search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவமனை"

    • 1.5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவுக்காக 1.5 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    புதியதாக திறக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்

    நேரில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் திலகம், பாபநாசம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் குமரவேல், டாக்டர் ராஜசேகர், பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதிகண்ணதாசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர், கோவி அய்யாராசு, பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிகபிலன், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மருத்து வமனை செவிலியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • அரசு மருத்துவமனை ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
    • இதில் அமைச்சர்-மேயர் பங்கேற்றனர்.

    சிவகாசி

    தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்புவிழா சென்னை யில் நடைபெற்றது.

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் சிவகாசி அரசு மருத்துவ மனையில் உள்ள ஆய்வகத்தை தொடங்கி வைத்தார். அதனை தொ டர்ந்து சிவகாசி அரசு மருத்து வமனையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஆய்வ கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவ காசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதாஇன்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடி அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக மேம்படுத்த ரூ.53.62 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • திட்ட மருத்துவ பிரிவிற்கு 5 கட்டிடங்கள் என 28 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.8.11 கோடி செலவில் 20 கிராமங்களில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், 3 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் கட்டிடங்கள், திட்ட மருத்துவ பிரிவிற்கு 5 கட்டிடங்கள் என 28 புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

    இவற்றின் திறப்பு விழா மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியின் தமிழ்மன்றம் மற்றும் மாணவர் பேரவை தொடக்க விழா ஆகிய நிகழ்ச்சிகள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்தன. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.அமைச்சர் ராஜ–கண்ணப்பன், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். மருத்துவ கல்லூரி முதல்வர் கிறிஸ் ஏஞ்சல் வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் 6 மாதத்தில் தொடங்கும். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.1,978 கோடியாக உயர்ந்துள்ளது. ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதால் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியை, மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியாக மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. அதற்காக ரூ.53.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு ரூ.1,264 கோடியில் கட்டிடம் கட்ட 2019-ல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். அங்கு கட்டிடம் கட்டப்படாததால் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் மருத்துவகல்லூரி இயங்கி வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 37 மாணவர்கள், 13 மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடத்திற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்துவிட்டது. ரூ.1,978 கோடியில் புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

    கட்டிடத்திற்கான முழுமையான வரைபடம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஜப்பானை சேர்ந்த ஜைகா நிறுவனம் 82 சதவீதம், அதாவது ரூ.1627.70 கோடி நிதி உதவியும், மத்திய அரசு 18 சதவீதம் நிதியும் தர உள்ளன. கட்டிட வரைபடத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் டெண்டர் விடப்பட்டு, 6 மாதத்தில் பணிகள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் தமிழ் மன்றம் தொடக்க விழா மற்றும் மாணவர் பேரவை பதவியேற்பு விழா நடந்தது.

    இதில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இயக்குநர் அனுமந்தராவ், மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, நகரசபை தலைவர்கள் ராமநாதபுரம் கார்மேகம், ராமேசுவரம் நாசர்கான், கீழக்கரை செஹானாஸ் ஆபிதா, பரமக்குடி சேதுகருணாநிதி, ராமநாதபுரம் நகரசபை துணைத்தலைவர் பிரவீன்தங்கம், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, திருப்புல்லாணி யூனியன் தலைவர் புல்லாணி, மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் மலர்வண்ணன் நன்றி கூறினார். மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

    • அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுப்புற கிராமத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதில்லை. மேலும் இருக்கும் மருத்துவரை மாற்று பணி இடத்திற்கு அனுப்புவதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இருதயம், மூளை நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நிரந்தர மருத்துவர்கள் இல்லாததால் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிரமப்படுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. தலைமை மருத்துவமனைக்கு உண்டான எந்த ஒரு வசதிகளும், செயல்பா–டுகளும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டினர். இங்குள்ள ஸ்கேன் கருவி 2, 3 நாட்களாகவே பழுதடைந்து உள்ளது. இதனால் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    இந்த மருத்துவமனையில் பிணவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. மருத்துவமனையில் பல கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் அடைந்து உள்ளது.

    தேசிய தர சான்றிதழ் பெற்ற இந்த அரசு தலைமை மருத்துவமனையின்

    அவலநிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • குரங்கு அம்மை நோய் தடயங்களுடன் வந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
    • சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    திருச்சி விமான நிலையத்துக்கு தினமும் 700 பேருக்கு மேல் வருகின்றனர். அதிகளவில் அரபு நாடுகளில் இருந்து திருச்சிக்கு வருவதால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு, குரங்கு அம்மை நோய்க்கான தடயங்கள் காணப்பட்டது. அவரை திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் யாரிடமும் சொல்லாமல் வெளியேறி ஊருக்கு சென்றுவிட்டார். இது குறித்து புதுக்கோட்டை சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சென்று அந்த நபரை அழைத்து வந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அவரிடமிருந்து ரத்தம், சிறு நீர், தொண்டை மற்றும் தோல் பகுதிகளில் எச்சில் போன்றவற்றை சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப் பிவைக்கப்பட்டுள்ளது. முடிவு வந்த பிறகே எதையும் கூற முடியும் என்றார்.

    • அபிலாஷினி மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
    • மாயமான அபிலாஷினி கடத்தப்பட்டாரா? இல்லை வேறுஏதாவது காரணமாக வீட்டை விட்டு சென்றாரா? என விசாரணை

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு சாங்கை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் அபிலாஷினி (வயது 21).

    இவர் தக்கலை அருகே பள்ளியாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை அபிலாஷினி மருத்துவமனைக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

    வழக்கமாக மாலையில் வீடு திரும்பும் அவர், இரவு வரை வராததால் ராதாகிருஷ்ணன் மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

    அபிலாஷினி எங்கு சென்றார் என்பது தெரியாததால், உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தக்கலை போலீஸ் நிலையத்தில் ராதா கிருஷ்ணன் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து மாயமான அபிலாஷினி கடத்தப்பட்டாரா? இல்லை வேறுஏதாவது காரணமாக வீட்டை விட்டு சென்றாரா? என விசாரணை நடத்தி வருகின்றார். இது போல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு இளம் பெண் மாயமானது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஜூன் முதல் கண்டறியப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் 6 பேர் உள்பட 78 பேர் நேற்று முன்தினம் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பெரியபட்டினம் அருகே கடல் அட்டை கடத்தலில் ஈடுபட்டவர்களை ஏற்றி வந்த 40 வயது ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக சிறையில் இருந்தார்.இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், நேற்று முதன் முதலாக மீண்டும் திறக்கப்பட்ட 50 படுக்கைகளுடன் கூடிய கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

    இங்கு 2 டாக்டர்கள், நர்சுகள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் பொதுஇடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவது போன்ற அரசு அறிவித்துள்ள தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

    இதனை கடைபிடிக்காமல் கவனக்குறைவாக இருந்தால் தொற்று அதிகரித்து விடும். இதை தவிர்க்க பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அருப்புக்கோட்டை, ராஜபாளையத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.70.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • அமைச்சர்கள் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினவிழா நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் ரூ.1.30 கோடி அளவில் 6 துணை சுகாதார மையங்களும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் ரூ.2.78 கோடி அளவில் 12 துணை சுகாதார மையங்களும், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் துறை மூலம் ரூ.31 லட்சத்தில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஆக்சிஜன் பிளான்டையும் என மொத்தம் ரூ.4.39 கோடி மதிப்பிலான கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர்கள் பேசியதாவது:-

    தமிழகத்தில் முதல்முறையாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையோடு, அருப்புக்கோட்டை மற்றும் ராஜபாளையம் என 2 அரசு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக மேம்படுத்துவதற்கு இந்த ஆண்டு ரூ.70.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது மட்டுமல்லாமல், நிதிநிலை அறிக்கையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு ரூ.2.33 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் அமைப்பதற்கும், மல்லாங்கிணறு, எம்.புதுப்பட்டி, குன்னூர், தாயில்பட்டி, பந்தல்குடி மற்றும் நரிக்குடி ஆகிய பகுதிகளில் ரூ.400.82 கோடி மதிப்பில் வட்டார அளவிலான பொது சுகாதார மையங்கள் அமைப்பதற்கும், வாடகை கட்டிடங்களில் இயங்கும் 7 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.2.27 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.18.19 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டப்பணிகள் விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 60 சதவிகிதம் பேர் முழுமையாக பரிசோ திக்கப்பட்டுள்ளார்கள். 79 லட்சம் பேருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. மிக விரைவில் முதல்வரின் லட்சியமாக தமிழகத்தில் ஏழை, எளியோர் ஒரு கோடி பேருக்கு மருந்து பெட்டகம் 2 மாதங்களில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    விழாவில், மருத்துவக்கல்வி இயக்ககத்தின் இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், குடும்பநலத்துறை இயக்குநர் ஹரிசுந்திரி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் சுமதி ராஜசேகரன்(விருதுநகர்), முத்துலட்சுமி விவேகன்ராஜ்(சிவகாசி), அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் கால்நடை மருத்துவமனை கட்டிட திறப்பு விழா இன்று நடந்தது.
    • அமைச்சர் ராஜகண்ணப்பன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் அருகில் புதிதாக ரூ.35.19 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது.

    கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். நவாஸ்கனி எம்.பி., முன்னாள் அமைச்சர் நடராஜன், முன்னாள் தி.மு.க. மாவட்ட செயலாளர் திவாகர், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகா பிரபு, ஆர்.எஸ்.மங்கலம் காங்கிரஸ் தெற்கு வட்டார தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் ராஜகண்ணப்பன் குத்து விளக்கேற்றி கால்நடை மருத்துவமனையை திறந்துவைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் சிவகுமார், ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சேகர், முன்னாள் யூனியன் தலைவர் வ.து.ந.ஆனந்த், யூனியன் ஆணையாளர் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் வைரவன், கால்நடைத்துறை மருத்துவர்கள் ராஜா, மனிஷா, கனிஅமுதன், கொத்திடல்-களக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த், முருகபூபதி, அஜய்நாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இலவச ஈ.சி.ஜி. கருவி வழங்கப்பட்டது.
    • ரூ.31 லட்சம் மதிப்புள்ள இருதய நோய் கண்டறியும் ஈ.ஜி.சி கருவியை மருத்துவமனை மருத்துவ அலுவலர் தீபாவிடம் வழங்கினார்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் அரசு மருத்துவமனைக்கு, சோழவந்தானை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் உள்ள டாலஸ் மாநிலத்தில் தமிழ் மன்ற தலைவராக பணியாற்றி வரும் ராஜேஷ்கண்ணாமுருகையா.ரூ.31 லட்சம் மதிப்புள்ள இருதய நோய் கண்டறியும் ஈ.ஜி.சி கருவியை மருத்துவமனை மருத்துவ அலுவலர் தீபாவிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில்பேரூர் சேர்மன் ஜெயராமன் மருத்துவர்கள்.சுபா. முத்துலட்சுமி, பேரூராட்சி துணைத்தலைவர் லதா கண்ணன், கவுன்சிலர்கள் சத்தியபிரகாஷ், குருசாமி, முத்துலட்சுமிசதீஸ்குமார், செல்வராணி, ஈஸ்வரி ஸ்டாலின், சமூக ஆர்வலர்கள் பெல்மணி, மில்லர் இளமாறன், நாகேந்திரன் மணிராஜ் பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை விபத்தில் மூதாட்டி பலியானார்.
    • தனியார்பெட்ரோல்பங்க் அருகே, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர்சாலையில் நடந்து சென்றார்.

    கடலூர்:

    விருத்தாசலம் வேப்பூர்சாலை, கோமங்கலம் பகுதி யில் உள்ள தனியார்பெட்ரோல்பங்க் அருகே, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர்சாலையில் நடந்து சென்றார். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம்அவர் மீது மோதியது. காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில்சி கிச்சை பெற்று வந்த நிலையில், இறந்தார். கடலுார் அரசு மருத்துவ மனை சவகிடங்கில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவர் நீலநிறபுடவை அணிந்திருந்தார். அவர், யார் என, தெரியவில்லை. விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக் கின்றனர்.

    • முதலுதவி சிகிச்சைக்குப்பின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • அவரது மகன் சுதீஷ் (வயது 26) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல், ஜூன்.30-

    இரணியல் அருகே உள்ள ஆலங்கோடு தெற்குவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 57). கொத்தனார். இவர் நேற்று முன்தினம் காலை ஆலங்கோட்டை சேர்ந்த பேபிகுமார் என்பவரது வீட்டின் இரண்டாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் அவரது பின்பக்கம் கழுத்து, வலது தோள்பட்டை, இடது கை ஆகிய பகுதிகளில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் சுதீஷ் (வயது 26) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×