என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223615"
- மது அருந்துவதால் இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
- தனது அறையில் சென்று கதவை உள்பக்கமாக பூட்டி உள்ளார். 2 தினமான போதும் கணவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த மனைவி அறை கதவை தட்டியுள்ளார்.
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார்(34) இவர் அதங்கோடு பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தனர். இவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இவர் குடிபழக்கம் உள்ளவர். பாலவிளை பகுதியில் தனது மனைவி வீட்டில் தங்கி வருகிறார். இவர் மது அருந்துவதால் இவருக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மனைவியிடம் தகராறு செய்து விட்டு தனது அறையில் சென்று கதவை உள்பக்கமாக பூட்டி உள்ளார். 2 தினமான போதும் கணவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த மனைவி அறை கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததினால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இது குறித்து அக்கம்பக்கத் தினர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அஜித்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேரள லாரி டிரைவர்- மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
- விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்
கேரள மாநிலம் கொல்லம் லேபர் காலனியை பகுதியைச் சேர்ந்தவர் திலீப்குமார்(வயது42). இவர் சென்னை தனியார் லாரி சர்வீஸ் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் லாரியை சென்னையில் விட்டுவிட்டு கொல்லத்திற்கு வரும்போது திருமங்கலம் அருகே ஆலம்பட்டி பகுதிக்கு வந்து உள்ளார்.
ஆலம்பட்டி பகுதியில் திலீப்குமார் நடந்து வந்து கொண்டிருந்தபோது பெரிய பூலாம்பட்டி கிராமத்தில் இருந்து திருமங்க லம் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெருங்குடி போலீஸ் சரகம் பரம்புபட்டி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தது யார்? என்றும் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில் கல்லூரிக்கு செல்ல அந்த பஸ்சில் வந்தனர்.
- படிக்கட்டு வரை கல்லூரி மாணவிகளும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர்
அனுப்பர்பாளையம் :
திருப்பூரில் இருந்து கோவை செல்லும் தனியார் பஸ் திருமுருகன்பூண்டி பஸ் நிறுத்தத்திற்கு காலை 8 மணிக்கு வந்தது. அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. கல்லூரி மாணவர்கள், மாணவிகள் அதிக அளவில் கல்லூரிக்கு செல்ல அந்த பஸ்சில் வந்தனர். முன்புறத்தில் படிக்கட்டு வரை கல்லூரி மாணவிகளும் பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அப்போது முன்புறம்,பின்பக்கத்திலும் மாணவர்கள் சிலர் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளனர். மேலும் படிக்கட்டில் நின்று சத்தம் போட்டும் கிண்டல் அடித்தும் வந்துள்ளனர். இதனால் பெண்களும் பயணிகளும் முகம் சுழித்தனர்.
பஸ் கண்டக்டர் மாணவர்களிடம் பஸ்சிற்குள் வரச்சொல்லி வலியுறுத்தினார். ஆனால், மாணவர்கள் கேட்காமல் தொடர்ந்து பஸ் படிக்கட்டில் நின்றுகொண்டு கைகளை வெளியே வீசி வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பஸ் டிரைவர் பஸ்சை பூண்டி பஸ் நிறுத்தத்தில் நிறுத்தினார். பின்னர் கீழே இறங்கி வந்து பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு வந்தால் நான் பஸ்சை எடுக்கமாட்டேன் என்று உறுதிபடகூறி கீழேயே நின்று கொண்டார். மாணவர்களின் இந்த செயல் பயணிகள் -பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே இது போன்ற செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வீட்டில் தனியே இருந்தவர் மேற்கூரை விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் செல்வகுமார்(வயது25). இவர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை வீட்டில் தனியே இருந்தவர் மேற்கூரை விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்ற அவரது பெற்றோர் திரும்ப வீடு வந்து பார்த்தபோது செல்வகுமார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- வாகனம் செல்வதற்காக திருப்பிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது
- செங்கல் சூளைகளுக்கு விறகுகளை அதிக பாரம் ஏற்றி செல்வதால்இது போல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கன்னியாகுமரி ;
குழித்துறை அருகே ஆத்துக்கடவு பகுதியில் அதிகமாக செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.
இன்று காலை செங்கல் சூளைக்கு விறகுகளை அதிக பாரம் ஏற்றிக்கொண்டு குழித்துறை ஆத்துக்கடவு வழியாக டெம்போ வண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சென்ற வாகனம் செல்வதற்காக திருப்பிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் சரிந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் மின்னல் வேகத்தில் டெம்போவில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மின்கம்பம் சரிந்ததால் குழித்துறை சுற்றுவட்டார பகுதிகள் சிறுது நேரம் மின் தடை ஏற்பட்டு போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொது மக்கள் சம்பவ இடத்திற்கு வர தொடங்கியதும் டிரைவர் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார். மேலும் வேறு வாகனங்கள் உதவியுடன் டெம்போவை அங்கிருந்து மீட்டு சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. குழித்துறை ஆத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளுக்கு விறகுகளை அதிக பாரம் ஏற்றி செல்வதால்இது போல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
- சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது.
- அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சேலம் மாநகரில் வீடுகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் சேலம் மாநகரில் தினமும் புதிது புதிதாக குடியிருப்புகள் முளைத்து வருகின்றன. இதனால் சேலம் மாநகரில் பல லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதனால் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
குறிப்பாக வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், சொந்த விஷயங்களுக்காக வாகனங்கள் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விதிமீறி வாகனங்களை இயக்கியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய காவல் துறை சார்பில் போக்குவரத்து துறைக்கு பரிந்துரைக்கப்படடது. அதை ஏற்று கடந்த மாதம் அதிவேகமாக ஓட்டியதாக 82 பேர், அதிக பாரம் ஏற்றிய 44 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 52 பேர் என 178 பேரின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.
சரக்கு வாகனங்கள்
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், குடிபோதையில் வாகன இயக்கம், அதிவேகம், மொபைல் போன் பேசியபடியே வாகன இயக்கம், சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றிச் செல்வது, சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்வது, ரெட் சிக்னலில் நிற்காமல் செல்வது போன்ற பிரிவுகளில் சிக்கும் வாகன ஓட்டிகளின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக, நிரந்தரமாக முடக்கி வைக்க சென்னை உயர்நீதிமன்றம், சில வழிகாட்டு நெறிமுறைகளை தெரிவித்து உள்ளது. அதன்படி போலீசார் வழக்குகளை பதிவு செய்து, டிரைவிங் லைசென்சை தற்காலிகமாக, நிரந்தரமாக ரத்து செய்யகோரி அனுப்புகின்றனர் என, தெரிவித்தனர்.
- அபிலேஷ் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
- காரில் பயணித்த 2 ஆண்கள், ஒரு பெண், 2 குழந்தைகள் என 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவப்பஞ்சேரி என்கிற இடத்தில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அபிலேஷ் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
தூக்க கலக்கத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் அருகே இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.
அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் பயணித்த 2 ஆண்கள், ஒரு பெண், 2 குழந்தைகள் என 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வேளாங்கண்ணி புறப்பட்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து எடையூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காா் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
- தீயணைப்புத் துறையினா் முருகானந்தத்தை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
காங்கயம் :
திருப்பூா் வீரபாண்டி, சபாபதி நகரை சோ்ந்தவா் முருகானந்தம் (வயது 66). இவா் திருப்பூா் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஒரு நிறுவனத்தில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் கரூருக்கு காரில் சென்றுள்ளாா். காங்கயம் தாலுகா, சிவன்மலை அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில் செல்லும்போது, காா் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் முருகானந்தம் காருக்குள் சிக்கிக் கொண்டாா்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் தீயணைப்புத் துறையினா் முருகானந்தத்தை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- செம்புளிச்சாம்பாளையம் அருகே சென்றபோது கரட்டூர் பிரிவில் ஏறிய பெண்ணிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
- மேலும் அந்த பெண்ணை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையத்திலிருந்து ஈரோடு செல்லும் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக சண்முகசுந்தரம் (48), கண்டக்டராக ராஜ்குமார் (50) வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று மதியம் அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு, ஈரோடு நோக்கி பஸ் சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ், கரட்டூர் பிரிவில் நின்றது, அங்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை ஏற்றிக்கொண்டு மீண்டும் பஸ் புறப்பட்டது.
பின்னர் பஸ் செம்புளிச்சாம்பாளையம் அருகே சென்றபோது கரட்டூர் பிரிவில் ஏறிய பெண்ணிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அந்த பெண், நெஞ்சுவலியால் துடிக்க, இதை பார்த்த சக பயணிகள், டிரைவரிடம், தெரிவித்தனர்.
பின்னர் டிரைவர் சண்முகசுந்தரம், 108 ஆம்புலன்சிற்கு போன் செய்துள்ளார். அப்போது, அந்தியூரில் ஆம்புலன்ஸ் இல்லை என்றும், குருவரெட்டியூரில் தான் ஆம்புலன்ஸ் உள்ளது. அங்கிருந்து வர காலதாமதம் ஆகலாம் என கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து டிரைவர், பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கி மாற்று பஸ்சில் ஏற்றிவிட்டு, அந்த பெண்ணை பஸ்சின் கடைசி சீட்டில் படுக்க வைத்துவிட்டு மருத்துவ வல்லுநர்கள் உதவியுடன் முதலுதவி கொடுத்துவிட்டு பஸ்சை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கே அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தார்.
தற்போது அந்த பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
- டிரைவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி:
கருங்கல் அணஞ்சிகோடு பகுதியை சேர்ந்தவர் சுமன் (வயது 40). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.சம்பவத்தன்று ஆப்பி கோட்டிற்கு சென்றுவிட்டு சுமன் வீட்டிற்கு வரும்போது பருத்திவிளை சாஸ்தா கோவில் அருகே எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் சுமன் பலத்த காயம் அடைந்தார். இதனைக் கண்டவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சுமன் சிகிச்சை பெற்று வரு கிறார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
- டயருக்கு அடியில் வைத்த கல்லை எடுத்த போது மதில்சுவரில் மோதி உடல் நசுங்கியது
- கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள முகிலன் குடியிருப்பை அடுத்த தேங்காய்காரன் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 43). டெம்போ டிரைவர்.
இவர்நேற்றுமாலை சுமார் 3மணி அளவில் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் கட்டிடக் கழிவுகளை ஏற்றுவதற்காக தனது டெம்போவை ஓட்டி வந்தார். அங்கு அவர் கட்டிட கழிவுகளை ஏற்றுவதற்காக டெம்போவை சாலை ஓரமாக நிறுத்தி வைத்து இருந்தார். அவர் தனது டெம்போவை நிறுத்தி வைத்திருந்த இடம் பள்ளமாக இருந்ததால் அந்த டெம்போ நகராமல் இருப்பதற்காக டயருக்கு அடியில் டிரைவர் ஜேக்கப் கல்ஒன்றை தடுப்பு கொடுத்து வைத்து உள்ளார்.
லோடு ஏற்றிய பின்பு டயருக்கு அடியில் வைத்திருந்த கல்லை டிரைவர்ஜேக்கப் அகற்றினார். அப்போது டெம்போ "திடீர்" என்று நகர்ந்து ஜேக்கப்பை அருகில்உள்ள மதில் சுவருடன் சேர்த்து இடித்துள்ளது. இதில் அவர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேக்கப்பை மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கருமந்துறை பகுதியில் தங்கி லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
- கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
வாழப்பாடி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப் பாளையம் கல்வரா யன்மலை பொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 24). இவர் கருமந்துறை பகுதியில் தங்கி லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று காலை, அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில் இருந்து, டிப்பர் லாரியில் ஜல்லி பாரம் ஏற்றுக்
கொண்டு கல்வ ராயன்மலை கருமந்துறை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஆண்டியப்பன் என்பவரும் லாரியில் அமர்ந்து சென்றுள்ளார்.
இந்தலாரி, வாழப்பாடி அடுத்த சந்திரப்பிள்ளை வலசு கிராமத்தில் பேளூர் - அயோத்தியாப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பிரகாஷ், உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மேலும் ஆண்டியப்பன் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்