என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 190477"
- மின் கம்பத்தை புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
- பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 24 -வது வார்டு சாமுண்டிபுரம் சலவைக்காரர் 3 வது வீதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறாக 3 மின் கம்பம் இருந்தது. இதனை மாற்றுவதற்கு மின்சார வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர்.ஆனால் மின் கம்பத்தை மாற்றி புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
உடனடியாக ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜின் முயற்சியில்இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக அப்பகுதி பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து அவர்கள் ஒத்துழைப்புடன் மின்சார வாரியத்துக்கு கட்ட வேண்டிய தொகை ரூ. 68,210யை பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று மீதமுள்ள ரூ.28 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து கொடுத்து உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார். அப்போது மாமரத்து வீதியைச் சார்ந்த கோபி என்ற பழனி குமார் , உதவியாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
- அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமாரி:
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது :-
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆறுதேசம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளி கள் சிகிச்சைக்கு வருகின்றனர். மாதந்தோறும் 5 முதல் 10 பிரசவம் நடைபெற்று வருகிறது. பிரசவித்த தாய்மார்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் நடைபெற்று வருகிறது.
இங்குள்ள ஆய்வக பிரிவு, புற நோயாளிகள் பிரிவு மற்றும் குடும்ப நலப்பிரிவு கட்டிடம் போன்றவை பழுதடைந்து உள்ளதால் அவற்றை மாற்றி, புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டி மருத்துவ மனையை மேம்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை-குடும்ப நலத்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் வழங்கினேன். தொடர்ந்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து குரல் கொடுத்தேன்.
இதன் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், தேசிய சுகாதார திட்டம் சார்பில் 15 -வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, ஆறுதேசம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனை கட்டிடங்கள் அமைக் கப்படும் என்று அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகி யோருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் எனது சார்பிலும், தொகுதி மக்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் இந்த கட்டிட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்பதனையும் தொகுதி மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.
- மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக உள்ளது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ஆதித்தனேந்தல் கிராமத்தில் கடந்த 2009-ல் தி.மு.க. ஆட்சியின் போது ரூ.2.46 கோடி செலவில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. இங்கு 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது. இதனை அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் கட்டி முடிக்கப்பட்டு 12 வருடங்களுக்கும் மேலான நிலையில் சமத்துவபுரத்தில் எந்தவொரு மராமத்து பணிகளும் மேற்கொள் ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சமத்துவபுரம் வீடுகள் புனரமைப்பு திட்டம் 2022 -23 நிலை-2 திட்டத்தின் கீழ் நரிக்குடி சமத்துவ புரத்தில் உள்ள வீடுகளை புனரமைக்க வேண்டி நரிக்குடி யூனியன் பி.டி.ஓ.,வாக இருந்த பிரின்ஸ் தலைமையிலான அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிப்புக்கு ஏற்றவாறு நிதிகளை வழங்கும் வகையில் கடந்த 1 வருட காலமாக ஆய்வுகள் மேற்கொண்டு அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன் பின்னர் சமத்துவ புரத்தில் குடியிருந்து வரும் பயனாளிகளே தங்களது வீட்டிற்கான மராமத்து பணிகளை மேற்கொண்டு 2 மாத காலத்திற்குள் பணி களை முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் பாதிப்புக்கு தகுந்தவாறு ரூ.35 ஆயிரம் முதல் அதிக பட்சமாக ரூ.51 ஆயிரம் வரை நிதி ஒதுக்கப்பட்ட தாக தெரிகிறது.
ஆனால் மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதி மிகவும் குறைவாக இருப்ப தால் சேதமடைந்த வீடுகளில் வர்ணம் பூசுதல், சிறு சிறு பழுதுகள் பார்த்தல் போன்ற மராமத்து பணியை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தாகவும், கதவு, கழிவறை, வீட்டின் மேற்கூரையில் தட்டு ஓடு பதித்தல் போன்ற ஒவ்வொரு பணிக்கும் வீட்டின் உரிமையாளர்கள் செலவிட ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு நிர்ணயம் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் சிமெண்டு, மணல்,தட்டு ஓடுகளின் தற்போதைய விலைவாசி உயர்வு, வேலையாட்களுக்கு கொடுக்கப்படும் கூலி ஆகியவற்றை வைத்து கணக்கிட்டு பார்க்கும் போது தற்போது வழங்கப்பட்டுள்ள குறைவான தொகையால் மராமத்து பணிகளை இன்னும் தொடங்க முடியாத சூழ்நிலையே உருவாகி இருப்பதாக அந்த பகுதி பெண்கள் தெரிவித்தனர்.
- வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடத்தும் ரேசன் கடையில், கோபால் என்பவர் விற்பனையாள ராக பணியாற்றி வந்தார்.
- கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கொடு வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடத்தும் ரேசன் கடையில், கோபால் என்பவர் விற்பனையாள ராக பணியாற்றி வந்தார்.
அவர் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விநி யோகம் செய்யும் பணியில் ஈடுபட்ட்டிருந்தபோது, கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக, தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலெக்டர் உமா கலந்து கொண்டு, ரேசன் கடை பணியாளர் கோபாலின் மனைவி கங்கா தேவியிடம், ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செல்வக்குமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், டி.என்.சி.எஸ்.சி மண்டல மேலாளர் செல்வ விஜய ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- வேளாண் வளர்ச்சிக்காக பெரம்பலூரில் 25 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.18.63 லட்சம் நிதி ஒதுக்கபட்டுள்ளது
- திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 25 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.18.63 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 25 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் (2023-24) இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 25 கிராம ஊராட்சிகளில் காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து தன்னிறைவை மேம்படுத்த பழச்செடி தொகுப்புகள் வழங்குதல் மற்றும் பல்லாண்டு தோட்டக்கலை பயிர்கள் பரப்பு விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். இத்திட்டத்தில் பயனடைய பெண்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது இணையதளத்தின் மூலமாக பதிவு செய்தோ பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- பணிகளை தேர்வு செய்வதற்காக மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.
- கழுநீர்குளம் ஊராட்சி தலைவர் கை.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளம் ஊராட்சிக்கு திட்டப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ் ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான பணிகளை தேர்வு செய்வதற்காக அவர் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.
நிகழ்ச்சியில் கழுநீர்குளம் ஊராட்சி தலைவர் கை. முருகன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முருகன், ராமர், தி.மு.க. நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் காமராஜ், செல்லபாண்டி, லிங்கம், வேல்முருகன், செல்வராஜ், தங்கராஜ், சிவசுப்பிரமணியன், ஜெகன், தங்கத்துரை, பொன்னுத்துரை, சிவபெருமாள், காசிபாண்டி, கைக்கொண்டான், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
- கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக் களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை மற்றும் கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக் கைகள் குறித்து, மொத்தம், 348 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், பரி சீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டார்.
தொடர்ந்து, உயர்கல்வி தொடர முடியாத மாணவர்களுக்கு, உயர் கல்வி வழிகாட்டுதல் உதவி மையத்தின் மூலம், உயர்கல்வி தொடர்வ தற்காக, நிதி உதவியாக தன் விருப்புரிமை நிதியில் இருந்து, 3 மாணவ, மாணவி யருக்கு, தலா ரூ. 20 ஆயிரம் வீதமும், 4 மாணவிகளுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதமும், மொத்தம் 7 மாணவ- மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்திற்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும், சமூக பொறுப்பு நிதியில் இருந்து, நாபின்ஸ் நிறுவனம் சார்பில், தலா ரூ. 23 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பில், 50 பள்ளிகளுக்கு நாப்கின் எரியூட்டி எந்தி ரங்கள், நிறுவனத்தின் பொது மேலாளர் மோகன் பிரசாத் முன்னிலையில் வழங்கப்பட்டது.
அதையடுத்து, மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களைப் பெற்று, துறை அலுவலரிடம் வழங்கிய கலெக்டர், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., மணிமேகலை, சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சட்டபூர்வ நிதி வழங்கப்பட்டது.
- மேலாண்மை நிலையங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
விருதுநகர்
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.ஜி.மாதவன் தலைமையில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அப்போது விருதுநகர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் சட்டபூர்வ நிதி வசூல் தொகை ரூ.1.11 கோடிக்கான காசோலை களை விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜலட்சுமி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநரிடம் வழங்கினார்.
சிவகங்கை மண்டல இணைப் பதிவாளர் கோ.ஜினு, விருதுநகர் இணைப்ப்பதிவாளர் அலுவலக துணைப் பதிவாளர் சந்தன ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணைப்பதிவாளர் வீரபாண்டி, விருதுநகர் கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் ராமகிருஷ்ணன், கூட்டுறவு பிரசார அலுவலர் செல்வராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
- பேராவூரணியில் அரசு காமராஜர் ஆஸ்பத்திரி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
- 100-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேராவூரணி:
பேராவூரணியில் அரசு காமராஜர் மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
30-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நவீன உபகரணங்களுடன் புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சட்டமன்றத்தில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்து பேசி னார்.
அதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் மா.சுப்பிர மணியன், பேராவூரணி அரசு காமராசர் மருத்துவ மனை மேம்பாட்டிற்கு ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சருக்கும், சுகாதாரத்துறை அமை ச்சருக்கும் பேராவூரணி தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அசோக்குமார் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
- நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா பந்தலூா் பகுதியில் மக்களைச் சந்தித்து மனுக்களை பெற்றாா்.
- பாடந்தொரையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
ஊட்டி,
நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா பந்தலூா் பகுதியில் மக்களைச் சந்தித்து மனுக்களை பெற்றாா். நாடுகாணி பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்ற ஆ.ராசா, நெல்லியாளம் நகராட்சி சாா்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாா்.
இதையடுத்து புளியம்பாறை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.
பின்னா் புளியம்பாறை கிராமத்தில் யானை தாக்கி உயிரிழந்த கல்யாணி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கினாா்.
தொடா்ந்து தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள மஞ்சமூலா கிராமத்தில் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.
பின்னா் பாடந்தொரையில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து கம்பாடி கிராமம், ஸ்ரீமதுரை ஊராட்சி, மண்வயல் பகுதியில் பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றாா்.
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா் லியாகத் அலி, பொறியாளா் அணியின் மாநில துணைச் செயலாளா் பரமேஸ் குமாா் உள்பட நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
- நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.
- ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாகப்பட்டினம்:
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்ப டாமல் நீண்டகாலமாக பாதியிலேயே நின்றது.
இந்த ஆட்சி அமைந்ததும் அதை கட்டி முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
அதை ஏற்று ரூபாய் 104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்காக முதலமைச்சர் மற்றும் அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலம் கட்டும் பணிக்கு நிர்வாக ஒப்புதல் எப்போது அளிக்கப்படும்? பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.
இது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
நாகப்பட்டினம் அக்கரை ப்பேட்டை வேளாங்கண்ணி சாலையில் கடவு எண் 48-இல் ரயில்வே பாலம் கட்டுவது தொடர்பாகத் தான் எம்.எல்.ஏ கேட்டுள்ளார்.
ரெயில்வே பாலத்திற்கு அவர் குறிப்பிட்டதைப் போல 104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அநேகமாக இந்த மாதமே அந்த கட்டுமானப் பணிகள் தொடங்கும் நிலையில் இருக்கிறது என்றார்,
- கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டுகோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர்.
- தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது.
திருப்பூர் :
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு முதல் தமிழகத்தின் மாவட்ட கலெக்டர்கள், கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டு கோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர். மதசார்பற்ற அரசு, மக்களின் வரி பணத்தை மத வழிபாட்டு தலங்கள் சீரமைப்பு நிதியாக அளிப்பது கூடாது.
இந்துகோவில்களை அரசு, தனது அதிகாரம் எனும் இரும்பு பிடிக்குள் வைத்து ஆட்டிப்ப டைத்து வருகிறது. பல்லாயிரம் கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருந்தும் ஒரு கால பூஜை கூட இல்லாத நிலை இருக்கிறது.ஆனால் தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில், கோவில்களை சீரமைக்க அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. சர்ச்சுகளுக்கு மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்க காரணம் கிறிஸ்துவ ஓட்டு வங்கி தான். தமிழகத்தில் தி.மு.க., வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது. சர்ச் புனரமைப்பு நிதி தருவது அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது. இந்த அறிவிப்பை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்,
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்