search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223245"

    • தடுப்பு பலகைள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
    • இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    ஊட்டி,

    ஊட்டி ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் பாதாள சாக்கடை செல்கிறது. இந்த பாதாள சாக்கடையானது கடந்த ஒரு மாத காலமாக திறந்தே கிடக்கிறது. இதனால் அங்கு தடுப்பு பலகைள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து தடுப்பு பலகை வைக்கப்பட்டது.

    ஆனால் தடுப்பு பலகைகள் வைத்தும் அந்த இடத்தில் அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மற்றும் சைக்கிளில் வந்தவர் விபத்தில் சிக்கினர்.

    அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் பாதசாரிகள் கவனமாக செல்லவில்லை என்றால் பாதாள சாக்கடைக்குள் விழும் நிலை உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    தற்போது பள்ளிகள் திறக்க இருப்பதால் பள்ளிக் குழந்தைகள் அந்தப் பாதையை தான் பயன்படுத்துவார்கள் எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட துறை மக்களின் நலன் கருதி உடனடியாக அதனை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெள்ளகோவில் நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் நூல் மில்கள், எண்ணை ஆலைகள், விசைத்தறிக்கூடங்கள் அமைந்துள்ளன.
    • மழை பெய்யும் போது மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து சாலைகளில் ஓடுகின்றன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் ஏராளமான நூல் மில்கள், எண்ணை ஆலைகள், விசைத்தறிக்கூடங்கள் இதர தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.இந்தநிலையில் வெள்ளகோவிலில் இருந்து முத்தூர் செல்லும் ரோட்டில் சாக்கடைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி உள்ளன. இதனால் மழை பெய்யும் போது மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து சாலைகளில் ஓடுகின்றன. இதனால் தூர்நாற்றம் வீசுகிறது. சாலையில் நடந்து செல்வோர் அவதி அடைகின்றனர். சாக்கடைகளில் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    சாக்கடைகளில் தேங்கி நிற்கும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி கழிவு மற்றும் மழைநீர் ஓடும் வகையில் வழிவகை ஏற்படுத்த வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சாக்கடை மூடாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
    • சாக்கடையை மூடி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் மெயின் ரோடு 100 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பாக தோண்டிய சாக்கடையை மூடாததால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அந்த சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இந்தக் கழிவு நீர் சாலையிலும் ஓடுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சாக்கடையின் அடைப்பை சரி செய்து கழிவு நீர் தடையின்றி செல்லும்படி செய்ய வேண்டும் என்றும், சாக்கடையை மூடி வைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.
    • அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகிறார்கள்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில் மொன்னையன் பேட்டை கிராமத்தில் விநாயகர் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடை எதிரில் சாக்கடை சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது.அந்த சாலை பள்ளம் மேடாக இருப்பதால் சாக்கடை நீர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாக அங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஒரு சிலருக்கு காய்ச்சல் இருப்பதாகவும் தெரிகிறது.

    மேலும், அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டி களும் அவதிக்குள்ளாகி றார்கள். இது தொடர்பாக அங்கு வசிப்பவர்கள் வட்டார வளர்ச்சி அலுவ லகத்தில் பல முறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே, இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கழிவுநீர் வாய்க்காலை சிரமைத்து சாலையில் சாக்கடை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளம் மேடாக உள்ள சாலையை புதுப்பித்து தர வேண்டு மென பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • சோலைப்பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 448 குடியிருப்புகள் உள்ளன.
    • குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது.

    அவினாசி :

    அவினாசி சேவூர் ரோட்டில் உள்ள சோலைப்பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 448 குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு போதிய சாக்கடை வசதிகள் இல்லை என்று உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் அந்த பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் உரிய நடவடிக்கை இல்லை என்று கூறி இன்று காலை 9 மணியளவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்; குடியிருப்பு பகுதியில் சாக்கடை நீர் வெளியேற முடியாமல் குட்டை போல் தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட வர்களிடம் அவினாசி தாசில்தார், பேரூராட்சித் தலைவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் இன்னும் 4 நாட்களில் முழுமையாக உங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தொகுதி எம். எல். ஏ, மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் வர வேண்டும் அதுவரை போராட்டத்தை கை விட மாட்டம் என்று சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவினாசி -சேவூர் சாலைகளின் இரண்டு புறங்களிலும் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கின்றன.

    • வீடுகள் முன்பு குளம் போல் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

    மதுரை

    மதுரை-திருப்ப ரங்குன்றம் சாலையில் உள்ள வசந்தநகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடையில் கழிவுநீர் நிரம்பி சாலையில் தொடர்ந்து வெளியேறி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் வெளியேறி கடை கள் மற்றும் வீடுகள் முன்பு குளம் தேங்கி இருந்தது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வந்தது.

    இதுபற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் கடைகள் முன்பு சாக்கடை நீர் வராத அளவிற்கு மணலை கொட்டி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் உள்ள ஒரு தெரு முழுவதும் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

    இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதே பகுதியில் உள்ள கடைகளையும் வியாபாரிகள் திறக்க முடியாமல் மூடி வைத்துள்ளனர்.

    மாநகராட்சி பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடு குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வரு கின்றனர். இது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சாக்கடை நீர் பிரச்சினைக்கு உடன டியாக மாநகராட்சி தீர்வு காணாவிட்டால் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
    • இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன் தனது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் கடந்த ஆட்சியில் பாதாள சாக்கடை ஆரம்ப கட்ட பணிகள் மட்டும் நடைபெற்றுள்ளன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் சாக்கடை, குடிநீரிலும் கலப்பதால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அவ்வப்போது பொது மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை பணிகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு பதில் அளித்து ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே. என். நேரு பேசும்போது, பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கைகள் தொடர்பாக நான் ஏற்கனவே சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்துள்ளேன்.

    குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுக்க மதுரை மாநக ராட்சி கமிஷன ரிடம் பேசி இந்த பிரச்சி னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார்.

    • கொசு ஒழிப்பு மருந்துகள் கலக்கப்பட்டு புகைபரப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கள் அழிக்கும் பணி நடைபெற்றது.
    • மழைநீர் தேங்காமல் வடிகட்டும் பணி, சாக்கடை நீர் வழித்தடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு நோய்த்தொற்று ஏற்படுத்தக்கூடிய டெங்கு கொசு பரவுதலை தடுத்தல், மழைநீர் தேங்காமல் வடிய வைத்தல் உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு தீவிரப் படுத்தியுள்ளது.

    அந்த வகையில் திருவாரூர் அருகே பெருந்தரக்குடி ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக கொசு ஒழிப்பு மருந்துகள் கலக்கப்பட்டு புகைபரப்பு நடவடிக்கைகள் மூலம் கொசுக்கள் அழிக்கும் பணி நடைபெற்றது.

    பெருந்தரக்குடி ஊராட்சியில் பெருந்தரக்குடி, குளிக்கரை, மேம்பாலம், சார்வன் ஆகிய இடங்களில் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் பணி நடைபெற்றது.

    இப்பணியினை ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கண்காணித்து ஆலோசனை வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து மழைநீர் தேங்காமல் வடிகட்டும் பணி, சாக்கடை நீர் வழித்தடங்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்றது.

    இதுபோல் ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • சேலம் 4 ரோடு அருகே காமராஜர் காலனி உள்ளது. இந்த பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது. மேலும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.
    • அங்குள்ள சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    சேலம்:

    சேலம் 4 ரோடு அருகே காமராஜர் காலனி உள்ளது. இந்த பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடியும் செயல்பட்டு வருகிறது.

    மேலும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. இந்த நிலையில் அங்குள்ள சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் அந்த பகுதியில் பலருக்கு டெங்கு உள்பட பல்வேறு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி சாக்கடை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாக்கடையினுள் கிடந்தவரை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
    • யார், எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.

    அனுப்பர்பாளையம் :

    திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் 15 வேலம்பாளையம் பிரிவு சாலையோரம் உள்ள சாக்கடையில் இன்று காலை ஒரு நபர் மேல் சட்டை இல்லாமல் உள்ளாடை அணிந்த நிலையில் உள்ளே கிடந்தார்.

    பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று சாக்கடையினுள் கிடந்தவரை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தொண்டியில் குளத்திற்குள் கழிவுநீர் விடப்படுவதால் சாக்கடையாக மாறிவருகிறது.
    • சுற்றுலாப்பயணிகளும், வாகன ஓட்டிகளும் மூக்கைப்பிடித்துக்கொண்டு இந்த பகுதியைக் கடக்கும் நிலை உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம். தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையும், தொண்டி-மதுரை சாலையும் சந்திக்கும் இடத்தில் வண்ணாங்குளம் உள்ளது. இந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.

    சில மாதங்களில் பெய்த மழையால் இந்த குளம் நீர் நிறைந்து காணப்பட்டது. அதில் கரையே தெரியாத அளவிற்கு ஆகாய தாமரை படர்ந்து குளிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    மேலும் குளத்திற்குள் கழிவுநீர் விடப்படுவதால் குளம் கழிவுநீர் சாக்கடையாக மாறிவருகிறது. அந்த பகுதியை கடந்தால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும், இந்த வழியாக பயணிக்கும் சுற்றுலாப்பயணிகளும், வாகன ஓட்டிகளும் மூக்கைப்பிடித்துக்கொண்டு இந்த பகுதியைக் கடக்கும் நிலை உள்ளது.

    ஆகாய தாமரையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி முன்பு போல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    அதற்கு முன்னதாக குளத்தை சுகாதாரத்துறையினர் பார்வையிட்டு நோய் தொற்று ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • உடுமலை பழனி ரோட்டு ஹவுசிங் யூனிடில் அரசு பணியில் இருப்போர் குடியிருந்து வருகின்றனர்.
    • இப்பகுதி வழியாக ரோட்டுக்கு கடந்து செல்பவர்களும் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    உடுமலை :

    உடுமலை பழனி ரோட்டில் ஹவுசிங் யூனிட் உள்ளது. இங்கு அரசு பணியில் இருப்போர் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடைகள் தூர்வாரப்படாமலும் குப்பைகளும் மலை போல் குவிந்துள்ளதால் குப்பையில் இருந்து வரும் துர்நாற்றத்தால் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர்.

    மேலும் குப்பைகளில் இருந்து விஷஜந்துகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு வருவதால் மிகவும் அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது. மேலும் இப்பகுதி வழியாக ரோட்டுக்கு கடந்து செல்பவர்களும் மூக்கை பிடித்துக் கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சாக்கடையை தூர்வாரியும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×