search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தரங்கம்"

    • ஆண்டிமட விவசாயிகளுக்கு கூழ் மரம் சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்
    • தேவனூர் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்

    ஆண்டிமடம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதிகளில் நிலக்கரி சுரங்க பணிக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு, திரும்ப விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட நிலங்களில் குறுகிய காலத்தில் கூழ் மரம் சாகுபடி செய்து அதிக வருமானத்தை ஈட்டும் வகையில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் சார்பாக தேவனூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வனத்துறை சார்பாக வனச்சரக அலுவலர் சரவணகுமார் பங்கேற்று வனத்துறை திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கினார்.கூட்டத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன உதவி பொதுமேலாளர் ரவி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் உதவி பொது மேலாளர் ரவி, முதுநிலை மேலாளர் செழியன், துணை மேலாளர் பிரசாத் மற்றும் தேவனூர் பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சவுக்கு, தைலமர மரக்கன்றுகள் கருத்தரங்கில் பார்வைக்காக வைக்கப்பட்டது.

    • மாணவிகளிடையே பொருட்கள் வழி தோன்றல்கள் மற்றும் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்
    • கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம்பாளையம்  

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல், வணிகக் கணினிப் பயன்பாட்டில், வணிக மேலாண்மை, தொழிற்சார் கணக்கியல் ஆகிய துறைகள், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் உடன் இணைந்து ஒரு நாள் ஆய்வு கருத்தரங்கை கல்லூரி கலையரங்கில் நடத்தினார்கள்.

    மாணவிகளிடையே பொருட்கள் வழி தோன்றல்கள் மற்றும் பரிமாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வியாபார யுக்திகளை மேம்படுத்தும் வகையில் இக்கருத்தரங்கு அமைந்திருந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு அரசு கல்வி நிறுவனங்களின் தலைவரும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினருமான நடேசன் தலைமை வகித்தார்.

    தாளாளர் கோதை நடேசன், செயலாளர் இன்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரை வழங்கினர்.

    கல்லூரியின் வணிகக் கணினிப் பயன்பாட்டியல் துறை தலைவர் முனைவர் கன்னியம்மாள் வரவேற்புரை வழங்கினார், துணை முதல்வர் முனைவர் ரதிதேவி வாழ்த்துரை வழங்கினார்.

    வணிகவியல் துறை தலைவர் யமுனா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். வணிகத் தொழிற்சார் கணக்கியல் துறை தலைவர் சுதா நன்றியுரை வழங்கினார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரியின் நிதி மேலாண்மை கருத்தரங்கம் நடந்தது.
    • பின்னர் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிதி மேலாண்மை பற்றிய 2 நாள் கருத்தரங்கம் கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் தலைமை செயல் அதிகாரி சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் படி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமை தாங்கி நிதி மேலாண்மை என்பது பெரு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிமனிதனுக்கும் அவசியம் தேவை. நிதி மேலாண்மை தெளிவு இருந்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.இக்கருத்தரங்கில் பகிரக் கூடிய நிதி பற்றிய அனைத்து தகவல்களையும் மாண வர்கள் தங்களுடைய பட்டப்படிப்பு தேர்வுக்கு மட்டுமல்லாமல் தங்களின் வாழ்வின் வெற்றிக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    முதலாம் நாள் அமர்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செபி அமைப்பின் நிதி மேலாண்மை கல்விப் பிரிவின் ஆலோசகர் டாக்டர் நளினி நிதி சேமிப்பு, நிதி முதலீடு, மற்றும் நிதி பராமரிப்பு போன்றவற்றை பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் மாணவ மாணவிகள் கேட்ட வினாக்களுக்கு விரிவான பதில் அளித்தார். 2-ம் நாள் அமர்வில் மாணவ மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு நிதி மேலாண்மை பற்றிய குழு விவாதம் நடத்தப் பட்டது. இவ்விவாதத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து உற்சாகமாக கலந்து கொண்டனர். பின்னர் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நிர்வாக மேலாண்மை துறை இயக்குனர் பேராசிரியர் நடேச பாண்டியன், டாக்டர் நாசர், டாக்டர் திருப்பதி, பி.பி.ஏ. துறை தலைவர் கார்த்திகா பேராசிரியர்கள் அழகு லட்சுமி, கார்த்திக் ஆகியோரின் மேற்பார்வையில் மாணவர்கள் ஜமால், தினேஷ், திவ்யா, பத்மப்பிரியா ஆஃபரின், ரேஷ்மா, மகா, சுவேதா ஆகியோர் செய்தனர். இறுதியில் பேராசிரியர் திருப்பதி நன்றி கூறினார்.

    • மாணவர்கள் விடா முயற்சியுடன் தொடர்ந்து போராடி வெற்றி பெற வேண்டும்.
    • 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில், கணினி அறிவியல் துறை சார்பில் "கம்ப்யூட்எஃஸ் -2கே23" என்ற தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

    விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ரங்கநாத் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி வைத்து விழாவில் பேசுகையில், மாணவர்கள் விடா முயற்சியுடன் தொடர்ந்து போராடி வெற்றி பெற வேண்டும். சந்திராயன்- 2 தோல்வியை கண்டாலும், நம் விஞ்ஞானிகள் தொடர்ந்து போராடி சந்திராயன்- 3 ஐ வெற்றிபெற வைத்தது போல், மாணவர்கள் அனை வரும் தோல்வியை கண்டு துவளாமல் தொடர்ந்து போராடி வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்று கூறினார்.

    முன்னதாக, கணினி அறிவியல் துறை தலைவர் பாத்திமா வரவேற்றார். பேராசிரியை விஜயலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். உதவி பேராசிரியை கலை வாணி, கருத்தரங்கின் முழுமையான நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.

    இதில், சிறப்பு விருந்தினராக, ஷ்னீதெர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு வடிவமைப்பாளர் பாலு வெங்கடேஷ் கலந்து கொண்டு, மாணவர்களின் எதிர் காலத்தை ஊக்கப் படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டின் முக்கியத்து வம் குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

    கருத்தரங்கில் கணினி அறிவியல் துறை பேராசிரி யர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பல்வேறு கல்லூரி களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் கலந்து கொண்டனர்.

    முடிவில், ஒருங்கிணைப் பாளர் விக்ரம் நன்றி கூறினார்.

    • இளையான்குடியில் உயர்கல்வியில் தொழில்முனைவோர் திறன் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
    • பேராசிரியர் சந்திரமோகன் சிறப்புரையாற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல்துறை மற்றும் கல்லூரி உள் தர மேம்பாட்டு செல் இணைந்து "உயர்கல்வி யில் தொழில்முனைவு மேம்பாட்டு திறன்" என்னும் தலைப்பில் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை உரையாற்றினார். உதவிப்பேராசிரியர் சமுசுதீன் இப்ராஹிம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை துறை தலைவர் பேராசிரியர் சந்திரமோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி உள் தர மேம்பாட்டு செல் ஒருங்கிணைப்பாளர் நசீர்கான், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அப்துல் முத்தலீப் உள்ளிட்ட துறைசார் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் உதவிப்பேராசிரியர் ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.

    • ரெயிலில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்லக்கூடாது.
    • இணையத்தில் ரெயில் பயணிகள் 13 லட்சம் பேர் ஒரு நாளுக்கு பதிவு செய்கின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி ச.மு.இ மேல்நிலை ப்ப ள்ளியில் இந்திய இரயில்வே யின் எழுச்சிமிக்க பயணம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கான கருத்தரங்கு பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி தலைமையில் நடந்தது.

    தெற்கு ரயில்வே ஓய்வுபெற்ற அலுவலர் ஆர்.ஞானம்,உடற்கல்வி இயக்குனர் எஸ்.முரளிதரன், ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் கே.கஜேந்திரன்,கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் டி.ராஜராஜன்,ஜி.மார்க்ஸ்பிரியன் முன்னிலை வகித்தனர்.

    இதில் ,திருச்சிராபள்ளி தெற்கு ரயில்வே முதுநிலை கோட்ட இயக்கவியல் மேலாளர் எம்.ஹரிக்குமார் பங்கேற்று பேசுகையில் ரயில்வேத்துறை மிகப்பெரிய நிர்வாகத்துறையாக செயல்படுகிறது.

    நாட்டில் நாள் ஒன்றுக்கு 22ஆயிரம் இரயில்கள் இயக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டரை கோடி மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர்.

    ஐஆர்டிசி இணையத்தில் ரயில் பயணிகள் 13லட்சம் பேர் நாள் ஒன்றுக்கு பதிவு செய்கின்றனர்.

    திருச்சி தென்ன ரயில்வேயில்13 மாவட்டங்களில் 9ஆயிரத்து 151பேர் பணியாற்றுகின்றனர். ரயில் பயணம் மக்களின் அன்றாட வாழ்வில் அங்கமாக உள்ளது.

    அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.ரயிலில் பயணிக்கும்போது ரயில்வே விதிமுறைகளை மீறி எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள்,எரிபொருட்கள் போன்றவற்றை எடுத்துசெல்வது சட்டப்படி தண்டனைகுரியது.

    அதேபோல் ரயில் தண்டவாளங்களில் சிறுவர்கள் கற்களை வைத்து விளையாடக்கூடாது.

    ரயில் தண்டவாளங்களை பயன்படுத்துவதே தவறுதான். ரயில்கள் முன்பு செல்பி எடுப்பது, வீடியோ பதிவு செய்வது போன்றவற்றை தவிர்க்கவேண்டும் என்றார.

    முன்னதாக ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தலைவர் முஸ்தபா வரவேற்றார். முடிவில் பொருளாளர் நந்தகுமார் நன்றி கூறினார்.

    • விவசாயம், சுகாதாரம் மற்றும் சூழல் சார்ந்த விரிவுரை பட்டறை கருத்தரங்கை நடத்தினர்
    • மாணவ மாணவியர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை பெற்று சென்றனர்.

    என். ஜி. ஓ. காலனி :

    அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் முதுநிலை விலங்கியல் துறை, விலங்கியல் ஆராய்ச்சி மையம், கல்லூரி அகதர மதிப்பீட்டு குழு மற்றும் சென்னை தேசிய உயிரியல் அறிவியல் கலைக்கூடம் இணைந்து விவசாயம், சுகாதாரம் மற்றும் சூழல் சார்ந்த விரிவுரை பட்டறை கருத்தரங்கை நடத்தினர். கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஆட்சி மன்ற குழு தலைவர் மணி, பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரிஅகதர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளரும் கருத்தரங்ககுழு தலைவருமான பேராசிரியர் மகேஷ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி செயலாளர் ராஜன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார். பேராசிரியர் சுரேஷ் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார். சென்னை பி.எஸ்.அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழக துணைவேந்தர் தாஜுதீன் தொடக்கவுரையாற்றினார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் பிரகாஷ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் இயக்குனர் டாக்டர். சுப்பிரமணியன் உட்பட பல்வேறு கல்லூரி பேராசிரி யர்கள் இதில் பங்கேற்று கருத்துரையாற்றினார்கள்.

    சென்னைப் பல்கலைக்கழக தாவரவியல்துறை தலைவர் பேராசிரியர் மதிவாணன் நிறைவுரையாற்றினார். உதவிபேராசிரியர் கவியரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் தர்மலிங்கம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர் ராஜா, டாக்டர் செல்வகுமார், டாக்டர். அமுதா, அக்னேஷ்வரி ஆகியோர் செய்திருந்தனர். இதில் ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை பெற்று சென்றனர்.

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
    • பன்னாட்டு கருத்தரங்க நூலினை கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வெளியிட்டார்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு நடத்தும் கி.ரா.வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கி.ரா.வின் படைப்புலகம் என்னும் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தமிழ் அறி ஞர்கள், பேராசிரியர்கள் மாணவர்கள் என பலரும் தங்கள் கட்டுரைகள் எழுதி அவற்றை நூலாக்கம் செய்து நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் விஜய ராகவன் தலைமை தாங்கி னார். கல்லூரியின் தலைவர் ராஜகோபால், பொருளாளர் ஆழ்வார் சாமி அவர்கள் முன்னிலை வகித்தனர். இயக்குனர் பிரபு வாழ்த்துரை வழங்கி னார்.

    விழாவில் துறைத்தலைவர் பரிமளா வரவேற்றார். முத்துராஜா நன்றி கூறினார். இப்பன்னாட்டு கருத்தரங்க நூலினை கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வெளியிட, சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தர்மன் பெற்றுக்கொண்டார்.

    கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் கருப்ப சாமி, ஜோதி முருகன், முத்துராஜா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • தமிழ் இலக்கியங்களில் புதிய தேடல்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
    • முடிவில் முனைவா் கரிகாலன் நன்றி கூறினாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழாய்வுத் துறை சாா்பில் தமிழ் இலக்கியங்களில் புதிய தேடல்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சண்முகலிங்கன், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவன முன்னாள் இயக்குநா் பக்தவத்சலபாரதி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

    தோ்வு நெறியாளா் மலா்விழி, உதவிப் பேராசிரியா் தமிழ்ச்செல்வி, முனைவா் சம்பகலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்த் துறைத் தலைவா் வைஜெயந்தி மாலா வரவேற்றாா். முடிவில் முனைவா் கரிகாலன் நன்றி கூறினாா்.

    • மாணவர்களுக்கான சாகர்-23 என்ற தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
    • ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான சாகர்-23 என்ற தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.

    ரோகிணி கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகைச்சுவை நடிகரும், சிறந்த ஊக்க மூட்டும் பேச்சாளருமான டாக்டர்.தாமு கலந்து கொண்டு "நான் ஒரு சாம்பியன்" என்ற தலைப்பில் மாணவர்கள் இடையே கருத்துரை வழங்கினார்.

    மாணவர்கள் கல்வியில் உயர் நிலைமையை அடை வதற்கான வழிமுறைகளை அவருடைய வாழ்க்கை மற்றும் திறமைகளின் மூல மாக தாமு பகிர்ந்து கொண்டார். மாணவர்கள் தங்க ளின் பெற்றோர்க ளுக்கும், பேராசிரி யர்களுக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஆசிரி யர்களுக்கு நன்றி பாராட்ட வைத்தார்.

    முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மது சுரேஷ் மாண வர்களுக்கு இதற்கு முன் நடத்தப்பட்ட கருத்தரங்கம் மற்றும் பயிற்சி பட்டறை விழிப்புணர்வு பேரணிகள் ஆகியவற்றை பற்றி தொழில்நுட்ப கருத்தரங்கில் எடுத்துரைத்தார்.

    அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் கல்லூரி அளவில் 1 முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பிற பொறியியல் கல்லூரி மாணவர்களும் பல போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பரிசுகளை தட்டி சென்றனர். பின்னர் ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணிதத்துறை தலைவர் டாக்டர் மது சுரேஷ், ஆங்கிலத்துறை தலைவர் டாக்டர் வரத ராஜன், வேதியியல் துறை தலைவர் டாக்டர் ராதிகா, இயற்பியல் துறை தலைவர் டாக்டர் ஜெஸி பயஸ் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்களும் செய்திருந்தனர்.

    • தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
    • வெளி மாநிலத்தை சேர்ந்த மயக்கவியல் தொழிற்நுட்ப மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையணூரில் விநாயகா மிஷன் கல்லூரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மயக்கவியல் தொழிற்நுட்பம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்க தொழிற்நுட்ப பிரிவின் சார்பில், தேசிய மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை அரங்க பிரிவு தொழிற்நுட்பவியலாளர்கள் தினத்தை முன்னிட்டு, தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சென்னை, சேலம், புதுச்சேரி மற்றும் பல்வேறு வெளி மாநிலத்தை சேர்ந்த மயக்கவியல் தொழிற்நுட்ப மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கருத்தரங்கில் மயக்கவியல், அறுவை சிகிச்சை அரங்க தொழிற்நுட்ப பிரிவுகளில் தற்போது ரோபோக்களின் பயன்பாடு அதிகமாக இருப்பது குறித்தும், அதை நோயாளிகளிடம் டிஜிட்டல் மூலம் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த விளக்கங்களையும் மாணவர்களுக்கு அத்துறை சார்ந்த வல்லுநர்கள் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் டீன் பேராசிரியர் டாக்டர். செந்தில்குமார், இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் சில்வஸ்டர், டாக்டர்கள் கிருஷ்ணபிரசாத், கோகுல்ராம், அஸ்வந்த், ரேஷ்மா, நவீன்குமார் சேரன், பொறுப்பாளர் வினோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • “சுகாதாரத்தில் இளைஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது
    • நிகழ்ச்சியில் 540 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் "சுகாதாரத்தில் இளைஞர்களின் பங்கு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இந்த கருத்தரங்கு எஸ்.எம்.ஐ.டி.எஸ். ரோகினி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வைகை அறக்கட்டளை, கிராமியம் பேன்சா இந்தியா, ஆகியவற்றுடன் இணைந்து விஸ்வ யுவக் கேந்திரா ஆகியவை சார்பில் நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். வேளாண்மை பொறியியல் துறையின் எச்.ஓ.டி. கிருஷ்ணவேணி வரவேற்று பேசி னார். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்து தலைமையுரையாற்றினார். விஸ்வ யுவக் கேந்திரா திட்ட அலுவலர் ரஜத் தாமஸ் சிறப்புரையாற்றினார். வைகை அறக்கட்டளை இயக்குனர் அண்ணாதுரை சிறப்புரையாற்றினார்.

    ரோகிணி பொறியியல் கல்லூரி, வைகை அறக்கட்டளை, கிராமியம் மற்றும் எஸ்.எம்.ஐ.டி. ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொழில்நுட்ப மூத்த சுகாதார ஆலோசகர் பாபு தண்ணீர் சுகாதாரம் மற்றும் சுகாதாரத்தில் இளைஞர்களின் பங்கை விரிவாக விளக்கினார். நிகழ்ச்சியில் 540 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×