்டதால் 8 மணி நேரத்தில் சென்னை செல்லும் வகையில் பகல் நேர தேஜாஸ், வந்தே பாரத் போன்ற ரெயில்கள் இயக்க வேண்டும் என்றனர்.
- பாலக்காடு ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் எம்.பி.,க்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது.
- கோவை-மதுரை இடையிலான ரெயில் வழித்தடத்தில் இப்போது நான்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
உடுமலை :
பாலக்காடு ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் அந்த கோட்டத்துக்கு உட்பட்ட எம்.பி.,க்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை வகித்தார். கிணத்துக்கடவு-பொள்ளாச்சி இடையிலான 24 கி.மீ., ெரயில் வழித்தடம் பாலக்காடு கோட்டத்தில் இடம் பெறுவதால் பொள்ளாச்சி எம்.பி.,க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்த கூட்டத்தில் பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் பேசியதாவது:-
கோவை-பொள்ளாச்சி-பழனி-மதுரை இடையிலான ரெயில் வழித்தடத்தில் இப்போது நான்கு ெரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஆனால் 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே வழித்தடத்தில் 9 ரெயில்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 1,200 கோடி ரூபாய் இந்த வழித்தடத்தை அகலப்படுத்த அரசு செலவிட்டுள்ளது. இவ்வளவு செலவழித்தும் பழைய ரெயில்களை இயக்காததால் மக்களுக்கும் பயனில்லை. ரெயில்வே துறைக்கும் வருவாய் இல்லாமல் உள்ளது. எனவே, பழைய ரெயில்கள் அனைத்தையும் மீண்டும் இயக்க வேண்டும்.
அதேபோன்று பொள்ளாச்சி -பழனி வழித்தடத்தில், கோவை-மதுரை இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை காலையில் கோவையில் புறப்படும் வகையில் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை வழியாக பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ெரயில், பாலக்காட்டிலிருந்து 'லோகோ பைலட்' தாமதமாக வருவதால் ஒவ்வொரு வாரமும் அரை மணி நேரம், ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படுகிறது. அதை உரிய நேரத்தில் இயக்குவதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தஞ்சையில் ரெயில் மோதி பெண் பலியானார்.
- ரெயில்வே தண்டவாளத்தில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி பிணமாக கிடந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த குளிக்க ரை- கொரடாச்சேரிக்கு இடைப்பட்ட ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, கால்கள் துண்டாகி பிணமாக கிடந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக தஞ்சாவூர் ரெயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவுப்படி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் குமார், சுரேஷ், ஏட்டு சரவண செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர்.
ஆனால் இறந்து கிடந்தவர் யார் ? எந்த ஊர்? என்று விபரம் தெரியவில்லை.இதை அடுத்து அந்த பெண்ணின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரயிலில் அடிப்பட்டு அந்த பெண் இறந்தாரா ? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் பெட்டி ஓட்டலில் 40 பேர் ஒரே நேரத்தில் சாப்பிட வசதி செய்யப்படுகிறது.
- ரெயில் பெட்டியின் உள்பகுதி பயணிகள் மகிழ்ச்சியாக உணவு அருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
சென்னை:
பயணிகள் பயணத்தை தொடங்குவதற்கு முன்பு ரெயில் பெட்டியிலேயே உணவு சாப்பிடக்கூடிய வசதியை தெற்கு ரெயில்வே ஏற்படுத்துகிறது. ரெயில் பெட்டியை ஓட்டல் போல வடிவமைத்து அங்கு அமர்ந்து உணவு சாப்பிடக்கூடிய சூழலை உருவாக்குகிறது.
சென்னை சென்ட்ரல், பெரம்பூர், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர் ஆகிய ரெயில் நிலையங்களில் முதல் கட்டமாக இந்த ரெயில் பெட்டி ஓட்டல் அமைகிறது. பயன்படுத்தப்படாத ரெயில் பெட்டிகளை மறுசீரமைத்து ரெயில் நிலையங்களை ஒட்டிய பகுதியில் நிறுவி ரெயிலில் சாப்பிடக்கூடிய உணர்வை ஏற்படுத்தும் வகையில் இது அமைகிறது.
ரெயில் பெட்டி ஓட்டல் நடத்தும் உரிமம் தனியாருக்கு கொடுக்கப்படுகிறது. ரெயில் பெட்டி மற்றும் அதனை வைக்கக்கூடிய இடம் ஆகியவற்றை வழங்குகிறது. அதனை அவர்கள் ஓட்டல் போன்று மாற்றி அமைக்க வேண்டும்.
பயணிகள் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையில் மேஜை, இருக்கைகள், கைகழுவும் இடம், உணவு தயாரிக்கும் இடம் போன்றவை அந்த பெட்டியில் இருக்கும். ஓடும் ரெயிலில் சாப்பிடுகிற சூழலை தனியார் நிறுவனம் நிறுவுகிறது. இந்த ஓட்டல் 24 மணி நேரமும் செயல்படும். ரெயில் பெட்டி ஓட்டலில் 40 பேர் ஒரே நேரத்தில் சாப்பிட வசதி செய்யப்படுகிறது. ரெயில் பெட்டியின் உள்பகுதி பயணிகள் மகிழ்ச்சியாக உணவு அருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் தினமும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு சாப்பிடுவதற்கு போதுமான ஓட்டல்கள் இல்லை. அதனால் அங்கு ரெயில் பெட்டி ஓட்டல் அமையும் பட்சத்தில் உதவியாக இருக்கும் என்றும், அதேபோல காட்டாங்கொளத்தூரில் அமைகின்ற ஓட்டல் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு அதிக பயன் உள்ளதாக இருக்கும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான ஆன்லைன் டெண்டர் விரைவில் விடுவதற்கு சென்னை ரெயில்வே கோட்டம் தயாராக உள்ளது.
- தஞ்சாவூர்- அரியலூர் ரெயில் தடம் அமைப்பதன் மூலம் இந்த 150 கிலோ மீட்டர் தூரம் குறைக்கப்படும்.
- கும்பகோணத்தில் வரும் 2028-ம் ஆண்டு மகாமக திருவிழா நடைபெற இருக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மேயர் சண். ராமநாதன் தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் மேத்தா, கோபால், கேசவன், கலைவாணி சிவக்குமார் உள்ளிட்ட பலரும் தங்களது வார்டு சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.
இதையடுத்து மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது :-
திருச்சியில் இருந்து திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவு ரெயில், திருச்சி - பாலக்காடு விரைவு ரெயில் மற்றும் திருச்சி- ஹவுரா (வாரம் இருமுறை இயக்கி) விரைவு ரெயில்களை தஞ்சாவூர் வரை நீட்டிப்பு செய்து தர வேண்டும்.
மதுரையில் இருந்து காசி விரைவு ரெயிலை தஞ்சாவூர் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
கடந்த 45 வருடங்களாக தஞ்சாவூர், அரியலூரை இணைக்கும் வகையில் உத்தேசமாக 45 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையை அமைக்க 2018 ஆம் ஆண்டு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்டது.
மேலும் நாகப்பட்டினத்தில் இருந்து ரெயில் மூலம் எடுத்து வரப்படும் நிலக்கரி தற்சமயம் 150 கிலோமீட்டர் தூரம் திருச்சி வழியாக அரியலூர் சென்று பின் சென்னை கொண்டு செல்லப்படுகிறது.
இதனை மாற்றி தஞ்சாவூர்- அரியலூர் ரயில் தடம் அமைப்பதன் மூலம் இந்த 150 கிலோ மீட்டர் தூரம் குறைக்கப்படும்.
கும்பகோணத்தில் வரும் 2028 ஆம் ஆண்டு மகாமகம் திருவிழா நடைபெற இருக்கிறது.
விழாவுக்கு இந்தியா முழுவதும் இருந்து ஏறக்குறைய 15 லட்சம் முதல் 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மேற்கண்ட நிகழ்வுகளை கருத்தில் கொண்டு ரெயில் சேவை நீட்டிப்பு, புதிய ரெயில் சேவைகள் மற்றும் தஞ்சாவூர்- அரியலூர் ரயில் பாதை அமைப்பது ஆகிய கோரிக்கைகளை நிறைவே ற்றிட ரயில்வே துறையை கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரிய கோவிலில் வாகனம் நிறுத்துவதற்கும் போதிய இட வசதி இல்லாமல் உள்ளது. ஏற்கனவே ராஜா மிராசு மருத்துவமனையின் ஒரு பகுதி வாகனம் ஏற்றுவதற்காக ஒதுக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும் வாகன நிறுத்துவதற்கும் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தை கட்டாய நில எடுக்கும் மூலம் கையகப்படுத்தவும் மற்றும் அதற்கு உண்டான செலவின தொகையை மாநகராட்சி ஏற்கும் எனவும் அனுமதி பெறப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி பேசும்போது, மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா பெயரை தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் உள்ள ஓரு வணிக வளாகத்துக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் இளநிலை பொறியாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) ஆகிய ரெயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
- கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) கோவையில் இருந்து நாளை காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.
சேலம்:
அரக்கோணம்-காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வாலாஜா ரோடு ரெயில் நிலையம் பகுதியில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
இதையொட்டி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) மற்றும் சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) ஆகிய ரெயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்ப டுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
அதன்படி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) கோவையில் இருந்து நாளை காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.
காட்பாடி முதல் சென்னை சென்ட்ரல் வரை செல்லாது. இதே போல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை வரை செல்லும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்