search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 178004"

    • இருச்சக்கர வாகன விபத்தில் சிக்கி இறந்தாரா? போலீசார் விசாரணை
    • சாலையின் ஓரம் வாலிபர் ஒருவர் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    கன்னியாகுமரி:

    அஞ்சுகிராமத்தை அடுத்த காணிமடம் பகுதியில் ஏராளமான தொழிலாளிகள் வசித்து வருகிறார்கள்.

    இன்று காலை தொழிலாளிகள் சிலர் காணிமடம் பகுதியில் நடந்து சென்றனர். அப்போது சாலையின் ஓரம் வாலிபர் ஒருவர் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரை சுற்றி ரத்தம் உறைந்து கிடந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளிகள் இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இறந்து கிடந்த வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் காணிமடம் பகுதியை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தனர்.

    இதில் பிரகாஷ் நேற்றிரவு நண்பரின் இருச்சக்கர வாகனத்தை வாங்கி கொண்டு வெளியே சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள காண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பிரகாஷ், நண்பரின் இரு சக்கர வாகனத்தில் காணி மடம் சாலையில் வேகமாக செல்லும் போது விபத்தில் சிக்கி பலியாகி இருக்கலாம் என தெரிகிறது.

    இருச்சக்கர வாகனம், சாலையின் சென்டர் மீடியனில் மோதி அவரது தலை துண்டாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காணிமடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அடையாளம் காண முடியாததால் காணாமல் போனவர்களின் விவரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
    • அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறை நகரம் 4-ம் நம்பர் புதுத்தெருவில் மேட்டுத்தெரு குளம் உள்ளது. இந்த குளத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குளத்தில் அழுகிய நிலையில் கிடந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்து கிடந்தவர் பச்சைநிற கோடு போட்ட சட்டை அணிந்துள்ளார்.

    இவர் யார் என்று அடையாளம் காண முடியாததால் கடந்த 3 தினங்களில் காணாமல் போனவர்களின் விவரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதையடுத்து கைப்பற்றப்பட்ட உடலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மிதந்தார்
    • இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கிருஷ்ணன்(வயது 19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்கு விடுதியில் தங்கிருந்த அவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் பரவாய் கிராமத்திற்கு வந்தார்.இதையடுத்து கடந்த 8-ந் தேதி மாலை தனது தாய் உமாவிடம் அருகில் உள்ள வேப்பூர் கிராமத்திற்கு சென்று வருவதாக அவர் கூறி சென்றார்.ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் பல இடங்களில் கிருஷ்ணனை தேடியும், அவர் கிடைக்காததால் இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசில் உமா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.இந்நிலையில் நேற்று காலை பரவாய் கிராமத்தில் இருந்து ஆண்டி குரும்பலூர் செல்லும் சாலையில் புளியந்தோப்பு அருகில் உள்ள ஒரு கிணற்றில் வாலிபரின் உடல் மிதப்பதாக தகவல் பரவியது.இதையடுத்து கிருஷ்ணனின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.அப்போது கிணற்றில் பிணமாக மிதந்தது கிருஷ்ணன்தான் என்று தெரிவித்தனர்.

    மேலும் உடனடியாக வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கும், குன்னம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மிதந்த கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்துபோன கிருஷ்ணன் அவரது பெற்றோருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து பிறந்த ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது
    • இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மீமிசல் காவல் சரகத்திற்குட்பட்ட கோபாலட்டினம் கடற்கரையில் அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதிமக்கள் மீமிசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துள்ள நபர் குங்கும நிற சட்டையும், கருஊதா பேண்ட்டும் அணிந்திருந்தார். அடையாளம் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள போலீசார் கேட்டுக் கொண்டனர்.

    • கறம்பக்குடி சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம் கிடந்தது
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பெரிய ஆறு பகுதியில் கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில், சாலை ஓரத்தில் அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி, அடையாளம் தெரியாத 70 வயதான மூதாட்டி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி, புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


    • அரியலூர் வெள்ளாற்றில் ஆண் பிணம் கிடந்தது
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தெத்தேரியில் இருந்து செம்பேரி இடையே உள்ள வெள்ளாற்று கரையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுபான கடை அருகே உள்ள சாக்கடையில் வாலிபர் பிணம் கிடந்தது
    • திருச்சி பொன்மலை உடலை கைப்பற்றி விசாரணை

    திருச்சி

    திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 38).இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். இதற்கிடையே குடிப் பழக்கத்திற்கும் ஆளானார். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் நேற்று இரவு மது அருந்திவிட்டு அருகில் உள்ள சாக்கடை அருகே ஒரு திட்டில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக லோகநாதன் கழிவு நீர்சாக்கடைக்குள் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இன்று காலையில் அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் லோகநாதன் பிணமாக கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பொன்மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • ராமு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்தார்
    • ரைஸ் மில் வளாகத்தில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.

    கடலூர்:

    கடலூர் புது வண்டிப் பாளையத்தை சேர்ந்தவர் ராமு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் ரைஸ்மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ராமு ரைஸ் மில் வளாகத்தில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டிருந்தார். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து இறந்த ராமுவின் உறவினர் வாசுதேவன், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில், இறந்த ராமுவின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்தார். அதன் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சாவில் மர்மம் உள்ளதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 50 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து பல்லடம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அடையாளம் தெரியாத முதியவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.
    • எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை சிதைந்து, கை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதைக் கண்ட அந்த பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இறந்தவர் ரெயி லில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்தும், அந்த பகுதியில் காணாமல் போனவர்கள் பட்டியல் எடுத்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே தோட்டத்து கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் நதியா(வயது23).

    நர்சிங் முடித்துள்ள இவருக்கு மனநல பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கற்பகம் வேலைக்கு செல்லு ம்போது மகளையும் உடன் அழைத்துச்சென்று வந்தார்.

    சம்பவத்தன்று கற்பகம் வேலைக்கு செல்லும்போது மகளை வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு நதியா வரவில்லை என கூறி மறுத்து விட்டார். இதையடுத்து கற்பகம் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களிடம் மகளை பார்த்துக்கொள்ளுமாறு கூறி வேலைக்கு சென்று விட்டார்.

    இந்தநிலையில் வீட்டில் இருந்த நதியா திடீரென மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்த கற்பகம் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

    இதற்கிடையே அதே ஊரை சேர்ந்த அனந்த பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் நதியா பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைத்தனர். நதியா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மூதாட்டி கிணற்றில் பிணமாக மிதந்தார்.
    • இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தாதம்பட்டி நகர்ப்புற சாலையில் பக்கத்தில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரங்கள் தெரியவில்லை. இது குறித்து தாதம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    ×