search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223461"

    • புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
    • கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு நடவடிக்கையால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 893 ஆக உள்ளது.

    இதுவரை மாவட்டத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 156 ஆக உள்ளது. இதுவரை கொரோனா தாக்கத்தால் மாவட்டத்தில் 736 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றார்.

    • மாவட்ட நிர்வாகம் சார்பில், நடமாடும் வாகன பரிசோதனை மற்றும் கண்காணித்தல், தகுந்த சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்டோர் எணிக்கை 1 ஆக குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா முதல் அலை, 2-வது அலையின்போது ெதாற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட நோய் தடுப்பு நட வடிக்கைகளை கடை பிடித்தனர்.

    மேலும் மாவட்ட நிர்வா கம் சார்பில், நடமாடும் வாகன பரிசோதனை மற்றும் கண்காணித்தல், தகுந்த சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கொரோனா பரவல் முற்றிலும் தடுக்கப்பட்டது. மீண்டும் இந்நோய் தலை தூக்காமல் இருக்க சுகாதார துறை சார்பில் பொதுமக்க ளுக்கு அவ்வபோது பல்வேறு அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா சற்று தலை தூக்கியது. சேலத்தில், தின மும் 20, 25 வீதம் என பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்ட தொடர் சிகிச்சை, பொதுமக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக பாதிக்கப்பட்டோர் எணிக்கை 1 ஆக குறைந்துள்ளது. அதுபோல் ஆஸ்பத்திரியில் இருந்து ஒருவர் குணமாகி வீடு திரும்பி உள்ளார். தற்போது 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 2019-ம் ஆண்டில் இறப்பு சதவீதம் ஆயிரம் பேருக்கு 3.97 சதவீதமாக இருந்தது.

    அதன்பின்பு இம்மாவட்டத்தில் இறப்பு சதவீதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

    இதில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் ஏற்பட்ட இறப்பு சதவீதத்தை காட்டிலும் அதன்பின்பு வந்த ஆண்டுகளில் இறப்பு சதவீதம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    அதாவது 2019-ம் ஆண்டு 3.97 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2022-ம் ஆண்டில் 4.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் முதியோர் இறப்பு 12 சதவீதமாகவும், பெண்கள் 11 சதவீதமாகவும், இதய நோய் உள்ளவர்கள் 10 சதவீதமாகவும் உள்ளனர்.

    இதற்கான காரணம் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படுகிறது. இதில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, குமரி மாவட்டத்தில் உள்ள பிறப்பு-இறப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தோம்.

    இந்த பதிவேடுகளில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 7931 ஆக பதிவாகி உள்ளது. இது 2022-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 8665 ஆக பதிவாகி உள்ளது.

    கொரோனா தொற்று குறைந்த நிலையில் அதற்கு பிந்தைய இறப்பு விகிதம் அதிகரித்து இருப்பதற்கு காரணம் என்ன? என்பது பற்றி விஞ்ஞானிகள் சோதனை நடத்த வேண்டும் என்று இந்த ஆய்வை நடத்திய குழுவினர் கூறியுள்ளனர்.

    கொரோனாவுக்கும், கொரோனாவுக்கு பிந்தைய சாவு எண்ணிக்கை உயர்வதற்கான காரணம் குறித்து இந்த ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    • 3 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இல்லாத அந்த மெத்தனாலே விஷதன்மையாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சாராய வியாபாரிகளான மரக்காணம் பகுதியை சேர்ந்த அமரன், முத்து, ஆறுமுகம், மண்ணாங்கட்டி, ரவி மற்றும் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த வேலு, சந்திரன், ராஜேஷ், விஜி உள்ளிட்டவர்களை கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளச்சாராயம் தயாரிக்க புதுவையில் இருந்து மெத்தனால் வாங்கியது தெரியவந்தது.

    இது தொடர்பாக புதுவை முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரை சேர்ந்த பர்கத்துல்லா, வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஏழுமலை ஆகிய 2 பேரை புதுவை போலீசார் உதவியுடன் விழுப்புரம் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை வானரகம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை நடத்தி வரும் கடலூரை சேர்ந்த கெமிக்கல் என்ஜினீயர் இளையநம்பியிடம் மெத்தனால் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ஏழுமலை, பர்க்த்துல்லா, இளையநம்பி ஆகிய 3 பேரையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    22 பேர் பலியான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இன்று விசாரணையை தொடங்கினர்.

    சம்பவம் நடந்த மரக்காணம் எக்கியார்குப்பம் பகுதியில் விசாரணை நடத்தினர்.

    ஏழுமலையும், பர்கத்துல்லாவும் சென்னை வானகரம் தொழிற்சாலையில் இருந்து கடந்த 11-ந்தேதி 3 பேரல்களில் 600 லிட்டர் மெத்தனால் வாங்கி வந்தனர். அதனை புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர்.

    அந்த மெத்தனாலை மரக்காணம், செங்கல்பட்டு சாராய வியாபாரிகளுக்கு கொடுத்துள்ளனர்.

    அதனுடன் சேர்த்து கொரோனா காலத்தில் தயாரிக்கபட்ட காலாவதியான மெத்தனாலையும் கொடுத்தது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அப்போது பணம் சம்பாதிக்கும் நோக்கில் கள்ளச்சாராயம் தயாரிக்க பர்கத்துல்லாவும், ஏழுமலையும் அதிகமாக மெத்தனாலை வாங்கி வைத்திருந்தனர். அதில் கள்ளச்சாராயம் தயாரித்தது போக மீதமுள்ள மெத்தனாலை பதுக்கி வைத்திருந்தனர்.

    அந்த மெத்தனாலை தற்போது புதிதாக வாங்கிய மெத்தனாலுடன் கலந்து மரக்காணம், செங்கல்பட்டில் இருந்து வந்த சாராய வியாபாரிகளுக்கு விற்றுள்ளனர். அதனை அவர்கள் கள்ளச்சாராயத்துடன் கலந்து குடிமகன்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

    3 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் இல்லாத அந்த மெத்தனாலே விஷதன்மையாக மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கொரோனா காலத்தில் தயாரிக்கப்பட்ட மெத்தனாலுடன் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டதால் அதனை வாங்கி குடித்தவர்கள் பலியானதாக புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கியது.
    • இதனிடையே பொதுமக்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டதால் கொரோனா பெரிய அளவில் பரவவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் தலை தூக்கியது. இதனிடையே பொதுமக்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டதால் கொரோனா பெரிய அளவில் பரவவில்லை. தடுப்பூசி போட்டதன் விளைவாக கோரோனா கட்டுப்படுத்தப்பட்டது.

    அந்த வகையில் நேற்று புதிதாக ஒருவருக்கு மட்டுமே கொரோனா ஏற்பட்டது. அதே நேரத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • கொரோனா அச்சம் காரணமாக தான், அவர்கள் வீட்டுக்குள் அடைந்து கிடப்பதாக கூறப்பட்ட நிலையில் சம்பவ இடம் சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள் இதுபற்றி விசாரித்தனர்.
    • 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் 3 பெண்கள் உள்பட 4 பேரும், அதிகாரிகள் அழைத்தும் வீட்டுக் கதவை திறக்காமல் உள்ளேயே இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக தான் உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நேசமணிநகர் பழைய ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் பீனா. இவர் தனது 2 மகள்கள் மற்றும் உறவினர் ஒருவருடன் வசித்து வருகிறார்.

    இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதாக சமூக நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. கொரோனா அச்சம் காரணமாக தான், அவர்கள் வீட்டுக்குள் அடைந்து கிடப்பதாக கூறப்பட்ட நிலையில் சம்பவ இடம் சென்ற சமூக நலத்துறை அதிகாரிகள் இதுபற்றி விசாரித்தனர்.

    அப்போது, அக்கம் பக்கத்தினர் இது உண்மை தான் என்றனர். தாங்கள் அவ்வப்போது அழைத்துப் பார்த்த போதும், வீட்டில் இருப்பவர்கள் பதில் எதுவும் தருவதில்லை என்றும் தெரிவித்தனர். அதே நேரம் ஆன்லைன் டெலிவரி மூலம் அந்த வீட்டுக்கு பொருட்கள் வருவதாகவும் கூறினர்.

    இதனைத் தொடர்ந்து பீனாவின் வீட்டுக்கு சென்ற அதிகாரிகள், கதவை திறக்கும்படி கூறினர். ஆனால் யாரும் பதில் கொடுக்கவில்லை. இதுகுறித்து நேசமணிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு வந்தனர். தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டு வீட்டின் கேட் உடைக்கப்பட்டது.

    தொடர்ந்து அதிகாரிகளும், போலீசாரும் வீட்டுக்குள் சென்று விசாரணை நடத்தினர். ஆனாலும் உள்கேட்டை அடைத்துக் கொண்ட பீனா அதை திறக்கவில்லை. கேட்டுக்கு மறுபக்கத்தில் நின்று கொண்டு அதிகாரிகளுக்கு பதில் அளித்த அவர், முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார். எனக்கு சொந்தமான கடை மணிமேடை பகுதியில் இருக்கிறது. அந்த கடையை வாடகைக்கு விட்டுள்ளோம். அந்த கடைக்காரர் கடையின் முன் கண்ணாடி வைத்துள்ளார். அந்த கண்ணாடியை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகள் எங்களிடம் வந்து கேட்கிறார்கள்.

    நாங்கள் வெளியே வந்தால் எங்களிடம் விசாரணை நடத்துவார்கள். மேலும் கொரோனா பரவல் வேறு இன்னும் இருக்கிறது. எனவே நாங்கள் வெளியே வரமாட்டோம் என்று அவர் தெரிவித்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடையை வாடகைக்கு நடத்தி வரும் கடைக்காரரை காலி செய்து தரும்படி கேட்டு கலெக்டருக்கு மனு எழுதி தரும்படி பீனாவிடம் அதிகாரிகள் கேட்டனர். அதன்படி அவரும் மனு எழுதிக் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து மனுவை வாங்கிக் கொண்டு அதிகாரிகள் புறப்பட்டனர்.

    இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், பீனாவின் வீட்டில் அவரது 2 மகள்கள் மற்றும் ஒரு உறவினர் என 4 பேர் உள்ளனர். அவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கிறார்கள். வெளியாட்களுக்கு பயந்து வீட்டுக்குள் இருப்பதாக கூறினார்கள்.

    ஆனால் பீனாவின் 2 மகளும் நன்கு படித்தவர்கள். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல தெரிகிறார்கள். அவர்களுக்கு தேவையான அன்றாட பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நிறைய கடைகள் உள்ளது. அந்த கடைகள் மூலம் மாதம் தோறும் வாடகை பணம் வருகிறது. அதை வைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றனர். எது எப்படியோ, 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் 3 பெண்கள் உள்பட 4 பேரும், அதிகாரிகள் அழைத்தும் வீட்டுக் கதவை திறக்காமல் உள்ளேயே இருப்பது பலருக்கும் அதிர்ச்சியாக தான் உள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது.
    • நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. நேற்று மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்

    பட்டுள்ளது. அதே சமயத்தில் நேற்று 35 பேர் குணமடைந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டனர்.

    மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 176 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பாதிப்பு அதிகம் உள்ள வர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளிலும், தனியார் மருத்துவமனை களிலும், மற்றவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி வீடுகளில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • சேலத்தில் கொரனாவுக்கு முதியவர் பலியானார்.

    சேலம்:

    சேலத்தில் கொரனாவுக்கு முதியவர் பலியானார்.

    கொரோ பாதிப்பு

    நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவ டிக்கை எடுத்து வருகிறது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டு கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவமனை களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை நேற்று முன்தினம் வரை 221 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று புதிதாக 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 29 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 226 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கொரோனாவுக்கு 1764 பேர் இறந்தனர். கடந்த ஒரு ஆண்டாக உயிரிழப்பு இல்லை.

    முதியவர் பலி

    இந்த சூழலில் இன்று கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற ஜாகிர் ரெட்டி பட்டியைச் சேர்ந்த 65 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சுகாதார துறையினர் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதியவர் வசித்து வந்த பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். மேலும் அவருடன் இருந்தவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு முதியவர் பலியானது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முன் தொற்று பரவல் 4.8 சதவீதமாக இருந்த நிலையில் இரு வாரம் முடிவதற்குள் 11.4 ஆக உயர்ந்துள்ளது .
    • மாவட்டம் முழுவதும் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் 206 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பூர்,ஏப்.27-

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் வீடு மற்றும் ஆஸ்பத்திரிகளில் 206 பேர் தனிமை ப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முன் தொற்று பரவல் 4.8 சதவீதமாக இருந்த நிலையில் இரு வாரம் முடிவதற்குள் 11.4 ஆக உயர்ந்துள்ளது . இதன் மூலம் தொற்று பரவல் சதவீதத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களை பின்னுக்கு தள்ளி திருப்பூர் மாவட்டம் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

    திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இதனால் வேலை தேடி வெளிமாநிலத்தில் இருந்து பலர் திருப்பூர் வருவதாலும், பலர் பிற மாவட்டங்களில் இருந்து வேலைக்கு வந்து செல்வதாலும் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது.

    இதையடுத்து மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடி க்கைகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு ரெயில் நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு ள்ளனர். மேலும் வெளி யிடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • தருமபுரி நேற்று மட்டும் 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    • வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த உடன் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

    தருமபுரி,

    தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று தமிழகத்தில் 470 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    3640 பேர் வீடு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்ைச பெற்று வருகிறார்கள்.

    நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து 525 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணிந்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும்.

    வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்த உடன் கைகளை ேசாப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். அவ்வாறு கழுவினால் நோய் தொற்றை பரவாமல் தடுக்கலாம்.

    தருமபுரி நேற்று மட்டும் 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களை வீடு மற்றும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்தம் 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டு நேற்று 7 பேர் வீடுதிரும்பியுள்ளனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    • தாய்க்கு ‘அன்னை சுப்புலட்சுமி’ என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர்.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரை சேர்ந்தவர் கல்யாண குமார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு மே 14-ந் தேதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

    இந்நிலையில் சுப்புலெட்சுமியின் மகள் ஜெய்சங்கரி (வயது 32), மகன் ராகவேந்திரா (29) ஆகியோர் உயிரிழந்த தனது தாய்க்கு 'அன்னை சுப்புலட்சுமி' என்ற பெயரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரில் கோவில் கட்டினர். இதனையடுத்து நேற்று காலை இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    இதையொட்டி நேற்று முன்தினம் காலை மகாகணபதி ஹோமம், பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் நவக்கிரக ஹோம், சுதர்சன ஹோமம், மகாலெட்சுமி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும், நேற்று காலையில் 2-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் விமான கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் காலை, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • பெருகவாழ்ந்தான், சித்தமல்லி வழியாக முத்துப்பேட்டைக்கு ஒரு பஸ் சென்று வந்தது.
    • பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.

    திருவாரூர்:

    தஞ்சையில் இருந்து வடுவூர், மன்னார்குடி, திருமக்கோட்டை, பெருகவாழ்ந்தான், சித்தமல்லி வழியாக முத்துப்பேட்டைக்கு ஒரு பஸ் சென்று வந்தது.

    இந்த பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.

    இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபரிகள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அவர்கள் முத்துப்பேட்டைக்கு செல்ல வேண்டுமானால் திருமக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று, பின்னர் அங்கிருந்து முத்துப்பேட்டைக்கு செல்ல வேண்டி உள்ளது.

    இதனால் பொதுமக்கள் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் தஞ்சையில் இருந்து முத்துப்பேட்டைக்கு இயக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×