என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 190025"
- பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை.
- அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வந்தனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.
இதனையடுத்து பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர். அதன்படி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பிறகு விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை பதக்கங்களை வீச முடிவெடுத்துள்ளனர்.
மேலும் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
- 16 மாவட்டங்களை சேர்ந்த 56 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.
- வெற்றிபெறும் அணிக்கு கோப்பைகளும், அணியை சேர்ந்த 20 பேருக்கு பதக்கங்களும் வழங்கப்படும்.
திருவாரூர்:
மாநில தரைப்பந்து கழகம் மற்றும் திருவாரூர் மாவட்ட தரைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான 16-வது தரைப்பந்து போட்டி திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியினை திருவாரூர் மாவட்ட தரைப்பந்து கழகத் தலைவர் ஹபீப் முஹமது தொடங்கி வைத்தார்.
இதில் மாநில தரைப்பந்து கழக செயலாளர் விஷ்ணுவிகாஷ், மாவட்ட தரைப்பந்து கழக செயலாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி 14 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலருக்கும் நடைபெறுகிறது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, கிரு ஷ்ணகிரி, கன்னியாகுமரி, தென்காசி, நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்த 56 அணிகள் பங்கு பெறுகின்றன.
ஒவ்வொரு அணியும் மூன்று முறை மற்ற அணிகளுடன் மோத உள்ளன.
இதில் இரண்டு பிரிவுகளிலும் தேர்வாகும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.
இந்த போட்டி இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.
இதில் ஒரு அணிக்கு 20 நபர்கள் இருப்பார்கள். இதில் 6 நபர்கள் மட்டுமே களத்தில் விளையாடுவார்கள்.
மீதமுள்ள 14 நபர்கள் மாற்று ஆட்டக்காரர்களாக பயன்படுத்தப்படுவார்கள்.
மேலும் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
வெற்றி பெறும் அணிக்கு கோப்பைகளும் அணியைச் சேர்ந்த 20 நபர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
- பளுதூக்குதலில் பதக்கம் வென்ற சிவா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சீர்காழி:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் இந்தியா மாவட்ட விளையாட்டு மையம் திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியை மயிலாடுதுறை வருவாய் மாவட்ட மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் அழைப்பினை ஏற்று சீர்காழி நகரம் மற்றும் சீர்காழி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்தும் ஆக்கூர் மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் போன்ற பகுதிகளில் இருந்தும் 400க்கு மேற்பட்ட 6 முதல் 11 வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகள் பளுதூக்குதல் பயிற்சியில் பங்குப்பெற கலந்து கொண்டனர்.
அதிலிருந்து 50 மாணவர்கள், 50 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தினசரி காலை 6 மணி முதல் 8மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 வரை பயிற்சியளிக்க தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சிக்காக அகில இந்திய பளுதூக்குதலில் பதக்கம் வென்ற சிவா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துலாஷா பங்கேற்று முகாம் விதிகளை பற்றியும் பயிற்சி முறைகளை பற்றியும் விளக்கினார்.
மேலும் ஆக்கூர் ஓரியண்டல் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஷாஜகான், வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ஷங்கர், மற்றும் ஆசிரியர் ராதாகிருஷ்ணன், எஸ். டி. ஏ. டி அலுவலகர் ஏ.பிருந்தா, எம். விக்னேஷ் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் தேர்வாளர்களாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் டி. முரளி, பி. மார்கண்டன், எஸ். சக்தி வேல், ச.ஹரிஹரன், ரா. ராகேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக, பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் எஸ். முரளிதரன் நன்றி கூறினார்.
- 5 தங்கம் உட்பட 20 பதக்கங்களை வென்று சிறப்பித்தனர்.
- வெற்றிபெற்ற 24 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை குட்சமாரிடன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிறுவர்களுக்கான தடகள போட்டியில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளியைச் சார்ந்த 6 முதல் 8 வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் 5 தங்கம் உட்பட 20 பதக்கங்களை வென்று சிறப்பித்தனர்.
மேலும் இவ்விளையாட்டு போட்டியில் மாவட்டத்தில் பணியாற்ற கூடிய அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களுக்கான 100 மீட்டர் அஞ்சல் நடைபெற்றது.
இதில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு பிரிவும், 40 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் என இரண்டு பிரிவாக நடைபெற்றது.
இதில் மாவட்டத்தில் பணியாற்ற கூடிய 30- க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் வெற்றி பெற்ற 24 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து, ரொக்க பரிசினை பள்ளியின் தாளாளர் அலெக்சாண்டர் ஹெப்ளின் ஜசாயா வழங்கி பாராட்டினார்கள்.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி செயலர் ராமகிருஷ்ணன், பள்ளி குழு தலைவர் சொக்கலிங்கம், பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி, பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் எஸ். முரளிதரன், துளசிரங்கன், வரதராஜன் ஆகியோர் பாராட்டினர்.
- பல்வேறு நிலைகளை கற்றுத்தேர்ந்த மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
- மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டி னம் மாவட்டம் வேளாங்கண்ணி யில் சாய் காய் டூ அட்வ ர்ஷர் அகாடமியில் பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சியை அகில இந்திய கராத்தே சங்கத்தின் டெக்னிக்கல் டைரக்டரும் தமிழ்நாடு கராத்தே சங்கத் தலைவருமான சாய் புருஸ் தொடக்கி வைத்தார்.
போட்டியில் கராத்தேவில் கட்டா, ஸ்மித்தே, டீம் கட்டா, பயர் பிரிக்ஸ் பிரேக், குத்துச்சண்டை, நேரடி சண்டை போட்டிகள் நாட்டுப்புறக் கலையான சிலம்பம் சுற்றுதல், உள்ளிட்ட பல்வேறு நிலைகளை கற்று தேர்ந்த மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
அதை தொடர்ந்து பல்வேறு நிலைகளை முடித்த மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் பிளாக் பெல்ட் பெற்ற பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியினை நாகை மாவட்ட கராத்தே சங்கத் தலைவரும் பயிற்சியாளருமான சென்சாய் ராஜேந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தாமஸ் ஆல்வா எடிசன் சென்சாய் சாய் புரூஸ் கலந்து கொண்டார்.
இதில் ஆசியன் கராத்தே நடுவர் அறிவழகன், மரிய சார்லஸ், டாக்டர் உமா, மார்ட்டின் பாக்யராஜ், இளம்பரிதி, பூமாலை, சென்சை அன்பழகன் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வினை தலைமை ஆசிரியர் ஆறு துரைக்கண்ணன் தொகுத்து வழங்கினார்.
- முதல் பரிசு பெற்றவர்களுக்கு தங்க பதக்கம், 2-ம் பரிசு பெற்றவர்களுக்கு வெள்ளி பதக்கம்.
- மாணவ- மாணவிகளுக்கு விளையாடும் திறனை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.
சுவாமிமலை:
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.
போட்டியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பள்ளிகளில் இருந்து 150 மாணவ- மாணவிகள் சுமார் 9-க்கும் மேற்பட்ட குழுக்களாக கலந்து கொண்டனர்.
இக்குழுக்கள் மாணவ- மாணவிகளுக்கு என தனி பிரிவாகவும், 8, 10, 12, 14 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
போட்டியில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு தங்க பதக்கமும், 2-வது பரிசு பெற்றவர்களுக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது. மேலும், கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.
போட்டியானது மாணவ- மாணவிகளுக்கு விளையாடும் திறனை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.
போட்டி ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் எஸ்.ஏ.கார்த்திகேயன் மற்றும் பூர்ணிமா கார்த்திகேயன் சிறப்பாக செய்திருந்தனர்.
- விருதுநகரில் குடியரசு தின விழாவில் 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.
- அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று குடியரசு தினவிழா நடைபெற்றது. கலெக்டர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டு காலை 8.15 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற விழாவில் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. பாண்டி உள்பட 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 247 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முருகேசன், வெங்கடேஸ்வரன், ராஜேஷ், அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன், நகரசபை கமிஷனர் ஸ்டான்லி பாபு, மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் உள்ளிட்டோர் நற்சான்றிதழ் பெற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முன்னதாக குடியரசு தின விழாவுக்கு வருகை தந்த கலெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் மொழிப் போர் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்துக்கு சென்ற கலெக்டர் அங்கு அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
விருதுநகர் தேசபந்து திடலில் தியாகிகள் நினைவுத் தூணில் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தப்பட்டது. விருதுநகர் நகரசபை அலுவலகத்தில் நகரசபை தலைவர் மாதவன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதில் துணைத் தலைவர் தனலட்சுமி, நகரசபை கமிஷனர் ஸ்டான்லிபாபு, கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதி ராஜசேகர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் வசந்தி மான்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) 21.12.2022 முதல் 3.1.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
- பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 'விளையாடு இந்தியா' திட்ட நிதி உதவியில் துவக்க நிலை கால்பந்து பயிற்சிக்கான 'விளையாடு இந்தியா மாவட்ட மையம்' கன் னியாகுமரி மாவட்டம் அறிஞர் அண்ணா விளை யாட்டரங்கத்தில் அமைக் கப்பட உள்ளது.
இம்மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் சேர்க்கப் பட்டு அவர்களுக்கு தின சரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர்/வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளா கவும், தற்போது கன்னியா குமரி மாவட்டத்தில் வசிப் பவராகவும் இருக்க வேண் டும்.
சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவி லான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங் களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந் தெடுக்கப்படும். பயிற்சி யாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டண மாக ரூ.18 ஆயிரம் வழங் கப்படும்.
இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்கா லிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது. இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) 21.12.2022 முதல் 3.1.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண் ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நாகர்கோ வில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.
உடற்தகுதி, விளை யாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகிய வற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- விஜய் 57-60 எடை பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை.
- தங்க பதக்கம் வென்ற மாணவர் இன்பத்தமிழன் மாநில போட்டிக்கு தேர்வு.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட அளவில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியில் குத்தாலம் தாலுக்கா, திருமணஞ்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 9-ம் வகுப்பு மாணவன் இன்பத்தமிழன் 75-80 எடை பிரிவில் தங்க பதங்கமும், விஜய் 57-60 எடை பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஆசைத்தம்பி, அருண்ராஜ் மற்றும் வழிகாட்டியாய் இருந்த உதவி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர்களை தலைமை ஆசிரியை பிரேமாவதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினார்கள்.
தங்க பதக்கம் வென்ற மாணவர் இன்பத்தமிழன் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, நடுக்கம்பு போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
- 27 பேர் கலந்து கொண்டு அதில் 24 தங்கப்பதக்கமும் 3 வெள்ளி பதக்கமும் ெபற்று பெருமை சேர்த்துள்ளனர்.
தஞ்சாவூர்:
திருச்சி மாவட்டம் நேரு நினைவு கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மழலையர், மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் போன்ற பிரிவுகளில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, நடுக்கம்பு, குத்து வரிசை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
அதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வீரத்தமிழச்சி சிலம்ப பள்ளி மாணவ-மாணவிகள் 27 பேர் கலந்து கொண்டனர் . அதில் 24 தங்கப்பதக்கமும் 3 வெள்ளி பதக்கமும் வென்று தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் வீரத்தமிழச்சி சிலம்பப் பள்ளி ஆசான் உமா (தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகம், தஞ்சாவூர் மாவட்ட தலைவர்) ஆகியோருக்கு கழகத் தலைவர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
- அறிவியல் செயல்பாடுகளை மாணவர்கள் விளக்கி பாராட்டினர்.
- பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
திருவையாறு:
திருவையாறு சீனிவா சராவ் மேனிலைப்பள்ளியில் ஜே.சி. போஸ் அறிவியல் மன்றத்தின் அறிவியல் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை பள்ளித் தலைமையாசிரியர் அனந்த ராமன் தொடங்கி வைத்து மாணவ மாணவி களின் அறிவியல்செயல்தி றனைப் பாராட்டிப் பேசினார்.
பின்னர்,மாணவர்களின் முயற்சியில் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ஒளி விலகல், புவி அமைப்பு, பருவநிலை மாற்றம், சூரிய சந்திர கிரகணம், மனித உறுப்பு மண்டலம் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் முதலிய 15க்கு மேற்பட்ட அறிவியல் செயல்பாடுகளை மாணவர்கள் விளக்கிச் சொல்லக்கேட்டு மகிழ்ந்து பாராட்டினார்.
மேலும், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவில் நடந்த 17 வயதினருக்கிடையேயான தடகளப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று, திருவண்ணா மலையில் நடக்கும் மாநில அளவில் நடக்கும் தடகளப் போட்டியில் கலந்து கொள்ளத் தேர்வாகியுள்ள மாணவன் அஜித்திற்கு பள்ளி செயலர் ரஞ்சன்கோபால் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து 28ந்தேதி திருவண்ணாமலையில் நடக்கிற மாநிலதடகளப் போட்டியில் கலந்துகொள்ள மாணவர் அஜித் வாழ்த்தி வழியனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சிகளில் திரளான ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.
- 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சம்ரிதா தங்க பதக்கத்தையும், விசாலினி வெண்கல பதக்கத்தையும் பெற்றனர்.
- மாநில போட்டியில் வெற்றி பெற்று தேர்வாகி தேசிய போட்டியிலும் வெற்றி பெற்றனர்.
தஞ்சாவூர்:
பெங்களூரில் சி.ஐ.எஸ்.சி.இ. ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ்- 2022 தேசிய அளவிலான கராத்தே போட்டி பதுகோன்-டிராவிட் சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் எக்ஸலென்சியில் நடைபெ ற்றது.
தலைமை பயிற்சியாளர் சென்சாய் ராஜேஷ் கண்ணா தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் சம்ரிதாதங்க பதக்கத்தையும்,விசாலினி வெண்கல பதக்கத்தையும் பெற்றனர். பக்கா லொகேஷ்வர ரெட்டி தர்ஷன் கலந்து கொண்டனர்.
மாநில போட்டியில் வெற்றி பெற்று தேர்வாகி தேசிய போட்டியிலும் வெற்றி பெற்றனர்.
சாதனை படைத்த மாணவ ர்களை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா வாழ்த்தி பாராட்டினார். ஹயாஷிகா சிட்டோ ரியு கராத்தே கழகத்தின் கிராண்ட் மாஸ்டர் ஹன்சி டாக்டர் டோனி பொன்னையா போன் மூலமாக வாழ்த்து தெரிவித்தார்.
இதேப்போல் கிறிஸ்து பன்னாட்டு பள்ளி தாளாளர் ஜெரால்டு பிங்னோரா ராஜ், ராஜ தாமரை மஹால் உரிமையாளர் சிங்காரவேல், உடற்பயிற்சி ஆசிரியர் சியாம் சுந்தர் மற்றும் வின்னர் அகாடமி உரிமையாளர் ரெங்கநாயகி அனைவரும் மாணவர்களை வாழ்த்தி பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்