search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காயம்"

    • வேப்பந்தட்ையில் வீட்டின் மேற்கூறை விழுந்து 4 பேர் காயம் அடைந்தனர்.
    • இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது41). விவசாயியான இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். நேற்று அவரது மனைவி காமாட்சி, உறவினர்கள் அரசலூரை சேர்ந்த கண்ணன், சங்கர் ஆகிய 4 பேரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேற்கூறையில் உள்ள சிமெண்ட் பூச்சி திடீரென உதிர்ந்து கீேழ விழுந்தது. அதில் 4 பேரும் காயமடைந்தனர். பின்னர் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • கோயம்புத்தூரில் இருந்து 12 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர்.
    • லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

    வெள்ளகோவில் :

    கோயம்புத்தூரில் இருந்து 12 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணி செல்வதற்காக ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர். காங்கேயம் அடுத்து கொழிஞ்சி காட்டு வலசு பிரிவு என்ற இடத்தில் வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரில் திருச்சியில் இருந்து கோயம்புத்தூரை நோக்கி வந்த லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வேனை ஓட்டி வந்த பிரதாப் (வயது 22) மற்றும் வேனில் பயணம் செய்த செரில் (14) ,மேரி (70), ஷருண்(14),மேஜோ (59), கில்சர் (49) ஆகியோர் காயமடைந்தனர்.

    உடனே அந்த வழியாக வந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

    • கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து குதித்த மாணவர் காயமடைந்தார்
    • பேராசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது

    கரூர்:

    கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகேயுள்ள பிள்ளபாளையத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் கொடையூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் குட்கா பயன்படுத்தியதாகவும், இதை பார்த்த பேராசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மாணவர் கல்லூரியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்ததால் கால் ம ற்றும் கையில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். தொடர்ந்து சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மோதி ஒருவர் காயமடைந்தார்
    • நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது விபத்து

    கரூர்:

    கரூர் மாவட்டம் லாலாப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). இவர் சம்பவத்தன்று லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப் பகுதியில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப் போது அந்த வழியாக வந்த கார், சரவணன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வந்த புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • கிராமமக்கள் 10 பேரை மரத்தில் இருந்த கதண்டு பூச்சிகள் கடித்துவிட்டன.
    • மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    சுவாமிமலை:

    திருவிடைமருதூர் அடுத்த பந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காமாட்சிபுரத்தை சேர்ந்த மாணவ- மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். நாள்தோறும் அவர்கள் காமாட்சிபுரத்தில் இருந்து பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம்.

    அதன்படி, இன்று வழக்கம்போல் பள்ளிக்கு பந்தநல்லூர் சாலையில் குடோன் அருகே உள்ளம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது சுமார் 20 மாணவ- மாணவிகள் மற்றும் அவ்வழியாக சென்ற கிராமமக்கள் 10 பேரை மரத்தில் இருந்த கதண்டு பூச்சிகள் கடித்துவிட்டன.

    இதில் காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோணலபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆலமரக்கிளை முறிந்து விழுந்ததில் மூதாட்சி காயமடைந்தார்
    • 150 ஆண்டு பழமை வாய்ந்த மரம்

    புதுக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை அருகே கோமாபுரம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராமசாமி மனைவி மணியம்மை (வயது 65). இவர் வீட்டின் அருகில் சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த ஆலமரம் வீதியில் இருப்பதால் அந்த வீதியை ஆலமர தெரு என்று அந்த பகுதி மக்கள் அழைத்து வந்தனர். இந்த நிலையில் பழமை வாய்ந்த இந்த ஆலமரம் 3 ஆண்டுகளுக்கு முன் வீசிய கஜா புயலையும் எதிர்கொண்டு நிமிந்து நின்றது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கிளைகளில் நீர் தேங்கி கனம் தாங்காமல் மிகப்பெரிய ஆலமரக்கிளை ஒன்று மணியம்மை வீட்டின் மீது விழுந்தது. இதில் மணியம்மை காயம் அடைந்தார். தகவல் அறிந்த கந்தர்வகோட்டை காவல்துறை ஆய்வாளர் செந்தில் மாறன் தலைமையில் காவலர்கள் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயம் அடைந்த மணியம்மையை மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் ஆல மரத்தின் கிளைகளை அப்புறப்படுத்தி பொதுமக்கள் செல்வதற்கான பாதையை சரி செய்து கொடுத்தனர். ஆலமரத்தின் கிளைகள் பகல் நேரத்தில் விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் கூறினர்.

    • நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற டிரைவர் மீது வழக்கு
    • பெண் புகாரின் பேரில் போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணை

    கன்னியாகுமரி:

    தமிழக அரசு மகளிர் பயன் பெறும் வகையில் இலவச பஸ் சேவையை இயக்கி வருகிறது. இந்த பஸ்சை பெண்கள் அடையாளம் காணும் வகையில் தனி நிறத்துடன் இயக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த பஸ்கள் நிறுத்தங்களில் நிற்பதில்லை, கண்டக்டர்கள், இலவச பய ணம் என்பதால் பெண்களை சரியாக மதிப்பதில்லை என பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அதிகா ரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த சூழலில் குமரி மாவட்டத்தில் நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற பஸ்சில் ஏற முயன்றபோது ஆசிரியை ஒருவர் தவறி கீேழ விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் சென்ற அரசு பஸ், திருவட்டார் அருகே உள்ள புலியிறங்கி பகுதி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சிறிது தூரம் சென்று நின்றது. இதனால் ஓடி சென்று ஏற முயன்ற தனியார் பள்ளி ஆசிரியை மேரி கிளாட்லின், படிக்கட்டில் கால் வைத்த போது தவறி விழுந்து காயம் அடைந்தார்.

    அவரை அந்த பகுதி யில் நின்ற மக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயற்சித்தனர். ஆனால் காயமடைந்த ஆசிரியை மேரி கிளாட்லின் ஆவேச மடைந்து இலவச பேருந்து நாங்கள் கேட்கவில்லை, பெரும்பாலான பேருந்துகள் பெண்கள் நின்றால் பேருந்து நிலையத்தில் நிற்காமல் செல்கின்றன.

    நிறுத்தத்தை தாண்டி நிறுத்திய பேருந்தில் ஏற முயன்ற போது தான் எனக்கு உடம்பு முழுவதும் காயமும் ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் அங்கு நின்று அழுதபடி கூறினார். இது தொடர்பாக அவர் சம்மந்தப்பட்ட பணிமனை யிலும் புகார் அளித்தார்.

    திருவட்டார் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.போலீசார் புகாரை பெற்று கொண்டு வழக்குபதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட பஸ் திருவட்டார் பணிமனையை சேர்ந்தது என தெரியவந்தது. பெண் புகாரின் பேரில் போக்குவரத்து அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவட்டாறு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து சரியாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை என்றும் தினமும் காலை, மாலை வேளைகளில் பள்ளி கல்லூரிக்கு மற்றும் வேலைக்கு செல்பவர்களும் காத்து நின்றால் பஸ்கள் வருவதில்லை. இதனால் மாணவ- மாணவிகள் வெகு தூரம் நடந்து சென்று மாற்று இடத்தில் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது என்றும் பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒரு டப்பாவில் அடைத்து கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்றார்.
    • மருத்துவ உதவியாளர் பாம்பின் வாலில் அடிபட்ட காயத்துக்கு மருந்து வைத்து சிகிச்சை அளித்தார்.

    சீர்காழி:

    சீர்காழி இரணிய நகர் பகுதியில் பொது குடிநீர் குழாய் அருகே இன்று சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு படம் எடுத்த படி சீறிக் கொண்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பாம்பு பிடி நபர் சீர்காழியை சேர்ந்த பாண்டியனுக்கு தகவல் அளித்தனர்.

    அதன்படி அங்கு சென்ற பாண்டியன் நல்ல பாம்பினை லாவகமாக பிடித்தார்.

    அப்போது பாம்பின் வால் பகுதியில் முள் குத்தி காயம் ஏற்பட்டிருந்ததை கண்ட பாண்டியன் அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தார்.

    பிடிபட்ட பாம்பினை ஒரு டப்பாவில் அடைத்து சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.

    அங்கு பணியில் இருந்த மருத்துவ உதவியாளர் தகவல் தெரிவித்தார்.

    மருத்துவ உதவியாளர் பாம்பின் வாலில் அடிபட்ட காயத்துக்கு மருந்து வைத்து சிகிச்சை அளித்தார்.

    சிகிச்சை அளிக்கப்பட்ட பாம்பினை பாண்டியன் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டார்.`

    • பாதையில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும்.
    • வாகன ஓட்டுடிகளின் கண்களை பாதிக்காத அளவில் குறைந்த அளவு வெளிச்சத்தை பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கவும், பயணத்தில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளவும் தஞ்சை நகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவுடன் இணைந்து ஜோதி அறக்கட்டளை சார்பில் தமிழர்களின் பாரம்பரிய கலையான பறை இசை மூலம் பொதுமக்களிடம் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இரு சக்கர, நான்கு சக்கர, கனரக வாகன ஓட்டுனர்களிடம், பொதுமக்களிடமும் சாலை பாதுகாப்பு குறித்த விதிகளை விளக்கி கூறி பறை இசை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    சாலை பாதுகாப்பு விதிகளின் முக்கிய நோக்கமே பாதையில் நடந்து செல்பவர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதாகும்.

    வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை சாலை விதிகளை சரியாக கடைப்பிடிப்பதன் மூலம் தவிர்க்க இயலும்.

    இரவில் வாகனம் ஓட்டும்போது எதிரே வரும் வாகன ஓட்டுடிகளின் கண்களை பாதிக்காத அளவில் குறைந்த அளவு வெளிச்சத்தை பயன்படுத்த வேண்டும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.

    மேலும், அவ்வழியாக வந்த இரு சக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஓட்டினார்.

    விழாவில் ஜோதி அறக்கட்டளை சார்பில் பறை இசைத்து பொதுமக்களிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சாலை பாதுகாப்பு குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய தஞ்சை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார்களையும், ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகளையும் பொதுமக்கள் பாராட்டினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, அறக்கட்டளை மாணவ தன்னார்வலர்கள் ஆர்த்தி, காயத்ரி ராமச்சந்திரன், பூவிழி வீரமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • வாகன விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் காயம் அடைந்தனர்
    • டிரைவரை போலீசார் கைது செய்தனர்

    பெரம்பலூர்

    சென்னையை அடுத்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது46). இவரும், இவரது மகள் யாமஸ்ரீ (9) ஆகியோரும் ஒரு காரில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த காரை சென்னையைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (50) ஓட்டி வந்தார். திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே டிப்பர் லாரி ஒன்று சமிக்ஞை செய்யாமல் திடீரென வலது புறத்திலிருந்து இடது புறத்துக்கு திரும்பிய போது அதை பின் தொடர்ந்து வந்த கார், லாரி மீது மோதியது. இதில் கார் ஓட்டுநர் சுந்தர்ராஜ், காரில் பயணம் செய்த பாக்கியராஜ், யாமஸ்ரீ ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர். 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரான கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த அருண் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி மலட்டாற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது தனியார் பஸ்க்கு முன்பு டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது.
    • இதனை தொடர்ந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு புதுவை மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்

    கடலூர்:

    திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூருக்கு நேற்று தனியார் பஸ்சை செஞ்சியை சேர்ந்த சிவா (வயது 26) என்பவர் பயணிகளை ஏற்றுக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி மலட்டாற்று பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது தனியார் பஸ்க்கு முன்பு டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிப்பர் லாரி பிரேக் அடித்ததால் பின்னால் வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழுந்து பலத்த சத்தத்துடன் லாரி மீது மோதி நின்றது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறி துடித்து பஸ்ஸில் பயணம் செய்த 10 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு புதுவை மாநிலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் முருகேசன் (வயது 50) கலைவாணி (வயது 36) சுகுணா (வயது 20) மாரியம்மாள் (33), மணிமாறன் (50), பிருந்தாவதி (65), மோகன் (39), விஜயலட்சுமி (49), சக்திவேல் (47), ராஜேந்திரன் (58), பார்த்திபன் (35), முருகானந்தம் (42), தாயம்மாள் (40) ஆகிய 13 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் கடலூர் - புதுச்சேரி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • கார் மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
    • விபத்தில் கேசவன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளை பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 67).

    இவர் சேந்த மங்கலத்தில் உணவகம் வைத்து நடத்தி வருகிறார். தனது உணவகத்தில் இருந்து அருகில் உள்ள பேக்கரிக்கு தினமும் அவர் உணவு பொருட்களை கொண்டு சென்று கொடுப்பது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று திருவாரூர் கடை தெருவிற்கு சென்று வீட்டிற்கு தேவை யான காய்கறிகளை வாங்கிக் கொண்டு சேந்தமங்க லத்திற்கு வந்துள்ளார்.

    அங்கு அவரது உணவகத்திலிருந்து உணவு பொருட்களை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று கொடுத்துவிட்டு, பேக்கரி வாசலில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு செல்வதற்காக திருவாரூர்-மயிலாடு துறை சாலையில் சென்றுள்ளார்.

    அப்போது திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் மோட்டார் சைக்கிள் பின்புறத்தில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை மீட்டனர்.

    விபத்தில் கேசவன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×