search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223461"

    • தென்காசி தலைமை ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதிகள் ஏற்படு த்தப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது.
    • கடந்த ஆண்டுகளில் சுமார் 3 ஆயிரம் படுக்கைகள் வரை ஏற்படுத்தப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நெல்லை:

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பரவலை தடுப்பதற்காக நாடெங்கும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தயார் நிலையை சோதித்து அறிவதற்கான ஒத்திகை இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், சுரண்டை, ஆய்க்குடி, இலஞ்சி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முன்எச்சரிக்கை நடவடி க்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசியில் உள்ள மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் 100 படுக்கை வசதிகள் ஏற்படு த்தப்பட்டு இன்று ஒத்திகை பார்க்க ப்பட்டது. கொரோனா பாதிப்பு அடைந்த வர்களுக்கு ஆக்சிஜன் வசதிகள் இருப்பதை உறுதி செய்யும் ஒத்திகையும் நடந்தது.

    கடந்த முறை கொரோனா பாதிப்பு ஏற்ப டக்கூடிய நபர்களுக்கு சிகிச்சை அளிப்பத ற்காக கடையநல்லூர், புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் தலா 25 படுக்கைகளும், சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் 40 படுக்கை களும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதேபோல் இந்த முறையும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கைகள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் கொரோனா தடுப்பு ஒத்திகை பணிகள் இன்று தொடங்கியது. நெல்லை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டுகளில் கொரோனா பாதிப்பின்போது சுமார் 3 ஆயிரம் படுக்கைகள் வரை ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அதில் கொரோனா சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுத்து சுமார் 1,100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடன் நிரந்தர மாக கொரோனா வார்டாக வைக்கப்பட்டு உள்ளது. அந்த வார்டில் இன்று ஒத்திகை நடத்தப்பட்டது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த முறை அரசு ஆஸ்பத்திரியில் 1,500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவை அனைத்தும் தற்போதும் அதே நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுதவிர திருச்செந்தூர், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிகளிலும் ஒத்திகை நடைபெற்றது.

    • பேச்சு பயிற்சி சிகிச்சையாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
    • கொரோனா முழு அடைப்பு காரணமாக குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்பு இல்லாததால் குழந்தைகளின் பேச்சு மெதுவாக உள்ளது.

    திருப்பதி:

    கொரோனா தொற்று பரவல் கடுமையாக இருந்த போது முழு அடைப்பு போடப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்த முழு அடைப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டுக்குள் சிறைப்பட்டு கிடந்தனர். வெளி பழக்க வழக்கங்கள் இல்லாமல் குழந்தைகள் மனவளர்ச்சி இல்லாதது போல் இருந்தனர்.

    பிறந்த குழந்தைகளால் சரிவர பேச முடியாமல், குழந்தைகள் தங்கள் இயல்பான ஆற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பை இழந்தனர்.

    சக குழந்தைகளுடன் விளையாட முடியாமல் பெற்றோர், உறவினர்களுடன் பழக முடியாமல் விலகி செல்போன்களில் மூழ்கினர். இதன் தாக்கம் அவர்களின் மன வளர்ச்சியில் தற்போது காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    தங்கள் குழந்தைகள் சரியான வார்த்தைகளைப் பேச முடியாததால் பெற்றோர்கள் மருத்துவமனைகளை நாடி செல்வது அதிகரித்துள்ளது. விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் மனநலப் பிரிவுக்கு வாரத்திற்கு 20 பேர் வரை இதுபோன்ற குழந்தைகளை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருகின்றனர். இதனால் பேச்சு பயிற்சி சிகிச்சையாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

    கொரோனா பரவலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு, பிறந்த குழந்தைகளின் வயது இப்போது 3-5 வயதுக்குள் உள்ளது.

    அவர்களின் உடல் வளர்ச்சியைப் பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும், சில குழந்தைகள் இயற்கையான மன முதிர்ச்சி குறைவாக இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர்.

    பேச்சுத் திறன் இல்லாமை, பதிலளிக்காதது போன்ற குறைபாடுகளைக் கண்ட பெற்றோர் மருத்துவர்களை தொடர்பு கொள்கின்றனர். ப்ளே ஸ்கூல் அல்லது நர்சரியில் சேர்க்கப்படும் வயதில், பேச்சு சிகிச்சையாளர்களிடம் குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

    குழந்தைகள் இயல்பான நிலையில் இல்லாததால் 3 ஆண்டுகளுக்குப் பிறகும், எல்கே.ஜியில் சேர்க்க முடியவில்லை.

    இப்போது குழந்தைகளுக்கு வார்த்தைகளைக் கற்றுக் கொடுப்பதே எங்கள் வேலையாகிவிட்டது' என்கிறார் விஜயவாடாவைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை.

    இது சம்பந்தமாக விஜயவாடா அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் உளவியலாளர் துர்காபிரசாத் என்பவர் கூறியிருப்பதாவது:-

    கொரோனா முழு அடைப்பு காரணமாக குழந்தைகள் மற்றவர்களுடன் தொடர்பு இல்லாததால் குழந்தைகளின் பேச்சு மெதுவாக உள்ளது. பெற்றோர் இருவரும் வேலை செய்யும் குடும்பங்களில் இந்த பிரச்சனை அதிக அளவில் உள்ளது. குழந்தைகள் 2 வயது வரை செல்போன் மற்றும் டிவியிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

    குழந்தை பருவத்தில் சுற்றுச்சூழலை கவனிப்பதன் மூலம் மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது என்றார். 

    • மதுரையில் 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • 122 பகுதிகளில் தீவிர காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    மதுரை

    தமிழகத்தில் கொரோனா படிப்படியாக அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த வாரம் வரை பாதிப்பு எண்ணிக்கை 150-க்கும் குறைவாக இருந்தது. ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு தற்போது 250-ஐ கடந்துள்ளது.

    நேற்று மட்டும் 273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பாதுகாவலர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    அந்த நடைமுறை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் இதுவரை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் தவிர மற்றவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக 30 படுக்கைள் கொண்ட தனி வார்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது. அங்கு தற்போது வரை ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை அரசு மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்த பெண் டாக்டர் பணிபுரிந்து வருகிறார். அவர் சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்று திரும்பினார். அப்போது அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாலமேட்டைச் சேர்ந்த விசாரணை கைதிக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் சார்பில் நேற்று மட்டும் 122 பகுதிகளில் தீவிர காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    அங்கு 4 ஆயிரத்து 220 பேருக்கு பரிசோதனை செய்ததில் 8 பேருக்கு தீவிர காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. காய்ச்சல் பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மதுரையில் கொரோனா பரவல் தொடர்பாக அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில்,தினமும் 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் லேசான பாதிப்பு என்றால், வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பாதிப்பு அதிகம் இருந்தால் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை வழங்கி வருகிறோம் என்றனர்.

    மதுரை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், மதுரை மாவட்டத்தில் கொரோனாவை எதிர் கொள்ள தயாராக உள்ளோம். இதற்காக போதிய தடுப்பு மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனோ நோய் பாதிப்பு தீவிரமாக இருப்பவர்களுக்கு மட்டும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா பாதிப்பு குறைவாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு டாக்டர் குழுவினர் நேரடியாக சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார்.

    • ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 2 பேருக்கு சிகிச்சை
    • தினமும் 250 பேருக்கு கொரோனா பரிசோ தனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் : 

    குமரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிக மாக இருந்து வருகிறது.

    இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள். தினமும் 250 பேருக்கு கொரோனா பரிசோ தனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    நேற்றும் 280 பேருக்கு சோதனை மேற்கொண்ட தில் 41 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதில் 24 பேர் பெண்கள், 12 பேர் ஆண்கள், 5 பேர் குழந்தை கள் ஆவார்கள். முஞ்சிறை ஒன்றியத்தில் அதிகபட்சமாக 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட வர்களில் பெரும்பாலா னோர் வீட்டில் தனிமை யில் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் ஆஸ் பத்திரியில் சிகிச்சைக்கு வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய் யப்பட்டதையடுத்து அவர்கள் அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்கள்.

    • மாவட்டத்தில் 18 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.
    • முககவசம் அணிய வேண்டும் என்று கடந்த 1-ந் தேதி முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் 50 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர்களில் 38 பேர் குணமடைந்தனர். மீதம் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று வரை மாவட்டத்தில் 18 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

    தொற்று பாதிப்பு மெல்ல அதிகரித்து வருவதால் மாவட்டம் முழுவதும் தடுப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:- மாவட்டத்தில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. வெள்ளகோவிலில் 82 வயதான முதியவர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இறந்துள்ளார். அந்த பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சுகாதார பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருவதால் பொது இடங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து செல்ல வேணடும். வணிக வளாகங்கள், பஸ், ரெயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். தன்சுத்தம் பேணுங்கள் என்றார். திருப்பூர் மாவட்ட மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் கனகராணி கூறும்போது, அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று கடந்த 1-ந் தேதி முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நோயாளிகளை பார்க்க வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் முககவசம் வழங்கி வருகிறோம். தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோ னா சிகிச்சைக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், முழு கவச உடைகள் உள்ளிட்டவை தயாராக உள்ளது. கொரோனா சிறப்பு வார்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜன், வெண்டிலேட்டர் கருவிகள் உள்ளிட்டவை தயார்படுத்தி வைத்துள்ளோம் என்றார்.

    • 14 பேர் ஆண்கள் 25 பேர் பெண்கள் 10 பேர் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
    • முஞ்சிறை ஒன்றியத்தில் அதிகபட்சமாக 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில், ஏப்.5-

    குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. கடந்த சில நாட்களாக ஒற்றை இலக்க எண்ணில் இருந்த பாதிப்பு இரட்டை இலக்க எண்ணாக அதிகரித்தது.

    இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.பெரும்பாலும் பெண்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டதில் 14 பேர் ஆண்கள் 25 பேர் பெண்கள் 10 பேர் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பெண் குழந்தைகள் 8 பேரும் ஆண் குழந்தைகள் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முஞ்சிறை ஒன்றியத்தில் அதிகபட்சமாக 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வரும் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 9 பேருக்கும், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 3 பேரும், மேல்புறத்தில் ஒருவரும், நாகர்கோவிலில் 6 பேரும், ராஜாக்கமங்கலம், தக்கலையில் தலா 4 பேரும், திருவட்டாரில் 5 பேரும், தோவாளையில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 100 படுக்கையுடன் கொரோனா வார்டு ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. தக்கலை மற்றும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாகி வருகிறது.
    • முககவசம் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    நாமக்கல்:

    நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாகி வருகிறது. இதனால் அந்தந்த மாநிலங்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் தமிழகத்தில் அரசு மருத்து வமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள், அவர்களுடன் இருப்பவர்கள், பாது காவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிறப்பித்து இருந்தார்.

    அதன்படி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முகக்கவசம் அணியாமல் வந்த நோயாளிகளின் உறவினர்களை அங்கிருந்து பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பிறகு முக கவசம் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    • ஆண்கள் 8 பேரும் பெண்கள் 16 பேரும் ஒரு குழந்தையும் பாதிப்பு
    • ஆண்களை விட பெண்களே தற்பொழுது அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.நேற்று ஒரே நாளில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் 8 பேரும் பெண்கள் 16 பேரும் ஒரு குழந்தையும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆண்களை விட பெண்களே தற்பொழுது அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டாலும் மாவட்டம் முழுவதும் கொரோனா பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.
    • முக கவசம் அணிவது கட்டாயம் என்ற பதாகை ஒட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதனையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் , செவிலிய ர்கள் மருத்துவமனைக்கு வரும் உள் மற்றும் புற நோயாளிகள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இன்று முதல் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வளாகம் முழுவதும் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற பதாகை ஒட்டப்பட்டுள்ளது.

    மேலும் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவம னைக்கு வரும் பொதுமக்க ளிடம் முக கவசம் அணிவது கட்டாயம் எனவும், முக கவசம் அணியாமல் வர தடை செய்யப்பட்டுள்ள தாகவும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரக்கூடிய நிலையில் பொதுமக்கள் அரசு மருத்து வமனை நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் 18 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாகர்கோவிலில் ஒரே வீட்டில் 2 பேருக்கு தொற்று
    • 298 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 7 பேருக்கு கொரோனா தொற்று

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் மீண்டும் கொேரானா பரவல் அதிகரிக்க தொடங்கி யுள்ளதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் காய்ச்சல் பரிசோதனை முகாமை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் அனைவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் மாநகரப் பகுதியிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 298 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் நகரில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலசூரங்குடி பகுதியில் ஒரே வீட்டில் இரண்டு பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் அதே பகுதியில் ஒரு பெண்ணும் சின்னவண்ணின் விளை பகுதியில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவர்கள் 4 பேரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நாகர்கோவில் நகரில் ஒரே நாளில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரி கள் தடுப்பு நடவ டிக்கை களில் தீவிரம் காட்டி வருகிறார்கள். கொசு மருந்து அடித்தல், காய்ச்சல் பரிசோதனை போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.அகஸ்தீஸ்வரம் ஒன்றி யத்தில் ஒருவருக்கும் ராஜாக்கமங்கலம் ஒன்றி யத்தில் இரண்டு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    குமரி மாவட்டத்தை யொட்டியுள்ள கேரளாவில் முககவசம் கட்டாய மாக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எல்லை பகுதிகளிலும் சுகாதார துறை அதிகாரிகள் பரிசோ தனை மேற்கொண்டு வரு கிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு சென்று வருப வர்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடி யாக பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரி கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
    • இரண்டு பேர் பெண்கள், ஒருவர் ஆண் ஆவார்கள்.

    நாகர்கோவில்

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவ தையடுத்து தடுப்பு நடவ டிக்கைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.மாவட்டம் முழுவதும் உள்ள 9 ஒன்றியங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.பள்ளி களிலும் நடமாடும் குழுக்கள் மூலமாக பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    காய்ச்சல் பாதிப்பு உள்ள வர்கள் மற்றும் சளி பாதிப்பு உள்ளவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பூஜ்ஜியம் என்ற நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது ஒவ்வொ ருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த 84 வயது பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியில் 2 பேரும் மேல்புறம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கும் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதில் இரண்டு பேர் பெண்கள், ஒருவர் ஆண் ஆவார்கள்.பாதிக்கப்பட்ட 3 பேரும் வீட்டு தனிமை யில் உள்ளனர். அவர்களு டன் தொடர்பில் இருந்த வர்களையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரி களில் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரி கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

    • 9 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடக்கிறது
    • பொதுமக்கள் சமீபகாலமாக சளித்தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள்

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் 9 ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடக்கிறது. நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாக பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகமான பொதுமக்கள் சமீபகாலமாக சளித்தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள். சளி தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று நடந்த மருத்துவ முகாமிலும் சளியால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதில் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை தனிமைப்படுத்தி சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் தற்பொழுது வீட்டில் தனிமையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது. ஆனால் அங்கு யாரும் சிகிச்சை சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவில்லை. மாவட்ட எல்லை பகுதிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த மாதம் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கொரோனாவை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பரிசோதித்து கொள்வதுடன் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்

    ×